Blog Archive

Monday, February 01, 2016

1966 லிருந்து 2016 வரை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 வணக்கத்துக்குரிய மாமியார்  மாமனார் 


ஜனவரி 31ஆம் தேதி புடவைகள் வாங்க நாள்.
புரசவாக்கத்துக்கும்  மணிசங்கர் புடவைக் கடைக்கும்
இரண்டு  ட்ரிப் போய் பட்டுப் புடவைகளும், ரேவதி ஸ்டோர்ஸில்
கடாவ் புடைவைகளும் வாங்கி  பெட்டிகளில் அடுக்கப்பட்டன,.

ஸ்ரீராம் நாயுடு  அழகாக  எல்லா  ஜாக்கெட்டுகளையும் தைத்துக் கொடுத்தார்.
 புது செருப்பு வாங்கியாச்சு.
வாசலில் வாழை  மரங்கள் மாமா கொண்டுவந்து கட்டிவிட்டார்.

 வைரத்தோடுகள் ,தயார் என்று தொலைபேசி வந்தது. பாரிஜாதம் போய்
 காதில்  |வலிக்க வலிக்கப்} போட்டுக் கொண்டு திரும்பி வந்தோம்.
அடுத்த நாள்  எங்களுக்கு  அங்கே சாப்பாடு.
கல்யாண அழைப்பிதழை  அங்கே கொடுத்துவிட்டு
ஏழு  நாத்தனார்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு

  அந்த வீட்டைப் பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சித்தேன்.
ஒரே சிரிப்பும் உல்லாசமும் தான்.
 இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் ஒரு   இரண்டுங்கெட்டான் நிலை.

அத்தை டில்லியிலிருந்து வந்துவிட்டார் அழகாக மருதாணி வைக்க.
கங்காதீஸ்வரர்  கோவில் கடையில் கண்ணாடி வளையல்களும்,
நான் மிக விரும்பும் குடை ஜிமிக்கிகளும்  வாங்கிக் கொண்டேன்.
இரவெல்லாம் பேச்சு பேச்சுதான்.
   மாமாக்கள் மாமிகள் அனைவருக்கும் நான் புடவை தடுக்காமல்
மேடை ஏறி இறங்கவேணுமே என்கிற கவலை.


பிப்ரவரி 3 ஆம் தேதி  பந்தக்கால்  நட்டு சத்திரத்தை அடைந்தோம்.
சாயந்திரம்  நிச்சயதார்த்தம்  விசேஷமாக நடந்தது.
 அடுத்த நாள் 4 ஆம் தேதி  காலை இரண்டுமணிக்கே நாதஸ்வரம்  மேளம் என்னை எழுப்பின.

கால்களுக்கு நலங்கு இட்டு  புனித ஸ்னானம் செய்வித்தார்கள்.
ஊஞ்சல் புடவையாக  ஸ்கார்லெட்  புடவை, மாலையுடன்
நான் தயாராகவும் மாப்பிள்ளை வீட்டார் வரவும் சரியாக இருந்தது.
 நான் காப்பி கூடக் குடிக்கவில்லை என்பதே எல்லோரும் மறந்துவிட்டனர்.

சரியாக  காலை 9 மணி10  நிமிடத்திற்கு சிங்கம் என்னை மனைவியாக்கிக்
கொண்டார்.
அதன் பிறகு  நலங்கு அது இது என்று 12 மணி வரை புகை மண்டலத்தில் இருவரும்
அல்லாடிய பிறகு .ஒருவழியாகத் திருமணம்  பூர்த்தியானது.

அருமையான  மனிதரின் மனைவி என்ற பெருமையுடன் புகுந்த வீட்டுப் பிரவேசமும்
நடந்தேறியது.  இதோ 50
வருடங்களும் ஓடிவிட்டன. அனைவருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ வணக்கம்.


27 comments:

Geetha Sambasivam said...

choooo chweeeeeeeeet and choooo soopper valli

வல்லிசிம்ஹன் said...

Many many thanks. Geetha ma. uppu uraippu onnume illaiye>}}}}}

Anuprem said...

