Blog Archive

Thursday, February 27, 2014

வாழ்க்கைப் பயணத்தில் அடுத்த படி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மூட்டை கட்டியாகிறது                                                           மாதா  கர்ப்பத்தில் பத்து மாத வாசம்       தந்தை தாய்  கவனத்தில் பதினேழு  வருஷம். மிச்சம் 48 வருடங்கள்   சிங்கத்தின் வசம்.     இப்போழுது பெற்ற பிள்ளைகள் வசம்.    நான் என் வசம் இருந்து நாட்களாகின்றன.   மனம் முழுக்க  யோசனைகள் நினைவுகள்  துக்கங்கள் மகிழ்ச்சிகள்  பிரிவுகள் உறவுகள்  எல்லாவற்றையும் நேற்று மருமகளிடம் பகிர்ந்து கொண்டு வந்தேன். தன் வேலைகளுக்கு நடுவே அவளும் காது கொடுத்துக் கேட்டு வந்தாள்.      அப்பா உங்களோடுதாம்மா இருப்பார்.  அந்த நினைவோடு நீங்கள் நிம்மதியாகக் கிளம்புங்கள். நாங்கள் எல்லோரும் உங்களுக்கு இருக்கிறோம்                     என்று     சொன்னவார்த்தைகள்      என்னை ஒருமுகப் படுத்தின.    இனி போகும் பாதையில் நாங்கள் பெற்ற செல்வங்கள் நலமே இருக்க இறைவனை வேண்டுகிறேன். எனக்கும்    என் சுய கௌரவத்துக்கும் பங்கம் இல்லாமல்      பார்த்துக் கொள்ளப்பா என்று ஷிர்டி சாயி, எங்கள் நரசிம்ஹன் எல்லோரிடமும் பிரார்த்தித்த வண்ணம் புறப்படுகிறோம்..   மீண்டும்  சந்திக்கலாம்.

Tuesday, February 25, 2014

அலைகள்நடுவே அமைந்த நகரம்" இன்டர் லாகன்'

Add caption
பயணியர் விடுதி

ஏரிக்கரையில் காற்று வாங்கும்  வீடுகள்.
அவைகளின் அடித்தளத்தில்  படகுகள்.
நினைத்தால் படகில் ஏறிப் பயணம் செய்யலாம்.
படகின் முன்
 பகுதியில் தேசிய  மலர்    எடேல்வைஸ்
சுவிஸ் நாட்டின் செழிப்புச் சின்னம்

ரயில் நிலையத்தின் பயணக் கழிப்பிடம். இரண்டு ரூபாய்க்கு
சுத்தம் சுகாதாரம்.
Add caption
ஏரிக்கரையோரம் மலைகள்
  வானை  முட்டும் சிகரங்களுக்கு மேல்  பஞ்சுப்பொதியாய்
 மேகங்கள்.
ரயிலோடு ஒட்டி வரும்  ஏரிக்கரையும் சாலையும்
படகின்  அழகுச் சித்திரங்கள்
எல்லாத் தமிழ்ப் படங்கள் இந்திப் படங்களிலும் இந்தப் பாலத்தைப் பார்த்திருக்கிறேன்/
வாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே 
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
அவர்களின் தேசியத்தை

  எங்கும் மறப்பதில்லை இந்நாட்டு மக்கள்.
பின்தொடரும் நினைவுகள் போல அலைகள்

அலைகள்
நடுவே  அமைந்த நகரம்" இன்டர் லாகன்'  சுவிட்சர்லாந்த்.

ஊரைவிட்டுக் கிளம்பும் நாட்கள்     நெருங்க நெருங்க  பேத்தியின் கேள்விகள் அதிகரித்தன.
''
நீ ஏன்  அமேரிக்கா போனும். அவனை இங்க வரச்ச் சொல்லு. நாம எல்லாம் சேர்ந்து இருக்கலாம்.
 என் ரூம் அவனுக்குக் கொடுக்கிறேன்'' என்றெல்லாம் வார்த்தைகள்
வர ஆரம்பித்தன.

ஒரு மாறுதலுக்கு  வெளியே அழைத்துப் போகலாம் என்று
இண்டர்லாக்கன்
நகரத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம்.

இந்த ஊர் இரண்டு ஏரிகளுக்கு   நடுவே அமைந்திருக்கிறது.
துன் என்று  ஒரு ஏரி
. மற்றொன்று ப்ரையன்சீ.

வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு   ஏற்ற விதத்தில்
ஏகப்பட்ட  கவர்ச்சிகள் நிறைந்த  இடம்.
பாரா
 க்ளைடிங், பலவித   மலைச்சிகரங்களுக்குப் போக கேபிள் கார்  வசதிகள்.
ஏரிகளுக்கு  இடையே போக்குவரத்துக்கு வசதியான படகுகள்.

நகரம் முழுவதும்  கண்ட இடமெல்லாம் பாக்கேஜ்  டூர் வந்திருக்கும்
 இந்தியர்கள்
கண்களை நிறைக்கும்   வண்ண மலர்கள்.
நீலவானம்.
பச்சை மலைகள்.
பார்த்துவிட்டு
மனம்

நிறைய
நினைவுகளை அள்ளி நிறைத்துக் கொண்டு
வீடு திரும்பினோம்
சிகாகோ கிளம்பும்  நாளும் வந்தது.
மகனும்  பேத்தியும்  சூரிக் விமான நிலையத்தில் எங்களை  வழி அனுப்ப வந்தார்கள். அழுது கண்கள் சிவந்திருந்த பேத்திக்கு  சமாதானம்...இரண்டு மூன்று வாரங்களில்   வந்துவிடுவோம்.

