Blog Archive

Wednesday, October 16, 2013

நவராத்திரி நாட்கள் பூர்த்தி.மகிழ் நாட்களே மீண்டும் வருக.

பதிவுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை.:)
இரண்டு ஜோதிகளும் என்ன பேசிக் கொண்டன.?

 கொலுவை  நாளைதான் ஏறக் கட்டவேண்டும். விருந்தாளி ஒருவர்
கொலு பார்க்க  வருவதாகச் சொல்லி இருப்பதால் கொலு தெய்வங்கள்  நாளைதான்  யதாஸ்தானத்திற்குச் செல்ல வேண்டும்.

இதற்குள்  மாடவீதியில்  ஒரு வேலையாகச் சென்றபோது
பொம்மைகள்   விற்பனை அதி மும்முரமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க  முடிந்தது.

வியாபாரிகளிடம்  எப்படியாவது  இருக்கும்
மிச்சமான பொம்மைகளை விற்றுவிடும்   அவசரம்  தெரிந்தது.
எனக்கும் ஆசைதான்.
ஒரு   தேவிகாமாக்ஷியாவது வாங்கவேண்டுமே. அந்த அம்மா வீட்டில் இல்லையே என்று தோன்றியது.
கறுப்பு அரங்கநாதர்  1000  ரூபாய்க்குப்  பதிலாக எண்ணூறு க்கு இறங்கி இருந்தார்.

காமிராவை  எடுத்துப்,போகாமல்  அத்தனை காட்சிகளையும்
பறக்கவிட்டுவிட்டேன்.:(

பிட்  போட்டோ  போட்டிக்கு   லட்டு  போலக் காட்சிகள் கிடைத்திருக்கும். எல்லாவற்றிற்கும் வலதுபக்க மூளை  எப்பொழுதும்
அலெர்ட்டாக இருக்க வேண்டும் இல்லையா.
அது கொஞ்சம்  ....வீக்:)
 வடக்கு வீதியில் பொம்மைகள் . தெற்கு வீதியில் தசமி  ஆன பிறகும் விற்கும் வாழை மரங்கள் மஞ்சள் தோரணங்கள்,   வாழைப்பழங்கள்,ஆப்பிள் மலைகள்,  பொரி பட்டாணி  மூட்டைகள்.  காஃபி பொடி வாசம்,  பூக்கள் தேங்காய் மூட்டைகள்.....ஆஹா சென்னை இனியது:)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

8 comments:

ஸ்ரீராம். said...

மார்க்கெட்டை அலசும் சுவாரஸ்யமே தனிதான்!

இராஜராஜேஸ்வரி said...

.ஆஹா சென்னை இனியது:)

வாழ்த்துகள்..!

சீனு said...

அதனாலென்ன, மீண்டுமொருமுறை உங்கள் வீட்டுக் கொலுவையெ படம் பிடித்து போட்டு விடுங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

சென்னை ரசனைக்கு வாழ்த்துக்கள் அம்மா...!

கோமதி அரசு said...

மகிழ் நாட்கள் மீண்டும் வர வாழ்த்துக்கள் அக்கா.
இரண்டு ஜோதிகளும் பேசிக் கொள்வது அருமை.
சுவாமியும், அம்பாளும் சேர்ந்து வந்து வாழ்த்தியது போல இருக்கிறது இரண்டு ஜோதிகளை பார்க்கும் போது.

ராமலக்ஷ்மி said...

தலைப்புக்கு பொருத்தமாக இருக்கிறதே முதல் படம். அடுத்து தீபாவளி.. கார்த்திகை!! வியாபாரிகளும் விழாக்கால விற்பனையை எதிர்பார்த்து தயாராக ஆரம்பிப்பார்கள். லட்டுகளை இப்படி விட்டு விட்டீர்களே:)!

துளசி கோபால் said...

அடடடா.................

சென்னை சிலசமயங்களில் இனிப்பது உண்மையே!

மாதேவி said...

ஆகா!!! இனியது. :)) கண்டுமகிழ்ந்தோம்.