ஆகா ..அழகு ..வாழ்த்துக்கள் ..அம்மா

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இனிய நினைவலைகள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.

//நான் காப்பி கூடக் குடிக்கவில்லை என்பதே எல்லோரும் மறந்துவிட்டனர்.//

படித்தேன். மிகவும் ரஸித்தேன். பலக்கச் சிரித்தேன். இதுபோல எனக்கும் ஒருமுறை வேறொரு விழாவில் நடந்தது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வைரத்தோடுகள், தயார் என்று தொலைபேசி வந்தது. பாரிஜாதம் போய்
காதில் {வலிக்க வலிக்கப்} போட்டுக் கொண்டு திரும்பி வந்தோம்.//

பொதுவாக பெண்கள் நாம் சொல்வது எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டார்கள், வைரத்தோடு தவிர :)

//வலிக்க வலிக்க//

அழகான அருமையான எழுத்துக்கள். பாராட்டுகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஏழு நாத்தனார்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்த வீட்டைப் பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சித்தேன். ஒரே சிரிப்பும் உல்லாசமும் தான். இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலை.//

மிகவும் யதார்த்தமாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மைதான். அது எல்லோருக்குமே ஒரு இரண்டுங்கெட்டான் நிலைதான். சூப்பர் !

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நான் மிக விரும்பும் குடை ஜிமிக்கிகளும் வாங்கிக் கொண்டேன்.//

குடை ஜிமிக்கிகள் .... ஆஹா, படிக்கும் போதே அழகாக அவை காதுகளில் தொங்குவதுபோன்ற கற்பனை செய்ய முடிகிறது. :) Excellent :)

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மாமாக்கள் மாமிகள் அனைவருக்கும் நான் புடவை தடுக்காமல் மேடை ஏறி இறங்கவேணுமே என்கிற கவலை.//

மணப்பெண் மீது மிகவும் அக்கறையுள்ள அனைவருக்கும், இதுபோன்ற கவலை இன்றும் எல்லாக்கல்யாணங்களிலும் இருந்து வருகிறது. அதை தாங்கள் எழுத்தினில் சொல்லியுள்ளது சூப்பர் !

//இதோ 50 வருடங்களும் ஓடிவிட்டன.//

எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் எப்போதும் இனிய நினைவலைகள் நமக்கு மிகப்பெரிய இன்பம் தரக்கூடியவைதான். பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதலில் காட்டியுள்ள பெருமாள் படம் இப்போதுதான் எனக்குக் காட்சியளித்தது. அது மிகவும் அழகாக உள்ளது.

தங்களின் திருமங்கல்யதாரணக் கல்யாண காட்சிப் படத்தைத் தேடிப்பிடித்து போட்டுள்ளது மிகச்சிறப்பாகும்.

அப்போதெல்லாம் Black & White போட்டோக்கள் மட்டுமே இருந்தன. இப்போதுபோல கலர் போட்டோக்களோ, நவீன ட்ரிக் ஷாட் ஆல்பங்களோ, வீடியோ வசதிகளோ இல்லாதது ஒரு மாபெரும் குறையாகத்தான் உள்ளது.

வல்லிசிம்ஹன் said...

அனுராதா ப்ரேம் மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோபாலகிருஷ்ணன் ஜி, பின்னூட்டங்களால் திக்குமுக்காடச் செய்துவிட்டீர்கள்.

இத்தனை அன்புக்கு நான் பாத்தியதையா என்று யோசிக்கிறேன்.

வலிமிகுந்த நாட்களைக் கடந்து கொண்டிருக்கும் போது உங்கள் எல்லோருடைய வாக்கும்
அமைதியைத் தருகிறது. அனந்த கோடி நமஸ்காரங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்த அருமையான பதிவினை நான் ஒருமுறை படித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் என் மனைவிக்கும் ஒருமுறை படித்துக்காட்டினேன். அவளும் சந்தோஷப்பட்டுக்கொண்டாள்.

