Blog Archive

Saturday, January 10, 2015

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா

கடைக்கண் அருள்வாய் கோவிந்தா!!
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
குறையொன்றுமில்லாத கோவிந்தா
சர்க்கரைப் பொங்கல்
Add caption
கண்ணனும் தோழர்களும்

 எங்கள் கோதை கேட்கும் அனைத்தும் நீ கொடுப்பாய் கோவிந்தா. அவள்
எங்களுக்கும் அளித்தருளுவாள். எம்மைக் காத்தருள்.வாய்.
**********************************************************


 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
**********************************************
கண்ணன் கொடுத்துவிட்டான் அவன்  அருளை.

கேடு நினைத்து மற்றவர்களைத் துன்பிக்கும் ,,,,,,, உன்னைக் கூடாரை
வென்று எங்களைக் காக்கிறாய்.
உன்னைப் பாடுவதினால் நாங்கள் பெறும் பரிசுகள் என்ன
என்ன தெரியுமா.
நீ நேற்று உன்னைத் துதிக்க வேண்டிய   உபாயங்களைக்
கொடுத்து அருளினாய்.
இத்தனை நாட்கள் நெய்,பால்,சாப்பிடுவதையும்,அலங்காரங்கள் செய்து கொள்வதையும்  தவிர்த்து  உண்மையே உரைப்பதையும் கொண்டிருந்தோம் .

இப்பொழுது உன்னருளால்நோன்பு இனிதே பூர்த்தியானது.

உன்னருளினால் யாம் பெற்ற அணிகலன்களையும் பெண்களுக்கே
உரித்தான  ஆபரணங்களான  தலைக்கணி, காதணிகள், கழுத்துறையும் காசுமாலைகள், வளையல்கள் ,கொலுசு முதலானவற்றை அணிந்து  மகிழ்வோம்.பட்டாடை உடுப்போம்.
அதன் பின்  பாலில் சமைக்கப் பட்ட வெல்லம் கலந்த நெய் வழியும் சர்க்கரைப் பொங்கலை உன் பிரசாதமாக  உன்னோடு கூடியிருந்து களித்து
உண்போம்.

அந்த சர்க்கரைப் பொங்கலைக் கையில் வைத்தாலே நெய் கைவழியே வழிந்து
முழங்கையை அடையும்படி அத்தனை செம்மையாக  இருக்கும்.

நீ மேய்க்கும்  பசுக்கள் போல நாங்களும் அறியாதவர்கள். உன்னை மட்டும் அறிந்தவர்கள். ஆதலால் கோவிந்தா எம்மைக் காத்தருள்.

பகவானே உன் தாள்களில் சரணம்.
பாவை கொடுத்த பாவாய்  உன் பாதங்களில் சரண்.

Add caption
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.இவை எல்லாமே 2012 முடிவில் மார்கழியில் எழுதப்பட்ட பதிவுகள்.
திருமலை வாசா கோவிந்தா.

15 comments:

துளசி கோபால் said...

கொடுத்துவைத்த ஆண்டாள், கொலஸ்ட்ரால் பயமில்லை:-)))

சக்கரைப் பொங்கல் சூப்பர்!!!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. பூர்வஜன்ம சுகிர்தம் எல்லாவற்றுக்கும் வேண்டும்:)
இன்னோரு பதில் நம் வீட்டுச் சர்க்கரைப் பொங்கலைப் பதிவில் ஏற்றிவிட்டேன்.

சாந்தி மாரியப்பன் said...

ருசியோ ருசி..

சர்க்கரைப்பொங்கலும் பதிவும் :-)

வல்லிசிம்ஹன் said...

சென்னை வரும்போது வாங்க.செய்து கொடுக்கிறேன் சாரல். நன்றிமா.

கோமதி அரசு said...

இன்று நானும் சர்க்கரை பொங்கல் செய்து வணங்கினேன் பரமனை, அனுமனை.
படங்களும், சர்க்கரை பொங்கலும் அருமை.

ADHI VENKAT said...

பாசுரத்தையும் விளக்கத்தையும் படித்து மகிழ்ந்தேன் அம்மா.

நெய் மிதக்கும் சர்க்கரை பொங்கல் பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது.

இன்று என்னுடைய பதிவில் ரங்கனைக் கண்டேன்....

http://kovai2delhi.blogspot.in/2013/01/blog-post.html

ராமலக்ஷ்மி said...

கோவிந்தன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும். சித்திரமும் ஓவியமும் அழகு. பொங்கலுக்கு நன்றி:)!

ஸ்ரீராம். said...

கூடாரவல்லிக்குப் பொங்கல் சாப்பிட்டோம். அவனருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி சர்க்கரைப் பொங்கல் போலவே நம் வாழ்வும் இனித்து இருக்கட்டும். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதி. எப்படியோ ஸ்ரீரங்கனைப் பார்த்துச் சேவித்ததில் சந்தோஷம்.

அவன் கூடவே இருப்பதில் நமக்கென்ன குறை ?நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. பதிவிடும்போது நம் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யவில்லை. பதிவிட்டுவிட்டுப் போய் செய்தேன்.
கூகிளார் பொங்கல் அலங்காரமாக இருக்கு:)வருகைக்க்கு நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

திகட்டத் தகட்ட இனிப்பு.அதுவும் நெய்யும் கலந்தால் கேட்கவேணுமா. இந்தக் காம்பினேஷன் போல வாழ்வும் சுகித்திருக்கணும் ஸ்ரீராம்.

திண்டுக்கல் தனபாலன் said...

// முழங்கையை அடையும்படி // ஆகா...!

சென்னை பித்தன் said...

இனிப்பான பொங்கலின் சுவை இப்பதிவு

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். நன்றி சென்னைப் பித்தன் சார்