Blog Archive

Saturday, February 01, 2014

தை மாதத் திருமணங்கள் 31 ஜனவரி 1966


பழைய வீடு இப்படித்தான்  இருந்தது  முன்னல் ஒரு  அலங்கரப் பந்தல் போட்டால் திருமணம்.}}}
  1. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே  2004 தை மாதம்
    ஜனவரி 31  பந்தக் கால். ஃபெப்ரவரி 4ஆம் தேதி  திருமணம்.   ஆஜிப் பாட்டி  எங்களைப் பாரிஜாதத்திற்கு வரச் சொல்லிவிட்டார்.அம்மாவுடைய அம்மா,கல்யாணத்துக்கு முன்னால் அங்க போகலாமான்னு ஒரு கேள்வி. மாமா அங்கதானே இருக்கப் போறாள்.போய் எல்லோரையும் சந்திக்கட்டுமேனு  ஒரு ஜெனரல் ஆர்டர் போட்டதும். டாக்ஸி வர அம்மா அப்பா,டில்லி  மாமா மாமி   சகிதம் நானும் புறப்பட்டேன். இவரும் வந்திருப்பாரோ என்று   ஒரு நப்பாசை.  ஹாஜிமூசா புடவயும் ஃபுல்ல்வாயில்    ரவிக்கையும். கழுத்தில் முத்துமாலை.கைகளிலும் அதே,.  இப்ப இருக்கும் வாசலிலிருந்து    கொஞ்ச தூரம் நடக்கணும்.  டாக்சியை அப்பா கேட் அருகிலேயே நிறுத்திவிட்டார். பந்தாகூடாது என்று. எனக்கோ புடவை தடுக்குகிறது.அம்மா எனக்கு மேலப் பயப் பட்டுக் கொண்டு  மெதுவாக வந்தார். முதலில் கண்ணில் பட்டவர்  மாமனார்.   சீக்கிரம் வா ரேவதி. எல்லோரும் உன்னைப் பார்க்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.                                                                      சரியென்று வீட்டு முன்  போடப்பட்ட பிரம்மாண்டமான கோலத்துக்கு முன் நின்றூ   கொண்டேன். எல்லாமே அதிசயமாக இருந்தது. நாங்கள் மாவிலைத் தோரணம் கட்டுவோம். இவர்களோ  கொத்து கொத்தாக மாவிலையைக் கயிற்றில் கட்டி  நான்கு தூண்களிலும் கட்டி  வைத்து இருந்தார்கள். பெரிய வாழை மரங்கள்.  சற்றுத் தொலைவில் மாடுகளும் கன்றுகளும்..  நாத்தனார்கள் இருவரும் என் கைகளைப் பற்றி உள்ளே  அழைத்துச் சென்றனர்.   தொடங்கியது  எங்கள் வாழ்க்கை.

28 comments:

Geetha Sambasivam said...

ஆஹா, அருமையான நினைவுகள். மாவிலையை நாங்களும் தோரணமாய்த் தான் கட்டுவோம். எங்க புகுந்த வீட்டிலும் கொத்துக் கொத்தாகத் தான் கட்டுவாங்க. அருமையான நினைவுகள்.

Geetha Sambasivam said...

வீட்டின் பழைய மாதிரி அந்தக் கால பிரிட்டிஷ் குடியிருப்பை மாதிரி இருக்கு. ராஜஸ்தானின் ராணுவக் குடியிருப்பில் நாங்கள் குடித்தனம் நடத்திய வீடு இப்படித் தான் இருந்தது. சுற்றிலும் வராந்தா. நடுவே வாசல்கள். இரண்டு வாசல் இருக்கும். கேட்டிலிருந்து குறைந்தது அரை கிலோ மீட்டராவது நடந்து உள்ளே போகணும். :)))

Geetha Sambasivam said...

அப்போல்லாம் முதல் புடைவை கைராசிக்காரர் னு ஹாஜிமூசாவில் தான் எடுப்பாங்க. என்னோட முதல் பட்டுப்புடவை ஹாஜிமூசா தான். மெஜன்டா கலரில் ஆரஞ்சு பார்டர், ஆரஞ்சுத் தலைப்புப்போட்டு அன்ன பக்ஷி ஜரிகைக்கரை! அப்போதைய 104 ரூபாய். இரட்டைப் பேட் னு சொல்வாங்க. இரண்டு பக்கமும் கோர்த்து வாங்கிய பார்டர். :))) நல்ல ஜரிகை அப்போல்லாம். :))))

துளசி கோபால் said...

அந்தப் பழைய வீடு அட்டகாசமா இருக்கேப்பா!!!!

மாவிலைக்கொத்து தோரணம் கோவில்களில்தான் பார்த்தநினைவு.

திண்டுக்கல் தனபாலன் said...

