Blog Archive

Thursday, August 07, 2014

நீர் அரித்து மடித்த நிலம் சௌத் டகோடா பயணம்.3

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
மாலை மயங்குகின்ற நேரம் நம்மையும் மயக்குகிறது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நதிகள் ஒரு பக்கம் வண்டலைச் சேமித்துக் கொட்ட, கடலும் காற்றும் படிந்த மணலை அரிக்கப்       ப்ழைத்துக் கிடைக்கிறது இந்த  Bad Lands,.  தேசியப் பூங்காவாக அறிவிக்கப் ;அட்ட ஆயிரக்கணக்கன் ஏக்கர்களில் இருக்கும் இந்த இடம்.  ஒரு அதிசயம். நாலைந்து  இடங்களில் இறங்கிப் படங்கள் எடுத்தோம்.  ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வண்ணம். அதில் அடிவரிசையில் இருக்கும் மஞ்சள்   வண்ணம் தான்  ஒரு முப்பது மில்லியன் வருடங்கள் முன் படிந்த குன்று. அதாவது வயதில் சிறியது.   எரிமலை இருந்த வெடித்த இடங்களில் சாம்பல் வண்ணக் குன்றுகள் நம் நெய்வேலிச் சுரங்கக் கரியாகத் தென்படுகின்றன.  அதற்குப் பிறகு ஷெயின்  நதி ஓடி இருக்கிறது,. வெள்ளங்கள் வரும் காலத்தில்   பழுப்பு நிற வண்டல்.  குறைந்த இடங்களில் வெண்மை பூக்கும்  மணல்.   ஒருபக்கம்  மலைகள்  மறுபக்கம்  சமவெளிகள். அபூர்வமாகக் காணப்படும் பச்சைத் தாவரங்கள்.புல் வெளிகள். மூன்று கால்    குதிரை கூட இருந்ததாம்.    அதற்குப் பிறகு  பலவித சிறிய   மிருகங்கள்.அவைகளின்  படிமங்கள்.  பெரிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மலைகளாக இருந்தவை இன்னும் 500,000  வருடங்கள் கழிந்து  கரைந்துவிடுமாம்.   மதிய   நேர   வெய்யிலில்   பலகைகள் போட்ட இடத்தில் மட்டுமே நடந்தோம்.  ராட்லர்ஸ் எனப்படும் கொடும் விஷப் பாம்புகள்    இருக்கும் என்று எச்சரிக்கை  போட்டு இருந்தது,. அதையும் கவனிக்காமல்   வந்தவர்கள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள்.                               

12 comments:

கோமதி அரசு said...

பலவண்ணம் காட்டும் குன்று அருமை.
படங்கள் எல்லாம் மிக அழகு.

வடுவூர் குமார் said...

ஊப்! பார்க்கும் போதே ஏதோ ஒரு சோக உணர்வு வருகிறது.

ADHI VENKAT said...

இயற்கையின் விந்தைகளில் இதுவும் ஒன்று போல.... அருமையான படங்கள் அம்மா.

ஸ்ரீராம். said...

அசத்தும் படங்கள் அம்மா... கண்ணைக் கவர்கின்றன. இங்கும் உயிர்கள் வாழ்கின்றனவா? பலகை போட்ட இடங்கள் தவிர மற்ற இடங்கள் எப்படி இருக்கும்?

Angel said...

படங்கள் எல்லாம் அருமை ..பார்க்கும்போதே தெரிகிறது எவ்வளவு வெம்மையாக இருக்கும்னு அங்கே !!
நானும் பார்த்தேன் டிவில ஒரு சில அமெரிக்க இடங்களில் பாம்புகள் சர்வ சாதரணமா உலவுமாம் !!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
கவி பாடும் படங்கள்

அப்பாதுரை said...

படங்கள் சுபர்ப்.

தொண்ணூறு தொடக்கத்தில் கல்லூரி நண்பர்களுடன் பேட்லேன்ட்ஸ் பகுதியில் கூடாரம் கட்டித் தங்கியிருக்கிறேன். ஊர்வன பறப்பன எல்லாம் பார்த்தோம். எதற்கெல்லாம் துப்பாக்கி எடுக்கும் வெள்ளை நண்பர்கள் இருக்கும் பொழுது அச்சமில்லை அச்சமில்லை!

பேட்லேன்ட்ஸ் ஏறக்குறைய moonscape என்பார்கள். நீர் வற்றிய நிலம் என்ற காரணத்தால்.

துளசி கோபால் said...

என்னப்பா இவ்ளோ குட் லேண்டைப்போய் பேட்லேண்டுன்னு சொல்றாங்க:-)

இயற்கை செஞ்ச ஜாலங்கள்தான், அதி சூப்பர்!!!!

மாதேவி said...

மண்குன்றுகள் ஒவியம்போல.

வல்லிசிம்ஹன் said...

தாமதமாகப் பதில் இடுவதற்கு மன்னிக்க வேண்டும். ஊருக்குக் கிளம்பும் மும்முரத்தில் ஏதோ ஒரு சுணக்கம் மனதில்.என்னடா வாழ்வு என்று.அந்த நேரம் அப்படி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, துளசிமா,ஸ்ரீராம்,துரை நன்றிமா. ஸ்ரீராம் பலகை இல்லாத இடங்களில் இரவில் மற்ற ஜீவராசிகள் நடமாடும் நாஷனல் ஜியோவில் பார்த்திருக்கிறேன். அந்த ஓட்டைகள் இருக்கும் இடம் எல்லாம் பிராணிகள் வாழும் இடங்கள் தான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜெயக் குமார். நன்றி ஏஞ்சல்,நன்றி ஆதிமா, நன்றி குமார். உண்மைதான் நேடிவ் அமெரிக்கன் என்றூ சொல்லப்படும் சிவப்பு இந்திய மூதாதையர் ஆவிகள் அங்கு உலவுவதாகக் கூடப் பேச்சு உண்டாம்.