Blog Archive

Thursday, April 03, 2014

தலைதீபாவளியும் மகன் பிறப்பும் 1966 சில சில் நினைவுகள் 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்                                                                         திருமண்மான  முதல் ஐந்து மாதங்கள்  புதுக் கோட்டையில்   அழகாகச் சென்றன. ஏப்ரிலில் வந்த பிறந்த நாளுக்குத் திருச்சியிலிருந்து  நண்பரிடம் சொல்லி   ஒரு மலர்க்கொத்தும்  அளவான  சாக்கலேட் கேக்கும் வந்தன.  புதுக்கோட்டைக் கடைகளில் வேட்டையாடி   வெகு அழகான பின்க் நிற பனாரஸ் புடவை வாங்கினார்.       அவர் சிநேகிதனும் வர  இரவு பூண்டுரசம் ,உ.கிழங்கு ரோஸ்ட், கொஞ்சம் பாயாசம் என்று விருந்து நிறைவேறியது.           எனக்கோ இதெல்லாம் மிகப் புதிது. அப்பாவீட்டில் கோவிலும் ,புத்தாடையும்   வழக்கம். தம்பியையும் வரச் சொல்லி இருக்கலாமோ என்று நினைத்தேன்.   வந்தே விட்டான் அடுத்த நாள்                                                                      ஏம்மா  நான் நாகப்பட்டணம் போகணும் . இரண்டு நாட்கள் ஆகும் ரங்கனை வரவழைத்துக் கொள்ளலாமா. நீ இந்த நிலமையில் தனியே இருக்க வேண்டாம் என்று  அப்பாவுக்கு தொலைபேசியில் விவரம் தெரிவித்தார்.   தம்பிக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள்  பஸ்ஸில் அப்பா ஏற்றிவிட நாங்கள் இருவரும் போய்ப் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் அவனை  அழைத்துக் கொண்டோம்.ஏய் உனக்காக அம்மா பர்ஃபி,முறுக்கு எல்லாம் கொடுத்திருக்கிறார்.நீ என்ன ஸ்பெஷல்.  எனக்கும் தனியாக வாங்கிவந்தேன் என்னும்  13 வயசுப் பையனைப் பார்த்துச் சிரிப்புதான்  வந்தது.  நாம் எல்லோரும் சாப்பிடத்தான் அம்மா அனுப்பி இருக்காங்கடா  என்று  சொன்னேன்,.   அத்திம்பேர் ரியலி க்ரேட். நான் வொர்க்ஷாப் போய் பார்க்கப் போகிறேன். நானும் இங்கயே இருந்துடட்டுமா. அங்க போரடிக்கிறது  அக்கா  என்றான்.  அடுத்த நாள் சிங்கம் நாகை வேட்டைக்கு க் கிளம்பியது. நாங்கள் இருவரும் இஷடத்துக்குத் தூங்கி சாப்பிட்டு எல்லாம் செய்தோம். அவன் அங்கிருந்த புத்தகங்களைப்  படிக்க ஆரம்பித்தான். அவன் வயதுக்கு மீறிய புத்தகங்களைத் தனியே எடுத்துவைத்தேன்.    கீழ்வீட்டு   லக்சமியின்  வளைகாப்புக்குப் போனோம். அப்போதுதான்   லக்ஷ்மி என்னிடம் சொன்னாள். தம்பி ஊருக்குக் கிளம்பும்போது ஒரு பரிசு வாங்கிக் கொடு. மச்சினன் மரியாதை என்றாள்.     சரி இவர் வந்ததும் செய்யலாம் என்று சனிக்கிழமைக்குக் காத்திருந்தேன்.   வரும்போதே பரிசுகள். வாசனைத்திரவியம், ஒரு சிங்கப்பூர் புடவை, உதட்டுச் சாயம்  இன்னபிற.  அதோடு    தம்பிக்கு டெரிலின்   ஷர்ட்.அவனுக்குப் பிடித்த நீலக்கலரில். அவன் நிலைகொள்ளாமல் தவித்தான்.அவ்வளவு சந்தோஷம்.  ஹேய்      புதிய பறவை சிவாஜி மாதிரி  சட்டை இல்ல என்று ஒரே  குதியாட்டம்.அன்று மதியம்  சாப்பாட்டுக்கு வந்தவர்,மதுரையிலிருந்து என் தந்தை தொலைபேசியதாகவும்   காலை வண்டியில் அனுப்பிவிடுமாறும்  சொல்லி இருந்தார்.                                                       தம்பதிகளின் நெருக்கத்துக்குத் தம்பி இடையூறு என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.  அவனும்  தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. நிறைய ஆர்ச்சி  காமிக்ஸ்களும், அழகாகாக மடிக்கப் பட்ட துணிமணிகளும்,புத்தகங்களும் நான் செய்து கொடுத்த மைசூர்ப்பாகுடன்   ஜாலியாகவே  கிளம்பினான். எனக்குத்தான் பேச ஆளில்லாமல்   கஷ்டமாக இருக்கும் என்று தோன்றியது.                  என் முக வாட்டம் புரிந்து   ,  கொண்டு    ,ஆயிரத்தில் ஒருவன் சினிமாவுக்கு   அழைத்துப் போனார்........வேடிக்கைதான்.அவருக்குத் தமிழ்ப்படங்கள்   அவ்வளாகப் பிடிக்காது.  பிடிக்காது.  எனக்கோ உயிர்.

