Blog Archive

Wednesday, August 03, 2016

யாரடி வந்தார்........Swiss effect.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 நேற்று ஆடிப்பெருக்கு.  எல்லாப் பொருட்களும் எடுத்துவைத்தாச்சு.
வடை சுட ,எண்ணெய் இல்லை. மகனுக்குத் தொலைபேசினால் வீட்டின் அடித்தளத்தில் இருப்பதாகச் சொன்னான்.
சரி அங்க போய்ப் பார்க்கலாம் என்று  வாசல் கதவைப் பூட்டி, லிகிப்ட்டில் இறங்கி   செல்லர் கதவைத் திறக்கப் போனால் அங்கிருந்து  தமபதியார் இருவர் வெளியே வந்தனர்.
நான் ஹா வென  பின்னால் என் குரல் கேட்டு அவர்கள் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு விட்டார்கள். ஹா ஹா.
அந்த மனுஷர் என்னை ஒரு டெர்ரரிஸ்ட்ன்னு நினைச்சுட்டாரோ என்னவோ, வழமையான உடுத்தும் ஜீன்ஸ் ஷார்ட் போடாமல் சல்வார் அதுவும் ஒரு மெஜந்தாகி கலரில் கண்ணைப் பறிக்கும்  சல்வார்,பெரிய பொட்டு ....பாவம் அவர்களை பயமுறுத்தி இருக்க  வேண்டும்.

ஒரே ஓட்டமாக மாடி ஏறியதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
சாமி. ................அம்மா பயப்படலை. ஐயா தான் பயந்துவிட்டார்.
எனக்கு அங்க எண்ணெயும் கிடைக்கவில்லை. லிப்ட்டில்    ஏறி ய பிறகு
இனம் புரியாமல் சிரிப்பு . எனக்கு.
கொஞ்ச எண்ணெயில் வடை பொறித்து,தேங்காய் சாதம்,தயிர் சாதம் செய்து முடித்து விட்டேன்.
சாயந்திரம் வந்த மகனிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும்,
டெரரிஸ்ட் பட்டம் வாங்காத தெரிஞ்சியே  அம்மா. என்று சிரிக்க ஆரம்பித்தான்.
எனக்குச் சொல்லி முடிப்பதற்குள்  மீண்டும் மீண்டும் நகைப்புத்தான்.
பாவம் அந்தத் தம்பதியினர் இனிமேல் படிகள் வழியாகத் தான் போவார்கள் என்று நினைக்கிறேன்.
எலிவேட்டரில் என்னைச் சந்திக்கும் பாக்கியம் அவர்களுக்கு வேண்டாம். ஹா ஹா.


8 comments:

Yaathoramani.blogspot.com said...

சொல்லிச் சென்ற விதம்
எங்களையும் ரசித்துச்சிரிக்க வைத்தது
வாழ்த்துக்களுடன்...

ஸ்ரீராம். said...

அதெப்படி உங்கள் உருவத்தைப் பார்த்து அவர்கள் பயப்படுவார்கள்? அநியாயமா இருக்கே....

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு ரமணி. இப்போது சுற்றி இருக்கும் நாடுகளில்
கலவரம் நடப்பது தெரிந்தது தானே. ஸ்விஸ் மக்கள் மிக மிக சாதுக்கள்.

அவர்களைப் பயமுறுத்துவது இந்தப் பொட்டு சமாச்சாரமும், வண்ண உடைகளும்.
இது என் அனுமானம். கதவு திறந்ததும் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இங்கே மாடிகளும் கீழுமாக எட்டு குடும்பங்கள். இன்னும் யாரையும் நான் சந்திக்கவில்லை.
எனக்கு எதிர் வீட்டுப் பாட்டி...85 வயது...தினம் நடக்கப் போவதால் அறிமுகம். மற்றவர்களைக் கண்ணால் பார்த்ததில்லை.
ரசித்ததற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இங்கு அனேக மக்கள் ஒருவித கலக்கத்தில் இருக்கிறார்கள் ஸ்ரீராம்.
அந்த இருட்டறையிலிருந்து வெளிச்சத்துக்கு வரும்போது நானும் கதவைத் தள்ள
நானும் அவர்களும் சேர்ந்தே
பயந்தோம். பிறகு எனக்குதான் ஹிஸ்டீரியா போல சிரிப்பு.
சட்டுனு எதிர்பார்க்காத நிகழ்ச்சி. ஸ்ரீராமுக்கு தான் அம்மா. அவர்களுக்கு அன்னியள்.

நெல்லைத் தமிழன் said...

இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் ஆபீசில், 2000ல் 'நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது.

எங்கள் ஆபீஸ் செக்ரெட்டரி லேடி, என் Bossன் ரூமில் files சரி பண்ணிக்கொண்டிருந்தாள். நான் உள்ளே சென்று அவளிடம் பேசிவிட்டு வெளியே வந்து நேரே கான்பரன்ஸ் ரூமிற்குள் சென்றேன். அங்கே அந்த செக்ரெட்டரி நின்றுகொண்டிருந்தாள். நான் ரொம்பப் பயந்துவிட்டேன். பயத்தில் வெளியே வரப்பார்த்த என்னைக் கண்டு அவளும் ஆச்சர்யமானாள். இந்தச் சத்தத்தைக் கேட்டு Boss ரூமிலிருந்து செகரெட்டரி வெளியே வந்தாள். அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது அவர்கள் இருவரும் twins என்று. எனக்கு அதுவரையில் அவளுக்கு ஒரு சகோதரி twins இருக்கிறாள் என்று தெரியாது. அன்று ரொம்பப் பயந்துவிட்டேன்.

எதிர்பாராத இடத்தில் எதிர்பாராதவர்களைப் பார்க்க நேர்ந்தால் பயம் வரும். அதுவும் நம்ம கதவைத் திறக்க எண்ணிக் கையைக் கொண்டுபோகும்போது அது வெளியே உள்ளவர்களால் திறக்கப்பட்டாலும் பயம் வரும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நெல்லைத் தமிழன். நீங்கள் சொல்வது மிக சுவாரஸ்யம். திகைப்பாக
இருந்திருக்கும். நான் இதுவரை ஒன்றுபோல இருக்கும் ட்வின்ஸ் பார்த்ததில்லை.அந்தக் காட்சியை யோசிக்கும் போதே த்ரில்லிங்காக இருக்கிறது.

ஆமாம், நான் தள்ள அவர்கள் திறக்க,முதலில் சத்தம் போட்டது நான் தான்.
பாவம் அந்த மனுஷன், அப்படியே நெஞ்சில் கை வைத்துக் கொண்டுவிட்டார்.
இன்னும் அந்தக் காட்சி கண்ணில் நிற்கிறது.ஹா ஹா.

வெங்கட் நாகராஜ் said...

அடடா.... உங்களைப் பார்த்து பயந்திருக்கிறார்களே.....

சில சமயங்களில் இப்படித் தான் நடந்து விடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

பாவம் அந்தத் தம்பதியினர். அவர்களுக்கு எப்பவுமே வெளி நாட்டினர் அதுவும் ஆசியக் கண்டம் என்றால் அவர்களுக்கு அலர்ஜி. வெங்கட்.