Blog Archive

Friday, August 28, 2015

இன்னும் ஒரு கல்யாண சம்பவம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அம்மா  நான் ரொம்ப ப்ரௌனா  இருக்கேனா என்று கேட்டவாறு வந்து நின்ற பெண்ணை  அதிசயமாகப் பார்த்தாள்  சுந்தரி.
இதென்ன கேள்விடா   கண்ணு. நீ அழகாக் கலராத்  தான் இருக்க.
முகம் அலம்பிக்கோ. அத்தை வீட்டுக் கல்யாணத்துக்குப் போகணுமே.

நான் வரலை.

நேத்திக்குப் போட்டுக் கொண்டதையே போட்டுக்கணும்.
மத்தவா எல்லாம்  வேற வேற போட்டுக் கொண்டு வருவார்கள்.

நீ  நேத்திக்கு வரலை.
அத்தை என்னை தானே தலை வாரிக்கோ. கொஞ்சம் முகத்தைச் சிரித்தமாதிரி வைத்துக்கோன்னு சொன்னாமா.

சுருக்கென்றது சுந்தரிக்கு. வீட்டில் தங்கியிருந்த விருந்தினர்களைக் கவனித்து முடிக்கவே நேரம் சரியாக இருந்ததால் பெண்ணை   முன் கூட்டியே அவள் தந்தையுடன் அத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டாள் .
ஏன்  நீ அவர்களோடு சேர்ந்து ட்ரஸ் செய்து கொள்ளவில்லையா என்றால்,
அத்தை அவர்கள் எல்லாம் தானாகவே அழகா இருக்கிறார்கள். நீ மட்டும் ஏதாவது செய்து கொண்டு வா. என்று அனுப்பிட்டா.
ஏன்மா நான் கறுப்பா. என்று மீண்டும் கேட்க்கும் பனிரண்டு  வயதுப் பெண்ணைக் கட்டிக் கொண்டாள் சுந்தரி.
இல்லடா. நீ கறுப்பு இல்ல. கறுப்பா இருந்தாலும் தப்பு இல்லை. பளிச்சுனு இருந்தால் போதும்.

மனசு சந்தோஷம் தான் முக்கியம். அவர்கள் சொல்வதை எல்லாம் எடுத்துக்காதே என்ற படி,சுந்தரி செய்த அடுத்த வேலை . பீரோவிலிருந்து  கல்யாணப் புடவையை  எடுத்து  கிழித்து டெய்லரிடம் எடுத்துச் சென்றதுதான். நல்ல சந்தனத்தில் உடலும் அரை சாண் ஜரிகையுமாக அமர்க்களமாக இருந்த பாவாடையைப் பார்த்ததுமே பெண்ணின் முகத்தில் பிரகாசம் .
ப ளப ளவென்று சுடர் போல நிற்கும் பெண்ணைப் பார்த்து இரட்டிப்பு சந்தோசம்   சுந்தரிக்கு

அம்மாவின் முத்துமாலை போட்டுக்கோ.
 போட்டாச்சு. ஏயப்பா எப்படித்தான் இருக்கு உன் தலைமுடி  இரட்டை ஜடை போட்டுவிட்டாள்.
அழகுக் கண்ணம்மா. என்று நெட்டி முறித்தாள் .
கையில் பாலைக் கொடுத்துக் குடித்துவிட்டுக் கிளம்பு நானும் வருகிறேன்
 என்ற படி வீட்டில் இருக்கும் ஆட்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு  கம்பீரமாகக் கிளம்பினாள்.  இனி நல்ல தாயாக மட்டும் இருப்பேன். என் செல்வங்களைத் தனியே எங்கும் அனுப்புவதில்லை என்ற தீர்மானம் மனத்தில் திண்ணமாக அமர்ந்தது.
-- 

16 comments:

Nagendra Bharathi said...

அருமை

நம்பள்கி said...

[[என் செல்வங்களைத் தனியே எங்கும் அனுப்புவதில்லை என்ற தீர்மானம் மனத்தில் திண்ணமாக அமர்ந்தது.]]

