About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, December 06, 2014

ஊறுகாய் போட்டதால் வந்த ....

நாட்கள் பக்கத்தில் வர வர வேலையெல்லாம் முடித்துக் கொண்டு தயாராக இருக்கலாம்,
என்று போர்க்கால நடவடிக்கைகள் ஆரம்பித்தேன்.

திடீரென்று ஹாஸ்பிட்டல் போக வேண்டும் என்றால்
ரெடி மிக்ஸாக இருக்கட்டும், என்று புளிக்காய்ச்சல், கருவேப்பிலைப் பொடி எல்லாம் தயார்.
யாருக்கு இவ்வளவும்னு கேட்கக் கூடாது. நமக்குத்தான் எப்போ பசி வேளைனூ தெரியாமல் ஒரு கண்மூடித்தனமான ஜீரண உலகம் இருக்கே. அதற்கான
தயாரிப்புகள் இவை.

மருத்துவர் ஒரு நாள் முன்னாலேயெ வருமாறு சொன்னதால் மாப்பிள்ளை,பெண் இருவரும் மருத்துவமனைக்குக் கிளம்ப நானும் பேரனும் வீட்டில்.

'' paatti, dont worry. we will enjoy this freedom!!''
இது எதிர்பாராத (?) ஆறுதலா இருக்கே என்று பேரனைப் பார்த்தேன்.
தான் மாலை வீடு திரும்பும் போது தன் தோழனையும் அழைத்து வருவதாகச் சொன்னான்.
அவன் அம்மாவும் போனில் சம்மதம் கொடுத்தாள்.

கையில் மதிய உணவு கொடுத்து அவ்னை
அனுப்பிவிட்டுத்
தனியாக உட்கார்ந்தபோது ஒரு ஊறுகாய்
செய்யலாமே என்று யோசனை .

எடுடா வாளைக் கொடுடா மணிமுடி''னு
நமக்குப் பட்டம் கொடுத்திருக்காங்களேனு
காரியத்தில் இறங்கி எலுமிச்சை எல்லாத்தையும் துண்டம் செய்து உப்பும் சேர்த்து வைத்தேன்.

மதியத்தில் மகள் காலையில் வந்துவிடுவதாகவும்
புதுப் பாப்பா வர இன்னும் இரண்டு நாள
ஆகும்னு சொல்லவே ,அவர்கள் வருவதற்குள்
மிளகாயை வறுத்துப் பெருங்காயம் வெந்தயத்துடன் பொடி செய்து கலந்துவிடலாம்
என்று மும்முரமாக மிளகாயை வாணலியில் போடவும் பேரன் வாசல் மணியை அடிக்கவும் சரியாக இருந்தது. எட்டிப் பார்த்தால் இந்த ஊரு அம்மா ஒருத்தவங்க.
தன் பையனை இங்கே விடவந்து இருக்கிறார்கள்
என்று புரியக் கொஞ்ச நேரம் ஆச்சு.
கதவைத் திறந்ததும் அந்த அம்மா முகம் போன போக்கை நீங்கள் பார்த்து இருக்க வேண்டும்.
ஹை! என்று கைநீட்ட வந்தவள் ஹா ஹச்ச்
என்று பெரிய தும்மல் போட்டார்.
வாயில வார்ர்த்தையே வரவில்லை.
அவரோட பையனோ அதுக்குமேல.
சிலிபீட்சா'....................... என்று அவனும் கண் காது மூக்கு சிவக்கப்
பார்க்கிறான்.
வீடு முழுவதும் நல்ல மிளகாய் மணம்.
அடுப்பை அனைத்தாலும், எக்ஸாஸ்ட் புகை போக்கி
எல்லாம் போட்டாலும் சுத்தி நில்லாமல்
வந்த அரோமா!!
பின்னாலேயெ வந்த பேரன் முதலில்
திகைத்தாலும்,
நிலைமையைக் கணித்து 'பாட்டி நீ உள்ள போ,
நான் மைக்கேலை அழைத்துவரென்னு'
சமாளித்தான்.
அந்த அம்மா தன் பையனைப் பார்த்து
' you two can play outside.
do not bother Nanny'
என்று சொல்லி விட்டுப் போனாள்.
இல்லை ஓடினாள்.
நானியா? என்னைப் பார்த்தால் இந்த ஜேன் ஐர்.
நாவலில் எல்லாம் வர ஆங்கில நானி மாதிரியா இருக்கு
என்று எனக்குப் படபடா என்று கோபம்.
ஹலோ, நான் இவனோட பாட்டினு மூடிய கண்ணாடிக் கதவைப் பார்த்துச் சொன்னேன்.