நினைவுகள் மிகவும் அருமை அம்மா...

ராஜி said...

அந்தக் காலத்துக்கே கூட்டி போனது உங்க மலரும் நினைவுகள்

ஸ்ரீராம். said...

அருமையான நினைவுகள்.

கோமதி அரசு said...

அருமையான நினைவலைகள்.
கற்பனையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

Ravichandran M said...

மனதினை நெகிழ வைக்கின்றது சகோதரி!

ராமலக்ஷ்மி said...

நினைவலைகளுடன் நாங்களும் பயணிக்கிறோம். வீடு மிக அருமை.

சுந்தரா said...

மலரும் நினைவுகள் அருமை வல்லிம்மா!

அப்பாதுரை said...

ஹாஜி கடை இப்ப இருக்கா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. இது ஏதொ பழைய வரைவமைப்பு. வீட்டின் ஒரு பக்கம் . நான்கு பாகங்களிலும் வாசல்கள். 71இல் இடிக்கும்போது ஆஜிப் பாட்டி மனசு எப்படி இருந்ததோ. மாவிலைத்தோரணத்திலேயே வித்தியாசம் ஆரம்பித்துவிட்டது.} ஹாஜி மூசாவில் தான் என் பெண்ணுக்கும் புடவை எடுத்தேன்.அந்தப் புடவையுடன் இருக்கும் போட்டோதான் மாப்பிள்ளைக்குப் பிடித்தது. என் புடவை விலை110 ரூபாய். என் பெண் புடவை 1500>*}}1993இல்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி. நல்ல நினைவுகளைச் சுமந்த வீடு. எத்தனை திருமணங்கள் அங்கே நடந்திருக்கிறது. எங்கள் திருமணம் தான் வெளியே நடந்தது. திருமணங்களுக்குக் கச்சேரி கதாகாலட்சேபம் என்று ஆஜி மாப்பிள்ளை வீட்டாரை அசத்திவிடும். கொத்தமங்கலம் சுப்பு கூட வந்து காந்தி கதை சொல்லி இருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

என் புடவை அப்பா வாங்கினது கற்பகம் பச்சை.கெட்டிக்கரை. இரட்டைப்பேட்டெல்லாம் இப்ப இருக்கான்னு கூடத்தெரியவில்லை.பட்டுப் புடவை வாங்குவதையே நிறுத்தி பத்துவருஷங்கள் ஆச்சு. கீதா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். எழுதச் சிரமமாகத்தான் இருக்கு. இருந்தாலும் படிக்கும்போது இதமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜி. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.நல்லதைச் சேமிக்கத்தான் இந்த முயற்சி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி. கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. மறக்க முடியாத நல்லவற்றைப் பதியத்தான் நினைக்கிறேன். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கிருஷ்ணா ரவி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. பாதியில் நிறுத்திவிட்டேன். மீண்டும் தொடர்கிறேன். ஆதரவுக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா சுந்தரா. எவ்வளவு நாட்கள் ஆச்சு பார்த்து. மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. இப்பவும் இருக்கு ஹாஜி மூசா. இரண்டாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தக் கடைக்காரரின் பேர்ன எங்கள் மகனுடன் எம்பிஏ படித்தான். உங்க ஊர்ல நியுயார்க்கில் இருக்கிறான்.

Geetha Sambasivam said...

@அப்பாதுரை, மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் அம்மன் சந்நிதி கோபுரத்துக்கு எதிரே இன்னமும் ஹாஜிமூசா இருக்கிறது. இங்கே தான் ஒரிஜினல்னு நினைக்கிறேன். இரண்டாய்ப் பிரிந்திருக்கிறது என்பது இப்போ ரேவதி சொல்லித் தான் தெரியும். அந்தக்காலங்களில் ஹாஜிமூசாவில் புடைவை எடுத்தால் அவங்க பெரிய பணக்காரங்க. :)))) எங்க வீட்டில் அநேகமாய் எல்லாருக்குமே முதல் புடைவை ஹாஜிமூசா தான். :))))

சாந்தி மாரியப்பன் said...

மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள் வல்லிம்மா..

வீடு அட்டகாசமா இருக்கு :-)

ADHI VENKAT said...

நினைவுகள் மிகவும் அருமை..

என் அத்தை பெண்கள் மூன்று பேருக்கும் திருமணத்திற்கு சிவகங்கையிலிருந்து மதுரைக்கு சென்று ஹாஜிமூசாவில் தான் பட்டுபுடவைகள் வாங்கினார்கள்..

மாதேவி said...

அருமையான நினைவலைகள். நெகிழ வைக்கின்றது.

வெங்கட் நாகராஜ் said...

சுவையான நினைவுகள்.....

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிம்மா..