Blog Archive

Friday, April 08, 2016

கூழாங்கற்கள் சிறுகதைத் தொகுப்பு..என் எண்ணங்கள்...1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எனக்குத் தெரிந்து புரிந்த வற்றை இங்கே கொடுக்கிறேன்.

திருகனவுப் பிரியன் எழுதி அருமையாக வெளிவந்திருக்கிறது
கூழாங்கற்கள்  சிறுகதைகளின் தொகுப்பு.
அனுப்பி வைத்த திரு ரத்னவேல் ஐய்யாவுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.

பெரியவர்கள் எழுதின அணிந்துரைகளும், திரு கனவுப்பிரியன் எழுதி இருக்கும் முன்னுரையும் என்னைக் கரைய வைத்தன.சிலபகுதிகளைப் பதிவிடுகிறேன்.


 எழுத்தாளர் திரு.கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் புதினம் ,திரு .ரத்னவேல் அய்யா
மிக முக்கியமாக திரு .ரத்னவேல் அவர்களுக்குதான் என் நன்றி துளசி.
என் ஸ்ரீவில்லிபுத்தூர் பந்தம் இத்தனை வருடங்கள் கழித்து என்னை வந்தடைந்திருக்கிறது.
தேவதா கீதா அவர்கள் புத்தகவிமரிசனத்தில் எப்பொது படிக்கப் போகிறேனோ என்று புலம்பியிருந்தேன். ஐயா அவர்கள் ,எனக்கு இன்பாக்ஸில் செய்தி கொடுத்து இதோ புத்தகமும் வந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய முயற்சி.
அவர் அதை மிக சுலபமாகச் செய்துவிட்டார். எந்த போஸ்ட் ஆஃபீசில் அப்பா வேலை பார்த்தாரோ
அதே போஸ்டாஃபீஸிலிருந்து எனக்குப் புத்தகம். அப்பாவின் ஆதரவாகவே
பார்க்கிறேன். N.Rathna Vel avarkaLukku en NanRikaLஅனுப்பி இங்கே வந்து விட்டது. முகவுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கதைகளை இனிதான் அணுக வேண்டும் கனவுபிரியனுக்கும் திரு.ரத்னவேல் சாருக்கும் மிக மிக நன்றி,

2,கூழாங்கற்கள்+++++++++++++2
முதல் கதை படித்து முடித்தேன். அந்தமடம் இல்லாவிட்டால் சந்தைமடம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதையைச் சொல்வதாக இல்லை.

கருத்து வழுக்கிக் கொண்டு செல்லும் சிமெண்ட் ரோடு போல.
ஒரு அனாவசிய வார்த்தை இல்லை. நான் இதுவரை கண்டிராத மக்கள்.
முக்கியமாக அனைத்துக் கலைகளும் கற்ற ஒரு அரிய மனிதன். அவனை முழுவதும் பயன்படுத்திக் கொண்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக வெளியில் அனுப்பப் படுகிறான். அவனுக்குக்
கவலையில்லை. ஆயிரம் தொழில் அவன் கையில்.
எங்கு வேண்டுமானாலும் பிழைக்க வழி தெரியும்.





ஆனால் இந்தக் கருவை அழகாகக் கையாண்டிருக்கும் திரு கனவுப் பிரியனின்
கைவண்ணம் தான் அதிசயிக்க வைக்கிறது.வாழ்த்துகள்  .

கூழாங்கற்கள். .....3
அழகான கூழாங்கற்களை மகளுக்காகச் சேர்க்கும் இனிய
தந்தையின் வாழ்வு திசைமாறும் அழகை
அருமையாக வடித்திருக்கிறார். அயல் நாட்டில் வாழும் மக்களிடையே 
இயல்பாக இருக்கும் போட்டி,அது மாறும் விதம் எல்லாமே
நெகிழ்வு.
கூழாங்கற்கள் 4
+++++++++++++++++++++
திறமை வாய்ந்த தந்தையை பெற்ற மக்களின் கதை.
இப்படிக்கூட ஒரு தந்தை. அவருக்கான அருமையான மகன் கள்.
மிகவும் ரசித்த கதை.இது வரை அறியாத நடை களம்.
‪#‎கனவுப்பிரியன்‬

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நூல் அறிமுகம் மிகவும் அருமை. கதையை முழுவதும் சொல்லாமல் பட்டும் படாததுமாகச் சொல்லிச்சென்றது அழகு. அந்தக்கதையைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

மிக அருமையான கதைகள் நிறைந்த புத்தகம்...
பகிர்வுக்கு நன்றி அக்கா...

ஸ்ரீராம். said...

கில்லர்ஜி கூட தனது தளத்தில் பகிர்ந்திருந்தார். நல்ல பகிர்வு. முக நூலிலும் பார்த்தேன்.

கோமதி அரசு said...

அழகான விமர்சனம்.
கனவுபிரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வை.கோபாலகிருஷ்ணன் ஜி.,நீங்கள் அருமையான வார்த்தைகளால் என்னைச் சிறப்பிக்கிறீர்கள். எனக்கு ரசிக்கத் தெரிந்த அளவுக்கு
விமரிசனம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. இருந்தும் சொல்லியே ஆக வேண்டும் என்ற
கவனத்தில் எழுதினேன்.உங்கள் தாராள மனசுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பரிவை குமார்,
திரு கனவுப்பிரியனின் எழுத்துகள் சிறப்பாக வடிவம் பெற்றுள்ளன. அதிகமாக
அருமையாக எல்லோரும் விமரிசித்திருக்கிறார்கள்.

எனக்கு அந்த அளவு தமிழ் எழுத முடியவில்லை. கதைகள் காந்தம் போல
ஈர்க்கின்றன. கைக்குக் கிடைக்கச் செய்த ரத்னவேல் ஐயாவுக்கும் , ஏற்பாடு செய்த எங்கள் மகனுக்கும் தான் நன்றி சொல்லணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

கில்லர்ஜி தளத்தில் போய்ப் பார்க்கவேண்டும்.
உங்கள் அப்பா எழுதின புத்தகங்களையும் படிக்க எனக்கு நேரம் வரும்னு நினைக்கிறேன்.

இன்னும் சிறப்பாக எழுதலாம். உடல் ஒத்துழைப்பு இல்லை. மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
வருகைக்கு நன்றி மா. உங்கள் கருத்துகள் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன். அருமையான தமிழ் நடையில் சிறப்பாக அமையும். அப்படிப்பட்ட கதைகள் இவை.

Geetha Sambasivam said...

இப்படி எல்லாம் புத்தகம் வந்திருப்பதே இப்போது தான் தெரியும். இணையத்தில் அடிக்கடி காணாமல் போவதால் எதுவும் தெரியவில்லை. முடிந்தவரை மற்றப் பதிவுகளுக்குப் போகிறேன் . இன்னிக்குத் தான் உங்களுடைய இந்தப் பதிவைப் பார்க்கிறேன். நல்லதொரு விமரிசனம். புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, உங்களுக்கு இருக்கும் பெரிய வேலைகளுக்கு நடுவே மற்ற எழுத்துகளைப் படிப்பதே அதிசயம் தான். யாரையாவது சென்னையிலிருந்து வாங்கி அனுப்ப சொல்லலாம்.