Blog Archive

Sunday, August 07, 2016

இன்று ஆடிப் பெருக்கு...நினைவுகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நம் காவேரி
ஆடிப் பெருக்கன்று பதிவு செய்திருக்க வேண்டிய எழுத்து. வேலைகளுக்கு நடுவில் விட்டுப் போனது.  நாங்கள் திருச்சியில் வாழ்ந்த சிலகாலங்களில் பை பாஸ் ரோட்டுக்கு அடியில்  காவேரி தண்ணீரில்  ஓரமாகக் குழந்தைகளை விளையாட விட்டதுண்டு. அப்போதே ஓடை போலத்தான் ஓடிக்கொண்டிருந்தால் காவேரி.  இங்க விட  கல்லணை முக்கொம்பில் நிறையத் தண்ணீர் ஓடும் சார். அங்கே நீச்சல் கூட அடிக்கலாம் என்று அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் சொல்வார்கள்.
 நாங்கள் ஒரு தடவை முக்கொம்பு போய் வந்த அனுபவத்தை ஏற்கனவே எழுதியாகிவிட்டது.
மறக்க முடியாதாகிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரிடம் பயம் இருக்கக் கூடாது என்பதற்காகவே  இந்த இடத்துக்கு அழைத்து வருவோம்.
 ஸ்ரீரங்கம், சமயபுரம் ,பைபாஸ் காவேரி பிறகு வீடு என்பது ஞாயிற்றுக் கிழமைகளில்  எழுதாத விதி முறைகள்.  ஜங்க்ஷன் வரும்போது எங்கள் கிபியட் சொல்லாமலேயே காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கும் பழைய புத்தகக் கடைக்குப் போய்விடும்.  ஆர்ச்சி, ஹார்வி  காமிக்ஸ், மார்வெல் காமிக்ஸ் என்று விதவிதமாக வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து
சப்பாத்தி செய்யத்தான் நேரம் இருக்கும். இனிய நாட்கள் அவை.

10 comments:

கோமதி அரசு said...

முக்கொம்பில் சார் செய்த வீர தீர செயல் மறக்க முடியாது.
உங்கள் ஆடிபெருக்கு நினைவுகள் அருமை.

ஸ்ரீராம். said...

தஞ்சையில் இருந்திருக்கிறேன். ஆற்றங்கரையோரம் சென்று ஆடிப்பெருக்கு கொண்டாடியதில்லை! ம்ம்ம்ம்...

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்.....

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி. நீங்கள் மாயவரத்திலிருந்து எழுதிய பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அன்பு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

மைலாப்பூரில் இருந்து நான் மெரினா போகாத நாட்கள் தான் அதிகம்.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு மிக நன்றி வெங்கட்.
வாழ்க வளமுடன்.

ஷைலஜா said...

தாமதமாகப்படித்தாலும் ஆடிப்பெருக்கு நினைவுகள் பதிவு காவிரியாய் மனதை வருடுகிறது வல்லிமா...வலைப்பூ பக்கம் அதிகம் வருவதே இல்லை .அதனால் இப்படிப்பட்ட பல நல்ல இடுகைகளை மிஸ் பண்றேன்

'பரிவை' சே.குமார் said...

இனிய நினைவுகள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஷைல்ஸ்,
நானே எழுதுவதே அதிசயம் அம்மா.
பதிவுகளுக்கும் அவ்வளவாகச் செல்வதில்லை.
மனசில் அலை மோதும்போது ஏதோ எழுதினேன்.
நீங்கள் ரசித்தது மனசுக்கு இதம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் பரிவை குமார். வாழ்வே நினைவுகளில் தான்.