மிக மிக நல்ல முடிவு: நம் குழந்தைகளுக்கு அப்புறம் தான் சொந்தமும் பந்தமும்!
பதிவு ரொம்பவே பிடிச்திருந்தது....காரணம்...என் மனைவி எங்கள் குழந்தைகளை எங்கும் தனியாக அனுப்பமாட்டார்கள்.

நம்பினால் நம்புங்கள்...
என் மனைவி கருவுற்ற பிறகு என்னுடன் எந்த சினிமாவிற்கும் படம் பார்க்க வந்ததில்லை--குழந்தைகள் பிறந்தபின்பும்---அவர்களுக்கு ஆறு வயது வரை {தமிழ்நாட்டில் இருந்த வரை] நாங்கள் இருவரும் சேர்ந்து [குழந்தைகளை விட்டு விட்டும் குழந்தைகளோடும்] எந்த சினிமாவிற்கே போனதில்லை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை சகோதரியாரே

Geetha Sambasivam said...

நல்லாவே இருக்கு.

ஸ்ரீராம். said...

அருமை. குழந்தையின் வேதனை மனதில் தைக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை....
வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி பரிவை குமார்..

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நம்பள்கி.. எனக்கும் குழந்தைகளை யாரிடமும் விட்டு விட்டுப் போக மனம் வராது..

பார்த்துக் கொள்ள மாமியார் இருந்தாலும் ,அவருக்கு ஏன் சிரமம் என்று தான் தோன்றும்..

இந்த ஊரில் வாத்துகள் சாலையைக் கடக்கும் அழகைப் பார்க்கவீண்டும். அத்தனை மிலிட்டரி
பயிற்சி போல அதன் பின்னால் ஐந்து குட்டி வாத்துகளாவது வரும். அந்தக் கடமை கூட
நமக்கு இல்லையா என்ன.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி நாகேந்திர பாரதி. வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். சின்னவயதில் படும் அவமானங்கள் குழந்தைகள் மனதில் இருந்துவிடாதபடி நாம் கவனித்துக் கொள்ளவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி கரந்தை ஜெயக்குமார். தவறாமல் வந்து கருத்துச் சொல்வதற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதாமா.... அங்கு இங்கு என்று எப்பவும் இது போல நடக்கிறது தானே.

ராமலக்ஷ்மி said...

பிஞ்சு மனதின் வேதனையைத் துடைக்க தாய் எடுத்த முடிவு குழந்தைக்குத் தன்னம்பிக்கையைத் தரட்டுமாக. கதை அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, குழந்தைக்கும் அம்மாவுக்குமான பாடங்களை வாழ்க்கை சொல்லித் தருகிறது.
மிக நன்றி மா.

Unknown said...


நல்ல கதை , நல்ல விதமா சொல்லி இருக்கீங்க .

நானும் என் பொண்களை யார் வீட்டுக்கும் தனியே அனுப்ப மாட்டேன் .கொழந்த ஏதாவது மனம் கஷ்ட்டபட்டுட்டா என்ன பண்றதுன்னு. சாப்பாடு கூட யாரும் ஊட்ட விட மாட்டேன் . ஆனா இப்போ பெரியவ தன்னையே பாத்துக்கற அளவு வளர்ந்ததும் காலேஜ் முடிச்சு மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று தன்னையே பார்த்துக்கொள்கிறாள் . ஆனா எனக்கு தான் மனசு முழுக்க எப்பவும் கொழந்த என்ன சாப்பிட்டளோன்னு என்ன பண்றாளோ ன்னு எண்ணிக்கிட்டே இருக்கு .

வல்லிசிம்ஹன் said...

அன்பு சசிகலா.
உண்மைதான். தாய் மனம் எப்பவும் குழந்தைகளின் நலனையே சுற்றி இருக்கும். நம் குழந்தைகளும் நம்மை

நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். எல்லா உறவினர்களும் இப்படி இருப்பதில்லை.
நாம் நம் குழந்தைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரக்கூடாது.
நன்றி மா.