அவளோ, தன் பையனை போர்க்களத்தில் விட்டுப்
போகும் வீரத்தாய் மாதிரி சைகையில்
ஏதோ சொன்னாள்.

அவனும் என் பேரனும் தனி அறையில்
விளையாடப் போகையில்

அவர்களுக்கு நொறுக்குத் தின்பண்டம் எல்லாம்
வைத்துக் கொடுத்தேன்.
தட்டுகளை ஆராய்ந்து மைக்கேலும், என் பேரனும்
செக்க்யூரிடி செக்;-)
செய்துவிட்டு உள்ளே போய்க் கதவை ப்
பத்திரமாக மூடிக் கொண்டார்கள்.

வேலையைமுடிக்கணூமே.
அவசரமாக மிக்சியில் வறுத்தமிளகாயைப் போட்டு ஒரு சுத்துப் போடவும்,
மருத்துவமனையிலிருந்து இவர்கள் திரும்பவும்
சரியாக இருந்தது.
ஒரே களைப்பு இருவர் முகத்திலும்.

ஆனால் கதவைத் திறந்ததும் வந்த நெடி
அவர்களை உடனே உயிர் பெற வைத்துவிட்டது.
நான் சங்கடமாக அவர்களைப் பார்க்க
இப்போ என்ன ஆச்சுனு சமையலறையை நோட்டம்
விட்டார்கள்.
கைக்குட்டையால் மூக்கைப் பொத்திய வண்ணம்,
யாருக்கு ஊறுகாய்? என சைகையால் வினவ,
நான் யோசித்து ..... அப்பா வந்தால் பிரயோசனப் படும்னு சொல்ல,

எங்களுக்கு வெறும் மோர் போதும்மா என்றபடி
இருவரும் மெதுவாகப் படி ஏறியதைப் பார்த்தால்

படு பாவமாக இருந்தது.

என்ன, ஊறுகாய் கூட பண்ண விடமாட்டாங்க
போலிருக்கே என்று நினைத்தபடி கடையை
ஏறக் கட்டினேன்.
இந்தப் பதிவுக்கும் எட்டு வயது. எங்க பேரனுக்கும் எட்டு வயது

27 comments:

இலவசக்கொத்தனார் said...

//என்ன, ஊறுகாய் கூட பண்ண விடமாட்டாங்க
போலிருக்கே என்று நினைத்தபடி கடையை
ஏறக் கட்டினேன்.//

:)))

கோவி.கண்ணன் [GK] said...

//எப்போ பசி வேளைனூ தெரியாமல் ஒரு கண்மூடித்தனமான ஜீரண உலகம் இருக்கே.//

வல்லியம்மா,

ஊறுகாயை விட எழுத்தின் சுவை கூடிக் கொண்டே போகுது.

கலக்கல் நடை !

வல்லிசிம்ஹன் said...

வாங்க கொத்ஸ் ஸார்.
உங்களுக்கும் வேணுமானால் ஊறுகாய் அனுப்பறேன்.
என்ன ,, ஒரு 250கிராம் பாக்கெட்
25$ விலை.
நன்றி:-)

வல்லிசிம்ஹன் said...

நிஜமாவா!
கண்ணன், ஊறுகாயைவிட

இந்தப் பின்னூட்டம் ரொம்ப ருசியாக இருக்கு.

இதுல தொந்தரவு என்ன னால் ஒண்ணும் சாப்பிடக் கூடாதுனு தெரிந்தே செய்யும் குசும்பு இதெல்லாம்.:-)

Hariharan # 26491540 said...

சரி வறுத்தது குண்டு மிளகாயா? நீள மிளகாயா?

சரியாப் படிச்சு சப்ஜெக்டிவ்வா கேள்வி கேட்டிருக்கேன்.

நாச்சியார்கோவில்லே "you two can play outside.do not bother Nanny'" ரேஞ்சுக்கு டெய்லி லைஃப் ஆயிடுச்சா
:-))

:-)))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஹரிஹரன்.:-)

அவளுக்குப் பையன் பற்றிக் கவலை.
ஏதோ விபரீத இந்தியப் பாட்டி.
கிட்டப் போனா
என்ன நடக்குமோனு சொல்லிட்டுப் போயிட்டாங்க.பாவம்.:-)
நீட்ட மிளகாய்தான் இங்கே கிடைக்கிறது.

Anonymous said...