19 comments:

Geetha Sambasivam said...

அருமையான நினைவுகள். ஒவ்வொன்றும் பொக்கிஷம். :))))

Geetha Sambasivam said...

மகன் பிறந்துட்டானோனு நினைச்சேன். ஆனால் பிறக்கலை. மசக்கை நினைவுகள் இல்லையா? :))))

ஸ்ரீராம். said...

நினைவுகளின் நதியில் நீங்கள்... நாங்களும் கரையோரமாகவே தொடர்கிறோம்! :))))

கோமதி அரசு said...

பாடல் பகிர்வு, மற்றும் மலரும் நினைவுகள் மிக அருமை.

ராமலக்ஷ்மி said...

/நீ என்ன ஸ்பெஷல்./ அதானே? நல்ல கேள்வி:). அருமையான நினைவுகள். தொடருங்கள்.

இன்னம்பூரான் said...


அவர் நினைத்ததெல்லாம் என்னமோ ஆயிரத்தில் ஒருத்தி.தம்பி க்கு மட்டுறுத்தப்பட்ட புத்தகங்கள் யாவை ?

இன்னம்பூரான் said...


அவர் நினைத்ததெல்லாம் என்னமோ ஆயிரத்தில் ஒருத்தி.தம்பி க்கு மட்டுறுத்தப்பட்ட புத்தகங்கள் யாவை ?

துளசி கோபால் said...

மனசு முழுசும் இனிய நினைவுகள் குமிஞ்சு கிடக்குப்பா!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள் அம்மா...

காணொளி பாடல் - மிகவும் பிடித்த பாடல்...

sury siva said...

//இரவு பூண்டுரசம் ,உ.கிழங்கு ரோஸ்ட், கொஞ்சம் பாயாசம் என்று விருந்து நிறைவேறியது. //

அந்தக் காலத்துலே நம்ம ஆத்துலே எல்லாம்
பூண்டு, வெங்காயம் எல்லா சமாசாரம்
எல்லாம் கிடையாதே.

ஓஹோ..
சிங்கத்துக்கு ஸ்பெசல் ட்ரீட்டா ?
உருலைக்கிழங்கு பொடிமாஸா !!
படு ஜோர்.

சுப்பு தாத்தா.

ஸாதிகா said...

வல்லிம்மா எப்படி இருக்கீங்க?சென்னை வந்தால் தகவல் கொடுங்க.உங்கள் பழைய ஞாபகங்களை எல்லாம் பதிவாக்கி மனதுக்கு விருந்தாக்கி கொண்டுள்ளீர்கள்.படிக்க படிக்க மகிழ்ச்சியாக உள்ளது .தொடர்ந்து எழுதுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அப்பாவுக்குப் பெண் வீட்டில் மகன் அளவுக்கு மேல தங்கக் கூடாது என்பதுதான்.>}}}} தம்பிக்கு மட்டுறுத்த்தப்பட்ட புத்தகங்கள் சாமர்செட் மாம், டானி பாய்ட் என்கிற டிடெக்டிவ் சீரிஸ்,மிக்கிஸ்பில்லேன் வரும் துப்பறியும் நாவல்கள். ஹெரால்ட் ராபின்ஸ்.......இ சார்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. எனக்கு மட்டும் நல்ல பொக்கிஷம் . எழுத ஆரம்பித்ததும் எல்லோரையும் அறுக்குமோ என்ற பயமும் வந்துவிட்டது>( மசக்கை எல்லாம் ஒரு வாரம் தான்.>}}}}}}

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நதியில் நீந்துவதுதான் சிலசமயம் கஷ்டமாக இருக்கிறது. நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதி. இது ஒரு டயரிப் பதிவு என்பதை நினைவில் வைத்துக் கொள்கிறேன் இன்னும் பத்துவருடங்கள் போனபிறகு அப்புறமும் நான் இருந்தால் சுவையாக இருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

தம்பிக்கு நான் நல்ல தோழி ராமலக்ஷ்மி.ரொம்ப அருமையானவன்.ஆண்டாள் ஆண்டாள் என்று சுற்றி வருவான். அவன் பள்ளிக்கூடப் பாடங்கள் சந்தேகத்துக்கும் சிலசமயம் நாலுவயது மூத்த புத்திசாலி அக்காவிடம் உதவி கேட்டுப்பான்.>}}}

வெங்கட் நாகராஜ் said...

மனதிற்கினிய நினைவுகள்.....

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸாதிகா. கட்டாயம் சொல்கிறேன்.வனவாசம் முடியட்டும். @சுப்பு சார் எங்களுக்குப் பூண்டு மிகவும் பிடித்த விஷயம். அன்பு வெங்கட் நன்றி. துல்சிமா நிரம்பி இருப்பதால் தான் கொஞ்சம் நிம்மதி.

மாதேவி said...

இனியநினைவுகள்.மகிழ்ச்சியைதருகின்றன.