About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, November 30, 2014

Zermaat 2 ஸெர்மாட் பயணம்.

Add caption
Wilhelm  Tell
Luzern top
william tell

.

நாங்கள் செர்மாட் எக்ஸால்சியர் எனும் விடுதியில் மாலை 4மணிக்குப் போய்ச்சேர்ந்தோம்.

சுமாரான் மூன்று நக்ஷத்திர விடுதி.

கொஞ்சம் சிறியதோ என்று தோன்றியது.படிகள் ஏறி அறையை அடைந்தோம்.

அறையா கியூபிகிளா என்னும் படி சந்தேகம் வந்தது. இத்தனை காசு கொடுத்து இத்தனூண்டு இடத்திலா, என்று யோசித்தபடி

அங்க்கிருந்த ஒரேஒரு நாற்காலியில் அப்பாடி என்று உட்காரப்

போனேன்.

அம்மா ஒரு நிமிசம்னு"" மகன் சொல்லுவதற்கும் முன் கையோடு கால் வந்துவிட்டது.

தடால்....

சே,னு போயிட்டது.

அம்மா தரையில் திடீரென்று உட்கார்ந்த அதிர்ச்சியிலிருந்து

மகன் மீளுவதற்குமுன்னால் அப்பா கட்டிலில் உட்கார்ந்தாச்சு.

கட்டில் இன்னோரு டமால் ஒரு பக்கமாகச் சரிந்தது.

நம்ம சிங்கம் உஷார் சிங்கம்.உடனே சமாளித்து எழுந்தாச்சு.

மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் தெரியும்.

சுவரோடு சுவராகக் கட்டில் இருக்கும்.தலைக்கு

மேலெ பாதி சுவர் ஜன்னல்.

அது வழியாக அறுபத்துமூவர் கும்பல் மாதிரி ஒரே சத்தம்.

அதுசரி!!!! சந்தோஷமா இருக்கத்தானே வந்து இருக்கிறார்கள்.!!!!

நமக்கு விழுந்த அதிர்ச்சியில் பாலும் கசந்ததடின்னு

பாட்டு வருது.
மேடராவது ஹார்னாவது.போப்பா சரிதான்னு

தோன்றியது.

இத்தனை குட்டி அறைக்கு 200  ஃப்ரான்க்  வாடகை.அட்டாச்சிடு  பாத்ரூம் இருக்காம்.

நம்ம ஆகிருதியோ சைட்வேஸ்ல

கூடப் போகமாட்டேன் என்கிறது. எப்படியோ சமாளித்து கிடைத்த காபியை முழுங்கிவிட்டு வெளியே வந்தோம்.

இங்கெ ஒரு சுவையான செய்தி என்னன்னால் புகையே கிடையாது.

மனுஷப்புகை பற்றி சொல்லவில்லை. வாகனப்புகையைச் சொல்கிறேன்.

போக்குவரத்து என்பது குதிரை வண்டியில்,இல்லாவிட்டால் மின்சாரக் காரில்.

சுற்றுப்புறத் தூய்மைக்காக இந்த ஏற்பாடாம்

ஆனால் இந்தக் குளிருக்கு மனிதர்களின் சிகரெட் புகை அதிகம்.

மலைக்குப் போவதற்குத் தனி ரயில். உச்சியை அடைந்த கணம்

மறக்கமுடியாத தருணம்.அப்படி ஒரு உயரம்,கம்பீரம்.

சூரியன் சிகரத்தில் விழும் ஒளி கண்கூசவைக்கும் ஜாலமாக

இருந்தது.

அவ்வளவு உயரத்திலிருந்து யாரோ நம்மிடம் பேசவோ

தொடர்பு கொள்ளவோ முயலுவதாகத் தோன்றியது.அது எல்லோருக்கும்

நேரும் அனுபவம் என்று சொன்னர்கள்.
 இந்த அழகும் மேன்மையும் நம் எவரெஸ்ட்,கைலாச பர்வதம்,கங்கை நதி

,ஹரித்வார் இந்த இடங்களிலும் இயற்கையோடு சேரும் , ஐக்கியமாகும்,அந்த உணர்வு நம்மை மேன்மைப்படுத்துகிறது.

கொஞ்ச நேரத்தில் சூழ்ந்த மேகங்களும், பனித்திரையும்

மற்ற எதையுமே பார்க்க முடியவில்லை.

அன்றைய வெதர்மேன் எண்ணம் அப்படி.!!

கீழே இறங்கி வந்ததும் சாப்பாடு நினைவு வந்தது.

இவர்கள்தான் எட்டு மணிக்குக் கடைகளை மூடிவிடுவார்கள்.

அதற்குள் நமக்கு வேணும் என்கிற மரக்கறி உணவு கிடைக்கவேண்டுமே

என்ற கவலை.

திறந்த கடை ஒன்றில் வெறும் சாண்ட்விச் கேட்டோம்.

அந்த அம்மாவுக்கு அது பெரிய ஆர்டராகத் தோணவில்லை.

