Blog Archive

Thursday, January 02, 2014

மார்கழிக்கும் சிங்கத்துக்கும் ஒரு பாடல் -- அன்புடன், ரேவதி.நரசிம்ஹன்


Thursday, January 07, 2010

   


மார்கழி இருபத்துமூன்றாம் நாள்,மாரிமலை ...











இன்று மார்கழி இருபத்துமூன்றாம் நாள் .
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ
விழித்து
வேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ ,பூவைப்பூ வண்ணா !உன்
கோவில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் .
--
ஆண்டாள் முந்தைய பாசுரத்தில் சங்கம் இருக்கும் அரசர்களைப் போல ,நாங்கள் வந்திருக்கிறோம் கண்ணா என்று சொல்கிறாள்.
அவன் அதைக் கேட்டு செங்கண் சிறுச் சிறிதே விழித்துப் பார்த்து எழுந்திருக்கிறான்.
அவன் பார்க்கும் பார்வையின் வீட்சண்யம் கோதைக்கு மலைக்குகையில் உறங்கும் சிங்கத்தை நினைவு படுத்துகிறது .
மாரிக்காலத்தில் உறங்கப் போன சிங்கம்,எழுகிறது.
அதன் சிவந்த ,கோமளமான கருணைக் கண்கள் விழிக்கின்றன.
அதன்
கால்களை நீட்டி முதுகை வளைத்து பிடரியில் உள்ள ரோமங்கள் எல்லாம் நிமிர்ந்து, மெய்சிலிர்க்கும் முழக்கம் அதனுடைய தொண்டையிலிருந்து புறப்படுகிறது.
அது அஹோபில சிங்கமா,ராகவசிம்ஹமா ,இல்லை யாதவசிம்ஹமா.??
எல்லாம் ஒன்றுதானே . ஒரே ஒரு சிங்கம் பலவித வடிவம்.,கொண்டு நடக்க ஆரம்பிக்கிறது. அது என்ன நடை!!
தரையில் அதிராமல் கால் வைக்கும் சிங்கம்.
கொடியவரை அடையாளம் கொண்டு அவர் மேல் பாயும் சிங்கம். பிரஹலாதனைக் காத்த சிங்கம்.
ராமனாகக் காட்டில் உலாவிய சிங்கம். இப்போது யசோதையின் இளஞ்சிங்கம்.
அந்த
சிங்கத்தை அழைக்கிறாள்.எங்களை வந்து உன் செந்தாமரைக் கண்ணால் பார். சிம்மாசனத்துக்கு அதன் பெருமையைக் கொடுத்தவனே எங்கள் முறையீட்டைக் கேள் .
உன் அருளைப் பரிசாகக் கொடு என்று வேண்டுகிறாள்.
ஆடிப்பூரத்துப் பாவையின் திருவருள் வேண்டி அவள் பாதங்களில் சரண் புகுவோம் .
எழுத்துப்பிழை, பொருட்பிழை இருக்கும் பட்சத்தில் மன்னித்தருள வேண்டும். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியிலும் சிங்கம்... சிறப்பு...

கோமதி அரசு said...

ஆடிப்பூரத்துப் பாவையின் திருவருள் வேண்டி அவள் பாதங்களில் சரண் புகுவோம் //
மிக அருமையான் பாடல் விளக்கம் அக்கா.
ஆடிப்பூரத்துப் பாவையின் திருவருள் வேண்டி அவள் பாதங்களில் சரண் புகுவோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Anonymous said...

உங்கள் பதிவைப் பார்த்த்துத் ராமன் எத்தணை ராமனடி பாடல் நினைவிற்கு வருகிறது.

பாடலாத்ரி என்று சிங்க மெருமாளைச் சொல்கிறார்களே. அதன் பொருள் என்ன அம்மா?

ஸ்ரீராம். said...

அருமை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா.

சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வல்லிசிம்ஹன் said...

பாடலாத்ரி என்றால் சிகப்பு மலை என்று பொருள் கடைசிபென்ச் குகைக்குள் எழுந்தருளியிருக்கும்

பெரிய உருவப் பெருமான் ஜாபாலி மகரிஷிக்குத் தரிசனம் கொடுக்க அங்கே எழுந்தருளியிருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.
மீண்டும் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்னிடம் பொறுமையாக அன்பு செலுத்தும் உங்களுக்கெல்லாம் மனம் நிறைந்த நன்றி.

Geetha Sambasivam said...

மீள் பதிவோ??? சிங்கத்தின் பல்வேறு வடிவங்களும் மனதை நிறைத்தன. நன்றி ரேவதி. எளிய விளக்கங்களுடன் கூடிய அருமையான பதிவு.

ராமலக்ஷ்மி said...

அருமையான விளக்கம் வல்லிம்மா. இறையருள் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மீள் பதிவே தான் .
யோசித்து எழுத கை வரவில்லை

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. அவள் ஆண்டாள். இன்னும் எத்தனை பொருள் அந்தப் பாசுரத்தில் இருக்கிறதோ!!

ADHI VENKAT said...

மீள் பதிவாக இருந்தாலும் தாங்கள் மீண்டு வருவதில் மிக்க மகிழ்ச்சிம்மா...

அருமையாக இருந்தது..

தனிமரம் said...

அருமை விளக்கம் ஐயா.