Blog Archive

Wednesday, August 31, 2016

லண்டன் அனுபவம் 1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

லண்டன்  வந்ததும் பேத்தியின் அன்பு ஆக்கிரமித்துக் கொண்டது. மிக சுட்டி. அழகாகப்  பெரியவர்களை புரிந்து கொள்கிறது.

 என் முழங்கால் வலிக்கு உடனே டைகர்  பாம் கொண்டுவந்து கொடுத்து,  நிறைய நடந்தால் சரியாகிவிடும் என்று புத்திமதி சொல்கிறாள்.

என்னென்ன எல்லாம் எழுதுகிறேன்.  வாட்ஸ் ஆப் நல்லதா, முகநூல்
சரியா.  என்  படம் போடாதே என்ற கண்டிப்பும் கூடவே சொல்லிவிட்டது.
எட்டு வயதுக்கு  நல்ல கூர்மை . இன்னும் பள்ளி ஆரம்பிக்கவில்லை.
 
 பக்கத்தில் தோழிகள் யாரும் இல்லாததால் கொஞ்சம் சுணக்கம் .பாவம் குழந்தை.  குழந்தையை என்னிடம்   பேசிக்கொண்டிருக்கச்  சொல்லிவிட்டு நான் கணினியிலோ முகநூலில் உட்கார்வது சரியென்று தோன்றவில்லை . அனைவரும் வாழ்க  வளமுடன்.

10 comments:

Geetha Sambasivam said...

லண்டன் வாசமா? வாழ்த்துகள், பேத்தியுடன் பொழுது இனிமையாகக் கழியட்டும்.

ஸ்ரீராம். said...

உறவுகள் என்றும் வாழ்க!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. சீக்கிரம் கிளம்பணும். விசா பிரச்சினை. சேன்னு போகிறது சில சமயம். என்ன செய்யலாம் அதுதான் வாழ்க்கை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். அவர்கள் எல்லோரும் நன்றாக இருந்தால் நானும் நன்றாக இருப்பேன்.

வெங்கட் நாகராஜ் said...

விசா பிரச்சனை... எல்லாம் சரியாகும்மா....

பேத்தியோடு மகிழ்ந்திருங்கள்....

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் . மிக நன்றி. எல்லா பிரச்சினைகளும் முடித்து வைக்கும் வினாயகனே கதி.

Ranjani Narayanan said...

பேரன் பேத்திகள் தான் நம் மனதிற்கு மகிழ்ச்சி கொடுப்பவர்கள். என்ஜாய்!

Bhanumathy Venkateswaran said...

//குழந்தையை என்னிடம் பேசிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டு நான் கணினியிலோ முகநூலில் உட்கார்வது சரியென்று தோன்றவில்லை.// ரொம்ப சரி. அத்தனை தூரம் போனது கணினி முன் உட்காரவா? பேத்தியோடு பொழுதை கழியுங்கள். Hava a nice time!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ரஞ்சனி. இந்தக் குழந்தைக்குத் தம்பியோ தங்கையோ இருந்தால் இத்தனை
தனியாக உணராது. கடவுள் நம்மிடம் எப்படி எல்லாம் கருணைகாட்டியிருக்கிறார் என்பது
என் தம்பிகளை நினைக்கும் போது உணர்வேன். வருகைக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமதி, மிக நன்றி மா. உண்மைதான். அவளுக்கு நிறைய பேச வேண்டும்.
நல்ல குழந்தை. பிடிவாதமெல்லாம் கிடையாது.