Blog Archive

Saturday, February 07, 2015

சமாதானக் கடல்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
காலை நேர   அலைகள்    அவற்றின் மேன்மை  வந்து விழும்  வேகத்தைப் பொறுத்து அமைவது போல   வாழ்வின் நாட்களும் மெதுவாக மென்மை யாகக் கடப்பதும் அருமையே,.  மனதில் குழப்பங்கள் கூடாமல் தெளிவாக   இருந்தால்  வாயில் வரும் வார்த்தைகளும்   அமிர்தமாக இருக்கும்.   ஒரு குடும்பத்தின் அத்தனை  உறுப்பினர்களும் ஒரே மாதிரி அலைவரிசையில் எண்ணங்களைக் கொண்டு செல்வது போல சந்தர்ப்பம் சிலசமயமே வாய்க்கிறது.
 எனக்கும் கணவருக்குமான வாழ்வில் விட்டுக் கொடுப்பது  நிறைய   நிகழ்வுகளில்  காணமுடியும்.  பல சந்தர்ப்பங்களில் சென்னையை விட்டுப் புறப்படுவது அவருக்குப் பிடிக்காது.   பையன்களையும் பெண்ணையும் கண்டு நேரம் செலவிடுவது   பிடிக்கும் அதுவும் நாட்கள் கணக்காக் இருந்தால் மகிழ்ச்சி. மாதங்களாக நீண்டாலும் பொறுமை இழக்க மாட்டார். தனக்கெ ன்று  ஒரு திட்டம் போட்டுக் கொண்டு மரவேலையில் ஈடுபட்டுவிடுவார்.      அந்தப் பொறுமைக்கெல்லாம் இப்பொழுது நன்றி சொல்கிறேன்.

17 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது சகோதரியாரே
தம +1

RAMA RAVI (RAMVI) said...

//. ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் ஒரே மாதிரி அலைவரிசையில் எண்ணங்களைக் கொண்டு செல்வது போல சந்தர்ப்பம் சிலசமயமே வாய்க்கிறது.//

உண்மைதான் மேடம்.

என் கணவர் எப்பொழுதும் சொல்லுவர் குடும்பத்தில் அனைவருக்கும் ஒரேமாதிரி அலைவரிசையில் எண்ணங்கள் இருந்தால் நல்லது என்று.

ஸ்ரீராம். said...

//மனதில் குழப்பங்கள் கூடாமல் தெளிவாக இருந்தால் வாயில் வரும் வார்த்தைகளும் அமிர்தமாக இருக்கும். ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் ஒரே மாதிரி அலைவரிசையில் எண்ணங்களைக் கொண்டு செல்வது போல சந்தர்ப்பம் சிலசமயமே வாய்க்கிறது.//

இது எல்லோருக்கும் பொருந்தும்மா.. இப்போது எனக்கும்!

:)))

மோகன்ஜி said...

சரியாக சொன்னீர்கள்.. பரஸ்பர புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே குடும்பத்தைக் கோவிலாக்கும்... உதயத்தின் நிழற்படம் அழகு.

துளசி கோபால் said...

கடல்போல் பரந்த மனசு அன்பாகவும் இருக்கு!!

திண்டுக்கல் தனபாலன் said...

விட்டுக் கொடுத்தல் - நடக்கும் கால்களைப் போல...

கீதமஞ்சரி said...

எங்களுக்கெல்லாம் ஒரு அழகிய முன்மாதிரி தங்கள் இல்லறம். தங்கள் இருவருக்கும் என் அன்பான வணக்கம் வல்லிம்மா.

கோமதி அரசு said...

மனதில் குழப்பங்கள் கூடாமல் தெளிவாக இருந்தால் வாயில் வரும் வார்த்தைகளும் அமிர்தமாக இருக்கும். ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் ஒரே மாதிரி அலைவரிசையில் எண்ணங்களைக் கொண்டு செல்வது போல சந்தர்ப்பம் சிலசமயமே வாய்க்கிறது.//


உண்மைதான். ஸ்ரீராம் சொல்வது போல் இது எல்லோருக்கும் பொருந்தும்.
வாழ்க்கையில் தினம் சந்திக்கும் அனுபவங்களை அழகாய் பதிவு செய்கிறீர்கள்.

Geetha Sambasivam said...

வருஷக் கணக்காய்ப் பழகறோம் இல்லையா? அதனால் ஒரே அலைவரிசையில் சிந்திக்கிறது இயல்பாகவே ஆகிவிடும். ஆனாலும் சமயத்தில் அபஸ்வரமும் தட்டுமே! :))) அலைகள் கரைக்கு வருவதும், கரை அதைத் திரும்பக் கடலுக்கு அனுப்புவதுமாகக் காலம் காலமாக இதானே நடக்கிறது?

வல்லிசிம்ஹன் said...

நன்றி கரந்தை ஜெயக்குமார். வாக்கிற்கும் நன்றீ

வல்லிசிம்ஹன் said...


உண்மைதான். இதைப் பயிற்சிக்குக் கொண்டு வருவது மிகவும் கஷ்டம் தான் ரமா. பZHAகிவிட்டால் மகிழ்ச்சிதான். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் ,நீங்கள் வாய் திறந்து பேசியே நான் பார்க்கவில்லை. எண்ணங்கள் இணைந்தால் நல்லதுதான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மோகன் ஜி . வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பான கடல்.அமைதியாகவும் இருந்தால் நல்லதுதான் துளசி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஒரு காலுக்கு நோய் என்றால் அடுத்தகால் ஒத்துழைக்கும். அருமையான உதாரணம் தனபாலன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீத மஞ்சரி ,முன் மாதிரியாக நாங்கள் இருந்தோமா என்று தெரியவில்லை.புரிதலோடு நடந்து கொண்டோம். உங்கள் வாழ்வும் செழிக்க ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

வாழ்க்கையின் நல்ல நேரங்களை அசை போடும்போது வரும் நினைவுகள் இவை கோமதிமா. வாழ்க வளமுடன்.