மனதை எப்போதும் சந்தோஷமாகவும், தைர்யமாகவும் வைத்துக்கொண்டு, இதுபோன்ற சுவையான, அந்தக்கால நினைவலைப் பதிவுகளாகத் தருவதில் திருப்பி விடவும்.

உங்கள் எழுத்துக்களில் ஓர் தனித்தன்மையும், மிகவும் யதார்த்தமும், படிக்க மிகவும் ருசியாகவும் உள்ளது. அதனால் தாங்கள் தொடர்ந்து எதைப்பற்றியாவது எழுதிக்கொண்டே இருக்கவும். IT WILL ONLY, GIVE DIVERSION TO ALL OUR WORRIES. THIS IS MY OWN EXPERIENCE ALSO.

ராமலக்ஷ்மி said...

பொக்கிஷமான நினைவுகள்.

ஸ்ரீராம். said...

மலரும் நினைவுகள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மை அன்பு கோபாலகிருஷ்ணன் ஜி. உங்கள் அன்பான
கருத்துக்கு நன்றி மீண்டும் எழுதவே முயற்சிக்கிறேன். நீங்கள் எல்லாம் இருக்கும் போது என் கவலைகள் குறையும். தங்கள் மனைவிக்கும் என் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி. மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் மிக மிக நன்றி.

Angel said...

அருமையான நினைவுகள் வல்லிம்மா ..அதிலும் உங்க எழுத்து நடை மிகவும் ரசித்தேன் ..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
நடந்தது சுவாரஸ்யம். அதனால் நடையும் ஸ்வாரஸ்யம் மா.
நன்றி ராஜா.

sury siva said...

பழைய நினைவுகள்
இழைந்து குழைந்து
அழையும் போது
அந்த நினைவுகள்
தரும்
வாசம் நம்மை
வசியப்படுத்துவதும்
வசந்தமாக்கு வதும்
உண்மைதான்.

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி சுப்பு அண்ணா.
உங்களை நினைத்துக் கொண்டே இருந்தேன்.
மிக நன்றி.

G.M Balasubramaniam said...

இதுவரை உங்கள் பதிவுகளுக்கு நான் வந்தது விரல் விட்டு எண்ணி விடலாம் வந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன் வயதேற ஏற வாழ்வே நினைவுகளிலெயே பரிணமிக்கிறது மணவாழ்வில் ஐம்பது ஆண்டுகளையும் கடந்த நான் இதற்கு முன் எழுதிய பதிவையும் நீங்கள் பார்வையிட விரும்புகிறேன் வயதின் சங்கடங்களும் சவாலும் எண்ணப் பகிர்வுகளும் கலந்தது இனி தொடர்ந்து வருவேன் ஆனால் நீங்கள்தான் எழுதவேண்டும் வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

வாவ். footprints on the sands of time... எத்தனை சுவாரசியம் என்பது புரியவே வயதாக வேண்டும் போலிருக்கிறது.

(அது சரி.. கடைசியில காபி குடுத்தாங்களா இல்லையா?)

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை நலமா மா. ஆமாம். சுவடுகள் அங்கேயே தான் இருக்கின்றன. ரிடிரேஸ் செய்தால் என்னைப் பார்.உன் அமிர்த பனாட்கள் என்று சொல்கின்றன.
காப்பி கொடுக்கவேயில்லை. சம்பந்தி உபசரிப்பில் என்னை விட்டுவிட்டார்கள்.
ரொம்ப இன்னொசெண்ட் அம்மாவும் அப்பாவும். சாப்பாடு மேஜையில் அவரைவிட எனக்குதான் பசி அதிகம்.>}]]]]]]]]]]]]]

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜிஎம்பி சார்.
கட்டாயம் வந்து படிக்கிறேன்.
கண்ணில் உலர் நோய் இருப்பதால்
அதிகம் யோசித்து எழுத முடிவதில்லை. தலைவலி வந்துவிடுகிறது.
எங்கள் வீட்டிலும் எல்லோரும் 50 வருட மணவாழ்க்கையைச் சுவைத்தவர்கள் தான்.
இன்னும் வருகிற தலைமுறையும் அப்படியே வாழவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.