Blog Archive

Friday, September 23, 2016

பெண்மை போற்றுதும் பெண்மை போற்றுதும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இவளை நினைப்பவர்களுக்கே வீரம் வர வரவேண்டும். தனியே நின்று வென்ற சக்தி அல்லவா.
இக்கரைக்கு அக்கரை 
கருணையின்  பிறப்பிடம் தாய். காப்பாற்றுவாள்.

உரை நடையில் ஒரு எண்ண  ஓட்டம்.
+++++++++++++++++++++++++++++++++++++++

பெண்னெனப் பூமியில்  பிறந்துவிட்டால்  மிகப்
பெருமை உண்டு பாரினிலே.
எங்கிருந்தோ வந்தால்
எங்கோ போகப் போகிறாள்.
 இடையில் கட்டிய அணை பிறந்தகம்.

அவள் சுதந்திர பறவை என்று நம்ப வைக்கப் படுவாள்
 சுற்றிப் பின்னப்  பட்டிருக்கும் வெள்ளி  நூல்கள்
தெரியாமல்   அதற்குள்ளேயே
அடங்கி நடப்பாள்.
என்வாழ்வில் புதுப்பாதை கண்டேன் என்று
வானம்பாடியாகப் பாடிக்
குஞ்சுகளை வளர்த்து வீட்டுப் பெரியவர்கள் அடிபணிந்து
 நிமிரும்போது அவள் தொலைத்த எத்தனையோ வருடங்கள்
கண்முன் வரும்.
ம்ம்ம்ம். நான் இதைக் கடந்துவிட்டேன். எனக்கொரு வாழ்வு எனக்காகத் தேவை இல்லை.

என் அம்மா, என் மாமியார் வழி நானும் நடப்பேன்.
 வண்டி மாடுகள் போலாகி சீராக
நடக்கும்  ஜோடியில் ஒன்று வீழ்ந்தால்
இன்னொன்று க்கு வழி மீண்டும் மற்றவர்கள் வலையில்
அடைபடுவதுதான். பாதுகாப்பு வேணுமே.

இந்த நிலையில் இருக்கும் மங்கைகளுக்காக
எழுதினேன்.
வெற்றி பெற்ற எத்தனையோ   சாம்ராஜ்ய தேவதைகளுக்கானதில்லை இந்தப் பதிவு.

9 comments:

கோமதி அரசு said...

அருமையான பதிவு.
படங்கள் அழகு.

'பரிவை' சே.குமார் said...

அருமை...
அம்மன் படங்கள் அழகு....

ஸ்ரீராம். said...

உண்மைதான். ஒரே மாதிரி வாழ்க்கை. ஓரளவு ஆண்களுக்கும் கூட இயந்திர வாழ்க்கைதானே?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
அன்பு ஸ்ரீராம்,
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பரிவை குமார் ,
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி,.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. படங்கள் அழகு.

Bhanumathy Venkateswaran said...

-//அவள் சுதந்திர பறவை என்று நம்ப வைக்கப் படுவாள்
சுற்றிப் பின்னப் பட்டிருக்கும் வெள்ளி நூல்கள்
தெரியாமல் அதற்குள்ளேயே
அடங்கி நடப்பாள்//-

.-//வண்டி மாடுகள் போலாகி சீராக
நடக்கும் ஜோடியில் ஒன்று வீழ்ந்தால்
இன்னொன்று க்கு வழி மீண்டும் மற்றவர்கள் வலையில்
அடைபடுவதுதான். பாதுகாப்பு வேணுமே.//-

மேற்கண்ட வரிகளில் அடங்கி இருக்கும் மெல்லிய சோகம், அதே சமயத்தில் அதை அப்படியே ஏற்றுக் கொண்ட ஞானம்...! போற்றத் தக்கது. வணங்குகிறேன்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் மிக மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு, காலத்தின் கட்டாயம் ,புலியை விரட்டியவளைக் கூடச்
சிலசமயம் அறையில் அடைக்கிறது.
என்ன படித்து என்ன. ஞானம் வர மனதில் வலு வேண்டும்.

என் பாட்டிகளையும் அம்மா,மாமியார்களையும் நினைக்கிறேன்.
அவர்கள் எப்பொழுதும் நிதானத்தைக் கைவிடவில்லை.

அவர்களே தெய்வங்களாக எனக்கு வழி காட்டுவார்கள். நன்றி மா. உங்கள் புரிதல் மகிழ்ச்சி கொடுக்கிறது.