About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, September 06, 2015

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


தனியாக்கப் படுவது எப்போது.

நம்  மனம் சில நபர்களைச் சந்தோஷப்படுத்துவது கடமை என்று நினைத்து விடுகிறது.
அவர்களோடு பேசுவதில் நமக்கும் மகிழ்ச்சியே.  ஆனால்  அவர்களுக்கு அது உகப்பதில்லை


கட்டாயமே இல்லை. அவர்கள் நம் அன்பையோ பாராட்டுகளையோ எதிர்பார்த்து  இல்லை..

நீயும் என்னை விசாரிக்க வேண்டாம். 
நானும் உன்னை விசாரிக்கவில்லை என்று வாசலிலேயே
அனுப்பிவிடுகிறார்கள்..

நம்மைவிடப் பெரியவர்களிடம் பேசப் போகும்போது
இத்தனை நாளாய் ஏன் பேசவில்லை. 
ஒருத்தன் இல்லைன்ன்னால் நாங்களும் இல்லையா என்கிற 
அளவில் வார்த்தைகள் வீசுகிறார்கள்.

சம நிலை எனக்குதான் இல்லையா. என்று யோசனை போகிறது.

அதோடு இந்த ஏழரை  மீன ராசியில் இருக்கிறதோ போய்விட்டதோ என்றும் சில நாட்களாக சந்தேகம்..]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
எல்லாம் 

போகட்டும் கண்ணனுக்கே

16 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

ஏழரை இன்னும் மீன ராசிக்கு வரவே இல்லையே! இப்போதைக்கு என்னைப் பிடித்து ஆட்டுகிறது. :( பல விதங்களிலும். :(

Geetha Sambasivam said...

//அவர்களோடு பேசுவதில் நமக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அவர்களுக்கு அது உகப்பதில்லை
கட்டாயமே இல்லை. அவர்கள் நம் அன்பையோ பாராட்டுகளையோ எதிர்பார்த்து இல்லை..
நீயும் என்னை விசாரிக்க வேண்டாம்.
நானும் உன்னை விசாரிக்கவில்லை என்று வாசலிலேயே
அனுப்பிவிடுகிறார்கள்..//

இணையத்தில் மட்டுமல்ல, உறவுகளிடமும் இந்த அனுபவங்களோடு இன்னமும் பட்டுக் கொண்டிருக்கேன். ஆனால் புத்தி தான் இன்னமும் வரலை! :( எல்லாத்தையும் தாண்டித் தான் சிரிக்க வேண்டி இருக்கிறது. :))))

திண்டுக்கல் தனபாலன் said...

எதுவும் கடந்து போகும் அம்மா...

R Abinaya said...

ஆமாம் அம்மா. சிலரிடம் பேசினாலும் பிரச்சனை பேசலைனாலும் பிரச்சனை !!!!போகட்டும் கண்ணனுக்கே!!! பகிர்விற்கு நன்றி அம்மா.

ராமலக்ஷ்மி said...

மனிதர்களைப் புரிந்து கொள்வது என்றைக்கும் எளிதாக இருந்ததில்லை. நம் மனசாட்சிக்குத் தவறாகப் படாத வழியில் சென்று கொண்டிருக்க வேண்டியதுதான். கலக்கம் வேண்டாம்.

sury Siva said...

சில உறவுகள் சம்பிரதாயமாக, உதட்டளவில் நிற்கும்.
உதடுகள் உதிர்க்கும் சொற்களில் இதயம் கலப்பதில்லை.

சில சுற்றங்கள் நிர்பந்தகளினால், சில நிகழ்ச்சிகள் நடக்கையிலே, நல்லதோ, கெட்டதோ, அந்தந்த காலத்தில் கூடுகின்றன.
நிகழ்வுகள் முடியும்போது, உறவுகளும் அந்தி நேரப்பறவைகள் போலத் தத்தம் கூடுகளுக்குச் சென்று விடுகின்றன.
அடுத்த நிகழ்வு நடக்கும் வரை, இவர்கள் ஒருவரை ஒருவர் செல் ல்லில் கூட பேசு வதில்லை. இது ஒரு சுற்ற நிர்ப்பந்தம். போகாட்டி எதுனாச்சும் சொல்வாகளோ என்ற அச்சம்.

ஆக, இந்த உறவுகள் பேசுகையிலே ஒரு செயற்கை தன்மை தான் இருக்கும். சிலர் நியூஸ் பிடிப்பதற்காகவே பேசுவார்கள்.

