Blog Archive

Saturday, October 31, 2015

50 வருடங்களுக்கு முன் ஒரு சந்திப்பு அக்டோபர் 31

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பசுமையான  நினைவுகள்.   யாரும் மறக்கவில்லை  என்சிங்கத்தை.  காம்பவுண்டு சுவர் கட்டும்   மேஸ்திரி,ஐய்யா ,,,,மழை   வராதுன்னால்  வராதுமா.
செடிக் குப்பைகளை அள்ளிச் செல்லும் கலைசெல்வி, ஐயா மாதிரி கிடையாது என்கிறாள்.
   தண்ணீர் கொண்டுவரும் தமிழ் அன்பு, இரண்டு பாரலையும் ஐயா தூக்கிவிடுவாரென்கிறான்.
உங்களை  முதல் முதல் பார்த்த இந்த நாளைக் கொண்டாடுகிறேன்     என்  சிங்கமே.

Saturday, October 10, 2015

சென்னை வரும் நேரம்.......

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நாளை பதிவர் மா நாட்டுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

சென்னைக்கு 12 ஆம் தேதி மதியம் வருகிறோம். 16 ஆம்  தேதி வீட்டுக்கு வருகிறோம். வைத்தியர் விசிட், யுஎஸ் விசா, ஸ்விஸ் விசா   எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு  வீட்டு சாமிகளுக்கு சுண்டல் செய்து,
அதற்கப்புறம் வருகை தரும் என் சாமி எஜமானருக்கு

வருடத்துக்கான
உபசாரம் செய்து .
 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் கண்டு மீண்ட பிறகு
நட்புகளையும் சந்திக்க ஆசை.
எதெல்லாம்  நிறைவேறுகிறதோ  எல்லாம் அவன் கையில்.
கடமை பூர்த்தியாக வேண்டும்.

வணக்கம் வாழவைக்கும் சென்னை.
உனக்கு ஈடு இல்லையே.

Friday, October 09, 2015

நவராத்திரி நாட்களுக்கான வாழ்த்துகள்..

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
நவராத்திரி வருகிறது.
பழைய படங்களில் எங்க வீட்டுப் பொம்மைகளைப் பார்க்கிறேன்.
  வீடு சென்றதும்  வெளியில் எடுத்து சுத்தம் செய்து படி வைத்து ஐந்து பொம்மைகளுக்கு  விடுதலை கொடுக்கணும். தேவியர் யார் வீட்டு  வீட்டுக்குக் கொடுக்க  வேண்டும்
என்று யோசித்து வைத்திருக்கிறேன். அவர்கள் சம்மதத்தோடு அனுப்ப வேண்டும்.

அனைவருக்கும் நவ நாயகிகள்  அருள் பொழிய வேண்டும்

இனிய நன்னாள் வாழ்த்துகள்.

Thursday, October 01, 2015

கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே அங்கு வேரில் பழுத்த பலா.....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இங்கு வந்ததும் நான் விட்டுச் சென்ற பழைய புத்தகங்கள் என்னை அன்போடு விசாரித்தன .
முதலில் எடுத்தது  திரு ஜெயகாந்தனைத்தான். அதில் முதல் கதையே என்னை  பதினைந்து வயதில் என்னைப் பாதித்த யுகசந்தி.
கௌரிப்பாட்டி கடலூருக்கு மகன் வீட்டுக்கு வரும் காட்சி.  ஒவ்வொரு வரியிலும் உயிர். பாட்டியின் ,வியர்வை, அவள் முகப் பரு, ஸ்தூல சரீரம், 70 வயதான மூப்பு, வெறுங்காலோடு அவள் வெய்யிலில் நடப்பது எல்லாமே என்னைப் பழங்காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டன.

பேத்தியை நெய்வேலியில் விட்டு விட்டு மகன் வீட்டுக்கு வந்திருப்பது தலைமுடி க்குச் சீரமைப்பு வேலை செய்யத்தான்.
தன்  37  வயதில் கணவனை இழந்த என் பாட்டி  நினைவுக்கு வந்தார். 
அப்போது இந்தத் தண்டனையிலிருந்து அவரைத் தப்பிக்க வைத்தது அவரது கடைசி மகன்.ஏழு வயது சிறுவன்.
அன்றிலிருந்து  எந்த ஒரு திருமணத்துக்கும் சென்றதில்லை.  என் திருமணத்துக்கு வந்தவர் மேடைக்கு வரவில்லை.
என்ன உலகமடா இது. அப்படிக்கூடவா பெண்களை  அடக்கி வைக்கும்.
கதையில்  குரிப்பாட்டியின் பேத்தியும் 18 வயதில்  கணவனை இழந்துவிடுகிறாள். முயற்சி செய்து   ஆசிரியர் தொழிலில் அமர்கிறாள். அவளுக்குத் துணையாகப் பாட்டியும் நெய்வேலிக்குச் சென்று விடுகிறாள். இப்போது அவளெடுத்திருக்கும் ஒரு முடிவு குடும்பத்தைத் திகைக்க வைக்கிறது.  பாட்டிக்கு மட்டும் அவள் நிலைமை நன்கு புரிகிறது.
யாரும் தனக்காக எதையும் தியாகம் செய்யவில்லை என்ற கடித வரி, பேத்தியின் மனக் குமுறலைப் புரியவைக்கிறது.
விளைவு , அடுத்த நாள் காலை,  தலைமுழுகச் சொல்லும் மகனை பாசத்துடன் பார்த்து,
உன் வழியில் எனக்கும் வேணுமானால் தலை முழுகிவிடு 
நான் என் பேத்தியோடு செல்கிறேன் என்பவளை, அன்று படிக்கும்போதும் படித்துப் பூரித்தேன். இன்றும்  அதே உணர்வு. 
இந்த எழுத்து  யாருக்கு வரும். 
நன்றி   ஜெயகாந்தன் ஐயா.