இரண்டு நிமிஷத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள்.

திறந்து பார்த்த எனக்குத்தான் அதிர்ச்சி.

ஒரு மீன் சார் உள்ளே திறந்தகண்களோடு பார்க்கிறார்.

அதுதான் வெஜிடேரியன் என்று சாதிக்கிறார் அந்த அம்மா.

இருந்தபசியில் கண்மண் தெரியாமல் கோபம்.

என்ன செய்வது. சரிம்மாசாதா ப்ரெட் இருந்தாக் கொடுதாயேனு கேட்டு வெண்ணையும் தயிருமாய் இரவு உணவை முடித்தோம்.

நாங்கள் சென்ற காலம் அங்கே அவ்வளவு குளிர் இல்லை.

காலையில் எழுந்து இலவச காலைச்சாப்பாடும் காப்பியும் சாப்பிட்ட கையோடு க்ளேசியர் எக்ஸ்ப்ரஸ் வண்டியைப் பிடித்து

 ஆல்ப்ஸ் மலைகளின் ஊடே அது சென்ற வேகத்திலும்,நடுவில் வந்த குகைளின்

அற்புதத்திலும்,

இத்தனை திடமான ரயில்பாதை மலைகளுக்குள்ளே

அமைத்த ஸ்விஸ் எஞ்சினீயர்களின் அதிமேதாவித்தனத்தையும்,

உழைப்பையும் அதிசயத்தவாறே வில்லியம்டெல் கிராமத்துக்கு வந்து

அந்தக் கதையையும் கேட்டுவிட்டு இண்டர்லாகென் வந்தோம்.

அங்கிருந்து போட்.

லுசெர்ன் மறுபடி வந்து ஒருமணிப் பயணத்தில் வீடு வந்து

விழாத கட்டிலில் நிம்மதியாகப் படுத்தேன்.

தூக்கத்தில் விழுவது போலக் கனவு வந்தது.

பரவாயில்லை,அந்த மலையைப் பார்க்க இன்னோரு தடவை போக நான்ஆசைப்படவில்லை.:-))))
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

26 comments:

Geetha Sambasivam said...

அம்மா ஒரு நிமிசம்னு மகன் சொல்லுவதற்கும் முன் கையோடு கால வந்துவிட்டது.

தடால்....

சே,னு போயிட்டது.

அம்மா தரையில் திடீரென்று உட்கார்ந்த அதிர்ச்சியிலிருந்து

மகன் மீளுவதற்குமுன்னால் அப்பா கட்டிலில் உட்கார்ந்தாச்சு.

கட்டில் இன்னோரு டமால் ஒரு பக்கமாகச் சரிந்தது.

நம்ம சிங்கம் உஷார் சிங்கம்.உடனே சமாளித்து எழுந்தாச்சு.//

ஹாஹாஹா, விழுந்த கதை இங்கே இருக்கா?

மீனாள் என்ன சொன்னாள்? :)))) நல்லவேளையா நாங்க இந்த மாதிரிப்போனால் கையிலே ரைஸ் குக்கரோட போயிடுவோம். கூடவே புளியோதரைப்பொடி, ஊறுகாய் சகிதம். ஒண்ணும் இல்லைனாலும் சாதம் வடிச்சு, தயிர், ஊறுகாயோடு சாப்பிட்டுக்கலாமே! மு.எ.மு.அ.

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டிற்கு வந்ததும் நிம்மதி...!

இராஜராஜேஸ்வரி said...

அவ்வளவு உயரத்திலிருந்து யாரோ நம்மிடம் பேசவோ தொடர்பு கொள்ளவோ முயலுவதாகத் தோன்றியது.அது எல்லோருக்கும்
நேரும் அனுபவம் என்று சொன்னர்கள்.

அருமையான பகிர்வுகள்..!

இராஜராஜேஸ்வரி said...

திறந்து பார்த்த எனக்குத்தான் அதிர்ச்சி.

ஒரு மீன் சார் உள்ளே திறந்தகண்களோடு பார்க்கிறார்.

அதுதான் வெஜிடேரியன் என்று சாதிக்கிறார் அந்த அம்மா.

எதையும் வெஜிடேரியன் என்று நம்பிவிட முடிவதில்லை

இராஜராஜேஸ்வரி said...

பரவாயில்லை,அந்த மலையைப் பார்க்க இன்னோரு தடவை போக நான்ஆசைப்படவில்லை.:-))))

நிறைய இடங்கள் இப்படித்தான் ..

மறுபடி செல்ல ஆசைப்படமுடியாத அனுபவங்கள் நம்மை எச்சரிக்க வைக்கின்றன..!

துளசி கோபால் said...

விழுந்து விழுந்து பயணம் செய்வது இப்படித்தான்:-))))))

ஸ்ரீராம். said...

ஏமாற்றும் நாற்காலி, கட்டிலா? வெஜ் மீன் விழிப்பது சுவாரஸ்யம்! துளசி மேடம் கமெண்ட்-சிரிக்க வைத்தது!