இதெல்லாம் நினைத்துக் கொண்டு, நாம் நமது சந்தோஷத்தை அடகு வைக்கவேண்டாம். நமது மகிழ்ச்சி நம் கைகளில் இருக்கிறது. அதை பிறர் கையில் கொடுத்துவிட்டு, வருத்தப் பட வேண்டாம்.

அது சரி. இப்போது சனி விருச்சிகத்தில் அல்லவா இருக்கிறது. துலா, விருச்சிகம், தனுசு ராசிகளுக்குத் தான் இப்போது ஏழரை சனி காலம்.துலாத்துக்கு இன்னும் 2 வருடம், விருச்சிகத்துக்கு 4 1/2 வருடம் , தனுசுக்கு 7 வருடம் இன்னமும் பாக்கி இருக்கிறது. அது பாட்டிலே இருந்துட்டு போகட்டுமே !!

மீன ராசிக்கு, சனி 9ல் இருக்கிறார். 11, 12க்கு உடையவர் என்பதால் மிஸ்ர பலன்.நோ கவலை.

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு அண்ணா,

ஒருவர் நம் வாழ்வில் இல்லை என்றால் உறவுகள் மத்தியில் எவ்வளவு வீழ்ந்துவிடுகிறோம் என்கிற கவலைதான்.
மிச்ச நாளும் போக வேண்டுமே.பெண்ணகத்திலியே இருக்க முடியாது அல்லவா..

நாம் பெரியவர்கள் நிழலிலேயே அடங்கினோம். இப்பொழுது காலம் அப்படி இல்லை.
சனி என்ன செய்யப் போகிறார். நல்லதே செய்வார். நல்ல வார்த்தைகளுக்கு மிக நன்றி.
இந்த அன்பெல்லாம் இருக்கையில்
நான் மனம் வருந்தக் கூடாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் கண்ணன் நன்மை செய்வான். வாழ்த்துகளுக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அபி நயா உண்மை அம்மா..உலகம் இப்படித்தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.
இணையம் பற்றிக் கவலை இல்லை. என்னை இன்னும் நிறுத்திவைத்திருப்பது
இணைய நட்புகளும் குழந்தைகளின் மாறா அன்பு மட்டுமே..

இங்கேயே இருந்துவிடச் சொல்லி பெண் சொல்கிறாள்.
என் மனம் வீட்டைச் சுற்றி வருகிறது. மற்ற இடங்களின் தனிமை பயமுறுத்துகிறது.

பார்க்கலாம் பகவான் எனக்கு ஒரு வழி வைத்திருப்பார்.
நீங்களும் கவலைப் படவேண்டாம். கூடாதார் நட்பு தானே விலகிவிடும்..
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மை தனபாலன். காலம் மாறிக் கவலைகள் தீரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
நன்றி மா. கலங்க வைப்பவர்களும் நன்றாக இருக்கட்டும்..
வாய் வார்த்தை தானே. காற்றோடு விட்டு விட வேண்டும்..

திட மனம் கொடுக்கக் கடவுளிடம் தினம் பிரார்த்தனை..
உங்கள் அன்பு எல்லாம் என் கட்டிடத்திற்கு உறுதி.

வல்லிசிம்ஹன் said...

சில உறவுகள் சம்பிரதாயமாக, உதட்டளவில் நிற்கும்.
உதடுகள் உதிர்க்கும் சொற்களில் இதயம் கலப்பதில்லை.

சில சுற்றங்கள் நிர்பந்தகளினால், சில நிகழ்ச்சிகள் நடக்கையிலே, நல்லதோ, கெட்டதோ, அந்தந்த காலத்தில் கூடுகின்றன.
நிகழ்வுகள் முடியும்போது, உறவுகளும் அந்தி நேரப்பறவைகள் போலத் தத்தம் கூடுகளுக்குச் சென்று விடுகின்றன.
அடுத்த நிகழ்வு நடக்கும் வரை, இவர்கள் ஒருவரை ஒருவர் செல் ல்லில் கூட பேசு வதில்லை. இது ஒரு சுற்ற நிர்ப்பந்தம். போகாட்டி எதுனாச்சும் சொல்வாகளோ என்ற அச்சம்//////////////This is the truth I am facing now.Thanks Anna.

பரிவை சே.குமார் said...

இதுவும் கடந்து போகும் அம்மா...
மாயக் கண்ணன் பிறந்ததின வாழ்த்துக்கள்...

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா ,பரிவை குமார். ஆமாம்,எழுதியே இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. மனம்
அமைதியடையட்டும்.