Blog Archive

Sunday, October 27, 2013

மாதா துளசி,சுந்தர நாராயணனும் மஹாலக்ஷ்மியும் கோவில் கொண்டது நாசிக்கில்

கோவிலின் பழைய படம்
ஸ்ரீதுளசி மாதா நாராயணனுடன் இருக்கும் ஒரே கோவில்
தேடிக்கண்டுபிடிக்க  வேண்டுமாம்.

 திரு வேளுக்குடி அவர்களின் ஸ்ரீராமனின் பாதையில் இன்று கேட்டுப் பார்த்துக் கொண்டிருந்த போது,
அதிசயமான   தகவல் கிடைத்தது.

இதுநாள்  வரை  பிருந்தா எனும் துளசி மாதா ,
இறைவன் கழுத்தில் மாலையாகத் தான் பார்த்திருக்கிறோம்.
வீட்டில் இருக்கும்  துளசி மாடத்தில் பூக்கள் அர்ச்சிக்கும் போது
அவளது தூய்மையை  உணர்வோம்.

நானும் தோழி துளசியும் பேசும்போது  ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளுக்கென்று எல்லாக் கோவில்களிலும் தனி சந்நிதி இருக்கும்.
அரங்கனோடு சேர  ஆசைப்பட்டவளுக்கு ஏன் தனி சந்நிதி.
அதுவும் மங்கலான  விளக்கில்,
அர்ச்சனை செய்ய  பட்டாச்சாரியரை அழைத்துவர வேண்டிய நிலை.

அவள் என்றொ அரங்கனைச் சேர்ந்துவிட்டாள். கோவில்களின் ஏற்படுகளைத் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை.

அவளும் துளசிவனத்தில் தோன்றியவள்தானே.
என்னவெல்லாமோ எண்ணங்கள்.

அதற்கு மாற்றாக  இன்று துளசியம்மாவை அவள் நாயகனுடன் பார்த்தது மிக மகிழ்ச்சி கொடுத்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் காட்சி கொடுப்பது போல
இந்தநாசிக்கில் துலஸி மாதாவுக்குக் கர்ப்பக் கிரஹத்திலியே

ஆராதனை நடப்பது மிகவும்  அற்புதம்.
கூகிளில்  தேடிக்  கிடைத்த படங்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதைப் பற்றிய விவரங்களை    பண்டிட் ஒருவர் இந்தியில் விளக்கினார்.  அதனால்  அப்போது புரிந்தாலும்  மறந்துவிட்டது;(

மீண்டும் தேடினால்  கிடைக்கும்!!



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

20 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் காட்சி கொடுப்பது போல
இந்தநாசிக்கில் துலஸி மாதாவுக்குக் கர்ப்பக் கிரஹத்திலியே

ஆராதனை நடப்பது மிகவும் அற்புதம்

நிறைவான் பகிர்வுகள்..

திண்டுக்கல் தனபாலன் said...

ok... thanks... from new android...

ஸ்ரீராம். said...

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறதோ? எந்த நேரம்? படங்கள் அழகு.

ஸ்ரீராம். said...

//ஏன் எங்கள் ப்ளாக் லிஸ்ட்ல என் ப்ளாக் அப்டேட் ஆகவில்லை?ப்ளாக் பண்ணிட்டீங்களா:) //

உங்கள் செட்டிங்க்ஸ்லதான் சரி செய்ய வேண்டியிருக்கும். முன்பு ஒருமுறை 'எங்களு'க்கு இதே பிரச்னை ஏற்பட்டபோது சீனு தீர்த்து வைத்தார். (அப்போது ராமலக்ஷ்மி உட்பட 'என்ன செய்தீர்கள்?' என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பின்னூட்டத்திலும் 'செய்தது என்ன' என்று பகிர்ந்து கொண்டேன். எந்தப் பதிவு என்றுதான் நினைவில்லை!)

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். நன்றி
ஆண்ட்ராய்ட்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
ஸ்ரீராமனின் பாதை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 டு 9
ஒளிபரப்பாகிறது. ரொம்பப் பழைய கோவில்,.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.

தானே சரியாகிவிடும்னு நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

இராராவுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.

துளசி கோபால் said...

துளசியை ஸேவிக்க துளசி கொஞ்சம் லேட்டாக வந்துருக்கேன்.

பழைய கோவில் என்றாலே ஒப்ரு தனி அழகு இருக்குப்பா.

ஆமாம்.... அதென்ன வனத்தில், மண்ணீல் கிடைக்கும் குழந்தைகள் எல்லாம் பெண்குழந்தைகளாகவே இருக்காங்க?

சிந்தித்துப் பார்க்கணுமோ!!!

Ravichandran M said...

மிகவும் அரியதொரு படம்! அற்புதம்! பகிர்விற்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள்.....

நல்ல தகவல்... நன்றிம்மா...

வல்லிசிம்ஹன் said...

அவர்களுக்குத் தெரியாத கொவிலே இருக்கச் சான்ஸே இல்லை துரை.இது
வட இந்திய பக்கம் இருக்கிறது. அங்கு போயிருந்தால் கட்டாயம் எழுதி இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அதனால் என்ன துளசி.
எப்போ வந்தால் என்ன. கைவலி இல்லாத போது எழுதுங்கல்.
மண்ணின் சக்தியே நாம் தான் என்று காண்பிக்கப் படப்பட்ட தெய்வங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி வெங்கட்.

சீனு said...

ஹா ஹா ஹா மறந்து விட்டதையே எழுதி விட்டீர்களா

கோமதி அரசு said...

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் காட்சி கொடுப்பது போல
இந்தநாசிக்கில் துலஸி மாதாவுக்குக் கர்ப்பக் கிரஹத்திலியே//

அழகான படம்.
புதிய செய்தி. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சீனு.உண்மையாகவே மறந்துவிட்டது. நினைவில் இருந்தது
மட்டும் எழுதினேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி.
பெண்ணாகப் பிறந்து பலவித துன்பங்களையும் அனுபவித்து
முக்தி அடைந்த ஸ்ரீதுளசி மாதாவிற்கு, ஒரு சமஸ்தான ஜமீந்தார் இந்தக் கோவிலைக் கட்டி இருக்கிறார்.
நன்றிமா.

மாதேவி said...

இக்கோயிலைபற்றி உங்கள் பகிர்வில்தான் கண்டுகொண்டேன் நன்றி.