Blog Archive

Tuesday, October 28, 2014

ஷில்தான் மலைத்தொடர் 2008இல் எழுதிய சம்பவம்






































Add caption
17ஆம்தேதி காலை மழையோடு ஆரம்பித்தது. எங்களுக்குள் விவாதம். நாம் போகப் போகும் இடம் ஒரு மலைச்சிகரம். அங்கே மதிய உணவுக்குப் போய்விடலாம்.
மழையிருந்தால் ஒன்றுமே பார்க்க முடியாது. அந்த மழையை இங்கயே பார்த்துக் கொண்டு சீட்டுக்கட்டு ராஜா பாடலாமேன்னு ஒரு யோஜனை,.
பையனோ இவ்வளவு தூரம் வந்து உள்ளே உட்காருவானேன்.
குடையிருக்க கோட் இருக்க மழைக்குப் பயமேன்னு டயலாக் சொன்னதும் பத்து நிமிடத்தில் ரயில் நிலையத்தில் இருந்தோம்.
கையில் சாப்பாடு எடுத்துக் கொள்ளவில்லை . பேத்தியின் இரண்டாவது  பிறந்த நாள்  அன்று:)
அதனால் அவ பேரைச் சொல்லி எல்லோருக்கும் மலையுச்சி ரெஸ்டாரண்டில் மகன் எங்களுக்குச் சாப்பாடு கொடுக்கப் போகிறான் 
ரயில் நிலையத்தில் வண்டி வர இன்னும் இருபது நிமிடம் இருக்கும் என்ற நிலையில்
மழையைப் பார்த்து,சத்தமில்லாமல் அது விழுவதை ரசித்துக் கொண்டிருக்கும்போது,
ஒரு டாக்ஸிக்காரம்மா வந்தாங்க.
அவங்க எங்களைப் பாதிதூரம் கொண்டு விடுவதாகவும் 100ரூபாய் கொடுத்தால் போதும்னு சொல்லவும், சரி அந்தப் பயணத்தையும் சவாரியையும் ரசிக்கலாமேனுட்டு அந்தப் பெரிய வண்டியில் அனைவரும் ஏறிக் கொள்ள மழையில் வெகு லாவகமாக வண்டி ஓட்டினார் எலிசபெத் .
அவரும் கணவருமாக க்ரின்டெல்வால்டில் இருபது வருஷமாக வாடகை வண்டிகள் ஓட்டுகிறார்களாம். நல்ல வருமானம். இந்தியர்களும் ,ஜப்பானியர்களும் தான் அதிகம் வருகிறார்கள் என்றார்.
இன்னும் பத்து வருடம் ஓட்டலாம் என்றதும்,நான் அவசர அவசரமாக ஏன் வயது வரம்பு உண்டா என்றேன். ஓ,நோ எனக்கு அப்ப 70 வயசாகிவிடும்
என்றாரே பார்க்கலாம்.!!!!!
அப்ப இவருக்கு இப்ப அறுபது. அழகா சம்பாதிக்கிறாரேன்னு எனக்கு ஆற்றாமையும், தன்னிரக்கமும் மிகுதியாச்சு.
சே, நாம எல்லாம் என்ன கணக்கில சேர்த்தி. இதைப் பாரு என்ன ஜம்முனு வண்டி ஓட்டறது. மழை,மின்னல் அப்படீனு ஒரு பயம் உண்டா. எங்க சிங்கம் வண்டீ ஓட்டறதில சமர்த்தர்னா இவ மகா சமர்த்தியா ஓட்டறா.
சாப்பாடுனு ஒரு ரொட்டியும் ஒரு சாஜேஜும் கடித்துக் கொண்டாள்.
சிக்குனு இருக்கா. பளபளனு முகம் ஒரு சுருக்கம் கிடையாது.
சுதந்திரம் அப்படி இப்படீனு மனசு பொருமிப் பொருமி,
என் நெத்தி சுருங்கியே போச்சு.

சிங்கம்தான் அவளுடைய  பக்கத்து ஃ ப்ரண்ட் சீட்டில் உட்கார்ந்து அவள் ஓட்டும் அழகை கமெண்ட் செய்து கொண்டிருந்தார். 'வேகம் குறையாம
 ஒரு ஜெர்க் கூட இல்லாம எப்படி ஓட்டறா பார்த்தியா'ன்னு என்னைத் திரும்பி பார்த்துக் கேட்டார்.

