About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, May 24, 2016

முயற்சி திருவினையாக்கும் 1956

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வாசலில் நின்று கொண்டிருந்த  செவர்லே   பிக் அப்  வண்டி கண்ணை உறுத்தியது.
 அப்பா  தன்  வியாபாரத்துக்குக்காக  வாங்கிய புத்தம்புது வண்டி.

வா வா என்று அழைத்தது. அது வரை  நண்பர்களின்  மோட்டார்பைக்குகளை   ஓட்டி அலுத்துவிட்டது. இனி   கார்,லாரி என்று  ஓட்டவேண்டும் . பதினாறு வயதில்    உடலில்  விறுவிறுப்பு  எதையாவது செய்யத்தூண்டியது.

வண்டியின் சாவி  அவனுக்கு மறுக்கப் பட்டிருந்தது.
வண்டி ஓட்டுபவர் வரும்போதெல்லாம்  ,அவரை மிரட்டி வீட்டு தோட்டத்துக்குள் ஓட்டப் பழகி இருந்த உள்ளம் பரபரத்தது.

அப்பாவும் அம்மாவும் வேறு வண்டியில்  வெளியே போயிருந்ததும் , பாட்டி உறங்கிக் கொண்டிருந்ததும் சௌகரியமாகப் போக  அலுவலக சுவர்களை சாவிக்காக அவன் கண்கள் தேடின. 
ஆஹா கிடைத்துவிட்டது .வாசல்  இரும்பு கிராதியின் சாவியோடு இந்த சாவியும் தொங்குவது கண்ணில் பட  நீளக்கைகள்  எடுத்துவிட்டன அந்த சாவியை.

அலுங்காமல்   வெளியே வந்து ,வண்டியில் அமர்ந்து  சாவியைப் போட்டு   உறுமலுடன் வண்டியைக் கிளப்பவும், பாட்டி டே....என்று கூவிய வண்ணம் வெளிவரவும் சரியாக இருந்தது.
கையாட்டிவிட்டு,  உவகை போங்க  செலுத்தி பங்களா  வாசலுக்கு வந்தாகிவிட்டது. 
எப்படித் திரும்ப ,இடதா வலதா என்று யோசித்தபோது மெரினா கடற்கரைச் சாலியின் அமைதி நினைவுக்கு 
வர இடது பக்கம் ஸ்டீரிங் வளையத்தைத திருப்பவும்   எதிரே 4 ஆம் எண் பஸ் வரவும் சரியாக இருந்தது. 
திடீரென்று வந்த வண்டியை  எதிர்பார்க்காத   பஸ்காரர்  ப்ரேக் பிடிக்க பையனின் வண்டியும்  லாகவமாக எதிர் பக்கம்  வளைக்க ஒரு மாதிரி நிலைமை சமாளிக்கப் பட்டது.
பஸ் ஒட்டுபவருக்குப் பையனின் அப்பா மேல் மதிப்பு.அதனால் விட்டுவிட்டார்.
மீண்டும் வாகனம் பறந்தது.  அமிர்தாஞ்சன் வீட்டு மரம் அருகில் 

ஏதோ ஆணியின் மீதேறி  வண்டியின் டயர் காற்றை இழக்க ஆரம்பித்து ,வளைந்து ஓடி 
மரத்துடன்  ஒட்டியது.

இப்போதும் ஸ்டேட் பாங்க்  போகும்போது  அந்த மரம்  இருக்கிறதா என்று பார்ப்பேன்.
சிங்கத்தின் முதல்  முயற்சி.
++++++++++++++++++++++++++++++ 
பிறகு நடந்தது எல்லாம்  எல்லா வீட்டிலும் நடப்பதுதான்.
மண்டகப்படிகள்.

3 comments:

ஸ்ரீராம். said...

அடடே.... இப்படி வேறு நடந்திருக்கா? முதல் முயற்சிகளே பரபரப்பான சாலைகளிலா? அதுதான் அப்புறம் அதில் தேர்ச்சி மிகப் பெற்றாரோ!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். இப்போது பேரன் ஓட்டப் பழகுகிறான். அதைப் பார்த்ததும் சிங்கம் சொன்ன நிகழ்வு நினைவுக்கு வந்தது.

எந்த சாலையும் அவருக்கு சவால் விட்டதில்லை. நன்றாக சமாளிப்பார்.
வருகைக்கு மிக நன்றி மா.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், இதைப் படிக்கையில் எங்க பையர் அப்பாவுக்குத் தெரியாமல் ஸ்கூட்டரைப் பனிரண்டு வயசிலேயே கற்றுக் கொண்டு ஓட்டிக் காம்பவுண்டில் இருக்கும் மரக்கதவை உடைத்த நிகழ்வு நினைவில் வந்தது. :)