About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, May 04, 2014

அன்பு உள்ளங்களுக்கு ஒரு ஆட்ரி ஹெப்Bர்ன்

aging princess.
Portrait
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Roman holiday princess                      மனம் கொள்ளை கொண்ட மோகனம்.ரோமன் ஹாலிடே படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேனோ தெரியாது.   பெல்ஜியத்தில் பிறந்து     லண்டனில் அரங்கேறிய  ஓவியம்.  பிடிக்காதவர்களோ எதிரிகளோ கிடையாது.  அன்புக் கணவர்,மகனோடு ஸ்விட்சர்லாண்டில் வீடெடுத்து இயன்ற சமூக சேவைகளைச் செய்து வந்தவர். ஆப்பிரிக்க நாடுகளுக்கெல்லாம் சென்று யூனிசெஃபின்  பிரதிநிதியாகச் சேவை புரிந்தவருக்கு    புற்று நோய்    இறுதி சொல்ல வந்தாலும் கலங்காமல் எதிர்கொண்டு  அமைதியாக    மறைந்தார்.    விடாமுயற்சி,அமைதி,அன்பு  அத்தனையும் கொண்ட பெண்மணி.   ஹாப்பி பர்த்டே ஆட்ரி ஹெப்பர்ன்.

19 comments:

ஸ்ரீராம். said...

எனக்கு இவரைத் தெரியாது... ஆமாம், என்ன ப்ளாக் தோற்றமே மாறி இருக்கிறது?

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் ,ஆட்ரி எங்க காலத்து குட் ஆர்டிஸ்ட். அதுக்கு மேல நல்ல மனுஷி..எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் இவரும் அடங்குவார். Bலாக் அமைப்பில் மாற்றம் செய்யப் போய் இப்படி வந்தது. இப்படியும் இருக்கட்டும்னு விட்டுவிட்டேன்.அவ்வளவுதான்>}}}}}

திண்டுக்கல் தனபாலன் said...

ஆட்ரி ஹெப்பர்ன் அவர்களின் தகவலுக்கு நன்றி அம்மா...

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். உங்கள் இடுகை எதையும் நான் பார்க்கவில்லையே. எனக்கு அப்டேட் ஆகவில்லை மா.

Geetha Sambasivam said...

படம் எல்லாம் ஃப்ரேமுக்கு வெளியே வந்திருக்கே வல்லி. ஆட்ரி ஹெப்பர்ன் பெயர் மட்டும் தெரியும். மத்தபடி இவங்க நடிச்சபடம்னு எதுவும் தெரியாது. பகிர்வுக்கு நன்றி வல்லி.

rajalakshmi paramasivam said...

ஆட்ரி ஹெப்பர்ன் பற்றிய தகவல்களுக்கு நன்றி மேடம். Roman Holiday பார்த்ததில்லை youtubeபார்க்கவேண்டும்

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா ,,நல்ல பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் கருத்துகளோட அமையும் படங்களில் நடித்தார் .....ப்ளாக் டெம்ப்ளேட் மாற்றினால் எழுதுவதையும் மாத்தலாம்னு என்னவோ செய்யப் போய் இப்படி வந்திருக்கு. திருப்பி சரி செய்யறேன்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜலக்ஷ்மி ,இந்த ஆங்கிலப் படங்கள் பார்ப்பதெல்லாம் சென்னையில் சின்னவயதில் ஆரம்பித்தது. அபோழுது சஃபையர் என்று ஒரு பிரம்மாண்ட திரை அரங்கு. அதில் மூன்று தியேட்டர்கள். எமெரால்ட், ப்ளூ டயமண்ட் என்று பெயர். எதில் ப்ளூடயமண்டில் படம் நிறுத்தாமல் போய்க் கொண்டே இருக்கும். எல்லா ஷோவும் பார்க்கலாம். அப்படிப் பார்த்தது இந்த ரோமன் ஹாலிடே.டிவிடி கிடைத்தால் பாருங்கள். லவ்லி பிக்சர்.

கோமதி அரசு said...

விடாமுயற்சி,அமைதி,அன்பு அத்தனையும் கொண்ட பெண்மணி. //

சிறந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

படம் கிடைக்கிறதா பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

Ranjani Narayanan said...

எனது ப்ளாகிலும் இவரைப்பற்றித்தான் நேற்று எழுதியிருந்தேன்.

http://wp.me/p244Wx-GK

இவர் நடித்த My fair Lady பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதுவே தமிழில் சோ இயக்கத்தில் சுகுமாரியின் நடிப்பில் 'மனம் ஒரு குரங்கு' என்ற தலைப்பில் நாடகமாக வந்து பின் திரைப்படமாகவும் வந்தது.

அருமையான மனுஷியாகவும் அருமையான நடிகையாகவும் இருந்திருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி. கான்சர் வந்தும் முகத்தில் புன்னகை மறையவில்லை. வருகைக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. இன்று கூட வெயிட் அண்டில் டார்க் படம் இங்கே திரையிட்டார்கள். எல்லோரையும் கவர்ந்த அன்பரசி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரஞ்சனி. உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன். மை ஃபேர் லேடி டிவிடி துபாயில் வாங்கினேன். இங்கிருக்கும் நூலகத்தில் மற்றதெல்லாம் கிடைக்கும். நல்ல மனுஷி. ஸ்விட்சர்லாண்டில் இவர் படம் போடாத கடையே இருக்காது. கச்சிதமான உடல் வாகு என்பதால் அநேக துணிக்கடைகளில் இவர்து கையெழுத்திட்ட படங்கள் பலவித உடைகளில் அலங்காரமாக வைக்கப் பட்டிருக்கும். நன்றி அம்மா.

சென்னை பித்தன் said...

ரோமன் ஹாலிடே ஒரு காவியம்!
ஆட்ரியை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

ஒரு சில படங்கள் பார்த்த நினைவு..... உங்கள் பதிவு மூலம் இவரது பிறந்த நாள் எனத் தெரிந்து கொண்டேன்.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு திரு சென்னைப்பித்தன். ரோமன் ஹாலிடே பார்த்து சந்தோஷப்பட்டதும் உண்டு. அவர்கள் பிரிகிறார்களே என்று வருத்தப் பட்டதும் உண்டு.இருவரின் நடிப்பும் அப்படியே மனதை அள்ளும்.உங்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்பது மனதுக்கு இனிமையாக இருக்கிறது. மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.இப்படிச் சில தாரகைகள் நல்லது செய்வதற்கே வந்து போகிறார்கள். முடிந்தால் Charade,Roman Holiday,wait until darkலாம் பாருங்கள். நன்றி மா.