Blog Archive

Thursday, September 25, 2014

நவராத்திரி ஆரம்பம் கூடிக் களிப்போம். மீள் பதிவு சென்ற வருட நவராத்திரி

விளக்கேற்றி வைக்கிறோம் விரைந்தோடி வாருங்கள்
கிருஷ்ணா  நீ  பேகனே  பாரோ
25 வருடங்களாக  வருடா வருடம் வந்துட்டுப் போறோம். நீங்களும் வாங்க.
அம்பிகை

 ஆவணி மாத பௌர்ணமியை அடுத்து வரும்
பதினைந்து நாட்களும்

வீட்டுப் பெரியோர்களை நினைத்து வழிபடவேண்டிய நாட்கள்.
அவை முடிந்து வரும் மஹாலய அமாவாசை புரட்டாசியில் நாளைவருகிறது.

நம் வீட்டில் காலையில்  பித்ருக்களை வழிபட்டபிறகு. மதியத்துக்குப் பிறகு

பொம்மைகள் படியிறங்கி வரும்:)
ஆமாம் மாடியில் ஒரு வருடம் தூங்கியவர்களை எழுப்பிச் செல்லம் கொஞ்சிக் கீழே கொண்டு வரவேண்டும் இல்லையா!!

மேலே உள்ள பொம்மைகள்  25   வருடங்களுக்கு முன் ஒரு
கண்காட்சியில் வாங்கியது.
அதற்குப் பிறகு எவ்வளவோ மாற்றங்கள்.
இந்த வருடம் சிறிய அளவில் நிறைவாகச் செய்யவேண்டும்.

அம்பிகை சரண் புகுந்தால் அனைத்து வரமும் அருள்வாள்.

அனைவருக்கும்  தொடங்கவிருக்கும் நவதின நாயகியருக்கான வாழ்த்துகள் .




 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

29 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

//சிறிய அளவில் நிறைவாகச் செய்யவேண்டும்... //

அந்த நிறைவு எல்லோருக்கும் வேண்டும் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

வல்லிசிம்ஹன் said...

உண்மையே தனபாலன்.
போன வருடமே இந்தத் தீர்மானம் எடுத்தாகிவிட்டது. வந்தவர்கள் மன்ம் நிறைய வேண்டும். அதுதான் முக்கியம். நல் வழிப்ப்படுத்த் அனைத்துக் கடவுளரையும் பிரார்த்திக்க வேண்டும். நன்றி மா.

இராஜராஜேஸ்வரி said...

சிறிய அளவில் நிறைவாகச் செய்யவேண்டும்

நிறைவான நவராத்திரி கொண்டாட்டம்.. வாழ்த்துகள்..

ADHI VENKAT said...

தங்கள் விருப்பம் நல்லபடியாக நிறைவேரும் அம்மா.

ஸ்ரீராம். said...


பொம்மைகள் கொலு ஏறும் நாள் வந்தாகி விட்டது. வாழ்த்துகள்.

Subhashini said...

I remembered last year kolu visit to your home Valli maa. Very nice....

Geetha Sambasivam said...

போன கொலுவுக்குத் தானே ஶ்ரீராம் உங்க வீட்டுக்கு வந்தார்? அதுக்குள்ளே ஒரு வருஷம் ஓடியே போச்சு. இந்த வருஷம் நம்ம வீட்டில் கொலு இல்லை. :( அதனாலோ என்னமோ தெரியலை. சுவாரசியம் இல்லை. :))) குழந்தைகள் இல்லைனாலும் கொலுவை ஆசையோடு முடிஞ்சவரை வைப்பேன். சும்மா ஒண்ணு, ரெண்டு பொம்மைகளை, முக்கியமா நம்ம நண்பரை வெளியே எடுத்து சுவாமி அலமாரியில் வைச்சா கொலு முடிஞ்சது. வீட்டுக்கு வரவங்களுக்கு வெற்றிலை, பாக்குக் கொடுத்தால் போதும். அடுத்த வாரம் முழுதும் விருந்தினர் வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆரம். :))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி,உங்கள் பதிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சிறிய அளவில் பெரிய பொம்மைகள்:)
எப்படி வைக்கப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இவர்களுக்கு இல்லாத இடமா!!நலம் பெருகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

தெய்வங்கள் இறங்கி வருவதுதான் எத்த்தனை உன்னதம் ஆதி. இந்தப் பொம்மைகளின் முகங்களின் தெய்வக்களைதான் எத்தனை ஆகர்ஷிக்கிறது.
ஸ்ரீரங்கத்திலும் நவராத்திரி கோலம் கொண்டிருக்கும். வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.நவராத்திரி நல்லபடியாக நடந்தேற வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சுபாஷினி. இந்தத் தடவை யானைகள் உண்டும்:)

வல்லிசிம்ஹன் said...