சரியென்று ஒப்புக் கொண்டது குழந்தை.
அவளுக்கு வாரங்கள், மாதங்கள் தெரியாது.
இரண்டு  ஞாயிறு  சென்றால்  வந்துவிடு
வார்கள்  என்ற நம்பிக்கை. :(
!!!!!!!!!!!!!!^^^^^^^^ ¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦

மாற்றம் ஒன்றே  நிஜம் வாழ்வில்!!
பயணம் மீண்டும்.  இந்த வார்த்தைகள் எவ்வள்வு உண்மை என்பதை 2011இல் உணரவில்லை. இப்போதும் கிளம்புகிறேன். துணைக்கு மகன். மீண்டும்  பயணம்.






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, February 22, 2014

கன்றுக்குட்டியை மீட்ட சிங்கம் பார்ட் 3

தோட்டக் கிணறு
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12   க்ரவுண்டில்    பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள்  என்று  இருந்தது.       மாமனார் பண்ணை நடத்திவந்தார்.   தீவன வியாபாரமும் செய்து வந்தார்.  
  சிங்கம் சாருக்குப் படிப்பு முடிந்து விடுமுறை.
 மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த புதிது.                                    புதிதாகச் சேர்ந்த நண்பர்களுடன் சென்னையை  வலம் வந்து  அவ்வப்போது அப்பாவின் செவர்லே காரையும் ஓட்டப் பழகி ,

அதை இடித்துத் திட்டு வாங்கி  எல்லாக் கலகங்களும் நடந்த நேரம்.                        தாத்தா   கண்டிப்புக்குப் பயந்து   தினமும் வீட்டுக்கு வரும் நேரம்   மழைநீர்க் குழாயைப் பிடித்து ஏறித் தன் படுக்கை அறைக்குப் போய்விடுவாரம். இந்த   விஷமங்களுக்கெல்லாம் துணை அவரின் அன்பு சித்தி.     மறுநாள் தாத்தா கேட்டால் நான் எட்டு மணிக்கே வந்துட்டேன் . சித்திதான் கதவைத் திறந்தார் என்பாராம்.                                                                                    
 இப்படி ஒரு காலை   கன்றுக்குட்டி ஒன்று  அம்மாவைப் பிரிந்து வீட்டுக்குள் ஓடிவந்து விட்டது. அது வழி தெரியாமல் அங்குமிங்கும்     துள்ளிக்குதித்து எல்லோரையும் மிரளவைத்து தானு மிரண்டு புழக்கடையை நோக்கிப் பாய்ந்தது. அதன் அம்மா   லக்ஷ்மி ஒரு பக்கம் கதற ,கன்னுக்குட்டி பாய நடுவி   தோட்டத்துக்கான  10 அடி       விட்டக் கிணறு குறுக்கிட்டது.  இளங்கன்று.....கிணற்றைத்தாண்டப்   பார்த்துக்    கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.  
           உடனே வீட்டில்  உள்ள அனைவரும்  அலற ஆரம்பித்துவிட்டனர். மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் அய்யனார்  தன்னால் முடியாது என்று கைவிரிக்க  கன்றுக்குட்டி  தத்தளிக்க ஆரம்பித்தது. நல்ல ஆழக் கிணறு.
எதேச்சையாக வீட்டில் இருந்த மாடியில் இருந்து இந்த அமர்க்களத்தைக் கேட்டிருக்கிறார்.                                    மிச்சதெல்லாம் நான் சொல்ல வேண்டுமா. ராட்டினக் கயிற்றைத் தன் இடுப்பில் கட்டிகொண்டு சரசர்வென கிணற்றில்  இறங்கிவிட்டார்.    கன்றுக்குட்டி இன்னும் மிரள. கண்ணனின் தாய் யசோதையாக எங்க மாமியார் கைகளைப் பிசைய  கன்றுக்குட்டியைப் பிடித்துவிட்டார். நல்ல கொழு கொழு  கன்று நல்ல ஊட்டமிக்கது. எடையும்   நிறைய.   நீ மேல வாடான்னு அலறல் மாமியாரிடமிருந்து.  இதோம்மா என்று தன் கயிற்றைக் கன்றுக்குட்டியின் மேல் கட்டி மேலே இழுக்கச் சொல்லி விட்டு                                கிணற்றின்    சுவற்றில்  இருக்கும் பள்ளங்களைப் பிடித்துக் கொண்டு மேலே வந்தாராம்.  பாவம் எங்க மாமியார்.. அதிலிருந்து அந்தக் கிணற்றுக்கு வலை எல்லாம் போட்டு மூடினார்களாம்.

