About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, February 22, 2015

பச்சைக் கிளிக்கு நூறாயிரம் வாழ்த்துகள்

Add caption
அன்பு
Add captionஅன்பு
துளசி,
இந்தப் பதிவு ஒரு சாதனைப் பெண்ணுக்காக இருந்தாலும்,

அந்தப் பெண் முதலில் ஒரு நல்ல பெண்மணி.


இரண்டாவது, நல்ல வார்த்தைகள் நிறைந்த பின்னூட்டங்கள் அளித்து ஆயிரம் பதிவர்களுக்கு நூறு பதிவுகளாவது எழுத உற்சாகம் அளித்தது.(நானும் அதில் ஒன்று)


மூன்றாவது வரலாறொ, கோவில்களோ, பயணங்களாகவோ இருக்கட்டும். முன் ஏற்பாடாகவே எல்லா இடங்களையும் பற்றி ஆராய்ச்சி செய்து , ஒரு சின்ன தவறு கூட இல்லாமல், ஒரு பதிவைப் போட எடுத்துக் கொள்ளும் கண்ணியம்.


தனக்குப் பின்னூட்டம் இடுபவர்களுக்குப் பதில் அளிக்கும்போது காட்டும் மரியாதை,வரவேற்பு... இதெல்லாம் படித்து அதையே பின்பற்ற என்னைப் போன்றவர்களை , வழிநடத்திய பாங்கு. , எழுத்துப் பிழை,சொல்பிழை எது இருந்தாலும் எடுத்துக்காட்டும் அன்போடு எடுத்துக் காட்டித் திருத்தும் ஆசிரியை..இதெல்லாம் தான் நான் அறிந்த துளசி கோபால். நியூசிலண்டின் வரலாற்றுப் பக்கங்களிலும் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண். அங்கே 13 வருடங்கள் சமூக சேவையில் ஒரு தன்னார்வத்தோடு ஈடுபடுத்திக் கொண்டவர்.
ஒரு நல்ல குடும்பத்தலைவி. கனிவு உள்ளம் காரணமாகவே அநாதையாக்கப் பட்ட பூனைகளையும் நாய்களையும் அடைக்கலம் கொடுத்துப் பேணிய நல்ல உள்ளத்துக்குச் சொந்தக்காரர். .இன்னும் எழுதலாம். எல்லாம் உண்மையாகவே இருக்கும் .
ஆனால் மிகையாகப் புகழ்ந்த மாதிரி துளசி எடுத்துக் கொண்டுவிட்டால், நன்றாக இருக்காது.


அதனால் அன்புத் துளசி, உங்கள் உழைப்புக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். அதற்குத் துணையிருக்கும் திரு.கோபாலுக்கும் ,அவரது பங்களிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.இவ்வளவு உயரத்துக்குத் துளசி வரவும்,இன்னும் சிகரங்களைத் தொடவும் அவர் ஒரு ஊக்கியாகச் செயல் படுவார். தம்பதிகளுக்கு வாழ்த்து. தளத்துக்கு வாழ்த்து. ஒரு நல்ல பெண்மணிக்கு வாழ்த்து. இப்படிக்கு,
தமிழ்மணத்தின் பதிவர்கள் ....எல்லோரும் வாழ வேண்டும்.

Posted by Picasa


47 comments:

LK said...

அருமை. அருமை இத விட சிறந்த பரிசு வேறெதுவும் கிடைக்காது. இர்ஹுவருக்கும் என் நமஸ்காரங்கள்

ராமலக்ஷ்மி said...

நன்றி வல்லிம்மா. தமிழ்மணத்தின் பதிவர்களில் ஒருவராய் நானும் உங்களுடன் சேர்த்து மலர் கொத்தைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துகிறேன்.

வாழ்த்து(க்)கள் துளசி மேடம்:)! நன்றிகள் கோபால் சார்!