ஆங், வண்டி நல்ல வண்டி, ரோடு பள்ளம் மேடு கிடையாது, அப்புறம் என்ன?
நானும்தான் ஓட்டுவேன் என்றேன்.
'பையா அம்மா வண்டி ஓட்டக் கத்துக் கொண்டது ஞாபகம் இருக்கா ராஜான்னு' சிரிச்சார்.
ஆஹா மறக்குமா,என் பிஞ்சு வயசு நிகழ்ச்சிகள் ஆபத்துகள்ள அதுவும் ஒண்ணாச்சே.னு எங்கியோ பார்த்தான்எங்க சின்ன மகன்.

போச்சு இன்னிக்கு சம்பந்திகளுக்கு இன்னோரு விருந்துனு நான் அவனைத் தடுக்கப் பார்த்தேன்:)
பார்க்காதடா,கொசுவத்தி கொளுத்தறது என்னோட உரிமை.அதை நீங்க எல்லாம் பறிச்சுக்கக் கூடாதுன்னாலும் கேக்கலை.
இன்னும் ஒரு சீட்டுப் பின்னாலிருந்த பெண்டாட்டியப் பார்த்து அம்மாவுக்குக் கார் ஒட்டத் தெரியும்பா என்றான்.
நிஜமாவா சொல்லவெ இல்லையே என்றும் அவளும் ஒத்துப் பாடினாள். ''ஆனால் பாதசாரிகளின் நலத்தை உத்தேசித்து திருச்சி போக்குவரத்து இலாகா,
லைசென்ஸ் கொடுக்க மாட்டேனுட்டாங்க''ன்னான்.

ஏம்மா நல்லா எட்டுப் போடலியான்னு மருமகள் கேட்டாள்.
எட்டா!!உங்க அம்மா பதினாறே போட்டு இருப்பா. என்னா ஆச்சுன்னா
நானும் குழந்தைகளும் வண்டியில் இருந்ததால மரத்தோரமா நிறுத்திட்டா:)

க்ளட்ச்சையும் பிரேக்,ஆக்ஸிலேட்டர் எல்லாத்தையும் மாத்தி மாத்தி அழுத்தினா வண்டி ஓடும்னு நினைச்சு,ஆக்சிலேட்டர்,ப்ரேக் ரெண்டையும் இரண்டு பாதத்தில பிடிச்சுண்டு விடவே இல்லை. அப்படியே வண்டி எங்க போறோம்னு தெரியாம திணறிப் போச்சு.
எதிர்த்தாப்பில போலீஸ்காரர் அவர்மாட்டுத் தன் வேலையைப் பார்க்க சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் எங்க வண்டி துள்ளறதைப் பார்த்துட்டு
ஆஹ்ஹ்னு சைடு வாங்கி பள்ளத்தில இறங்கிட்டார்.

அவரைப் பார்த்ததும் அம்மாவுக்கு உதறல் எல்லாத்தையும் விட்டுட்டா. வண்டி
ரோடைவிட்டுக் கீழ வயலில் இறங்கி தத்தி தத்தி ஒரு புளியமரத்திலடில போய் நின்னுது. ஹாய்னு சத்தம் போட்டுட்டுனு நீங்க எல்லாரும் இறங்கியாச்சு.
அவர் நிறுத்தினதும் நான் வண்டியை நிறுத்தின வைபவத்தை எல்லோரும் ரசிச்சுக் கொண்டாடினாங்க.
கூடவே இவர் என்னை அநேகமா போலீஸ் பார்த்து
உன்னை லாக் கப்பில வைப்பாங்க. அதுவும் அப்ப 1974ல ஏதோ ஒரு நெருக்கடி அரசியல்னு நினைக்கிறேன்.

உன்னை அவன் லேசில விடப்போறதில்லன்னு ,வேணும்னா நாங்க செல்வம் லாட்ஜில சாப்பிட்டுட்டு உனக்கும் ஏதாவது கொண்டு வரோம்னு சொன்னது
எல்லாம் நினைவுக்கு வர எனக்கே என் அசட்டுத்தனம் சிரிப்பாக இருந்தது.
எப்படியோ அந்த அழகான ஃபியட் கார் சேதாரம் ஏதும் இல்லாம வெளில வர அந்தக் கான்ஸ்டபிளே உதவி செய்தார்.

