Blog Archive

Saturday, December 28, 2013

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தூ ம் லர்  தூவித் தொழுது

இந்த மார்கழிக்கு  சிங்கம் தான் முதல் தெய்வம்
இனி எப்போதும் .
அந்தக் கடைசி நாள் கூட  அவரின் அக்காவுக்கு ஏதோ வாங்கிக் கொடுத்து விட்டு நிலக்கடலைக் கடைக்குப் போய் இரண்டு பொட்டலமாக வாங்கினார்,.
ஏம்பா இரண்டு என்னோடதை எப்பப் பார்த்தாலும் சாப்பிட்டு விடறே.
அதான் இதை உணக்கி வச்சுக்கோ என்றூ  சிரித்த வண்ணம் ஓ ட்டினார் வண்டியை.
நேற்று பக்கத்தில் இருக்கும் கடையில் பெரிய கடலையை வாங்குமபோ து பையன் சொல்கிறான். அப்பா நீயும் எங்கயாவது இந்தக் கடலை யைச் சாப்பிடுப்பா.. என்னையே நினைக்கிறேனே .இந்தக் குழந்தைகள் பாடும் சிரமம்தான்.

17 comments:

ஸ்ரீராம். said...

அவர்களுக்கும் பெரிய இழப்புதான் வல்லிம்மா... என் அம்மா மறைந்தபோது வாழ்க்கையின் அர்த்தம் மீதே சந்தேகம் வந்தது எனக்கு. அதே போல துணையை இழந்த என் அப்பா இன்றளவும் அம்மாவின் நினைவுகளோடுதான் வாழ்கிறார்.

கோமதி அரசு said...

அன்பு அக்கா, சாரின் நினைவுகளை பகிர ஆரம்பித்து விட்டீர்கள். குழந்தைகள் நீங்கள் எல்லாம் எப்படி மறக்க முடியும்!
என்றும் அன்புடன் நினைவுகள் மலரட்டும்.உங்களோடு என்றும் இருக்கும் அவர் நினைவுகள்.

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்குமே மறக்க முடியாத நினைவுகள் தான்......

உங்களோடு என்றும் இருக்கட்டும் அவரது நினைவுகள்....

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் உள்ள வலி புரிகிறது அம்மா... ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள்...

தி.தமிழ் இளங்கோ said...

-----------
// தூமலர் தூவித் தொழுது
இந்த மார்கழிக்கு சிங்கம் தான் முதல் தெய்வம்
இனி எப்போதும் //

நீங்காத நினைவுகள்! சிங்கம் எப்போதும் உங்களுடன்!

துளசி கோபால் said...

நெஞ்சோடு இருக்கும் நினைவுகளை அசை போட்டால் அதன் சுகமே தனி.

வீட்டைப்போய் பார்த்துவிட்டு வந்தேன்.

செடிகள் மௌனமாக வரவேற்றன. நலம்விசாரிச்சுட்டு வந்தேன், நல்லா இருக்கோமுன்னு உங்களுக்கு சேதி சொல்லச் சொன்னது.

ADHI VENKAT said...

பெரிய இழப்பு தான் வல்லிம்மா... நீங்களும் முடிந்த அளவு தைரியமாக இருந்து அவர்களுக்கும் ஆறுதல் சொல்ல முயற்சி செய்யுங்கள்..

பத்து வருடங்களும், ஐந்து வருடங்களும் ஆனாலும் என் தாய் தந்தையின் இழப்பை என்னால் மறக்க முடியவில்லை... அவ்வப்போது கண்ணீர் திரையிடத் தான் செய்கிறது...நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...

கோமதி அரசு said...

செடிகள் மௌனமாக வரவேற்றன. நலம்விசாரிச்சுட்டு வந்தேன், நல்லா இருக்கோமுன்னு உங்களுக்கு சேதி சொல்லச் சொன்னது.//

வல்லி அக்கா துளசியிடம் நலமாக இருப்பதாய் சேதி சொல்லிவிட்டு விட்ட்தே!
மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தமிழ .இளங்கோ,
டயரி எழுதுவது போல நானும் எழுதுகிறேன். அறுதல் வார்த்தைகளும் அன்புப் பதிவர்கள் வழியாக வந்து சேர்கின்றன. மிக நன்றி மா

--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, உண்மையாகவே அவர்கள் வலி புரிகிறது. மீண்டும் மீ ண்டும் அப்பாவைப் பற்றித்தான் பேச்சு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி, உங்களை நினைக்கும் போதே என் மனம் கலங்கும். அன்பான கணவரையும், நல்ல மாமனார் மாமியாரையும் கொடுத்துக் கடவுள் உங்களைப் பாதுகாக்கிறார்.

என்றென்றும் இந்த ஆனந்தம் நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிமா கைம்மாறு செய்ய முடியாது இந்த அன்புக்கு .இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் உங்கள் தந்தையின் நிலைமை இன்னும் கஷ்டம். பெண்களாவது பேசித்தீர்ப்பார்கள். ஆண்களுக்கு அந்த சௌகரியம் கிடைப்பது கடினம். காலம்தான் மருந்து என்கிறார்கள்
சநதேகமே .

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் அன்புத் தம்பதிகளுக்கு என்றும் சந்தோஷம் நிலைக்க வேண்டும்
குழந்தை ரோஹிணிக்கும்,உங்கள் பெற்றோருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Anonymous said...

வணக்கம்
அம்மா.

மனதில் உள்ள வலிஎழுத்து வடிவில் தெரிகிறது
மனதை சமநிலைப்படுத்துங்கள் அம்மா..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மாதேவி said...

மனம் ஆறுதல்கொள்ளட்டும்.