சரியாக ஒருவருடம் முன்னர் என் பதிவொன்றில் நான் துளசி தளம் பற்றி குறிப்பிட்டிருந்தது:

//துளசி தளம் எல்லோருக்கும் கற்றிட பாடங்கள் கொண்ட நூலகம். பள்ளி நினைவுகள், வாழ்க்கையில் கடந்த வந்த பாதைகள் ['அக்கா’ தொடர்] ஆகியவற்றைப் படித்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். அது போல எழுத முடியுமா தெரியாது. ஆனால் அப்படி ஒரு ஆசை அடி நெஞ்சில் இருக்கிறது. ஒரு புகைப்படப் பதிவை எப்படி சுவாரஸ்யமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்கான பொறியை இங்கிருந்தே பெற்றேன், அதையே எனக்கேற்றவாறு சுவீகரித்தும் கொண்டேன். அதே போல பின்னூட்டமிடுபவர் ஒவ்வொருவரையும் ‘வாங்க’ என அன்பாய் விளித்துப் பதிலளிப்பார் துளசி மேடம். தனித்தனியாக பதில் தரவும் இவரிடமே கற்றேன்.//

சொல்லிக் கொண்டே போகலாம்.

அகலாத பிரமிப்புடன்
ஆசிகள் வேண்டி,

ராமலக்ஷ்மி

மதுரையம்பதி said...

நானும் திரு. கோபால் அவர்களுக்கும், துளசி ரீச்சருக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன்...ஆமாம், இன்னைக்கு என்ன விசேஷம்?, திருமண நாளா?, பிறந்த நாளா?...:)

மதுரையம்பதி said...

//இந்தப் பதிவு ஒரு சாதனைப் பெண்ணுக்காக இருந்தாலும், அந்தப் பெண் முதலில் ஒரு நல்ல பெண்மணி.
இரண்டாவது, நல்ல வார்த்தைகள் நிறைந்த பின்னூட்டங்கள் அளித்து ஆயிரம் பதிவர்களுக்கு நூறு பதிவுகளாவது எழுத உற்சாகம் அளித்தது.(நானும் அதில் ஒன்று)
மூன்றாவது வரலாறொ, கோவில்களோ, பயணங்களாகவோ இருக்கட்டும். முன் ஏற்பாடாகவே எல்லா இடங்களையும் பற்றி ஆராய்ச்சி செய்து , ஒரு சின்ன தவறு கூட இல்லாமல், ஒரு பதிவைப் போட எடுத்துக் கொள்ளும் கண்ணியம்.
தனக்குப் பின்னூட்டம் இடுபவர்களுக்குப் பதில் அளிக்கும்போது காட்டும் மரியாதை,வரவேற்பு... இதெல்லாம் படித்து அதையே பின்பற்ற என்னைப் போன்றவர்களை , வழிநடத்திய பாங்கு. , எழுத்துப் பிழை,சொல்பிழை எது இருந்தாலும் எடுத்துக்காட்டும் அன்போடு எடுத்துக் காட்டித் திருத்தும் ஆசிரியை.//

மிகச் சரி...நானும் பல முறை ஏகலைவன் மாதிரி கற்றிருக்கிறேன். அதற்காகவே ஒரு சிறப்பு நன்றியையும் வாழ்த்தையும் சொல்லிக்கறேன்.

மதுரையம்பதி said...

துளசி டீச்சரை வாழ்த்த வாய்ப்புத் தந்த உங்களையும் வணங்குகிறேன் வல்லியம்மா :-)

அமைதிச்சாரல் said...

ஆயிரத்துக்கு ஆயிரம்வாழ்த்துக்கள் துளசியக்கா+கோபால் அண்ணா.மலர்க்கொத்தை பிடித்திருக்கும் கரங்களில் என்னுடையதும் ஒன்றாக இருக்கட்டும்.

நன்றி வல்லிம்மா.

துளசி கோபால் said...

அட ராவணா.....

இப்போதான் உங்க பூங்கொத்தை 'அங்கே' நட்புகளின் பார்வைக்கு வைத்தேன்.

என்ன தவம் செய்தேன் இப்படி ஒரு அன்பை உங்கள் எல்லோரிடத்திலும் இருந்து பெற??????????????

மீண்டும் மீண்டுமாக ஓராயிரம் நன்றிகள்.

என்ரும் அன்புடன்,
துளசி

சின்ன அம்மிணி said...