அம்மா, அய்யாதான் ஜம்முனு ஓட்டறாரே, நீங்க சொகுசாப் போங்கம்மா. எதுக்கு இந்தக் கஷ்டமெல்லாம்னு ஓதிட்டுப் போனார்.
இப்பவும் திருச்சி ஏர்போர்ட் ரோடைப் பார்த்தால் அந்தப் புளியமரத்தையும் பார்த்துப்பேன்:)
நமக்கு ஞானம் வந்த இடமில்லையா!!
இப்படியாகத்தானெ திருமதி எலிசபெத் க்ராஃப் உபயத்தில் சம்பந்திகளுக்கு ஒரு கதை கிடைத்தது. நமக்கும் ஒரு பதிவு கிடைத்தது:)










34 comments:

வடுவூர் குமார் said...

ஹா! ஹா!
மனைவியை படிக்கச்சொல்லியிருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார்.நலமா. இப்பொ உங்களுக்கு என்ன நேரமோ சிங்கப்பூர்ல:0)
கட்டாயம் படிக்கச் சொல்லுங்கொ.

சிரிப்பு வந்தா எனக்கு இன்னும் உற்சாகம்தான்;)

இலவசக்கொத்தனார் said...

எங்க தங்கமணி இப்போ நல்லாக் கார் ஓட்டறாங்க என்பதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன்!! :))

வல்லிசிம்ஹன் said...

அர்த்தம் பொதிந்த வரிகள்.
அப்ப நல்ல வண்டியை(ஹோண்டா) நீங்க ஓட்டுறீங்க.நிறுத்தறீங்க,.

தங்கமணிக்கு டொயட்டோ காம்ரியா:)

Anonymous said...

வல்லிம்மா, உடனே போய் எலிசபெத் க்ராஃப் கிட்ட கத்துக்கிட்டு, ஸ்விஸ்ல லைசன்ஸ் வாங்கவும் ... அம்பளைங்க கிட்ட கத்துக்காதீங்க, அவங்க பொறமையில இது தப்பு அது தப்புன்னு சொல்லி ஏமாத்துவாங்க ... கட்டாயமா நீங்க லைசன்ஸ் வாங்கலாம், ஸ்விஸ்ல வாங்குங்க சான்ஸ் கிடைச்சா ... யாரு சொன்னா உங்களால ஓட்ட முடியாதுன்னு? நான் வந்து ஒரு குட்டு குடுக்கிறேன் எல்லாருக்கும்!!! :)

வல்லிசிம்ஹன் said...

ஆம்பளை கத்துக் கொடுத்துத்தான் அப்படி ஓட்டினேன்.:0)

நான் இப்ப ஸ்விஸ்ல இல்லயே,இங்க சிகாகோ வந்துட்டேன் மதுரா:)
அஞ்சு நாள் தங்கல்தான் அங்க. ஊருக்க் நவம்பர் டிசம்பர் போனாட்டுக் கத்துக்கறேன். நல்ல யோசனை கொடுத்ததற்கு நன்றிப்பா:)
எல்லாம் தலைய நீட்டிக்கிட்டு இருக்காங்க போடுங்க ஒரு குட்டு!!!

Vijay said...

வல்லியம்மா,

நாங்க புதுசா ஆல்டோ வாங்கினபோ நடந்த கதையும் இதேதான். புளியமரத்துக்கு பதில் ரேஷன் கடை... அவ்ளோதான் வித்தியாசம். :P

அபி அப்பா said...

:-)))))))))))))))) ennaala thamiz type panna mudiyala!!

aanaa en manaivi nallaa speeda car oottuvaangka.... enaaku konjam payam thaan!!!:-)))))

NewBee said...

// அம்பளைங்க கிட்ட கத்துக்காதீங்க, அவங்க பொறமையில இது தப்பு அது தப்புன்னு சொல்லி ஏமாத்துவாங்க ... //

இது முற்றிலும் உண்மை :D :D வல்லிம்மா. நாம ஒழுங்காதான் ஓட்டுவோம். எல்லாம் பொறாமை. :P

கயல்விழி said...

மீண்டும் அழகான படங்கள் வல்லி மேடம்.

இங்கே யாருக்கும் வயது வரம்பு இல்லை, அந்த வயதில் கார் ஓட்டுவதென்ன, திருமணமே செய்துக்கொள்ளுகிறார்கள். நம் ஊரில் தான் ஒரு 40 வயதாகிவிட்டாலே ரொம்ப பெரிய வயதானது போல நடந்துக்கொள்ளுகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

விஜய், நிஜமாவா.:0)
ரேஷன் கடை மூடி இருந்ததா திறந்திருந்ததா!!