Friday, February 21, 2014

குரங்குகுட்டி வந்த கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  • வீடு தழைக்க வேண்டும்                             வளமான வாழ்க்கை வேண்டும்.                                                                                                                                      இப்படியாகத் தானே  இரு வாரங்கள்   சாப்பாட்டுக்குக் கவலையில்லாமல் நண்பர்கள் ஆபீஸ் மேனேஜர்கள் வீடுகள் என்று   நாட்கள் கடந்தன.  புதுக்கோட்டை  கிளை பெரிய மானேஜர்   திரு சடகோபன்  அனைவரையும் எங்கள் வீட்டிற்கு வரச் சொல்லி    மாலைகள் வரவழைத்து ரிசப்ஷன் கொடுத்தார்.                                  அவர் மனைவி எப்போதும் இனிய முகத்தோடு  என்னை அவர் வீட்டில் வந்து இருக்கச் சொல்வார். எனக்குத்தான் பரிய பொக்கிஷமாகப் புத்தகங்கள் கிடைத்தனவே.       ஃபுல்ல் அண்ட் ஃபுல்   க்ரைம் நாவல்கள்,எல்லாம் அமெரிக்க எடிஷன்.  இர்விங் வாலஸ்,     லியான் யூரிஸ்,,,ஆல்டுவஸ்  ஹக்ஸ்லி,சாமர்செட் மாம்  எல்லாம்  நான்கு மாதங்கள் விடாமல் படித்தேன்..                            அப்போதுதான் ஒருநாள் மாலை  சத்தம் போடாமல்  இவர் மேலே ஏறிவரும்     லேசாக விழுந்தது.  என்ன  விஷயம். புதிதாக ஏதாவது    இருக்கணும் என்று மட்டும் தோன்றியது..ஆஹ்ஹ்ன்}}}  அங்கயெ  நில்லு. இதோ பார்   என்று தன் கையில் இருக்கும் ஒரு  கம்பிக் கூண்டைக் காண்பித்தார். இது என்ன புதுவிதமான     ஜந்து. கண்கள் மட்டும் பெரிதாக    இருந்தன.  ரொம்பச் சின்ன......குரங்கு. ஹேய் என்ன இது குரங்கா.       அமாம் ரேவ்.  பாவம் இதோட அம்மா எலெட்ரி ஷாக்ல் அ  போயிடுத்து.   இதுக்கு ஒண்ணும் ஆகலை. அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்ததால் அதிர்ச்சி. சரி நாம் வளர்க்கலாம்னு கொண்டு வந்தேன்       என்றார். கிட்ட வந்து பாரேன் என்றார்.    அதுவோ என்னைப் பார்த்தாலே பல்லைக் காண்பிக்கிறது.               இவர்தான் அம்மா என்று நினைத்துக் கொண்டுவிட்டதோ என்னவோ{(*::::::}    இதுக்குச் சாப்பாடு_  நான். பால் கொடுக்கலாமே.  நான் அது பக்கத்தில போக மாட்டேன்.அதுக்கு என்னைப் பிடிக்கலை.       சரி திருமேனியைப் பால் கொடுக்கச் சொல்கிறேன். இப்போதைக்கு நம் ஹாலில் இருக்கட்டும்.. சரியா ரீடா   என்று அதன் முகத்தைப் பார்த்தார். எனக்கோ அடக்க முடியாமல் கோபம்.   ஹாலில் இது இருந்தால் நான் எங்க உட்காருகிறது.   ஏம்மா  இரக்கத்தோட அது பார்த்துண்டால் நல்ல  செல்லமாக இருக்கும்.     இப்படிப் பயப் படறியே.     இதைத்தேடி   இதோட சித்தப்ப அப்பா எல்லாம் இங்க வந்துவிட மட்டார்களா.            இதோ பாரு இதுக்கு நல்ல ரெட் ரிப்பன் வாங்கி வந்திருக்கிறேன்.அதனால்   இதை  மாடி பால்கனியில்  விளையாட விடுகிறேன். டாக்டர் அதற்கு  ஊசியெல்லாம் போட்டு இருக்கிறார் . அது தூங்கிவிடும். அப்புறம் நாளைக் காலையில் பால் கொடுத்தால் போதும்.  கம் ரீட்டா லெட்ஸ் கோ ஃபார் ஃஅ   வாக் என்று மொட்டை மாடியில் அழைத்துச் சென்றார். அதற்குள் என் சமையல் வேலைகளை             முடித்துக் கொண்டு        கையில்     தயிர்சாதம் பிசைந்துகொண்டு  படுக்கு அறைக்கு வந்துவிட்டேன்.            இவர் வந்தௌ அழகா அதற்குஉ ஒரு சாக்குப் பையை விரித்து  அதைப் படுக்கவைத்துக் கூண்டில் வைத்தார்.           அவர் வருவதற்குள் நான் தூங்கியாச்சு.       இரவில் தீனமாகக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தது. இவர் உடல் உழைப்பில் வந்தத் தூக்கத்தில் ஒன்றையும் கேட்கவில்லை.    நாந்தான்   கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.                                                             பாவம்தான். ஆனால் பயமாக இருக்கே. எப்படியோ பகலும் வந்தது. ஆபீஸ் போகும் அவசரம். அவரைப் பார்த்தது அதற்குத் தனி உற்சாகம். எனக்குப் பொறாமை.{}                                                                   அம்மா இதைச் சமையலறை ஜன்னலில் கட்டி வைக்கிறேன்.     திருமேனி வந்து பொறை,பொரி கொடுப்பான். அது ஒண்ணும் செய்யாது என்று விரைந்துவிட்டார். நாம் சமையலறையில் நுழைந்ததுதான் தாமதம் , அதுவரை  கயிற்றில் ஆடிக்கொண்டிருந்த ரீட்டா  ஒரே ஜம்ப் ஸ்டவ்வில்  சாதம் வைக்க வந்தவள் பதறி வெளியே   வந்துவிட்டேன்.               அது என்னைவிடவில்லை. நல்ல நீளமான கயிறு  சமையலறை வாசலில் அநுமார் மாதிரி உட்கார்ந்து கொண்டது. சிரிபு வந்தாலும் அடுத்து என்ன செய்யும் தெரியாது.  காலைசிக்னஸ் வேற.                       கிழவி வருவதற்காகக் காத்திருந்தேன்    ஒரு பாடு அழணுமே.    அவளும் வந்தாள் அவளைப் பார்த்தும்  ரீட்டா சீறியது. என்ன பாப்பா குரங்குக்குட்டியெல்லாம் வீட்டுக் கொண்டுவரக்கூடாதுமா. நீ இந்த நேரத்தில் பயப்படாதே.         உனக்கு என்ன வேணும்        என்றள். உன் பேரன் திருமேனியைக் கொஞ்சம் இதோட இருக்கச் சொல்லு. நான் என் சமையலை முடிக்கிறேன் என்றேன்.        என்ன  ஐய்யா இப்படி எல்லாம் செய்யறாரு என்று முணுமுணுத்தபடி  பேரனை விளித்தாள்.    அவன்  ரீட்டாவைப் பார்த்ததும்  ஹை  குட்டி,. எங்க கிடச்சுதும்மா. என்ன சாப்பிடும்   ஐய்யா பொறைபிஸ்கட்டு,பாலு,பந்து எல்லாம் வாங்கித் தரச் சொன்னாருன்னு   பத்து ரூப்பாயைக் காண்பித்தான்.        இந்த ரீட்டா ஒரு தாவலில் அவன் தோள்  மேல்   ஏறிக்கொண்டது. ஆம்பளைகளைத்தான்        அது லட்சியம் பண்ணும் போலிருக்கு. நீ போ தாயி  என்றபடி  அவள் தன் வேலைகளைக் கவனித்தாள்.     எனக்கு மட்டும் திருமேனி வேலைக்குப் போகணுமே. மறுபடி ஆட்டம் போட்டல் என்ன செய்ய என்று  யோசனை.  அடுத்தப்பில பருப்பு சாதம் போடுன்னு கூடச் சொல்வார்."      அதேஎ போலத்தான் ஆச்சு. திருமேனி போனதும்   சாப்பிட்டதெம்பில் இன்னும் ஊஞலாட ஆரம்பித்தது. நான் சமையலறைக்கு வந்தால் முகத்துக்கு நேர வந்து ஜன்னலில் உட்காரும். இரண்டு நாட்கள் கழித்து  எனக்கு    தாங்க முடியாமல். \\  ஒண்ணு ரீட்டா  .இல்லாட்ட நான் மதுரைக்குப் போறேன்னதும்][         இவருக்கு மஹா வருத்தம்.  எங்க அப்பா  அஸ்ஸாம்லேருந்து  சிறுத்தைக் குட்டியே கொஙடு வந்தார். பான்பேயில் எங்க பங்களாவில் அதுக்குத் தனி ரூம் தெரியுமா . எங்க அம்மா பயப்படவே இல்லை.     ம்ம்ம் எனக்கும் தெரியும். உங்க சமையல்காரனை அது பிராண்டினதும் தெரியும்.அப்புறம் மாமா அதை   ஸூவில் கொண்டு விட்டதும் தெரியும் என்றேன்.               அதெப்படி எங்க அம்மாகிட்ட ஒரு ஐந்து நாளில் இவ்வளவு விவரனம் வாங்கிக் கொண்டே. சே தீஸ் விமென்  என்று சலித்தபடி  ரீட்டாவின் வெளியுலக அறிமுகத்துக்கு    ஏற்பாடு செய்தார்...   வொர்க்ஷாப் பக்கத்தில் இருக்கிற குரங்குகள் கூட்டதில் அதை விட்டதும்  அது பாய்ந்தோடி அவர்களுடன் சேர்ந்து கொண்டதாம். என்னைத்திரும்பிக் கூடப் பார்க்கலைம்மா.  என்றார்.  நாம் என்ன ஸ்ரீராம் சீதாவா. நம்மோடு அது ஐக்கியம் ஆகிறதுக்கு என்று சிரித்தேன்.      சோகம் மாறுவதற்காக  அப்போது வெளியாகி இருந்த அன்பே வா  படத்தை  ஜெகதா என்ற தியேட்டரில் பார்த்துவிட்டு வந்தோம்.