டீச்சர் சாதனையைப்பாத்து மலைத்து நிற்கிறேன். உறுதுணையாய் இருக்கும் கோபால் சாருக்கும் பூங்கொத்து.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, டீச்சர்னு யார் பெயர் வச்சாங்கனு தெரியலை. இல்லை மறந்துட்டேனோ:0)
கையில பிரம்பில்லாத டீச்சர்.நிஜமாகவே வரலாறு படிச்ச டீச்சர். வருகைக்கு நன்றி.உங்களுடையபதிவுகளும்செழிக்க வாழ்த்துகள் பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு எல்.கே,
அவங்களுக்கு நல்ல மரியாதை செய்து இருக்கணும். இதுதான் என்னால் முடிந்தது.
இந்த மனுஷியின் ஆற்றலுக்கு அளவே இல்லை. நன்றாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி,
சத்தான விஷயங்களைத்தரும் உங்களை மாதிரி நண்பர்கள் என் விஷய ஞானத்துக்கு வித்திடுகிறீர்கள்.
துளசியின் ,கீதாவின் பின்னூட்டங்களில் வளர்ந்தது. அதற்கப்புறம் வடுவூர் குமார்,கொத்ஸ் எல்லோரும் படிபடியாக இங்க வந்ததற்கு துளசியும் ஒரு காரணம். நன்றாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல்.
துளசியுடைய வலைக் குடும்பத்தின் சக்தி மகத்தானது.அத்தனை பேர்களிடம் அன்பு செலுத்த, இங்கிதம் அறிந்து நடந்துகொள்ள இவர்களால் தான் முடிகிறது.
உங்களைப் போன்ற பாசம் மிகுந்த தென்றல்,சின்ன அம்மிணி,கொத்ஸ்,வடுவூரார்,கோபிநாத் எல்லோரும் ஒரு பதிவு விடாமல் படித்து வருபவர்கள்.பொன்ஸ்,முத்துலட்சுமி இவர்களும் அப்படியே.
விட்டுப் போன பதிவர்களும் இதில் அடங்கும்.வருகைக்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அடடே. ஆயிரத்தில ஒருத்தவங்க இங்கயும் வந்துட்டாங்கப்பா.
ஒரு பூங்கொத்து அங்க. அதைவிட மகிமை பொருந்திய பின்னூட்டாங்கள் உங்கள் பதிவில் நிரம்புவதைப் பார்த்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குப்பா. GOD BE WITH YOU ALWAYS THULASI.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சின்ன அம்மிணி. நாம் எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதற்கு துளசி ஒரு பெஞ்ச் மார்க்.:)
நன்றாக இருக்கட்டும். இன்னும் நிறைய பதிவுகள் போட்டு நம்மை மகிழ்விக்கட்டும்.
அதான் சந்திராக்காவின் லட்டுக் கம்மல் வரப் போறதே.:))))))))))))))))))))))

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் உங்களுக்கும், துளசி டீச்சருக்கும்!
வல்லியம்மா, நல்லா சொல்லியிருக்கீங்க...எனக்கும் முதல் கமெண்ட் துளசியம்மாதான்! :-)

பாச மலர் said...

வாழ்த்துவதில் நானும் கலந்து கொள்கிறேன்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு முல்லை, அந்த முதல் பின்னூட்டம்தான் எத்தனை சந்தோஷம் கொடுக்கிறது இல்லையா. அதை நிறைய நபர்களுக்கு அளிக்கிறதில் டீச்சரம்மா பெஸ்ட்:) அதிலயும் நான் சொல்லாமல் விட்டுப் போனது , அவங்க கொடுக்கிற அட்வைஸ்,. !!நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா பாசமலர், நல்லா வாழ்த்துங்கள். அவங்க இத்தனை
வாழ்த்துகளுக்கும்,பாராட்டுகளுக்கும் உரியவர்தான்.

நானானி said...

வல்லி,
உங்கள் பதிவை ஆயிரத்துக்கு ஆயிரம் வழி மொழிகிறேன்.பதிவு எழுதுவது போலவே நேரிலும் உள்ளன்போடு உறவாடும் துள்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தியா பிடிக்காமல் ‘பேக் டு பெவிலியன்னு’ மறுபடி நியூசி வாசியாகப் போவதுதான் சிறிது வருத்தம். எங்கிருந்தாலும் இந்த நட்பு என்றும் வாடாமலிருக்க நானும் ரோஜாக் கொத்தோடு வாழ்த்துகிறேன்.
கோபால் சாரின் ஒத்துழைப்பை குறிப்பிடாவிட்டால் நிறைவாயிருக்காது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்!!!!

பாரதி மணி said...

’நல்ல பெண்மணி.....துளசீ....நல்ல பெண்மணி!

வல்லீம்மா! உங்கள் கூற்றை முழுவதுமாக வழிமொழிகிறேன்! கோபாலுக்கும் இதில் பெரும்பங்கு உண்டு!

உங்களிருவர் நட்பும் எனக்குக்கிடைத்தது என் பாக்கியம்!

