About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, March 30, 2014

சிங்கம் பார்ட் 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அதிகமாக        வளர்ந்துவிட்ட போகென்வில்லா.                                                                                              இந்த சம்பவம்  1971இல்    கோவையில்  இருந்த போது நடந்தது..கோவையில்.          சின்னவனுக்கு   ஒரு வயதிருக்கும் பெரியவர்கள் இருவரும் பள்ளி செல்ல  ஆரம்பித்துவிட்டார்கள்.  சிங்கத்துக்கு    முதல் மனைவி    வேலை. பிறகுதான் நாங்கள்......|{~  காலையில் எட்டுமணிக்கு ஜீப் கிளம்பிவிட்டால்    திரும்பி வரும் நேரம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்/             ஒரு நாள் இரவு வர நேரமாகிவிட்டது.   வரும்போதே நாளிக்குச் சீக்கிரம் கிளம்பணும்.    ஈரோடு  பக்கத்தில்  லாரி  கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாம். வெளில எடுக்கணும். லாரி ஓனர் ரொம்ப வருத்தப் படறார். சரக்கெல்லாம் மூழ்கிடும் போல இருக்கு. நானும் இன்னும் இரண்டு பேரும் போகப் போறோம் என்றதும் எனக்குப் பகீர் என்றது. கிணற்றுக்குள் விழுந்தால் கிரேன் மாதிரி எதாயாவது வச்சுத் தூக்கவேண்டியதுதானே       நீங்க ஏன் போகணும்   என்றெல்லாம் வாதம் செய்தேன்.பாவம்மா  அவன். ஒரே ஒரு லாரிதான் வச்சிருக்கான் .கிரேன் வரவழைக்க எல்லாம் அவனிடம் காசு கிடையாது. என்னால் முடியும் எப்படியாவது வண்டியை எடுத்துவிட்டுத்தான் வருவேன்  என்று தூங்கப் போய்விட்டார். எனக்குப் போனது தூக்கம். அடுத்த நாள் காலையில் உதவியாளர்கள் துணையோடு கிளம்பியாச்சு.  சாயந்திரம் ஆச்சு. அடுத்த நாள் காலை வந்தது. அன்று இரவும் வரவில்லை.  தொலைபேசி வசதியும் அப்போ கிடையாது.                          எதிர்வீட்டுப் பெரியவரும் அவர் மனைவியும் எங்களிடம் மிக அன்பாகப்  பழகுவார்கள். அவர்களிடம் சொல்லி     வொர்க்ஷாப்புக்குப் பேசலாமா என்று கேட்டேன்.    அப்போது    கம்பெனியில் இருந்த ஷண்முகம் என்னும்  ஆஃபீஸ் பியூன் தான் வீட்டுக்கு வருவதகச் சொல்லி வந்தும் விட்டான்.    சின்னப் பையன். அம்மா  உங்களுக்குக்   காய்கறி வெண்ணெய் காப்பிப் பொடி ஏதாவது வேணுமா     நான் வாங்கித்தரட்டுமா. அய்யா  இன்னும் வரலைம்மா  என்றான்.   அன்றும் கழிந்தது. அடுத்த நாள் கவலையில்   என்      மனசே   உருகிக் கொண்டிருந்த நேரம் வந்தாரப்பா மனுஷன்.            ஷ்.....நோ டாக்  குளிக்கணும் தூங்கணும் என்றவரப் பார்த்து  ஆத்திரமும் அழுகையுமாக ஒரு  ஃபோன் பேசக் கூடாதா.  எங்க எப்படி இருக்கேள்னு ஒண்ணும் தெரியலை. என்ன  ஆச்சு என்றாபடி ஆளைப் பார்த்தேன்.உடன்பு முகம் வெள்ளைப் பாண்ட் சட்டை எல்லாம் கறுப்பாகி இருந்தது.முழங்கையில் ரத்தக் கட்டு வேற.   விடும்மா நீ போய்  சாப்பாடு எடுத்துவை. சாதமே பார்க்கமுடியலை அந்த               அத்துவானக் காட்டில் என்றபடி  குளிக்கப் போய்விட்டார்.  கூடவந்தவர்களிடம்       கேட்டு டீ போட்டுக் கொடுத்து பிஸ்கட்டும் கொடுத்தேன்.  அம்மா நம்ம அய்யா மாதிரி இனிமே   பர்க்கவே முடியாதுமா. நாற்பதடி ஆழம் அந்தக் கிணறு. தண்ணியில பாதி வெளியில பாதின்னு வண்டி சொருகிக் கிடுச்சும்மா.  அய்யா  தான்    இறங்கி    வண்டிக்கடியில் போய்  ஆக்சிலைக் கழட்டினார்  மா. அப்புறமாப் பெரிய பெரிய  கயிறு வாங்கி  அதை வெளிய கொண்டு வந்தோம். நடுல நடுல பக்கத்தில இருந்த டீக்கடையிம் டீயும் பொறையும் தாம்மா சாப்பாடு.   ஆக்சில் வெளில வந்தததும்.சரக்கெல்லாம் பத்திரமா  எடுத்துட்டாங்க. லாரியை எடுக்கணுமே.   அதற்காKஅ அங்க வேடிக்கை பார்க்கவந்தவர்களிடம் சொல்லி ஒரு ஐம்பது பேரைச் சேத்தாரு. எல்லோரிடமும் தடிம்னான கயிறுகளைக் கொடுத்து, நான் கீழ போயி  எவ்வளவு இடங்களில் முடிச்சுப் போடணுமோ போடுகிறேன். நான்  சொன்னவுடனே    தூக்கிடணும் என்றதும்.  நான் அவர்களை  இடை மறித்தேன். லாரியைத் தூக்கும்போது கீழ இருந்தாரா என்று. பின்ன எப்படிம்மா யாராவது அண்டக் கொடுக்குணுமில்லையா...............ஐய்யோ என்று பரிதவித்தது மனம். எத்தனை பாடுபட்டிருக்கும் அந்தக் கைகள்.  இறைவன் இந்த மாதிரி ஆத்மாக்களை உதவிக்காகவே அனுப்புகிறானோ என்று உள்ளுக்குள் அழுதேன். சரி நீங்க வீட்டுக்குப் போங்க. உங்கள் வீட்டிலியும்    காத்திட்டு இருப்பாங்க இல்லையா என்று அனுப்பிவிட்டு வந்து பார்த்தால்  மனுஷனைக் காணொம் அம்மா  அப்பா  தாச்சு எகிறது சின்ன வாண்டு.  வெகு நேரம் கைகால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தேன்.  அடுத்த நாள் தான் எழுந்தார்.                  பழைய உற்சாகம்,  அம்மா உனக்குத் தெரியுமா. அந்தக் காட்டில ஒரு விவசாயி எனக்குச்  சாதமும் குழம்புமாக  ஒரு இலையில் கொடுத்தான்.  அமிர்தம்.நீயும் அதுபோலக் குழம்பு பண்ணேன்   என்றபடி வண்டியில் ஏறிவிட்டார்,  மன்னாதி மன்னன்.
Post a Comment