Blog Archive

Thursday, October 01, 2015

கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே அங்கு வேரில் பழுத்த பலா.....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இங்கு வந்ததும் நான் விட்டுச் சென்ற பழைய புத்தகங்கள் என்னை அன்போடு விசாரித்தன .
முதலில் எடுத்தது  திரு ஜெயகாந்தனைத்தான். அதில் முதல் கதையே என்னை  பதினைந்து வயதில் என்னைப் பாதித்த யுகசந்தி.
கௌரிப்பாட்டி கடலூருக்கு மகன் வீட்டுக்கு வரும் காட்சி.  ஒவ்வொரு வரியிலும் உயிர். பாட்டியின் ,வியர்வை, அவள் முகப் பரு, ஸ்தூல சரீரம், 70 வயதான மூப்பு, வெறுங்காலோடு அவள் வெய்யிலில் நடப்பது எல்லாமே என்னைப் பழங்காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டன.

பேத்தியை நெய்வேலியில் விட்டு விட்டு மகன் வீட்டுக்கு வந்திருப்பது தலைமுடி க்குச் சீரமைப்பு வேலை செய்யத்தான்.
தன்  37  வயதில் கணவனை இழந்த என் பாட்டி  நினைவுக்கு வந்தார். 
அப்போது இந்தத் தண்டனையிலிருந்து அவரைத் தப்பிக்க வைத்தது அவரது கடைசி மகன்.ஏழு வயது சிறுவன்.
அன்றிலிருந்து  எந்த ஒரு திருமணத்துக்கும் சென்றதில்லை.  என் திருமணத்துக்கு வந்தவர் மேடைக்கு வரவில்லை.
என்ன உலகமடா இது. அப்படிக்கூடவா பெண்களை  அடக்கி வைக்கும்.
கதையில்  குரிப்பாட்டியின் பேத்தியும் 18 வயதில்  கணவனை இழந்துவிடுகிறாள். முயற்சி செய்து   ஆசிரியர் தொழிலில் அமர்கிறாள். அவளுக்குத் துணையாகப் பாட்டியும் நெய்வேலிக்குச் சென்று விடுகிறாள். இப்போது அவளெடுத்திருக்கும் ஒரு முடிவு குடும்பத்தைத் திகைக்க வைக்கிறது.  பாட்டிக்கு மட்டும் அவள் நிலைமை நன்கு புரிகிறது.
யாரும் தனக்காக எதையும் தியாகம் செய்யவில்லை என்ற கடித வரி, பேத்தியின் மனக் குமுறலைப் புரியவைக்கிறது.
விளைவு , அடுத்த நாள் காலை,  தலைமுழுகச் சொல்லும் மகனை பாசத்துடன் பார்த்து,
உன் வழியில் எனக்கும் வேணுமானால் தலை முழுகிவிடு 
நான் என் பேத்தியோடு செல்கிறேன் என்பவளை, அன்று படிக்கும்போதும் படித்துப் பூரித்தேன். இன்றும்  அதே உணர்வு. 
இந்த எழுத்து  யாருக்கு வரும். 
நன்றி   ஜெயகாந்தன் ஐயா.

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஜெயகாந்தன் ஜெயகாந்தன்தான்
நன்றி சகோதரியாரே

Abi Raja said...

அருமையான கதை அம்மா. படித்திருக்கிறேன். என்னவருக்கு ஜெயகாந்தன் எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும். நான் ரமணிசந்திரனின் தீவிர ரசிகை.

Geetha said...

அம்மா நல்லாருக்கீங்களா,...யுகசந்தி கதை படிக்கும் ஆவலைத்தூண்டிவிட்டீர்கள் அம்மா...படிக்கிறேன்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார். மிக நன்றி மா. ஜெய காந்தனை எத்தனி முறை படித்தாலும் அலுப்பதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அபி,
ஜெகே யாராலும் படிக்காமல் இருக்க முடியாது.60 களின் தலை சிறந்த கதாசிரியர்.நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. அச்சோ இவ்வளவு வேலைகளுக்கு நடுவில் இங்கே வந்தீர்களா..
கட்டாயம் நேரம் கிடைக்கும் போது ஜெகே சாரைப் படியுங்கள் .அது ஒரு புதிய உலகம் அம்மா.

மீரா செல்வக்குமார் said...

ஆஹா,,,தூங்கிகிடந்த சிங்கத்தை எழுப்பியிருக்கிறீர்கள்....ஒரு மறுவாசிப்புக்காக யுகசந்தி மேண்டும் என் மேசையில்...நன்றி அம்மா..வாய்ப்பிருப்பின் என் வலைக்கும் வாருங்கள்...