இப்பத் தேறி இருப்பாங்க இல்ல:0)

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் அபி அப்பா.

தமிழ்ல டைப் முடியலைன்னா என்ன.
உங்களை இணையத்தில பார்க்க முடியலையேனு இருந்தது.

உங்க்க மனைவியைப் பார்த்துப் பேசணும்னு இன்னும் ஆவல் அதிகமாகுது.

வல்லிசிம்ஹன் said...

நியூ பீ.

சிலருடைய நினைப்பும் பெண்களால முடியாதுங்கறதுதான்.
அதுவும் ஆம்பளைங்க டிரவ் செய்யறபோது முனாடி ஒரு பெண்காரோட்டி வந்துட்டா சர்வ நாசம்னு வார்த்தைகள் கொட்டும். இடது திரும்பறதுக்கு இடதுபக்கம் இண்டிகேட்டர் போட்டாலும் தப்பு.திரும்பினாலும் தப்பு இப்படி போகும் கதை:)

கோவை விஜய் said...

ஷில்தான் மலைத்தொடரின் அழகு கொஞ்சும் படங்கள் ஆறும் அருமை..

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

வல்லிசிம்ஹன் said...

வரணும் விஜய். நன்றிம்மா.
இன்னும் நல்லா எடுத்திருக்கலாம். எல்லாம் ரயில் ஓடும் போது எடுத்தது. அது கொஞ்சம் ஃபோகஸ் போதவில்லை.

வல்லிசிம்ஹன் said...

என்ன செய்யலாம், கயல்விழி.

என் பெண் சொல்வது போலவே சொல்கிறீர்கள்.:)
நம் ஊருக்குப் போனால் ஒரு வயதான ஃபீலிங் தானே வந்துடும்.
இங்க எல்லாமே வேற.
நாங்கள் எவ்வளவோ தேவலை. இப்பத் திருமணம் செய்து கொள்பவர்கள் கூட திடீர் மாமிகள் ஆகி விடுகிறார்கள் சில சமயம்:)
நன்றிம்மா.

துளசி கோபால் said...

என்னப்பா இப்படி அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கீங்க? தூள் கிளப்பியாறது:-)))))

படங்களும் சூப்பரா இருக்கு.

கார் ஓட்டுவதைப்பற்றிக் கவலையே வேணாம். எப்பவேணுமுன்னாலும் கத்துக்கலாம்.

என்ன ஒன்னு, ட்ராபிக் லைட் சிகப்பா இருக்கும்போது அது நம்ம கண்ணுக்குப் பச்சையாத் தோணாமல் இருக்கணும்.

இது மட்டும் ஆணுக்கும் பொண்ணுக்கும் பொது:-)))))

ராமலக்ஷ்மி said...

//நமக்கும் ஒரு பதிவு கிடைத்தது:)//

எங்களுக்கும். படங்கள் அருமை. காரோட்டிய அனுபவம் அதை விட. விடுங்க வல்லிம்மா, எதுக்கு கஷ்டப் படணும் சொன்னாப்ல. அப்புறம் அம்மாவை இப்படி குட்டி குட்டி கலாட்டா செய்றது எல்லா வீட்டிலும் நடப்பதுதானே:))! ஆனா சம்பந்திங்க முன்னாலே:(? அது பாயின்ட்தான்:)!

ambi said...

தங்கமணிக்கு காரோட்ட தெரியும் ஆனா பெங்களூர் டிராபிக்ல ஓட்ட பயம். :p

ஹிஹி, நான் இந்த ஆகஸ்டுல தான் கத்துக்கனும். அதனால கார் வாங்கலை. :)

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் ஆசைதான் துளசி. நம்ம ஊரு ட்ராஃபிக் பாத்தீங்கன்னா சன்யாசம் வாங்கிப்பீங்க.
அதாவது ட்ரைவிங்ல இருந்து.:)

ஒரு ஆட்டொ பிடிச்சமா போனம்மானு இருக்கணும்.அதுவும் பகல் வேளைல!!

சிக்னல் பச்சை,சிவப்பு எல்லாம் பொறுமையாப் பாக்க நம்ம இளமை குறுக்க நிக்கிறதே:)))))

வல்லிசிம்ஹன் said...

அட ஆமாம்மா ராமலக்ஷ்மி.

