Blog Archive

Tuesday, November 12, 2013

நவம்பர் நாட்கள் இனிமை கொடுப்பவை

என்றும் இன்பம் பெருக வாழ வாழ்த்துகள்

 ஐப்பசி அழகானதொரு மாதம்.
மருதாணி வாசம், தீபாவளி உடைகள்

சிறிய அளவேனும் வெடிக்கப்படும் பட்டாசுகள். மாடவீதியின் தோரணங்கள்.

தொலைபேசி அழைப்புகள்.
அவ்வப்போது பெய்யும் மழை.
அலுக்காமல் வெடியைக் காயவைக்கும் சிறார்கள்.

இவை எல்லாம்  ஒரு பத்துப் பதினைந்து வருடங்களாகக்
குறைவாகவே எங்கள் இருவருக்கும் தெரியும்.
இயந்திரத்தனமாக  மகிழ்ச்சி வேஷம் பூண்டு கொண்டு அத்தனை
உறவு நட்புகளுக்கும்   தொலைபேசி, நம்மை
அழைக்காதவர்களை அழைத்து வலிய வாழ்த்துகளை வாங்கி எல்லா வம்பும் நிகழ்கின்றன. பத்துமணி அளவில்  தொலைக் காட்சி நண்பரிடம்
அடைக்கலமாகிவிடுவோம்.

நடு நடுவில் தலை தீபாவளித் தம்பதிகள் வந்து ஆசி வாங்கிச் செல்வார்கள்.

இவ்வளவுக்கு மேல் எனக்கு மனதில் நிற்பது என் தலை தீபாவளியும், எந்த நேரத்திலும்  பிறக்கத்  தயாராக   இருந்த எங்கள் முதல் சிசுவும்,
அதற்காகச் சேலத்திலிருந்து வந்திருந்த அவன் தந்தையும்,
காத்திருந்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்.
அடுத்த கணம் ஆரம்பித்த    வலி அடுத்த நாள் காலையில்
எங்கள் முதல்  புத்தம்புது வாரிசை,புதல்வனைக் கொடுத்தது.

மருத்துவமனையில் நானும் அவனும் மட்டுமே.
அவ்வப்போது வரும் தாதியர்,
ஐய்ய பிள்ளையைத் தூக்கக் கூடத் தெரியலையேமா.
இத்யாதி இத்யாதிகளைக் கடந்து
நானும் பிள்ளையைப் பேணினேன்:)
பிறகு வந்தனர் பெற்றோரும் உறவுகளும்.
அடுத்தநாள்  நானே மருத்துவமனையில்
கேட்டுக் கொண்டு முன்னறிவிப்பு இல்லாமல்
மருத்துவமனை   ஆம்புலன்சில் வீட்டுக்குப் பசுமலைக்கு வந்து சேர்ந்தேன்.

அம்மா பாட்டி எல்லோரும் ஆரத்தி கரைக்க ஓட ,அப்பா என்னைப் பெருமிதமாகப் பார்க்க,

நிம்மதியாகத் திரும்பிச் சென்றது  ஆம்புலன்ஸ்.

பதினோராம் நாள்  மாமியார் புது உடைகள் கழுத்து,கைகள் கால்களுக்கெல்லம் பொன் கொண்டுவர
த்வாரகாதீசனின்  நாமம்  அவனுக்குச் சூட்டப்பட்டது.

அன்பு மகனே எங்கள் மனம் நிறைய மகிழ்ச்சியை எப்பொழுதும் கொடுக்கிறாய்.
எப்பொழுதும் நீயும் உன் குடும்பமும் சகலவிதமான
சுகங்களுடனும் ஆரோக்கியத்துடன்  இருக்க எங்கள் ஆசிகள் .
ஹாப்பி பர்த்டே பாபு.

அடுத்தவர் என் அன்பு நாத்தனார். 79 வயது பூர்த்தி செய்கிறார்.
அவருக்கும் இந்த வாரம்  பிறந்தநாள். வாழ்வில் சகலவிதமான உயரங்களையும் எட்டிப் பிடித்த நல் ஆசிரியை.
அவர் பெயர் சொல்லிக் கொண்டு உலகம் முழுவதும் உலவும்   மாணவர்கள்
அவர் போதித்த  பாடங்களைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறார்கள்.
அன்பு அக்கா ஸ்ரீமதி ஹேமா ஸ்ரீனிவாசன்
தங்களுக்கும் எங்கள் இருவருடைய மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
இணைய நட்புகளின் வாழ்த்துகளும் வந்து சேரும். நன்றி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்...

கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

இராஜராஜேஸ்வரி said...

அனைவருக்கும் என்றும் இன்பம் பெருக வாழ வாழ்த்துகள்

ராஜி said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

இனிய நினைவலைகள். மகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ஸ்ரீமதி ஹேமா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும் எங்கள் வணக்கங்களும்.

தி.தமிழ் இளங்கோ said...

// எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் //
வாழ்த்துக்கள்!

Geetha Sambasivam said...

உங்கள் அன்பு மகனுக்கும், உங்கள் அருமை நாத்தனாருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இருவரும் பூரண ஆரோக்கியத்தோடு வாழவும் பிரார்த்தனைகள். நாத்தனாருக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

ஸ்ரீராம். said...

உங்கள் அன்புச் செல்வத்துக்கும், அன்பான நாத்தனாருக்கும் எங்களின் வாழ்த்துகளும்.

மாதேவி said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.