Blog Archive

Saturday, April 12, 2014

ஏரிக்கரையின் மேலே வசந்தம் வரக் காத்திருந்தேன்..

மிதமான அலைகள் மழைக்காகக் காத்திருக்கின்றன.

எதிர்  சாளரம் வழியே வரும்  ஆதவன் கிரணங்கள் பாவையை ஆடவைக்கின்றன.
நீலவானமும் வெயிலும்    எனக்கு ஆதாரம்
மஞ்சள் வெயிலைத் தன்னுள் வாங்கிய மரம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பனி    உருகி     தண்ணீர் ஆனதே  வெயில் இருந்தும் குளிர் விடவில்லை

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் அம்மா...

ஸ்ரீராம். said...

எல்லாப் படங்களுமே அருமை.

Geetha Sambasivam said...

நல்ல கலைக்கண் உங்களுக்கு. தொடர வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

அழகு!

ராமலக்ஷ்மி said...

எழில் கொஞ்சும் இடங்கள். அற்புதமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள்.

துளசி கோபால் said...

அழகு! அருமை!

குளிர் விட்டுப்போயிருக்கு போல!

ஐ மீன்............. :-)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.நன்றி ஸ்ரீராம்

வல்லிசிம்ஹன் said...

கண்ணுக்குக் குளுமை. மனசுக்கு ஆறுதல். காமிராவும் ஒத்துழைக்கிறது கீதா. படங்கள் நன்றாக வரக் காரணங்கள் இவையே.

வல்லிசிம்ஹன் said...

நன்றி முனைவர் குணசீலன.

வல்லிசிம்ஹன் said...

சிலசமயம் காமிராவை எடுத்துப் போக மறக்கிறேன் ராமலக்ஷ்மி. அப்போது நல்ல பல காட்சிகளை விட்டுவிடுகிறேன். இனிக் கவனம் வேண்டும். பிடித்துவிடலாம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசிமா. குளிர்க்காற்று விடவில்லை. வெய்யிலும் அடிக்கிறது.கடவுள் பாதி மிருகம் பாதி.

அப்பாதுரை said...

அழ்கான படங்கள்.
(மதுராந்தகம் ஏரினு சொன்னா வருசப்பிறப்புக்கு தமிழ் மக்கள் சந்தோசமாவது பட்டுக்குவாங்க..:-)

இராஜராஜேஸ்வரி said...

இனிய சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. ஏரி மட்டுமா.இங்கே ஒவ்வொரு காட்சியும் பார்க்கும்போது நம்ம்மூரில் இந்த வளம் எப்போது வரும் என்று தோன்றுகிறது. சிலசமயம் நம்மூரில் இயற்கைவளம் கூடினால் போதும் மற்றவை தானேஎ வரும் என்றும் நினைக்கிறேன். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் மா.

Geetha Sambasivam said...

//இங்கே ஒவ்வொரு காட்சியும் பார்க்கும்போது நம்ம்மூரில் இந்த வளம் எப்போது வரும் என்று தோன்றுகிறது.//

என்ன வளம் இல்லை இந்த நாட்டிலே!
ஏன்கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டிலே!

:)))))
தலைமைக்குக் கூட அந்நிய நாட்டினர் உதவி தானே தேவைப்படுகிறது. மக்கள் மனமாற்றம் தான் வேண்டும். :)))))

வல்லிசிம்ஹன் said...

இப்போது எந்த வளம் இருக்கிறது என்ற சந்தேகம்தான். முதலைகள் கொள்ளையடித்த மணலும் , கட்டிடங்கள் கொள்ளையடித்த நிலமும் தானே மிச்சம் கீதா. இருந்த வளத்தைச் சூறையாடி கையேந்தும் நிலைக்குத் தான் போய்க்கொண்டு இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாகப் புறக்கணிக்கப் பட்ட நிலம்தான் என்ன செய்யும்.

வெங்கட் நாகராஜ் said...

மிக அருமையான காட்சிகள்..... உங்கள் மூலம் நாங்களும் பார்த்து ரசித்தோம்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

வலைச்சர தள இணைப்பு : சண்டே என்றால் ரெண்டு!ஹீ

Unknown said...


படங்கள் அருமை! சகோதரி! ஆனால்
எங்கு எடுக்கப் பட்டன,என அறியவில்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஐயா. இந்த ஏரிகள் மழைக்காலத் தண்ணீரை சேகரிக்கும் விதமாக ஒவ்வொரு காலனியின் முடிவிலும் இருக்கும். சுற்றிவரும் இடமெல்லாம் மரங்கள். நடைபாதை.உட்கார பென்ச்கள்.என் பெண் இருக்கும் இடம் சிகாகோ நகரின் ஒரு பகுதி. நன்றி ஐயா.