இப்ப எல்லத்தையும் கேட்டுட்டு சிரிப்பாங்க.அப்புறமாப் போயி மாப்பிள்ளையோட அம்மா கொஞ்சம் அசத்து அப்படீன்னுட்டு நினைச்சாங்கன்னா:)

நாம எவ்வளவு சாம்ர்த்தியம்னு நமக்குத் தானே தெரியும்!!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா அம்பி, கார் வாங்கணுமே அப்படிங்கற ஒரே காரணத்துக்காகக்
கத்துக்கலியா.
கார் வந்தாலும் தங்கமணி கைல வண்டி போயிடுமாக்கும்:)

சரி பாப்பாவை நீங்க பார்த்துக் கொண்டால் அவங்க ஓட்டு வாங்க. புரிகிறது.:)

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

இன்னும் பதிவு வாசிக்கலை. ஆபீஸ் ஓ(ட்)டணும் :)) பிறகு வந்து படிச்சிட்டு மறுமொழி போடறேன்.

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

படித்தேன், விழுந்து விழுந்து சிரித்தேன். படங்களைப் பார்த்து ரசித்தேன். உங்கள் ஞாபகசக்தி (புளியமரம்) கண்டு வியந்தேன்.

Geetha Sambasivam said...

//இப்பவும் திருச்சி ஏர்போர்ட் ரோடைப் பார்த்தால் அந்தப் புளியமரத்தையும் பார்த்துப்பேன்:)
நமக்கு ஞானம் வந்த இடமில்லையா//

அட, போதிமரம்??? சொல்லுங்க, அடுத்த முறை திருச்சி போறப்போ நானும் போய்ப் பார்த்துட்டே வந்துடறேன். :P

வல்லிசிம்ஹன் said...

சதங்கா வரணும். ஒரே தேன் மாரி பெய்து விட்டீர்களே:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

கீதா வரணும் பா.
எதுக்கு ஞானம்னு கேளுங்கோ. அந்தக் கான்ஸ்டபிள் சொன்ன மாதிரி வாழ்க்கையையும் காரையும்
சிங்கத்துக்கிட்ட விட்டுட்டா
நாம நிம்மதியா இருக்கலாம் பாருங்க. சுயநலம் தான்:)

இராஜராஜேஸ்வரி said...

அந்தப் புளியமரத்தையும் பார்த்துப்பேன்:)
நமக்கு ஞானம் வந்த இடமில்லையா!!

புளிய மரமே போதிமரமா ..

எனக்குக்கார் ஓட்டக்கற்றுக்கொடுத்து என கணவர் டென்ஷனாகி பதறியது பயத்தை வரவழைத்தது..

Geetha Sambasivam said...

நல்ல வேளையா இந்த சோதனை எல்லாம் நாங்க செய்யலை! 90 களில் ரங்க்ஸுக்கு ஆஃபீச்ச்ச்ச்சில் கார் அலவன்ஸ் கொடுத்தாங்க. அப்பாவும் பொண்ணும், பையரும் ஒரே குதியல். குறுக்கே விழுந்து மறிச்சுத் தடுத்தது நான் ஒருத்தி தான். கடைசியிலே வின்னர் நான் தான்! :)))

ஒரு ஃபோன் பண்ணினா கார் வருமே! அதுவும் என்ன மேக் கேட்கிறோமோ அந்த மேக் வந்துடும்! :))) எதுக்கு வெட்டியாக் கார் வாங்கிண்டு ஓட்டிப் பழகிண்டு! :))))))

Geetha Sambasivam said...

என்ன இங்கேயும் வேர்ட் வெரிஃபிகேஷன் எல்லாம்?? எனக்குத் தான் கேட்குதோ? மத்தவங்க யாரும் சொல்லக் காணோமே.

பழைய பதிவென்றாலும் படிக்கப் படிக்க அருமை.

Geetha Sambasivam said...

படிச்ச பதிவு தான். மீள் பதிவா?

கோமதி அரசு said...

பார்க்காதடா,கொசுவத்தி கொளுத்தறது என்னோட உரிமை.அதை நீங்க எல்லாம் பறிச்சுக்கக் கூடாதுன்னாலும் கேக்கலை./

கொசுவத்தியை மீண்டும் படித்தாலும் மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

Thank you and Goodmorning Gomathi. many many thanks.

வல்லிசிம்ஹன் said...

கீதா பழைய பதிவுதான். 2008.
மீண்டும் படித்ததற்கு மிக நன்றி. என் கொள்கையும் அதுதான். ஃபோன் பேசினால் வேண
வண்டி.
இதுல ஓட்டவிட்டால் என்ன.