வல்லியம்மா,

விழுந்து விழுந்து சிரித்தேன், சுவாரஸ்யமாக இருந்தது பதிவு!

Anonymous said...

//நீட்ட மிளகாய்தான் இங்கே கிடைக்கிறது. //
Deep Brand-இல் இப்போது குண்டு மிளகாயும் கிடைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஜீவா,
நல்ல சேதி கொடுத்தீங்க.
இன்னிக்கே பொய் வாங்கி இன்னொருதரம் தக்காளி சாஸ்,இல்லாட்டா
மிளகாய் போட்டு ஏதாவது செய்யலாம்னு பாக்கிறேன்.
பாவம் பாப்பா.
அதுவும் என்னை இப்பத்தான் பார்த்து சிரிக்கிறது.
அப்புறம் அதுக்கும் சங்கடம் ஆகிவிடுமேன்னு யோசிக்கிறேன்.:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

அத்தைகாருவும் ஆவக்காய் மாங்கா ஊறுகாயும் என்ற பானுமதி ராமகிருஷ்ணா கதை ஞாபகம் வருகிறது.தக்காளி சட்னி பண்ணியபிறகு ஒரு கதை வரும் அதையும் போடுங்கள்.நானி என்று ஒத்துக்கொண்டால்தான் என்ன.கீதா மேடத்தின் தாக்கம் உங்களுக்கும் வருகிறதா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், தி.ரா.ச.
என்கிட்ட அந்தப் புத்தகம் ரொம்பநாளாக இருந்தது. ஊரு மாத்திப் போகும் போது தொலைத்துவிட்டேன்.
தக்காளியை யார் விட்டா! போட்டுடலாம்.இவர்கள் எங்கேயாவது வெளில போகட்டும்:-)

வல்லிசிம்ஹன் said...

நானி என்றால் பாட்டிதான் இப்போதெரியறது.
சோ நோ ப்ராப்ளம்.
என்னை கவர்னஸ் ,பேபி சிட்டர்னு நினைத்துவிட்டாளோ என்று கோபம் வந்துவிட்டது.(சும்மாக் கோசரம்)
நான் 17 வயசிலேயே மாமி.

இப்போ பாட்டியாக இருப்பதில் சங்கடம் இல்லை.:-)

வல்லிசிம்ஹன் said...

:-)ஸ்மைலி வருதானு பார்க்கப் பின்ன்னூட்டம்

துளசி கோபால் said...

ஹை.... இது எப்படி என் கண்ணுலே இருந்து 'மிஸ்'ஆச்சு?

பலே பலே. நல்ல தப்பிக்கும் ஐடியாஸ் எல்லாம் என்னமா தானே வர்றது? :-))))

'நானி'ன்னு ஒரு டிவி சீரியல் வந்துக்கிட்டு இருந்துச்சு.

Anonymous said...

வல்லியம்மா, ஸீப்பர்....

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி நாம தான் எக்ஸ்பர்ட் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் ஆச்சே.
பொய் சரளமா வரும் நிலைமைக்கு ஏத்தமாதிரி.:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்க மௌலி சார்.
ரொம்ப நாளா பாக்கலியேனு நினைச்சேன்.

இராஜராஜேஸ்வரி said...

' paatti, dont worry. we will enjoy this freedom!!

காரசாரமான ஊறுகாய்..

கோமதி அரசு said...

அருமையான நினைவுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
ஊறுகாயை விட எழுத்து மனக்கிறது
சகோதரியாரே
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா...! இப்படி ஆகி விட்டதே...

geethasmbsvm6 said...

அட? இதை எப்படிப் படிக்காம விட்டேன்னு தெரியலை. நல்ல கூத்துத் தான் போங்க. பிள்ளை வீட்டில் நான் குக்கர் வைத்த நினைவெல்லாம் வருது. :))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராஜராஜேஸ்வரி. சுவாரஸ்யமான ருசிகரமான பதிவுன்னு சொல்லலாமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி . நன்றி டி டி. நன்றி கரந்தை ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

கீதா என் பின்னூட்டத்துக்கே ஐடி கேட்கிறது. நீங்கள் குக்கர் பத்தி எழுதினது ஞாபகம் இல்லையே.

geethasmbsvm6 said...

will give you link Revathi. :)))) two years ago may be!

geethasmbsvm6 said...

http://sivamgss.blogspot.in/2006/12/173.html
http://sivamgss.blogspot.in/2006/12/176.html

இதிலே ஒரு பதிவிலே உங்க பின்னூட்டம் கூட இருக்கு ரேவதி. :))))