Blog Archive

Sunday, October 05, 2014

மலைகள் சுற்றி இருக்க நான் தொலைக் காட்சியில் உலக மலைகளைச் சுற்றித் தேடினேன்

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இங்கு ஒரு அற்புத    இயற்கைத் தொலைக்காட்சி சானல்   ஒன்றில் காலை 11 மணி அளவில்   உலகத்தின்  முக்கிய   பகுதிகளைப் படம் எடுத்துக்   காண்பிக்கிறார்கள். கூடவே   பிபிசி யின் ப்ளானட்  எர்த் என்கிற  ஒளிபரப்பும் வரும். இந்த வாரம் பார்க்கக் கிடைத்தது  உலகம் முழுவதும் பரந்து கிடைக்கும் மலைகளைப் பற்றிய   டாகுமெண்டரி. தென் அமெரிக்காவின் ஆண்டெஸ்  மலைத்தொடர்,வடமெரிக்காவின்   ராக்கி மலைகள், ஆசியக் கண்டத்தின் காரகோரம் மலைத்தொடரும்  இமய மலையும்,ஆப்பிரிக்காவின்  ஏதியோப்பிய நாட்டின்  மலைகள் என்று விரிந்து கொண்டே வந்தன..                                                                      










மலையில் திடீரென நிகழும் மலைச்சரிவு பிரமாதமாகப் படம் பிடிக்கப் பட்டிருந்தது. அதைக் காமிராவில் பிடிக்க மனம் வராமல் நிலைகுத்திய  ,கண் இமைக்காத பார்வையினால் ப்டம் பிடித்துக் கொண்டேன். உங்களுடன் சிலகாட்சிகள்.

17 comments:

ரிஷபன் said...

மலைகள் என் பேவரிட்.. அங்கே போனாலே ஏதோ எனக்கான இடத்தில் இருக்கும் ஆனந்தம்..

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ரிஷபன் ஜி.உயரம் ஏற ஏற மனமும் லேசாகிவிடும். கவலைகளைக் கீழே விட்டுவிட்டு மலைச் சிகரத்தில் உட்கார்ந்து கொள்ளலாமே என்று தோன்றும். அதான் பெருமாளு முருகனும் குன்றுகளுக்குப் போனார்களோ என்னவோ. நன்றி ரிஷபன் ஜி.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா எத்தனை அழகு

Geetha said...

மலையின் மௌனம் மனதில் அமைதியைத்தரும்..காடுகள் நிறைந்த மலை எப்போதும் பிடித்தமான ஒன்று...

ஸ்ரீராம். said...

மலையும் மலை சார்ந்த இடமும் எப்போதுமே சுவாரஸ்யம்தான்.

Geetha Sambasivam said...

மலைகள் எனக்கும் பிடித்தமானது. மலையும், மலை சார்ந்த இடங்களும் காணக் காண அலுக்கவே அலுக்காது. அதுவும் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளைப் போன்ற அழகு வாய்ந்த மலைத் தொடர்கள் உலகிலே வேறெதுவும் இருக்காது என என் கருத்து. :)))))

priyasaki said...

மலைகளின் இயற்கை அழகு கண்கொள்ளாக்காட்சி.நானும் மலைப்பிரதேசத்தில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன்.அம்மலைகள் எனக்கு ஒவ்வொரு நாளும் புதிதாகவே தெரிகிறது. நன்றியம்மா.

RajalakshmiParamasivam said...

மலையின் கம்பீரம் மலைக்க வைக்கும் ஒன்று. மலைக்கு அருகில் நாம் நிற்கும் போது , நாம் ஒரு சிறு துரும்பு என்கிற உண்மை மனதில் அறையும்.

UmayalGayathri said...

அமைதியான மலைகள் எனக்கு பிகவும் பிடிக்கும். அவைகள் தவம் செய்வது போல எனக்குப் படும். அதன் அழகும் கம்பீரமும்...பசுமையும்...அருவிகளும்..அப்பப்பா சொல்லிக் கொண்டே போகலாம் அப்புறம் இதுவே ஒரு பதிவாகிவிடும்...ஹஹஹ...நன்றி தோழி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜெயக்குமார்.வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதாமா. இங்கிருக்கும் காடுகள் அப்படித்தான் ஒரு அமைதியைப் போத்திக் கொண்டிருக்கின்றன. தனிமைக்கு உகந்த இடம் மலையே.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. நம்மூர் மலைகளில் சத்தம் கூடிவிட்டது. இங்கே பரவாயில்லை.நடந்துவிட்டு வரும்போது களைப்புத் தெரிவதில்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் பிரியசகி அம்மு.இந்த அமைதி சிலசமயம் அதீதமாகத்தெரியும். பலசமயங்களில் மருந்தாக அமையும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். கொடைக்கானல் ஊட்டிப் போனால் கூட நாங்கள் ஆளரவம் இல்லாத இடத்தில் வெறுமனே உட்கார்ந்திருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராஜிசிவம்.எப்போதுமே இறைவனை உணர்த்தும் சுகம் மலைக்கு உண்டு.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு உமையாள் காயத்ரி,. மலைகளை அழகாக வர்ணித்துவிட்டீர்கள். நீங்களும் பதிவிடுங்கள் உங்கள் மலைகளைப் பற்றி.மிக நன்றி மா.

கோமதி அரசு said...

இங்கு மலைகள் இப்போது மறைந்து வருகிறது மனிதனால்.கோவில் இருக்கும் மலைகள் மட்டும் தப்பி வருகிறது.
மலையும் மலைசார்ந்த இடமும் எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
படங்கள் எல்லாம் அழகு.