Tuesday, February 18, 2014

கணவர் நான் <<<<<<<>>>>>>>> ஒரு குட்டிக்குரங்கு.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வீட்டுக்கு வெளியே   தென்னைக் கிளைகள்                                                                                                  புதுக்கோட்டையில் ஒரு மாடிவீட்டில் 25 ரூபாய் வாடகையில் குடும்பம் ஆரம்பித்தது.
  அப்பா அனுப்பிய பெட்டிவந்தது. பெட்டியில் பூட்டு இருக்கு சாவி இல்லை.

   உன்னிட்ட இல்ல என்று இவர் கேட்க, உங்ககிட்டத்தானே  அப்பா  கொடுத்தாரில்ல  என்று நான் சொல்ல  விழித்தோம் இருவரும். இதென்னம்மா பெட்டிதானே  என்றவர்   தன்    டூல்ஸ் பெட்டியிலிருந்து    ஒரு உளியும் சுத்தியும் கொண்டு வந்தார்.    
      எனக்கோ  பயமாக இருந்தாது. }  என்ன  சிம்  செய்யப் போகிறீர்கள்///
 உளியும் சுத்தியும் எதுக்குன்னு நீ நினைக்கிறே என்ற வண்ணம் போட்டார் ஒரு போடு பூட்டு இரண்டாய் உடைந்தது.      
   பூட்டைப் பார்த்துப் பாவம் சொன்னவளைக்     கண்டு சிரிக்கிறார். உனக்குப் பாத்திரங்கள் வேணுமா  வேண்டாமா.     வேணும். அப்போ எடுத்துவைக்கலாம் வா  என்ற படி  சமையலறைக்குள் புகுந்தார். அதுவும் ஓடு வேய்ந்தது  தான்.  

        இரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள். ஒரு குட்டி மேடை. அதன் மேல் ஒரு ஹாட் ப்ளேட்.  வாங்கி வந்த பால்  எல்லாம் இருந்தன.    என்னை ஈர்த்தது தென்னை மரமும்     அதில் விளையாடும் அணில்களும்.       வாம்மா.  ஹேவந்ட்  காட் த ஹோல் டே. என்ற வண்ணம் அழகாக ப்  பாத்திரங்களை   அங்கே      இருந்த  பெரிய அலமாரியில்       அடுக்கிக் கொடுத்தார். ஓகே  பால் காய்ச்சு,. ஆஜி சொன்ன மாதிரி செய்யலாம் என்றபடி ஹீட்டரை   ஆன் செய்தார்.இது சுடும்.   பார்த்து  ஹாண்டில் பண்ணனும் என்றவரிடம்  
   எல்லாம் எனக்கும் தெரியும் எங்க சித்தப்பா கிட்ட இருக்கு.  என்றவளைப் பார்த்துச் சரி நான் போய் குளித்துவிட்டு வருகிறேன்  என்று வெளீயெ போனார்.  ...


...,  சின்னப் பொண்ணு...... என்றபடி  ஒரு வயதான  பாட்டியின்  வருகை ஜன்னல் வழியே தெரிந்தது. பாலை மறந்தேன்.   வெளீயே  வந்து  நீங்க  யாரு   என்று   கேட்க,    கேட்டதற்கு அந்த அம்மா   என்னை  ஏற இறங்க  பார்த்தார்.  நான்  பூவனம்  கீழ் வீட்டுத் தம்பியைப் பார்த்துக் கொள்கிறேன், அப்படியே குடித்தனம் இருக்கிற லச்சுமி அம்மாவுக்கும் பாத்திரம்    தேச்சுக் கொடுத்துத் துணியும் துவைப்பேன் என்றார்.                பாலு பொங்குது போல....பாப்பா  அடுப்பைப் பாரு என்றார்.   அட ஆமாம்  பால் பொங்கித்தான் விட்டது.  அவசரமாக அடுப்பை    அணைத்தேன்.      இருவருக்கும் வாங்கிய பால்      அரைப்படி. அதில் கால் தான் பாக்கி.

அடுப்பில் விழுந்து   பாலின் ஒருவித வாசனை வந்தது. ரொம்ப நாளைக்கு  மறக்கவில்லை. இவர் வந்ததும், கிழவி நீ வந்திட்டியா. இந்தப் பொண்ணுக்கு அவ்வளவா ஒண்ணும் தெரியாது. இந்தா கொஞ்சம் பால் சாப்பிடு என்று தம்ப்ளரில் அவளுக்குப் பால் கொடுத்தார். தம்பி  பொண்ணுக்குக் கொடுங்க. அம்மா ஐய்யாவுக்குக் கொடு என்றதும்   இருவரும் குடித்துவிட்டு அவர் கிளம்பினார்.   சாயந்திரம்தான் வருவேன் என்றதும் கிழவி குறுக்கிட்டாள்.

தம்பி ஜீப்பில தான போற. மதியம் சங்கு,,,அதாவது வொர்க்ஷாப் சைரன் அடிச்சதும் வந்துடு. அது தனியா என்ன பண்ணும்   என்றாள்.  ஓ அதுவும் சரிதான் .            நீ   துணிமணியெல்லாம்  பீரோவில் அடுக்கு.  நான் சாப்பாடு வாங்கிக் கொண்டு வருகிறேன்.   ஆபீஸ்   பையன்   அம்பி வருவான் அவனிடம்    டிஃபன் கேரியரைக் கொடுத்து அனுப்பு. என்ற    வண்ணம் கிளம்பி விட்டார்.                                  கிழவி  அவர் போனபிறகு என்னைப் பற்றிய   விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டாள்....  ஒண்ணுமே    தெரியாமல் இருக்கக் கூடாது  பாப்பா. எப்பவும் புருஷனிடம் கறாரா இருக்கணும் என்றாள்.                        எனக்குச் சிரிப்பு வந்தது. இதென்ன நாடார் கடையா  கறாரா    இருப்பதற்கு  என்றேன். ஹ்ம்ம்   இளங்கன்னு          பயமறியாது. அவரும் வெகுளி. நீயும் அப்படித்தான்போல  என்றபடி,   கீழ வந்து  லச்சுமியைப் பாரு அது முழுவாமல் இருக்கு  அதுகிட்ட  இருந்த சமைக்கக் கத்துக்கோ      என்றபடி    போய்விட்டாள்.      

Saturday, February 15, 2014

வெள்ளி நிலவே வெள்ளை வெள்ளை நிலவே

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்தத தடவை வெளீயே    போய் எடுக்க முடியவில்லை. ஜன்னல் கண்ணாடியின் வவழியே எடுத்த  படங்கள் இவை. அரைமணி நேரம் நிலவோடு விளையாடிச் சிறையெடுத்துப் போக விட்டுவிட்டேன்.

