About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, October 06, 2013

மார்ட்டன் தாவரவியல் உலகம்


இந்தப்படத்தில் இருப்பது தங்க வண்ணம் தீட்டப்பட்ட இலைகள் என்று நம்ப முடிகிறதா::))

மரத்தட்டுகளில் தீட்டப்பட்ட  ஓவியங்கள்மேலே காணப்படூம் எல்லாக் கலைப் பொருட்களும்
ஏதாவது ஒரு வகையில் மரத்துடன்
சம்பந்தப் பட்டிருக்கின்றன.
Fallcolour

மார்ட்டன் ஆர்பரீட்டம் என்னும் தாவரவியல் பூங்கா சிகாகோவின் வீட்டன் ..லைல் பகுதியில் இருக்கிறது.
சிங்கத்துக்கு மரம் செடி கொடிகள் மிகவும் பிடிக்கும் என்பதால் மகள்
அங்கே போகலாம் என்றதும் உடனே கிளம்பிவிட்டோம்.
அந்த பூங்காக்கள் நிறைந்த 1700 ஏக்கர் நிலத்தைப் பார்த்ததிலிருந்து இந்த நாட்டை மேலும் வியக்காமல் இருக்க முடியவில்லை.
நல்ல வளமுள்ள பிரெய்ரி நிலம். அதில் வளர்ந்து நிற்கும் பலவகையான மரங்கள்.
அந்தந்த காலத்துக்கு ஏற்ற முறையில் வளரும் தாவர இனங்கள்.
பல்வேறு நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பல்வேறு இனத்தைச் சேர்ந்த
தாவர வகைகள்......
ஏரிகள், காடுகள் நடு நடுவில் கட்டப்பட்டிருக்கும் உணவு விடுதிகள். பிக்னிக் தளங்கள்.
ஸ்டெர்லிங் மார்ட்டன் என்பவரால் ஆரம்பிக்கப் பட்ட நூலகம், எல்லாம் என்னை அசத்திவிட்டன.
அங்கே எடுத்த படங்களைத்தான் சென்ற இரண்டு பதிவுகளில் போட்டு இருந்தேன்.
ஸ்டெர்லிங் மார்ட்டன் என்பவரின் நினைவாக அவரது மகன் ஜாய் மார்ட்டன் என்பவர் இந்த தாவர உலகத்தை ஆரம்பித்திருக்கிறார்.
தாவரவியல் சம்பந்தமான 25000த்துக்கும் மேற்பட்ட நூல்கள் இங்கிருக்கும் நூலகத்தில் இருக்கின்றன.

குளிர்கால   மார்ட்டன் தோட்டம்

Add caption
தோப்பாவோம்!

morton maze

கோடைக்கால மார்ட்டன்Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

14 comments:

துளசி கோபால் said...

இடமும் அருமை. படங்களும் அருமை.

என்னதான் மனுசன் மாய்ஞ்சு மாய்ஞ்சு செஞ்சாலும் இயற்கையை வெல்லவே முடியாது. மரத்தோட்டம் ரொம்ப அழகா இருக்குப்பா.

கோல்ட் ஸ்ப்ரே கேன் கிடைக்கும் பாருங்க. அதைக் காய்ஞ்ச இலை, உலர்த்திய ரோஜா, பைன் நட்ன்னு இதுகள் மேலே எல்லாத்துக்கும் ஸ்ப்ரே செஞ்சு வச்சுக்கிட்டா தங்கமே தங்கம்தான். கிறிஸ்மஸ் சமயம் அலங்காரத்துக்கு உபயோகமா இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

தங்க வண்ணம் பூசப்பட்ட இலைகள்னு
இருக்கணும். ஈகள்னு பதிஞ்சு விட்டதூ.:)

ராமலக்ஷ்மி said...

படங்களும் விளக்கங்களுமாக நாங்களும் தாவரயியல் பூங்காவுக்கு வந்த உணர்வைக் கொடுத்து விட்டீர்கள். நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஹைய்யா. என்ன ஒரு ஐடியா.

பொண்ணு கிட்ட சொல்கிறேன். அவங்கதான் க்றிஸ்மஸ் மரம் வைப்பாங்க.
விஷ்ணு கிட்டச் சொல்லிட்டா செய்துடுவான்.
ஆனாலும் இவங்க வச்சிருக்கிற அழகு இருக்கு பாருங்க துளசி. படு ஃப்ரொபெஷனல் லுக் பார்த்தீங்களா.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா ராமலக்ச்மி. நல்லதொரு அனுபவம் இந்த செடி,கொடி மரங்களோட.

தனிதனி நபர்களிடம் பேசுவதுபோல ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு. நல்லா அமைத்திருக்கிறார்கள். எனக்குத்தான் எழுத வரவில்லை:(

நானானி said...

எடுத்த படங்களை அழகாக தொகுத்து வழங்கிவிட்டீர்கள். வல்லி! அந்த ஆர்ச் இருப்பது சிகாகோ வீட்டனிலா அல்லது செயிண்ட் லூயிஸிலா?
எனக்கும் நல்ல ஐடியா கொடுத்துவிட்டீர்கள்..நன்றி!!

வருங்கால முதல்வர் said...

லைலில் 2 வருடம் வேலை பாத்திருக்கேன், உங்க பதிவில தான் பாக்கிறேன்.

குடுகுடுப்பை

வல்லிசிம்ஹன் said...

லைல் அழக்கான இடம். அதுவும் வீட்டன் டவுன் டௌன் பாழைய்ய கால கடைகளோடு மிக அழகாக இருக்கின்றது.
நன்றிம்மா குடுகுடுப்பை.

செல்லி said...

தங்க வண்ணம் பூசிய செடி விலை ஜாஸ்தி!
தீபாளி வாழ்த்துகள்!
அன்புடன்
செல்லி

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன அழகு...! என்ன அழகு...!

ஹுஸைனம்மா said...

// பூங்காக்கள் நிறைந்த 1700 ஏக்கர் நிலத்தை//

என்னது, 1700 ஏக்கராவா.... ப்ச்.. பிழைக்கத் தெரியாதவங்க போல... எத்தினி ரியல் எஸ்டேட்காரவுங்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கலாம்... :-)
__________________

அட நானானி மேடம்!! எப்படிருக்கீங்க நலந்தானே? ரொம்ப வருஷமாச்சு பார்த்து!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா.
நானானியின் கருத்து 2008இல் இடப்பட்டது.
இது ஒரு மீள் பதிவு அம்மா.
நானானி உடல் நிலை சரியாகி

தற்போது நன்றாக இருக்கிறார்.
நீங்க சொல்வது உண்மைதான் அவங்களுக்குக் கொஞ்சம் போறாது:))))))))))))))

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு.
நானானிக்கு என்ன உடம்புக்கு?
வெகு நாட்களாக அவர்களை காணவில்லையே என நினைத்தேன்.