About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Monday, June 09, 2014

சில்லென்று சில நினைவுகள் 14......... 1967

பெரியவனும் அவன் கரடியும் இப்படித்தான் இருப்பார்கள். வாயில் விரலும் உண்டு.   கண்ணில் எப்போதும் ஒரு கேள்விக்குறி.
Add caption
சிங்கத்துக்கு முகவும் பிடித்த ஆர்க்கிட்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
குளிரையும் தாண்டி  வந்த புதர். இந்த ஊர் மக்களைப் போலவே சர்வைவர்.


ஏன் இந்தப் பையன்   நம்மகத்தைக் கொள்ளவில்லை. இவ்வளவு  ஒல்லியா  இங்கே  குழந்தை பிறந்ததே   இல்லை.   ரேவதியைத் தான்  கொண்டிருக்கு.  வரவர்கள் போகிறவர்கள் எல்லாம்    சொல்லும் வார்த்தைகள் இவை.  எனக்கு  மிகவும் வருத்தமாக இருக்கும்.  மாமியார் உடனே  குழந்தையை  குழந்தை நல மருத்துவரிடம்                                                                  அழைத்துப் போனார்கள். அவர் பார்த்துவிட்டு  இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை  லாக்டோஜன் கரைத்துக் கொடுக்கச் சொன்னார்.  மற்றபடி   நல்ல சுறுசுறுப்பாக இருக்கிறான். கவலை ஒன்றும் இல்லை என்று அனுப்பிவிட்டார்.


நல்ல  வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்றபடி  சிங்கத்துக்கும் கடிதம் போட்டேன். அவர் இன்னும் பத்து நாட்களில் இங்கே வரவேண்டும் என்று பதில் போட்டார்.  கவலைப் படாதேம்மா. இங்க வா. நாம் நல்லபடியாக வளர்க்கலாம்  என்ற உறுதி வேற.      சீனிம்மாவுக்குத் தொலைபேசி  என்னை அழைத்துக் கொண்டு போகச் சொன்னேன்.  மாமாவும் வந்தார். பாரிஜாதத்தில் அப்போது தண்ணீர் கஷ்டம். நிறைய குடும்பத்தினர் வேற வருகை.  முனியம்மா   துணிகளைத் தோய்ப்பதும்       உலர்த்துவதும், காப்பிப் பாத்திரங்களைத் தேய்ப்பதும்  ஆக இருந்தார்.  உள்ளே    சமையலுக்கு இருக்கும் நரசிம்மன்   செய்யும்   குழம்பு.கறிக்கூட்டு எல்லா வாசனையும் மாடிக்கு  மிதந்து  வரும். பசி தாங்காது.  அந்தச் சின்ன வயதில் பொறுமையும் கூடவந்ததில்  எனக்கு அதிசயமே.  பெரியவர்கள் சாப்பிட்டு முடிந்ததும்  அழைப்பு வரும்.  குழந்தையைக் கீழே கொண்டு வந்து கூடத்தில் குட்டி மெத்தை பாய் எல்லாம் போட்டு  கொசுக் கூடாரமும்  வைத்து விட்டால் வாயில் விரலை போட்டுக் கொண்டு எல்லோரையும்    பார்த்த படி இருப்பான்.  மாமனார்  பார்த்துவிட்டுப் பெரிய பிலாசபரா வருவான் பாரு என்பார். சும்மா இரு மாமா. ரேவதி   அவன் நல்ல ஆர்டிஸ்டாக வருவான் பாரு என்பார் இன்னோருவர். நான் சாப்பிட்டதும்    குழந்தையைப் பின்வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய்ச் சின்ன மாமியாரிடம் கொடுத்தால் அவர்கள் வீட்டுப் பாத்ரூமில் சொகுசாகக் குளிப்பான்.  வீடு இன்னமும் ஆலிவர் ரோடில் இருக்கிறது. மாமியார் தான் இல்லை. மிக நல்ல மனுஷி. என்னடி காமாட்சி என்றுதான் என்னை விளிப்பார்.                                                       

அப்புறம் சில வருடங்கள்  கழித்துத்தான்    புதுவீடு கட்டியது அப்புறம் தண்ணீர் நிலைமை சரியானது.   இன்னும் 67இல்   இருக்கிறொம் இல்லையா. இரண்டு நாட்கள் புரசவாக்கம் போய் விட்டு வந்தோம்.  இங்கே  வீனஸ் காலனி கதா காலட்சேபங்கள்    போய்க்கொண்டிருந்தன. பாலகிருஷ்ண  சாஸ்திரிகள்     பாகவதம் சொல்லிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். எனக்குக் கதை கேட்கப் பிடிக்கும் ஆனால்  குழந்தையைப் பார்த்துக் கொள்ள  யாரும் இல்லாததால் நான் வீட்டில்      இருக்க வேண்டியது ஆயிற்று.  பெரியவர்கள் சின்ன வயதில் எனக்கு     விருப்பம் இருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ.   பின்னாட்களில்    சந்தர்ப்பம் கிடைத்தும்      கூட வர  ஆளில்லாததால்  போக முடியவில்லை. சிங்கம்  என்னைக் கொண்டுவிடத்தயார். சாயந்திரம் போய் இரவு வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய எனக்கு இஷடம் இல்லை. எல்லாத்துக்கும் கொடுப்பினை வேண்டும்  இல்லையா.   சீனிம்மாவுடன்   சேலம் கிளம்பும் நாளும் வந்தது. வெஸ்ட் கோஸ்ட்  எக்ஸ்ப்ரஸ்   மதியம்  12  மணிக்குக் கிளம்பும் என்று நினைவு. தொட்டில், லாக்டோஜன்,ஃப்ளாஸ்க்,பாட்டில்கள் சகிதம்  ஒரு பிக்னிக்  பாஸ்கெட். என் பெட்டி ஒன்று.சீனிம்மாவின் எளிமையான பை ஒன்று இத்துடன் அம்மா,மாமா,தாத்தா ,ஆஜிப்பாட்டி இவர்களுன் நூறு புத்திமதிகளோடு நாங்களும் கிளம்பினோம். இனி  சேலத்தில் பார்க்கலாம்.