Friday, February 14, 2014

அப்படியே உரிச்சு வச்சிருக்கு:)








இதெல்லாம் இப்பொதைய விளையாட்டுப் பொருட்கள் இங்க. சின்னவனுக்கு விளையாட இவைகளைவிட ரொம்பப் பிடித்தது சமையல் பாத்திரங்களும் தண்ணீரும்தான்.
அரிசி டப்ப இருக்கிற அலமாரி திறந்து வைத்தால் ஆபத்து:0
குட்டிக் கையால அஞ்சாறு கைப்பிடி இறையும் கீழ.
''அச்சச்சோ ,கீய வீனுடுத்தே'' என்று அது மேலயே நடப்பான். நடந்துவிட்டு,''கால் நாஸ்தின்னு'' வேற சொல்லுவான்.
இதெல்லாம் எனக்கு ஞாபகப் படுத்தியது எங்க குழந்தைகளின் மழலைப் பருவம்.
அத்றகு முனால் என் தம்பிகளின் சிறிய வயது மழலைகள்.
இதென்ன ஒரே மாதிரி வருதே என்று யோசிக்கும்போதுதான்.,
அப்படியே அச்சில வார்த்த மாதிரி இருக்கே என்கிற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
எங்க பெரிய பையன் பிறந்த போது, எல்லாரும் அவன் என்னை மாதிரியே இருப்பதாகவும், அப்பா வீட்டைக் கொள்ளவில்லை என்றும் சொல்லிகொண்டிருந்தார்கள்.
இப்ப ஒண்ணும் சொல்ல இல்ல. அப்பாவுக்குப் பக்கத்தில பையனும் அதே போல இன்னொரு சிங்கமாத்தான் இருக்கான்:)
இதில என்ன கவலைப் பட இருக்கு. யாரையாவது கொள்ள வேண்டியதுதானே.
அந்தந்த ஜீன்ஸுக்கு ஏத்த மாதிரி அமைப்பும், எண்ணங்களும் அமையும்.
சில நிறைகுறை இருக்கும். கோபத்துக்கு பெரிய தாத்தா, குணத்துக்கு பெரிய பாட்டி, ஓடறத்துக்கு சித்தப்பா, மொழிக்கு மாமா என்று எங்கயாவது குறித்து வைத்து இருக்கிறதா என்றும் ஆராய்ச்சி செய்யணும்:)
குழந்தை சிரிக்கும் போது எல்லோரும் மனக்கண் முன் வந்து போகிறார்கள். அது கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டால் என் தந்தை ஞாபகம் வருகிறார்.
ஸ்விஸ் பேத்தி முறைக்கும் போது என் பாட்டி நினைவு வருகிறது.
காலை வேற நீட்டி,''பாட்டி !!! காலைப் பிடிச்சு விடு'' என்றால் என் பாட்டி சொல்லுவது போலவே இருக்கிறது:)
''எனக்கு புளூ கலர்ல வாலு வச்சுக் கொடு'' என்றால் என் தம்பி நினைவு வருகிறது!!
ஆகக் கூடி , குழந்தைகள் பிறக்கும் போது அவர்களைக் கொள்ளவில்லை, இவர்கள் ஜாடை இல்லை என்று கவலையே வேண்டாம் ஏதாவது ரூபத்தில் நம் அணுக்கள் இந்தத் தளிர்களிடம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.



புது சிங்கம்

Wednesday, February 12, 2014

மாப்பிள்ளை வந்தாரா.புக்ககம்,புதுக்கோட்டை பயணம்




























இப்படியாகத்தானே ஐப்பசி மாதமும் வந்தது.தீபாவளி ஷாப்பிங் முடிக்க ஹாஜீமூசா கடை.
முதல் தடவையாகப் புடவை அதிலும் பட்டுப்புடவை போணி.
யானைக் கலர்னு அப்போது புதிதாக ஒரு ஏதோ ஒரு படத்தின் பேரோடு
வந்திருந்தது.
110ரூபாய்தான் விலை.அம்மா தீர்மானம் போட்டாச்சு.
அதுதான் பெண்பார்க்கிற அன்று உடுத்திக்கொள்ளவேண்டும்.சரி.
தீபாவளியும் வந்து போனது.
இந்தத் தடவை தம்பிகளோடு பட்டாசுக்குப் போட்டிபோடவில்லை.
சின்னவன் அடுத்த வருஷம் நீ இங்க வருவியான்னு கேட்க அப்போதுதான்
ஓஹோ இங்க இந்த இடத்தில் நம்ம நாட்கள் குறைவுதான்
என்றும் வெளிச்சமாகியது.
சென்னையில் ஒரு திருமணம் .அதில் எல்லோரும் சந்திப்பதாக ஏற்பாடு.
பலிஆடு முகம் எப்படி இருக்கும் என்று என்னைப் பார்த்தால் தெரிந்து இருக்கும்.
கூட்டத்தில் அனைவரும் என்னைப்பார்ப்பதாக உணர்வு.
ஒரு வட்டமாக நாற்காலிகளைப் போட்டு அத்தை வீட்டுக்காரர்களும்
எங்க வீட்டூக்காரர்களும் உட்கார்ந்தோம்.

பார்த்துக்கோடா அப்புறம் சரியாவே பார்க்கலைனு எல்லாம்
சொல்லக்கூடாது ,
புளித்துப்போன வசனம் தான்.அன்னிக்கு அப்படித்தான் தோணவில்லை.
அடக்கம் ஒடுக்கம் எல்லாம் முன்னாடியே மண்டையில் தைத்துத்தான் பாட்டி அனுப்பி இருந்ததால் நான் தலையை நிமிர்த்தவில்லை.

