கல்யாணமான 15 ஆவது நாள்.
இதற்குள் எங்கள் குடித்தனம் ஓரளவு ஒழுங்காகி இருந்தது. புது ஜனதா ஸ்டவ், இதமான நீல தழலாக எரிய சமையல் வேலைகள் நிதானமாக நடந்தன.
காலையில் சிற்றுண்டி சாப்பிடும் வழக்கம் சிங்கத்துக்குக் கிடையாது
காப்பி போதும்.
எனக்கோ பசி நிரந்தரம். ப்ரெட் ஜுரம் வந்தால் சாப்பிடும் ஐட்டம்.
அதனால் கீழ் வீட்டுக்குப் போய் இட்லி மாவு அரைத்துக் கொள்வேன்.
அதற்குள் அம்மா அப்பா வந்து மிச்சம் மீதி பாத்திரங்களையும் கொடுத்துவிட்டால் என் சமையல் சாம்ராஜ்யம் தட்டுத் தடுமாறி வளர ஆரம்பித்தது.
பயந்து கொண்டே சாப்பிடுவார் சிங்கம். புளியே வாங்க வேண்டாம்மா.
தேங்காய்த் தொகையல், தக்காளிப் பச்சடி, உ.கிழங்கு வதக்கல் போதும்
என்பார்.
ஒரு வாரம் முடிந்த சனிக்கிழமை மாலை. அவர் இஷ்டப்படி ஒரு
கொண்டையைப் போட்டுக் கொண்டு, புடுப் பட்டுப் புடவைகளில் ஒன்றைக் கட்டிக் கொண்டு
தயாராக இருந்தேன்.
திடீரென்று ஜீப் உறுமலுக்குப் பதில் பீம் பீம் என்ற கார் ஹார்ன். மாடி விளிம்பிலிருந்து எட்டிப் பார்த்த எனக்கு இனிய ஷாக். சிவப்புக் கலரில் டாப் கழற்றிய ஹெரால்ட் வண்டி.
அப்படியே, பொன்னான கைகள் புண்ணாகலாமா பாட்டு.
நினைவுக்கு வந்தது. சிரிப்புதான்.
மேலே ஏறி வந்தவரிடம் விஷயம் கேட்டால், திருச்சிக்குப் போகலாம் , வெஸ்டர்ன் மூவி வந்திருக்கு.
அரிஸ்டொல தங்கிக் கொள்ளலாம். நாளைக்கு சாயந்திரம் புதுக் கோட்டை வந்து விடலாம் என்றதும், ஓடிச் சென்று என் குட்டிப் பெட்டியில் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டேன்.
புதுக்கோட்டை திருச்சி பாதை, வழியில் வரம் கீரனூர் எல்லாம் மனப்பாடம்.
ஒரு அழகான மரம் ஒன்று நடுச்சாலையில் இருக்கும். அதை இப்போது வெட்டி இருப்பார்கள்.முதல்
 பயணம் ,விருந்து, சினிமா,காமிக்ஸ் புத்தகங்கள்,உறவினர் வீடு என்று இனிதே முடிந்தது

Like
Comment
Comments