Blog Archive

Tuesday, May 06, 2014

ஆசிரியர்களைப் பாராட்டும் வாரம் இந்த வாரம்

Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நல்லதொரு  பழக்கம் இந்த ஊரில். சிறார்களுக்கு ஆசிரியர்களின் உழைப்பைப் பாராட்டச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு  செய்கிறார்கள். இந்தத் திங்கள்கிழமையிலிருந்து தன் வகுப்பு ஆசிரியையுக்குப் பிடித்த   விஷயங்களைச் செய்வது. பழங்கள், சாக்லேட்,  என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகக் குழந்தைகள் கொடுக்க வேண்டும். இன்று பல்வகை உணவு தினம். பேரன் எடுத்துக் கொண்டது பழங்கள். .                                                                                                                                     அவனைப் பொறுத்தவரைப் பழங்களில் சத்து  அதிகம்.  அதனால் அவன் அம்மா நேற்று  கடைகளுக்குச் சென்று பைகள் நிறைய விதவிதமான பழங்களை வாங்கி வந்தாள்.                                                      இரவு எல்லோரும் படுக்கச் சென்றபின் ஒரு மணி நேரம் மெனக்கெட்டு     பழங்களை நன்றாகச் சுத்தம் செய்து ஒரே அள்வில்  நறுக்கி வைத்து , குளிர்ப் பெட்டிக்குள் வைத்துவிட்டாள். ஆரஞ்ச்,ஆப்பிள், செர்ரி, திராட்சை, கிருணிப் பழம், ப்ளூபெர்ரீஸ்  எல்லா வண்ணங்களும் கண்ணைப் பறித்தன. அவைகளைக் காலியில் எழுந்து நானும் அவளும்    ஸ்கூவர் கம்புகளில்  செரிகிவைத்து   இரண்டு பெரிய தட்டுகளில் நிறைத்தோம். இன்னும் அலங்கரிக்க நேரமில்லை. ஏழரை மணிக்குப் பள்ளியில் வைத்துவிடவேண்டும்..                                                             அவசரமாக வண்டியில்  அலுங்காமல் வைத்து    பள்ளிக்குச் சென்று வைத்து விட்டு வந்தாள்.                                                              பேரன்    அப்போதான்  எழுந்து  சீக்கிரம் செய்துட்டியாமா. ரியலி க்ரேட்னு அம்மாவுக்கு ஒரு கட்டி முத்தம் கொடுத்தான். ஏழு வயசுப் பெரியவனாச்சே.>}}}                                                            இந்த மரியாதை எல்லோரிடமும் நிலைக்க வேண்டும்.

21 comments:

ஸ்ரீராம். said...

நல்ல வழக்கங்கள், பழக்கங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! அசத்தல் அம்மா...

சீனு said...

மிக நல்ல பழக்கம் வல்லிம்மா.. எந்த ஊரில்?

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவான் பேரன். டீச்சரம்மா என்ன சொன்னார் என்று தெரியும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். நாங்கள் எல்லோரும் ரோஜா கொடுப்போம். இங்கே வேற மாதிரி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சீனு. இங்கே சிகாகோவில் தான்.

துளசி கோபால் said...

வாவ்!!!!!!!!!!

Geetha Sambasivam said...

ஆஹா, அருமையான பழங்கள். எல்லாம் கலந்து சாலட் செய்யலாம், கொஞ்சம் மிளகு பொடி, உப்பு, தேன் சேர்த்து. :))))

Geetha Sambasivam said...

பேரனுக்கு வாழ்த்துகள், ஆசிகள்.

இராஜராஜேஸ்வரி said...

நல்லதொரு பழக்கம்

பால கணேஷ் said...

நல்ல பழக்கம். நீங்க சொல்லியிருக்கற மாதிரி இந்த மரியாதை என்றும் நிலைச்சிருக்கட்டும்.

கோமதி அரசு said...

அழகாய் இருக்கிறது. அம்மா மகனிடம் பாராட்டையும் அன்பையும் பெற்றுக் கொண்டார்களே! மகிழ்ச்சி.
மகன் டீச்சர் அம்மாவின் பாராட்டை பெற்று வருவார்
வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி துளசிமா. நீங்க இங்க இருந்தால் உங்களுக்கும் கொடுத்திருக்கலாம். இன்னிக்குப் பேரன் தன் டீச்சருக்குப் பிரேஸ்லெட் செய்து கொண்டிருக்கிறான்.

வல்லிசிம்ஹன் said...

மிளகு உப்பு சரி. அதென்ன தேன் கீதா. சப்புக் கொட்டலாம்னு பார்த்தால் இனிப்பு வந்துவிட்டதே,.:))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.வாழ்த்துகளைப் பேரனிடம் கொடுத்துவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ். ஒரே உத்சாகம் தான். நீ என்ன கொண்டு வந்தாய். நான் அதைக் கொடுத்தேன் இப்படி. இந்த வாரம் முழுவதும் குழந்தைகளுக்கு கண்டிப்புக்கான கார்டு கிடையாது. ஒரே ஜாலிதான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. பேரன் பாராட்டுகளை வாங்கி வந்தான். இன்றும் ஒரு பரிசு தயார் செய்து கொண்டிருக்கிறான். நன்றி அம்மா.

Geetha Sambasivam said...

ஃப்ரூட் சாலடுக்கே தேன் தான் முக்கியம்.சர்க்கரையோ, வெல்லத்தூளோ, நாட்டுச்சர்க்கரையோ ஃப்ரூட் சாலடில் சேர்த்தால் நல்லா இருக்காது. தேன் மட்டும் விட்டுப் பாருங்க! :)))))

சரி, பரவாயில்லை, உங்களுக்காகத் தேன் இல்லாமல், மிளகு, உப்பு மட்டும் போட்டுப்போம்

வெங்கட் நாகராஜ் said...

வாவ்.... பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறதே.....

வல்லிசிம்ஹன் said...

ஆ அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும் கீதா. உப்பும் மிளகுமே போதும் எனக்கு. சுவை பிரமாதம்.>||||

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட், உங்க ஃப்ரூட் சாலட் மாதிரியே இருக்கு இல்லை_