ஒரு கனமான குரல் நிமிர்ந்து உட்கார்ந்து அவனைப் பார்க்கலாம்
என்றது.
பிறகு தெரிந்ததது அது என் மாமனாரின்குரல் என்று.
சரி என்று நிமிர்ந்தால் நாலைந்து பேர்கள் ஒரே ஜாடையில்.
அதில் ஒருவருக்குக் காதோரம் நரைத்திருந்தது.
அட ராமா,அதுக்குள்ள நரைத்துவிட்டதா.

ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ என்று மீண்டும் குனிந்த தலை.
மாமா அப்ப்போது பார்த்து ஒரு ஸ்கைப்ளூ சட்டை பின்னால் போய் நின்று இதுதான் என்பதுபோல் சைகை காட்டினார்.

திருப்பியும் நிமிர்ந்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்தவரைப் பார்த்துவிட்டு

சரி ஓக்கேதான் என்று நினைத்தபடி

அம்மாவைப் பார்த்தேன்.அப்பா அம்மா இருவரும் கைகூப்பாத குறையாக நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.


அவர்களோடு கிளம்பி இரண்டு வண்டிகளில் மைலாப்பூரில் இருந்த பெரிய வீட்டுக்கும் வந்து பாட்டியையும் தாத்தாவையும் வணங்கி
அம்மாவின் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டோம்
ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து போன் வந்துவிட்டது.
எங்களுக்கு சம்மதம்.
அப்பா வந்து என்னைக் கேட்டார்."அம்மா,உனக்குப் பிடித்திருந்தால் சரினு சொல்லு."
இல்லாட்டாப் பரவாயில்லை.
நான் நிறையப் படித்த அறிவாளி ஆச்சே.
பரவாயில்லைப்பா சரினு சொல்லிடலாம்.
அவ்வளவுதான் பலவிதமானப் பொருளாதாரத் தடைகள் வந்தபோதும்
முனைப்போடு அனைவரும் உழைத்துத் தை மாதத்தில்
எங்கள் திருமணமும் முடிந்தது.
படிக்கவில்லை.
அவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். இல்லாவிட்டால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க வைக்கப் படுகிறார்கள்.
கதையும் முடிந்தது கத்திரிக்காயும் காய்த்தது.                                    #######################################################                 9ஆம்  தேதி  ஃபெப்ரவரி...         எக்மோர் ரயில் நிலையம். மாமா  சீனுவும் கோபுவும் ஏற்பாடு செய்த கூபே  ஃபஸ்ட் க்ளாஸ். அவர்கள்  புரசவாக்கத்திலிருந்து வர நாங்கள் மைலாப்பூரிலிருந்து கிளம்ப,   புதிதாக வாங்கின நீல சந்தேரி  பட்டுப் புடவை தசாபுசா என்று சுற்றிக் கொண்டு பரிச்சயம் இல்லாத  கைப்பையுடன்   மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு இவருடன் என் வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்தது.                                                              அம்மா அப்பா ,பெரிய மாமா சின்ன மாமா அவர்கள் குழந்தைகள்   எல்லோர் கண்களிலும்   நீர். என்கண்களில் துளிச்சலனமும் இல்லை.   நம்பிக்கை,பாசம் நேசம் எல்லாம் இருக்கும் போது வாழ்க்கையைப் பற்றி என்ன பயம்._______}  அவர்கள் உணர்வுகளைப் புரிந்து  என் அப்பாவின் கைகளைப் பற்றிச் சிங்கம் சொன்ன வார்த்தைகள் இவை.    மாமா  கவலைப்படவேண்டாம்  நான் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும்   புதுக்கோட்டைக்கு வாருங்கள்.மதுரையிலிருந்து இரண்டு மணி நேரம் தானே.                                                                    என்றபடி வண்டியேறி என்னையும் ஏற்றிவிட்டார்.                                                                       நான் சரியாகப் பேசினேனா  டால்  என்றபடி வந்து உட்கார்ந்தார். அதென்ன    டால் என்று பார்க்கிறீர்கள். அப்போது ஆங்கில பாப் இசைப் பாடல் லிவிங் டால்னு  ஒன்று   க்ளிஃப் ரிச்சர்ட்  பாடினது.   அதிலிருந்து நானும் அவருக்கு இசைந்து நடக்கும் இனிய பொம்மையாகிவிட்டேன்.                                                                                        நினைக்கக் கூட  நேரமில்லாமல் மாதங்கள் ஓடின. பத்து மாதங்களில் நவம்பர் 13 ஆம் தேதி எங்கள் முதல் பையன்   மதுரை டிவிஎஸ் மருத்துவமனையில் பிறந்தான்.    தொடருவேன்.









