Blog Archive

Saturday, March 05, 2016

ஒரு சிறு குறிப்பு

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சிலர் பிறப்பார்கள் வாழ்வார்கள் மரிப்பார்கள்.
சிலருக்கே வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக அமையும்
எதையாவது சாதிக்கவேண்டும் என்கின்ற
 ஆர்வம் எல்லோருக்கும் இருப்பதில்லை.
நானே ஒரு உதாரணம்.
 திருமணமான புதிதில் வேலை நேரம் போக
உலாவச் செல்வது உண்டு.
இரவு  ,நடு இரவு வரை பெரிய  ட்ராஃப்ட்ஸ்மன்  பலகையில் வெள்ளைத்தாளில் பின்ஸ் குத்தப்பட்டு வரைந்து கொண்டிருப்பார்.
நானும் கூட உட்கார்ந்திருப்பேன்.
வெறும் தண்ணீர்+காற்றில்  ஓடும் வண்டியை  அமைப்பதில்
ஈடுபட்டிருந்தார்.
யாரிடமும் இருந்தும் உற்சாகம் கிடைக்காவிட்டாலும்
கேலிகள் கிடைத்தன.
 அதே போல் ஒரு சின்ன மோட்டாரை வாங்கி அதை இயக்கவும் செய்தார்.
மேலே பணம் போட வசதி இல்லை.

வேலை செய்த தொழிற்சாலையில்  உழைப்பு அதிகம்.
ஒவ்வொரு சக ஊழியரின் நன் மதிப்பையும் பெற்றிருந்தார்.

டிசம்பர் வந்தால்,எல்லா ஊழியர்களின் ஜாப் கார்ட்  என்பதில் அவரை
அவர் நடவடிக்கைகளைப் பார்த்து மதிப்பீடு கொடுத்தால் தான் அவர்களுக்கு மேற்கொண்டு
சம்பளம் உயரும்.
வேலையில்  சலிப்புக் காண்பிப்பவர்களை நல்ல வார்த்தை சொல்லி
 வேலை செய்ய வைத்து அவர்களுக்கு நல்ல
சம்பள உயர்வையும் சிபாரிசு செய்து விடுவார்.
   அத்தனை உள்ளங்களின் வாழ்த்துகள் தான் எங்களை இன்னும் நல்லபடியாக
வைத்திருக்கின்றன..  நன்றியுடன்  மிஸஸ்.சிம்மு.

2 comments:

V Mawley said...

"அத்தனை உள்ளங்களின் வாழ்த்துகள் தான் எங்களை இன்னும் நல்லபடியாக
வைத்திருக்கின்றன "-- உண்மை ,முற்றிலும் உண்மை ..இதை நான் தினமும் உணர்கிறேன் ..நன்றி .

மாலி

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு.மாலி. தங்கள் கருத்து என்றும் உண்மை.
நல்லது செய்யும் நன்மை வேற ஏதும் செய்யாது.