About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, September 02, 2016

பயணம் இனிமை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
   அப்பா  இந்த பிளேன்ல ஏம்ப்பா டிவி இல்லை .பின் சீட்டிலிருந்து  மழலை. அப்பா சிரித்துக் கொண்டார். அம்மம்மாவிடம்   அடுத்தாற்போல் கேள்வி. அந்த பிளேன்ல சாக்கலேட் கொடுத்தாங்களே இவங்க என் தரவில்லை. என்ன அழகாத்  தமிழ் பேசுகிறது இந்தப் பாப்பா   என்று எனக்கு ஒரே மகிழ்ச்சி.
  இருக்கையிலிருந்து எட்டிப் பார்க்கவும் முடியவில்லை. முக்குனு வயசு இருக்குமா என்று யோசித்தேன்.   இந்த பிளேன் கிலம்பாதாப்பா.  கிளம்பும்   செல்லம். மற்ற பிளேன் எல்லாம் கிளம்ப  வேணும் இல்லையா.  ஓ சேரி. இங்கயும் நல்லாத்தான்    இருக்கு.   அப்பா இன்னும் கிளம்பலியே அடுத்த செகண்ட்.  பதில் இல்லை. அப்பா உங்களைத்தான் கேக்கறேன் என் கிளம்பவில்லை என்று பாப்பா சொன்னது   பைலட்டுக்குக் கேட்டது விமானம் உருள ஆரம்பித்தது.ஹய்யா இனி அடுத்து லண்டன்ல தான் இறங்குவோம் கைதட்டியது. எனக்கு உள்ளம் எல்லாம் சுகந்தம்.
 அய்யா இது என்ன இது உருண்டு  கிட்டே இருக்கு  மேலே கிளம்பலியே என் அப்பா.
இப்போ திரும்புமா.  அடுத்த பாதையில் திரும்புமா. வேகம் எடுக்கவே இல்லையப்பா.  பூமியில் தான் சக்கரங்கள் இருக்கின்றன.  ரொம்பச் சின்ன ப்ளெனோ .
அதெல்லாம் இல்ல குட்டி. அது அது முறைப்படி கிளம்பும். ஓ வரிசை என்று  என்று சமாதானப் படுத்திக் கொண்டது அந்தச் செல்லம்.
சட்டென்று கிளம்பியது விமானம். உடனே ஒரே உற்சாகம் .
அச்சோ  மனிதர்கள் எல்லாம் சிரிசாகிவிட்டார்கள். வீடுகள் பொம்மையாட்டம்.

மேகம் வந்துட்டது பா. நிலம்  தெரியாது.  இப்படிப் போகும் போது இங்க ஒண்ணுமே உன்னைக் கொடுக்க மாட்டார்களா  அப்பா.. அந்தப் பிளேனில் பால், மீன், இறைச்சி  எல்லாம் கொடுத்தார்கள் அப்பா என்று மீண்டும் வம்பு இழுத்தது.
தமிழ் தெரிந்தவர்கள் சிரித்துவிட்டார்கள்.

இது சிறிய பயணம் குட்டி.  நாம் லண்டனில் எல்லாம் சுவைக்கலாம் என்கிறார் அப்பா.
ஒரு வழியாக லண்டன் வந்தது.
இந்தப் பாப்பாவுக்கு அளவிட முடியாத  சந்தோசம்.
ஊஊஊ   இது கெட்டிக்கார பிளேன் . நம்மளை லண்டனுக்கு கொண்டு வந்து விட்டது. ரொம்ப ரொம்பக் கெட்டிக்கார பிளேன் என்று  சொல்லிக் கொண்டே வந்தது.

என்ன ஒரு இனிமையான பயணம் என்று நினைத்தபடி இறங்கினேன் நானும்  இரட்டைக் குடுமி துள்ளியாட தன தந்தையுடன் ஓடிவிட்டாள்  அந்தத் தேவதை.

16 comments:

Ramani S said...

பயணம் தொடர்ந்து இனியதாகவே தொடரவும்
பதிவுகள் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

இனிமையான அனுபவம்தான். பயணத்தில் பொழுது போகவேண்டுமே...

பரிவை சே.குமார் said...

சுகமான பயணம்...

Geetha Sambasivam said...

குழந்தைகள் இருந்தால் இருக்குமிடமே கலகல!

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பயணம்.....

கோமதி அரசு said...

மழலை பேச்சு இனிமை, பயணம் இனிமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு ரமணி.. வாழ்வில் ஒவ்வொரு நாள் பயணமும் இவ்வாறே
இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஒரு வினாடி கூடக் கசக்கவில்லை. ஸ்ரீராம் . மூன்று வயதுப் பெண்ணின் தமிழ்தான் என்னைக் கட்டிப் போட்டது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பரிவை குமார்.


நன்றி கீதாமா.

நன்றி வெங்கட்

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி மா. இலக்கணத்தமிழ் மழலையில் இனித்தது.

Ranjani Narayanan said...

குழந்தைகள் இருந்தால் வேறு பொழுதுபோக்கே வேண்டாம். லுப்தான்ஸா ஏர்லைன்ஸ் விளம்பரம் எனக்கு மிகவும் பிடிக்கும் - 'கிராண்ட்பா வி ஆர் ஆன் த ராங் ப்ளேன்!'என்பானே அந்தச் சிறுவன்!
இனி லண்டன் வாசியா நீங்கள்?

Bhanumathy Venkateswaran said...

குழந்தைகள் எவ்வளவு சுலபமாக நம்மை சொர்கத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள்! உங்கள் சந்தோஷத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

Bhanumathy Venkateswaran said...
This comment has been removed by a blog administrator.
வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி, ஆமாம் லண்டன் ஒரு மாதத்திற்காக வந்திருக்கிறேன்.
உடலில் தெம்பும் உள்ளத்தில் உறுதியும் இருந்தால்

குழந்தைகளோடு செலவழிக்கும் நேரம் இனிமை. எனக்கு அந்த லுஃப்தான்சா விவரம் நினைவில்லை அம்மா. தேடிப் பார்க்கிறேன்.

'நெல்லைத் தமிழன் said...

இலங்கைத் தமிழ்ச் சிறுமியோ? நம் ஊர்ல தமிழ்ல, அதுவும் குழந்தைகள் பேசுவது ரொம்பவே அபூர்வம்.

வல்லிசிம்ஹன் said...

அப்படித்தான் நினைக்கிறேன் நெல்லைத் தமிழன்.
மிக இலக்கண சுத்தமாக வார்த்தைகள் இனிமையாக இருந்தது.
சரியாகக் கண்டுபிடித்தீர்கள்.