மாதேவி said...

சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். நன்கு ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா.
நாங்கள் சென்றது இரண்டு நாளைக்கு.
முதல் நாளுக்கான சாப்பாடு பார்சல் செய்தாச்சு.
இரண்டாம் நாளில் வந்தது பிரச்சினை:)அமெரிக்கா மாதிரி மாரியாட் கிடைத்தால் பரவாயில்லை. இந்த ஊரில் அது கிடைக்கவில்லை.
சின்ன ஃப்ரிட்ஜ் நிறைய மது வகையறா. ப்ளீஸ் ஃபீல் ஃப்ரீன்னுட்டுப் போய்விட்டார் அட்டண்டர்.!ப்ளக்பாயிண்ட் பாத்ரூமில் மட்டும் தான். யக்!!!

வல்லிசிம்ஹன் said...

அதே அதே சபாபதே. சொர்க்கம் என்பது நமக்கு சொந்தமான வீடுதான் தனபாலன்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜேஸ்வரி,
அந்த மலைச் சிகரம் உயர்ந்த இடம்.அவ்வளவு அமைதி.அந்த இடத்திலிருந்தும் இன்னும் சிலபேர் நடந்து அடர்ந்த காடுகளைத் தேடிப் போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் ஊரின் சித்தர்களோ என்னவோ.!!!எனக்கு மனசே இல்லை அங்கேயிருந்து கிளம்ப:(

வல்லிசிம்ஹன் said...

அவர்களுக்கு மீன் வெஜிடேரியன்.
அந்த அனுபவத்திலிறுந்து அவர்கள் ஊரின் சாண்ட்விச் என்றால் ,இவரைத் திறந்து பார்க்கச் சொல்லிவிட்டுத்தான் சாப்பிடுவேன்:)

வல்லிசிம்ஹன் said...

உடல் நலத்தப் பேணி,ஒழுங்காக இருந்தால் எல்லாமே நடக்கும் இல்லையாமா இராஜராஜேஸ்வரி.
இயற்கை என்ன செய்யும். அனுபவங்கள் பாடம் சொல்லித் தருகின்றன!!நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

விழாமல் பயணம் செய்யப் பழக எடையைக் குறைக்கணும் துளசிமா:)

வல்லிசிம்ஹன் said...

ஹ்ம்ம்ம்.நான் விழுந்தால் இவ்வளவு நபர்களுக்கும் சிரிப்பு வருதா:)))

இருக்கட்டும் ஸ்ரீராம் பார்த்துக்கறேன்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி. இதற்காகவே கற்பனையாகக் கூட எழுதலாமானு தோன்றுகிறது.:)

கோமதி அரசு said...

ஒரு மீன் சார் உள்ளே திறந்தகண்களோடு பார்க்கிறார்.

அதுதான் வெஜிடேரியன் என்று சாதிக்கிறார் அந்த அம்மா.//
நல்ல சிரிப்பு.

வங்காளிகளூக்கு மீன் சைவம்.

விழாத கட்டிலில் நிம்மதியாகப் படுத்தேன்.

தூக்கத்தில் விழுவது போலக் கனவு வந்தது.//

கனவிலுமா?

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதிமா.இருந்தாலும் மஹா ஷாக்.:)
அந்த கடைக்கார அம்மாவோட கோபம்தான் புரியவில்லை. மீனை எடுத்துவைத்துவிட்டுச் சாப்பிடுங்கள் என்கிறார்.:(
எனக்கு இந்த விழுவது போலக் கனவு எப்பவும் வரும். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகரித்துவிட்டது அவ்வளவுதான்!!!

Unknown said...

Neenda natkaluku piragu padithen, sirithen,sandhosham

Unknown said...

Neenda natkaluku piragu padithen, sirithen,sandhosham

அமைதிச்சாரல் said...

விழுந்து எழுந்ததைக்கூட நகைச்சுவையாகச் சொல்லியிருக்கீங்க வல்லிம்மா. அப்றம் இந்தப் பயணத்துல கண்ணாமூச்சி ஆடலையா?. அதான் காணாமப்போயி திரும்பக்கிடைக்கிறது :-)))

வல்லிசிம்ஹன் said...

இல்லை கண்ணா.கண்ணாமூச்சி ஆடவில்லை. அதான் மகன் இருக்கானே .அவன் சட்டையை நான் விடுவதாக இல்லை.:)

Rathnavel Natarajan said...

படங்களுடன் அருமையான பதிவு. நன்றி.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, மறுபடியும் மீனாளைப் பார்த்துச் சிரிச்சேன். :)))) நல்ல ஜோக் காலங்கார்த்தாலே. விழுந்து எழுந்த கதையும் நினைச்சு நினைச்சுச் சிரிக்க வைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ரத்னவேல் சார். கருத்துக்கு வணக்கம்.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா இந்தக் கதை மூன்றாம் தரம் வலம் வருகிறது. அப்பவும் சிரிப்பா. நல்ல பொண்ணு நீங்க:)