About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, November 03, 2013

என்றடைவேன் ராமா உன் சரணம்

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption


 அப்பா அறிமுகம் செய்து வைத்தது ராமநாமத்தைத்தான்.

சிரமம் வரும்போது என்று  இல்லாமல் எப்போதும்  நினைவில் வைத்துக் கொள்.
எப்பொழுதும் கைகொடுக்கும் நாமம்.

மறக்காதே  என்று இன்னும் முக்கியமான ஸ்லோகங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

சின்னவன்  முக்கொம்பு  அணையிலிருந்து வரும் 18 அடித் தண்ணிரில் விழும்போது காப்பாற்றியது என் கணவரும் அவரின் ராம நம்பிக்கையும் தான்.

எத்தனையோ சோதனைகள் சிரமங்கள் வரும்போதெல்லாம்
தாமரைக் கைகளால் தூக்கிவிட்டவன் ராமன்.
அவனைக் கோபித்துக் கொண்ட நாட்கள் எத்தனயோ.

அத்தனை கோபமும் அவனது முகத்தைக் கண்டதும் ஓடிவிடும்.

பயம் கொடுப்பவனும் அவனே
பயத்தைப் போக்குபவனும் அவனே

தெரிந்தும்  உன்னை விட்டு நகரும்போதெல்லாம் மனசின் ஏதோ மூலையில்  அணுராமநாமம் குடிகொண்டிருக்கும்.

எத்தனையோ நல்ல மனங்களின்    பதிவுகள்
இராமனை உணர்த்திய வண்ணம் இருக்கின்றன.
சீக்கிரம் அவன் சென்ற பாதையைக் கண்டுபிடி.

மனதிலிருந்து விலகாமல்  கட்டிப் போட்டுவிடு.
நல்ல நாள்  விழா என்று வரும்போதுத் தொலைவில் இருக்கும் செல்வங்களை எண்ணி  சலனப் படாமல் ஸ்ரீராமனின் சரணங்களைப் பற்றி
அவனையே உன்பிள்ளைகளாக எண்ணிக் கொள்.
அவர்களும் நன்றாக இருப்பார்கள் . நீயும் நன்றாக இருப்பாய்.
*****************************************************************

இது ஒரு தனிமைத்தாயின் புலம்பல்:)
**********************************************
மறக்காமல் தொலைபேசி வாழ்த்திய, பின்னூட்டிய அத்தனை நல் இதயங்களுக்கும் நன்றி.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

17 comments:

ராமலக்ஷ்மி said...

இராம நாமத்தைப் பற்றிக் கொண்டால் துயரில்லை. நல்ல பதிவு. பட்டாபிஷேகப்படமும், கடைசிப்படமும் வெகு அழகு.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

துளசி கோபால் said...

ராமா ராமா!

2008rupan said...

வணக்கம்

படங்களும் பதிவும் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

துயரத்தை போக்கும் ராம நாமம் உண்மை..எல்லோரையும் நலமாக இருக்க வாழ்த்திக் கொண்டே இருங்கள் அது தானே தாய்மையின் சிறப்பு.
படங்கள் எல்லாம் மிக அழகு.

வெங்கட் நாகராஜ் said...

ஜெய் ஸ்ரீராம்...

sury Siva said...

அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்து கொண்டு இருக்கும்போது
உங்கள் பதிவு பார்த்தேன்.

ராம நாமம் சொல் ஓளி, கிடைக்கும்
ராம நாமம் சொல் வழி கிடைக்கும்

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்.

சுப்பு தாத்தா.

துரை செல்வராஜூ said...

ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜயராம்!..
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜயராம்!..

அவன் திருவடிகளே ஆறுதல்..
அவன் திருவடிகளே தேறுதல்..

ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜயராம்!..
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜயராம்!..

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராமலக்ஷ்மி.
நம்பிக்கை இருந்தால் எதையும் வென்றுவிடலாமென்பதற்கு ஸ்ரீராமநாமம் ஒரு ஊன்றுகோல்.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.தனபாலன் இன்னோரு தவறாத நம்பிக்கை.

வல்லிசிம்ஹன் said...

நம் வாழ்க்கையில் முக்கியமானது தியானம். நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் துளசி. ராமன் காப்பாற்றுவான்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ரூபன்.
தவறாமல் தரும் வருகைக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

எத்தனையோ சமயங்களில் இந்த நாமா என்னும் தூணைப் பிடித்துக் கொண்டு
விழாமல் இருந்திருக்கிறேன்.அவசியமான பயிற்சி.
நன்றி கோமதிமா.

வல்லிசிம்ஹன் said...

ஜெய் ஸ்ரீராம் வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார். மதுரமயமான நாமாவை ஜபிக்க மறக்கும் போதுதான் தாபமும் கோபமும் மிகுகின்றது.
திட உணர்வோடு ராமனைப் பற்றிக் கொண்டால்,சம்சார வாழ்க்கை எளிதாகிறது.

வல்லிசிம்ஹன் said...


நன்றி துரை செல்வராஜு.
தன்னைத் துன்பப் படுத்தியவனையே மன்னித்தவன். நம்மைக் காப்பாற்றித் தேற்ற மாட்டானா.

மாதேவி said...

ராம நாமம் என்றும் காக்கும்.

ராம் குடும்பம் படங்கள் அருமை.