அன்புடன்,
பாரதி மணி

கோமதி அரசு said...

சாதனை நாயகிக்கு, வாழ்த்துக்கள்.

துளசி அவர்களை வாழ்த்த வாய்ப்பளித்த உங்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

சாதனை நாயகிக்கு, வாழ்த்துக்கள்.

துளசி அவர்களை வாழ்த்த வாய்ப்பளித்த உங்களுக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பாரதி மணி சார் வரணூம்.உங்கள் அறிமுகம் கிடைத்தது எங்களுக்குத்தான் அதிர்ஷ்டம்.அதுவும் துளசி சொல்லி உங்களைச் சந்திக்கும் மகிழ்ச்சி கிடைத்தது. இந்தப் பதிவுலகில் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது.அவர்கள் தோழமை கிடைத்துவிட்டால் வாழ்க்கைக்குப் புது அர்த்தம் கிடைக்கிறது. வருகைக்கு நன்றி சார்.

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் துளசி யக்கா
நான் மிகவும் ஆச்சரியப்படும் [பொறாமைகூட] பதிவர்.இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சளைக்காத உழைப்பு தொய்வில்லா எழுத்து.

வாழ்த்தவும் மனசு வேண்டும் எங்க வல்லிம்மா போல


வலையுலக சௌகாரும் ஆச்சியும் வாழ்க

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, பேரனுக்கு என் அன்பு,. துளசிக்கு வாழ்த்துக்களையும் எனக்கு உங்கள் அன்பையும் எடுத்துக்கறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி, நேற்று வலைப்பக்கம் வரமுடியவில்லை. இன்றுதான் உங்கள் புதுப் பதிவை பார்க்கவேண்டும். உங்கள் அன்பும் சேர்ந்துதானே நம்மைப் பிணைத்து வைத்திருக்கிறது.
துளசிக்கு நியூசிதான் சொந்த இடமாகிவிட்டது. அதனாலென்ன நாம் இணையத்தில தானே இருக்கப் போகிறேன்.குடத்தில் அகப்பட்ட காவிரி. இணையத்தில் அகப்படும் உலகம்:)நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கண்மணி,
நலமாப்பா.
நாமெல்லாம் ஒன்றாய் வளர்ந்தவர்கள் தானே.!என்னைவிட வயதில் குறைந்தவர் துளசி. இல்லாவிட்டால் நானும் அக்கான்னு கூப்பிட்டுவிடுவேன்:)
ஹ்ம்ம். சௌகார்தான்:)
ஆனால் அந்த அம்மாவுக்கு உண்டான ஒரு தைரியம்,வீரம் என்னிடம் கிடையாது.!
அழகாக வார்த்தைகளால் பூவாரம் சூட்டி விட்டீர்கள்பா. ரொம்ப ரொம்ப நன்றி.

தக்குடுபாண்டி said...

congratssssss Tulasi teacher and gopal sir...:)

கோபிநாத் said...

இங்கையும் டீச்சருக்கு ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன் ;)

ஹுஸைனம்மா said...

எல்லாரோடு சேர்ந்து நானும் வாழ்த்திக்கிறேன். நான் பார்த்து பிரமிக்கும் பதிவர்களில் ஒருவர் துளசி டீச்சர்!!

(ஒரு சந்தேகம், அத்தனை பலகார சம்புடங்களை அவங்க முன்வைத்து, அவங்க சந்தோஷமா சிரிக்கிறதைப் பாத்தா, அதுல அப்படி என்ன இருக்கும்னு ஆவலா இருக்கு. முடிஞ்சா எனக்கும் கொஞ்சம் பலகாரங்கள் அனுப்பி வைங்க!!)

;-))))

பேக்கிரவுண்ட்ல வீடும் அழகு!!

மாதேவி said...