எல்லோரும் வாழ வேண்டும்

Saturday, February 08, 2014

தை மாதம் 21 1966 மாப்பிள்ளை அழைப்பு ஃபெப்ரவரி 3ஆம்தேதி

ஆஜிப்பாட்டி ஆரத்தி எடுக்கிறார்   இடது  பக்கம் நீண்ட பின்னல் மல்லிகைப் பூவோடு  அம்மா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மலரும்   மங்கையும்  ஒரு ஜாதி                                                                                                                                                                 இரவு  வரும் பகலும் வரும் உலகம்       ஒன்றூதான்                     உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்றுதான்.             சத்திரத்திற்குக் கிளமப   நேரம் வந்துவிட்டது. சித்தப்பா     மதுரை டி வி எஸ் சில் வேலையாய் இருந்தது ம்   வருங்கால மாமியாருக்கு அவர்கள் நெருங்கின பந்தமாக இருந்ததும் பலவகையில் உதவின. இரு பெரிய வண்டிகள் எங்கள் குடும்பத்துக்காக ஒதுக்கப் பட்டன. இப்பொழுது நன்றியுடன் நினைக்கிறேன்.                                                  கல்யாணப்புடைவைகள் வேஷ்டிகள் மாப்பிள்ளையின்   உடைகள்.சம்பந்திகளுக்கான  சீர்வரிசைகள்  எல்லாம் பக்குவமாக அப்பாவின் கையால் விதவிதமான பெட்டிகளில்  அடுக்கப் பட்டன. எனக்காக வாங்கப்பட்ட சூட்கேஸ். அதில் என் பொருட்கள்.              எதிர்காலக் குடித்தனத்துக்காக அப்பாவும் அம்மாவும் வாங்கிய விதவிதமான  புடைவைகள். அப்பாவுக்கு   தினம் கடிதம் போட விலாசம் எழுதிய  இன்லாண்ட் கவர்கள். நல்ல பேனாக்கள் இரண்டு. படிக்க  எனக்குப் பிடித்த புத்தகங்கள்.பெருமாள் ஸ்ரீராமனின் படம்.  என்று   பல விஷயங்கள்     அப்பவுக்குத் தெரிந்த நண்பர் நாகப்பட்டினத்திலிருந்து அனுப்பிய நீல நிறப் பெட்டி. ட்ரங்குப் பெட்டி.அதில்   ரேவதி நரசிம்ஹன் பெயர் பொறிக்கப்பட்டது.           தம்பி கூடக் கேலி செய்தான். ஏய்  உனக்கு இனிஷியல் மாறவே இல்லை. அப்பவும் என் .ரேவதி. இப்பவும் என்.ரேவதி    என்று.  நானும் பெருமையுடன் சிரித்துக் கொண்டேன்மூன்று நாட்கள் பாடுபட்டுச்  செய்த திரட்டிப்பால்,எட்டு சுற்று முறுக்கு.  முறுக்குகளில் எங்கள் பெயரையும் சுற்றி இருந்தார் பெரிய அத்தை.  எவ்வளவு உழைப்பு இந்தக் கல்யாணத்தில் சென்றிருக்கிறது. ஒருவருக்காவது நன்றி சொல்லி இருப்பேனா.                                     இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பவேண்டிய  பட்சணங்கள்.   வெகு நாளைக்கு ஆஜிப்பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.    உங்க சீனிம்மாப் பாட்டி கைவண்ணமே தனி. திருநெல்வேலிப் பக்குவம் என்று சிலாகித்துக் கொண்டிருந்தார்.   இதைத்தவிர எங்கள் புதுக்குடித்தனத்துக்கு         வேண்டிய பாத்திரங்கள்  .எவெர்சில்வர், பித்தளை வெண்கலம்     என்று  தனிப்பெட்டி.         அம்மாவுக்கு அவருடைய அப்பா கொடுத்தது.   இவையெல்லாம் திருமணம் முடிந்த அடுத்த நாள் சதர்ன் ரோட்வேஸ் லாரியில் புதுக்கோட்டைக்கு அனுப்பப் பட்டன.  என் உடைகள் கொண்ட சூட்கேஸ் என்  கையில் கொடுக்கப் பட்டது.     அப்பா அதிகம் பேசவில்லை. பாட்டி புத்தி மதி சொல்வதை நிறுத்தவில்லை. அம்மாவோ நான் எந்த நேரத்தில் என்ன எடக்கு மடக்காகப் பேசிவிடுவேனோ என்று பயம்..அவர்கள் கவலைப் பட்டிருக்கவே வேண்டாம். வாயே திறக்கவில்லை நான் பாரிஜாதம் சென்ற பிறகு.......

.                    
 சத்திரம் வந்து சேர்ந்தோம்.மதிய உணவு காத்திருந்தது. சத்திரம் கட்டியது திரைத்துறையின் பிரபல கதாநாயகி சாவித்திரி.   எனக்கு அவகள் வீட்டையும் ரங்கராவ் வீட்டையும் பார்க்க ஆசை.   மூச்  இது மாமா. உன் ரூமை விட்டு வெளிவரக் கூடாது.   நாங்கள் கூப்பிடும்போது  வந்தால் போதும். பெரியம்மா  புதுக் குஞ்சலம் வாங்கி வந்திருக்கிறார் அதை வைத்துப்  பூப்பின்னல் போட்டுக்கொள்.மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்ததும் நீ மேடைக்கு வரணும்.          தொடரும்

Tuesday, February 04, 2014

ஒரு நல்ல மனிதர் மண வாழ்வு கொடுத்த நாள் தை 22 1966

கடல் வாழ் உயிரினங்கள்  பேத்தி வரைந்தது
Add caption
லில்லிப்பூக்கள்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
உங்களை  அமரர் என்று சொல்ல  மனம் வரவில்லை.                                                                    கணவர் என்று சொல்லுக்கு எப்போதும்   பாதுகாப்பவர் என்ற பொருளையே   தந்திருக்கிறீர்கள்.         அதனால் தான் இந்த வெறுமை.. நல்ல வாழ்வே வாழ்ந்திருக்கிறோம்.பழைய நாள் குறும்புகளும் வாக்குவாதங்களும் மறைந்து புதிய நிதானத்துக்கு வந்து கொண்டிருந்தோம்.  இன்னும் கொஞ்ச காலம் என்னுடன் இருந்திருக்கலாம்.  இருந்தவரைக்குக்கும்   இருந்தவருக்கு நன்றி.   உங்களை மனதில் வைத்து நம் மணநாளைச் சிறப்பிக்கிறேன்.