About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Monday, January 20, 2014

ஆற்றின் கரையோரம் ஒரு கதை

ஒரு  டப்பாவையும் வெளியே  போடாதேம்மா. அதுக்கும் ஒரு பயன் இருக்கும் 
mukkombu dam  Trichy
அப்பா  எத்தனை செடிகளைக் காப்பாற்றி இருக்கிறார்.பார்த்தியா..எனக்கே  இரண்டாம்  சான்ஸ் கொடுத்தவராச்சே !!!!

சிங்கத்தின் வீரப பிரதாபங்கள்னு ஒரு புத்தகம் போடலாம்.

ஆடிப் பெருக்கு சமயம்  1974 என்று நினைக்கிறேன சிங்கத்தின் சினேகிதர்களும் அவர்கள் குடும்பத்தார் என்று நாலைந்து வண்டிகளில் முக்கொம்பு அணைக்கு  வந்து சேர்ந்தோம்.  வெள்ளமான  வெள்ளம்..சுழித்தோடும் தண்ணிரைப் பார்க்கவே பயமாக இருந்தது எனக்கு. இவரோ    என்னப்பா அக்கரைக்கும் இக்கரைக்கும்  ஸ்விம்   போய் விட்டு வரலாமா  என்றதும் யாரும் தயாராகவில்லை.ஒரு பெரிய தரைவிரிப்பைப் போட்டு  சீட்டு விளையாட ஆரம்பிக்கவும்,குழந்தைகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இவரும் நானும் எங்கள் மூன்று குழந்தைகளும் மேல் படியில் உட்கார்ந்தவாறு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம்.  சின்னவன் ஒரு படி கீழே இறங்கினான். சட்டென்று அவனைப் பிடித்துத் தன் மடியில் இருத்திக் கொண்டார்.  குட்டி இதெல்லாம் செய்யக் கூடாது. பத்திரமா இருக்கணும் என்கிற எச்சரிக்கையோடு மீண்டும் தண்ணீரைப் பார்த்தபடி இருந்தபோது தான் அந்த விபரீதம் நடந்தது.                           
  சட்டென்று  எழுந்த  சின்னவன்    ஒன் டூ த்ரீ என்று கூவியபடித் தண்ணீரில் பாய்ந்துவிட்டான்.      இப்பொழுது  நினைக்கவும் உடல் நடுங்குகிறது,. ஒரு செகண்டு கூட இருக்காது. அடுத்த நொடி சிங்கமும் தண்ணீரில். கண்முன்னே  குழந்தை ஆ ற்றின் அடிக்குப் போவது தெரிந்தது. வாழ்விட்டு அலறக் கூட முடியாமல் எழுந்து   நின்றுவிட்டேன்  மற்ற இருவரையும் பிடித்தபடி......அடுத்த நொடியில் சிங்கம் குழந்தையைக் கையில் ஏந்தியபடி வெளியே வந்து   நின்றார். அதற்குள் மற்றவர்கள் ஓடிவந்து    குட்டியின்  நலம்விசாரித்தபடி துண்டுகள் கொடுத்து அவன் சட்டை நிஜார் எல்லாம் கழற்றித் துடைத்துவிட்டு   ஆஸ்வாசப் படுத்தினார்கள். கல்லுளிமங்கன்  மாதிரி நிற்கிறான். ஏண்டா   குதிச்சேன்னு  கேட்டால் தண்ணிக்குள்ள இன்னோரு பாப்பாம்மா என்கிறான்..                               நீ மயக்கம் போட்டுடாதே உன்னைத் தூக்க இன்னோரு தரம் தண்ணீரி  ல்        பாய முடியாது.  சியர் அப் மா. அதான்    சௌக்கியமா இருக்கானே     என்றார் சிரித்தபடி.

 பதினெட்டடி ஆழம்  சுழலிட்டு ஓடும் அந்த ஆற்றையே வெறித்துப் பார்த்த எனக்கு வீட்டுப் போகலாமே  என்று தோன்றியது.  மன்னார்புரம்   வந்து சேருவதற்குள்    சின்னவன் உடல் கொதிக்க ஆரம்பித்தது. மூன்றுவாரங்கள்    காய்ச்சல்.  தொடர்ந்தது.அதிர்ச்சியினால் வந்த  ஜுரம். மடியில்   வைத்தபடி நான் உட்கார்ந்திருந்தேன்.    எப்படியொ கடவுளும் சிங்கம்  ரூபத்தில் தன் பிள்ளையைக்  காப்பாற்றிக் கொடுத்தார்.  நாந்தான் அவருக்குக் கடைசியில் உதவ முடியாமல் போனது. இறைவன் சித்தம்..