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருஷம் ஓடிவிட்டது கீதா,.
ஆமாம் ஸ்ரீராமும் தம்பதி சமேதராக வந்திருந்தார்.
பிள்ளையாரை மட்டுமாவது பலகையில் ஏளப் பண்ணுங்கள். கொலுவைக் குறைக்கக் கூடாது.

கோமதி அரசு said...

சிறிய அளவில் நிறைவாகச் செய்யவேண்டும்.//

நிறைவாக செய்யுங்கள் அக்கா,வாழ்த்துக்கள்.
இந்த முறை கொலுவுக்கு இங்கு இருக்கிறேன்.
ஊரில் டிரங் பெட்டியில் இருக்கும் பொம்மைகளை நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.பேரனுடன் தினம் அவனுக்காக விளையாட்டு சாமான்களை வைத்து கொலு வைத்துக் கொண்டு இருக்கிறேன் .
நவராத்திரி விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்.... சீக்கிரமா பொம்மையெல்லாம் எடுத்து அழகா அலங்காரம் பண்ணி வையுங்க.....

சுண்டல் ரெடியான கையோடு ஒரு ஃபோன் பண்ணிடுங்க, தில்லியிலிருந்து ஒரு ஃப்ளைட் புடிச்சு வந்துடறேன். :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, இந்தத் தடவை பொம்மைகள் நீண்ட நித்த்ரையில் இருப்பதாகச் சொன்னார்கள்.
அம்மாவந்ததும் பெட்டியைத் திறந்து எங்களைப் பார்ப்பார்கள் என்றும் சொன்னார்கள்.
அங்கே கோவிலில் கூடக் குட்டி பொம்மைகள் கிடைக்குமே.
தங்கள் நவராத்திரி சிறக்க வாழ்த்துகள் மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

ம்ம்ம். வாங்க வாங்க. முதலில் வருபவருக்கு ஒரு ஆழாக்கு சுண்டல்:)வேர்க்கடலை சுண்டல்.
நன்றி வெங்கட்
அம்பாள் அநுக்கிரகத்தில் எல்லா சுபிஷங்களும் நிறைய வேண்டும்.

Ranjani Narayanan said...

நவராத்திரி வந்தாச்சா?
இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!

காரஞ்சன் சிந்தனைகள் said...

நவராத்திரி விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

காரஞ்சன் சிந்தனைகள் said...

நவராத்திரி விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நவராத்திரி நல்வாழ்த்துகள் வல்லிம்மா!

geethasmbsvm6 said...

குட்டிக் கொலு வைச்சாச்சு. சாயந்திரமா முடிஞ்சா படம் எடுக்கணும். பொம்மைகளை எல்லாம் கொடுத்தாச்சு! ஒவ்வொரு வருஷமும் படிகள் கட்டி, பொம்மைகளை வைச்சுத் திரும்ப எடுத்து உள்ளே வைச்சுனு இருக்கும், இப்போ எல்லாமே குறைச்சாச்சு.:))))

வல்லிசிம்ஹன் said...

நானும் நிறைய பொம்மைகளைப் பசங்களிடம் கொடுத்துவிட்டேன். இனியும் கொடுத்துவிடணும். கொலு நல்ல படியாக நடக்கட்டும் கீதா.நவராத்திரி வாழ்த்துகள்.

priyasaki said...

நவராத்திரி நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா.

கோமதி அரசு said...

நவராத்திரி நல் வாழ்த்துக்கள். கொலு இல்லையென்றாலும் என் தளத்தில் பதிவு இருக்கிறது வல்லி அக்கா.

துளசி கோபால் said...

வாவ்!!!! அப்ப வெள்ளிவிழா கொண்டாடும் பொம்மைகள்!!!

இனிய வாழ்த்து(க்)கள்!

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதிமா. முகநூலில் சுலபமாகப் படித்துவிட்டுக் குழந்தைகளோடு நேரம் போய்விடுகிறது. மன்னிக்கணும்மா. பதிவைப் படிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசிமா. 25 என்பதற்கு 35 என்று போட்டு இருக்கணும்.

Thenammai Lakshmanan said...

அருமை அம்மா. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. நிறைவாகவே அமையும் :)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தேன்.நிறைவாக இருங்கப்பா .நன்றி மா.