Blog Archive

Saturday, May 16, 2015

Wedding Anniversaries in May

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மே  17 ஆம் நாள்   எனக்கு  வாழ்வு  கொடுத்த  தம்பதியருக்கு  மணநாள் 
முதலில்  வருவது என் பெற்றோர்.

14 வயது ஜெயலட்சுமியும்   22  வயது நாராயணனும் மனமுவந்து தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட நாள்.

53 வருடங்கள்    ஒரு   பரபரப்பிலாத நீரோடை போன்ற  தெளிவான வாழ்க்கையை   வா ழ்ந்துவிட்டு   ,தந்தை மறையத் தாய் எங்களுக்காக இருந்தாள் .2005இல்   அதே அமைதியுடன்     மறைந்தாள். உலகத்தின்   கருணையே  உருவம் எடுத்த வந்தது போலத் தெளிவான   நினைப்புகளுடன், தீர்க்கமான அறிவுடன்   இருவரும் ஆன்மீக பலத்தை எங்களுக்குக் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள்.

அவர்கள் என்றும் இணைந்திருக்க   இறைவன் அருள் புரிவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் பெற்றொருக்கு  நமஸ்காரங்கள்.
##############################################################


















10 comments:

msuzhi said...

நெகிழ வைக்கும் நினைவு.
இத்த்னை வருஷத்துக்கப்புறமும் இப்படி நினைக்கிற உங்களைத் தான் பாராட்டணும்.

ஸ்ரீராம். said...

22 வயது, 14 வயது!

எங்கள் நமஸ்காரங்களும்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கங்கள்...

Geetha Sambasivam said...

Our humble prostrations to your parents.

ராமலக்ஷ்மி said...

எங்கள் வணக்கங்களும். நெகிழ்வான பகிர்வு.

Header படம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை., எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.
அவ்வளவு கடன் பட்டிறேக்கிறேன் அவர்களிடம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்.. ஸ்ரீராம்..உங்களுக்கும் தாத்தா பாட்டிதான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். உங்கள் பதிவுக்கு வரவில்லை மன்னிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதாமா. அம்மா அப்பாவின் ஆசிகளும் உங்களுக்கு வந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
பெற்றோர் விஷயத்தில் நம் உணர்ச்சிகள் மாறுவதே இல்லை.