About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, March 10, 2014

உறவில்லாத உறவுகள்

என்ன  மயிலாரே சௌக்கியமா
இன்னும் கொஞ்சம் போடக் கூடாதா நாங்கள் பெரிய குடும்பம்
ரொட்டித் துண்டுகளுக்கு வந்த அணில். நீண்ட குளிர்காலத்தால் அவைகளின் உணவுகளுக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டதாம்.
எட்டிப் பார்க்கும் சூரியன்                                                                                           கதவுகளைத் திறந்துகொண்டு வெளியே போக முடியவில்லை. இல்லாவிட்டல் இன்னும் அழகான படங்கள் கிடைத்திருக்கும்.  வந்த அன்று இருந்த குளிருக்கு  இந்த வாரம் எவ்வளவோ முன்னேற்றம். கூடவே இருந்த மகன்களும் அம்மா ஓகே என்றதும் அவரவர் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள்.                                  சிறுவர்கள்      பாடுதான் சிரமம். நண்பர்கள் வீட்டுக்குப் போகத் தந்தை தாயின் வண்டித் துணை தேவைப் படுகிறது. சில குழந்தைகள் வீட்டில் சகோதர சகோதரியர்கள் இருந்துவிட்டால் பிரச்சினை. இல்லை                                               இப்போதைக்குச் சின்னவனுக்குப் பாட்டி துணை போதும்.   நீ  சோஃபாவில உட்கார்ந்துக்கோ. நான் விளையாடும்போது பார்த்துண்டு இரு உனக்கும் புரியும்<}}  தாத்தான்னா  கீழ உட்கார முடியும். உனக்கு முடியாது. மானேஜ் பண்ணிக்கலாம்    பாட்டி}}     பெரிய பேரனின் உலகம் மாறிவிட்டது.  அப்பப்போ  வந்து ஒரு    ஆத்மார்த்தமான அணைப்பு.  என் அறையில் துணைக்குப் படுத்துக் கொள்கிறான். ஏகப்பட்ட  படிப்பு,  சிநேகிதர்களுடன்  விசாரிப்பு. பாட்டு,அம்மா அப்பாவோடு  வாதங்கள்.  இவர்கள்   ஏன் என்றால் அவன் ஒய் நாட் என்கிறான். >(          நான் கண்டிப்பாகத் தலையிடுவதில்லை.}}}}                                       தினம் ஒரு தோழியாகப் பெண்ணின் நண்பிகள் வந்து  என்னைப் பார்த்து  அளவளாவிட்டுப் போகிறார்கள்.....   ஹவ் கான் மாமா   பாஸ் ஃஆப்   லைக் தட்.  ஹி வாஸ் ஸோ ஸ்ட்ராங்க்...............................இப்படிப் போகும்  .ஒரு டீ சில  நொறுக்குத் தீனிகள். அவரவர் வாழ்க்கையின் அன்றைய நடப்பு. ..   மாறுதல் நல்லதுதான்.                                                                      
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மோன மயிலும் யோகத் தவளையும்

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லா மறுத்தாலும் இனிமையாக மாறட்டும் அம்மா...

படங்கள் அழகு...

Geetha Sambasivam said...

அருமையான படங்கள். அன்பான பேரன்களோடு உங்கள் நேரம் மகிழ்ச்சியாகக் கழியட்டும். குளிர் குறையலையா இன்னமும். அங்கெல்லாம் சம்மர் நேரம் மாத்திட்டாங்க போலிருக்கே!

Geetha Sambasivam said...

தொடர

ஸ்ரீராம். said...

அழகிய படங்கள்.

//பெரிய பேரனின் உலகம் மாறிவிட்டது. //

முன்பு ஈ மெயிலில் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த பேரனா?

உடல்நலம் கவனித்துக் கொள்ளுங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

குளிர் இன்று பரவாயில்லை. பனிமலைகள் உருக ஆரம்பித்திருக்கின்றன. அதனால் நடக்கையில் கவனம் தேவை. ஏப்ரில் வரை குளிர் இருக்கச் சாத்தியம்.கீதா.பெண்ணுடன் வெளியே போகும்போது ஸ்பை மாதிரி வேஷம் போட்டுக் கொண்டுதான் போக வேண்டி இருக்கிறது.கடைக்குள் போய் விட்டால் தெரிவதில்லை. இரண்டு பேரன்களும் தாத்தா இல்லாத பாட்டியைப் பார்த்து வருத்தப் படுகிறார்கள். நான் அவர்களைச் சமாதானப் படுத்துவதில் என் சோகம் மறக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.ஆமாம் சின்னவன் நிறையக் கேட்பான்,. இப்போது என்னை அவன் விளையாட்டுகளில் இணைக்கப் பார்க்கிறான். அவன் தோழர்களிடம் ஐ டூ நாட் ஹேவ் டைம் நௌ. நாம் அடுத்த வாரம் விளையாடலாம்னு சொல்லி இருக்கிறான்.

துளசி கோபால் said...

குழந்தைகளுக்கு எங்கள் ஆசிகள்.

நல்லா இருக்கணும்.

எங்க பக்கம் அணில்கள் இல்லை:(

ராமலக்ஷ்மி said...

படங்கள் எல்லாம் அருமை. மாறுதல் நன்றே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் பா துளசி. அணில்கள் குண்டா பெரிசா இருக்கு. காக்கைச் சாதம் வைக்கிறதுக்குப் பதிலா அணிலுக்கு ரொட்டித் துண்டுகள்..... எங்க ஊர்ல்க கூட கிவி இல்லை>(

வல்லிசிம்ஹன் said...

நன்ன்றி ராமலக்ஷ்மி நிறைய பதிவுகளைப் படிக்காமல் விட்டு விடுகிறேன். மீண்டும் ஆரம்பிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.தோள்வலி கைகளைக் கட்டிபோடுகிறது. நிறைய படிக்க முடியவில்லை.உங்கள் பதிவுக்கு வந்தே நாளாகிறது.

வெங்கட் நாகராஜ் said...

அழகிய படங்கள்.... அதிலும் அந்த கடைசி படம்......

கோமதி அரசு said...

குளிர்காரணமாய் தோள்பட்டை வலி இருக்கும் வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள் அக்கா.
படங்கள் எல்லாம் அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் மிக நன்றி. பெண்ணுக்கு அவள் அப்பா மாதிரியே ரசனை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,குளிரினால்தான் என்று தெரிகிறது. இங்கு தானியங்களினால் ஆன பை ஒன்றை மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு செய்து கழுத்தில் வைத்துக் கொள்கிறேன். அருமையாக என்னை நினைப்பதற்கு மிக்வும் நன்றி அம்மா.

மாதேவி said...

அழகிய படங்கள். பேரன்களுடன் மகிழ்ந்திருங்கள்.