நல்ல பெண்மணிக்கும் அவரை வாழ்த்தும் உங்களுக்கும்
நல் வாழ்த்துக்களுடன் பூங்கொத்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோபிநாத், வாங்கப்பா. ஒரு ஆதர்ச பெண்மணியின் தோழமை கிடைத்தது என் பாக்கியம். நம் எல்லோருக்கும் தான்!நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தக்குடு, நீங்களும் துளசி போல அழகாக எழுத ஆரம்பித்தாச்சு.
நன்றாக இருக்கணும்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா தாமதமா பதில் எழுதறேன். சாரிப்பா.
அந்தப் பாத்திரங்களை எடுத்துவிட்டுப் போட்டோ எடுத்து இருக்கணும்;) அதில என்ன பலகாரம் இருந்ததுன்னு சொல்ல முடியாது. ஏனெனில் அப்பதான் அதைக் காலிசெய்து காத்தாட வச்சிருந்தாங்க.:)
என்ன வேணும் உங்களுக்கு? நான் வந்து செய்து தரட்டுமா:)இல்லாட்ட இப்பவே பார்சல் பிடிங்கொ அரை கிலோ முறுக்கு,அரைகிலோ பாதாம் பர்ஃபி,அப்புறம் அதிரசம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி வாங்கப்பா.
நல்ல பெண்மணிக்கு வாழ்த்துச் சொல்லத்தான் எத்தனை நல்ல உள்ளங்கள் கூடுகின்றன பார்த்தீங்களா. மிகவும் பெருமையாக இருக்கிறது.பூங்கொத்து அனுப்பியதை நல்ல பூச்சட்டியில் வைத்துவிட்டேன். வெகு அழகு. நன்றிப்பா.

Jaleela said...

வல்லி அக்கா இப்ப தான் ஹுஸைனாம்ம்மா மூலம் இங்கு வர முடிந்தது,

துளசி மேடம்க்கு வாழ்த்துக்கள்,

உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜலீலா, உங்களையெல்லாம் சந்திக்காதது எனக்கு வருத்தமே. முதல் நாள் வந்திறங்கிய அலுப்பு.
சாயந்திர வேளையானால் சமாளித்துவிடுவேன். இரவு நேரம் கொஞ்சம் தயக்கம்.
இன்னும் ஒரு தடவை சந்தர்ப்பம் கிடைத்தால் நாம் சந்திக்கலாம்.

RAMVI said...

//இந்தப் பதிவு ஒரு சாதனைப் பெண்ணுக்காக இருந்தாலும், அந்தப் பெண் முதலில் ஒரு நல்ல பெண்மணி//

அருமை.
வாழ்த்துக்கள் ரேவதி மேடம்.

வாழ்த்துக்கள் துளசி மேடம் கோபால் சார்.

geethasmbsvm6 said...

நான் பார்க்காத பதிவுகளில் இதுவும் ஒன்று. இன்று என்ன விசேஷம்? துளசியின் வலைப்பக்கத்தின் ஆண்டு விழா? அவங்க திருமண நாள், பிறந்த நாள் கடந்து போயாச்சுனு நினைக்கிறேன். என் சார்பிலும் அவங்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கிறேன். மௌலி எல்லாம் கருத்துச் சொல்லி இருப்பதால் பதிவு மீள் பதிவுனு நினைக்கிறேன். :)))

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

KILLERGEE Devakottai said...


துஶசி மேடத்தை வாழ்த்திய விதம் அருமை எமது வாழ்த்துகளும்.
அன்புடன்
கில்லர்ஜி

KILLERGEE Devakottai said...


தமிழ் மணம் வாக்களிக்க முடியவில்லையே.... ஏன் ?

ராமலக்ஷ்மி said...

புதுப் பதிவோ என எண்ணி சொல்ல வந்ததை ஏற்கனவே சொல்லி விட்டிருக்கிறேன். மீண்டும் உங்களுடன் இணைந்து மலர் கொத்துடன் வாழ்த்துகிறேன்:)!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் ,மிக நன்றி மா.

@kILLERJEE,
இப்போதுதான் தமிழ் மணப் பட்டையை மீண்டும் ப்ளாகில் அப்லோட் செய்தேன். வோட் பட்டை ப பற்றி யோசிக்கவில்லை. மிக நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி மீள் வருகைக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா பழைய பதிவுகளை முகநூலி ல் சேர்க்கிறேன். அதில் இந்தப் பதிவும் முக்கியமாகப் பட்டதால் சேர்த்தேன் மா.

Sasi Kala said...

உங்களுடன் சேர்ந்து துளசி அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள்.இப்போ தான் பதிவை பார்த்ததால் தான் தாமதம் .
அவரின் எழுத்து பற்றி சொல்லவே வேண்டாம் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும் . அவரது தனிப்பட்ட பின்னூட்ட பதிலும் தான் என்னை மிகவும் சந்தொஷப்படுத்தியது .
அதே போல் உங்களின் அன்பு நிறைந்த பதிலும் என்னை மிகவும் ஈர்த்தவை .