Blog Archive

Monday, October 28, 2013

204,ஸ்டான்சர்ஹார்ன் குன்றுகள்

2007ilஇல் ஏறிய பாதை!!!!!!!!!!
photo taken  from  Funicular car
Add caption
Add caption






























Add caption
சாதாரணமாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில்,வீட்டை விட்டுக்கிளம்புவது பிரயத்தனம் தான். சின்னவனுக்கோ எங்களை அழைத்துக்கொண்டு வெளியே போக முடியவில்லை என்று யோசனை...... குட்டிப்பாப்பாவுக்கு பெரியவங்களைப் போல வண்டிலப் பிரயாணம் செய்யப்பிடிக்கும்.ஆனால் தன்னோட தள்ளுவண்டில உட்கார்ந்து வருவதுபிடிக்காது.எப்போழுதும்போல்
பார்த்த இடங்களையே பார்க்காமல்


புதிதாக இந்த ஸ்டான்சர் குன்றுகளுக்குப் போகலாம் என்று ஒரு ஞாயிறு காலை கிளம்பினோம்.
லூசர்ன் எனும் நகருக்கு முதலில் போய், பிறகு இந்த மலையேறும் வண்டியைப் பிடித்தோம். வெய்யில் செமை போடு போட்டுக் கொண்டிருந்தது.
மலைப்பாதைப்பயணக் கேபிள் காரில் ஏறி ஒரே அலாக்காகக் கொண்டு போய் விடப்பட்டோம்.

அங்கிருந்து ஒரு அரைமணிநேர ஹைகிங்க். குன்றின் மேல் ஏறி சிகரத்துக்குப் போனதும் ஏறிவந்த களைப்புப் போச்சு.
வரவழியில ஒரு இந்த ஊரு அம்மாவேறு எங்களோட சேர்ந்துவிட்டார்.
நிற்காமல் பேசியதில் காலும் காதும் கடுத்துப் போயின.
அவங்களுக்குப் பிள்ளைங்க அவ்வளவு சொஸ்தமில்லையாம்.
எங்க மகன் ரொம்ப ஆதரவா என்னைக் கைபிடிச்சு அழைத்துப் போவதைப் பார்த்து கன்னத்தில் கைவைத்து அதிசயப் பட்டார்.

அவங்க முட்டி மாற்றுச் சிகித்சை முடிந்து மலையேற வந்து இருக்கிறார்.
எங்க குடும்பம் ரொம்பப் பிடித்துவிட்டதாம்.அதனால் எல்லா சப்ஜெக்ட்டையும் விடாமல்,பொட்டு வைப்பதிலிருந்து ஆரம்பித்து,
டிவோர்ஸ் விகிதாசாரம் வரை அலசிவிட்டுத் தான் விட்டார்.

இந்தியாவுக்கு வந்தால் சென்னைக்குக் கண்டிப்பாக வருவதாகச் சொன்னார்.
இத்தனைக்கும் பேரு ஊரு தெரியாது எனக்கு.
மகன் கண் காட்டியதால் வீட்டு நம்பர்,விலாசம் எல்லாம் கொடுக்காமல் விட்டேன்.
இவங்க எல்லாம் பொதுவா கலர் மங்கி இருப்பவர்களிடம் பேசமாட்டார்களே
இந்த பெண்மணி மட்டும் ஏன் இவ்வளவு ஒட்டுகிறார் என்று மனம் ஓடியது.
அப்போது பிடித்த பேச்சு பழையபடி லூசர்ன் நகர எல்லையில் தான் விட்டது.
முன்ன பின்ன தெரியாத மனிதர்களிடம் பேச வைத்தது அவர்களின் தனிமை தான் என்று தோன்றியது.

இங்கேயே வயதானவர்களோடு, நடுவயததக் கடந்தவர்களுடன் குழந்தைகளைக் காண முடிகிறது. இந்த நிலைமமயயப் பார்த்து மகனிடம் விசாரித்தேன்.
அப்போதுதான் இவர்களின் வாழ்க்கைமுறை வேறுபாடுகள் விளங்கியது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழுபவர்கள் அதிகம் என்றும் ,வரிவிகிதாசாரம் அதிகமமகிவிடுவதாள் பாய்ஃப்ரண்ட்
கேர்ள்ஃப்ரண்டாகவே இருந்து விடுவதாகவும் சொன்னான்.

 அந்த வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் பிறகு முதுமையை நெருங்கும்போது குழந்தைகளைக் காப்பு இல்லங்களிலிருந்து தத்து எடுத்துக் கொள்வதாகவும் சொன்னான். அந்த விதத்தில் அவர்கள் வித்தியாசம் பாராமல் பல வேறு நாட்டுக் குழந்தைகளையும் அடாப்ட் செய்து கொள்கிறார்கள் .நன்றாக வளர்க்கவும் செய்கிறார்கள்.

மகிழ்ச்சியோடு இருக்கும் அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.
நாங்க பார்த்த இந்த அம்மா தனியாகவே ஆல்ப்ஸ் மலைகள் எல்லாம் போவாங்களாம். ஜெர்மனியிலிருந்து இங்க வந்து திருமணம் செய்து கொண்டவங்க, இரண்டு மகன்கள். பக்கத்திலேயே வசித்தாலும் வந்து
பார்ப்பதில்லை. உன்மகன் இப்படிக் கையைப் பிடித்து அழைத்துப் போறானே. யூ ஆர் லக்கினு சொல்லிக்கொண்டே வந்தாள்.

வயது கேட்கவில்லை.அவள் சொன்ன வருடக் கணக்குப்படி அறுபதை, நான்குவருடங்கள் முன்னாடியே தாண்டிவிட்டாள் என்று தெரிந்தது.
இதுவும் ஒரு ஏறி இறங்கின அனுபவம்தான்.





25 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

கண்திருஷ்டி பிள்ளையாரே எங்க வல்லியம்மா குடும்பத்துக்கு கொஞ்சம் கண்பாரும்.எந்த திருஷ்டியும் வரக்கூடாது.படங்கள் சூப்பர் அம்மா. நாங்களே போனது போல் இருக்கிறது.மக்னும் மருமகளும் கூப்பிட்டுகொண்டே இருக்கிறார்கள்.ஆகையால் அக்டோபர் மாதம் மறுபடியும் நாங்கள் சிங்கை விஜயம். அப்படியே கிழக்கு நாடுகள் சுற்றுலா.

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நன்றி தி.ரா.ச. இந்தப் பாசத்துக்கு கொடுப்பினை இருக்கே. அவங்களைப் பார்த்தால் பாவமாயிருந்தது. நம்ம வழக்கங்கள் ஒண்ணும் புரிஞ்சுக்க முடியலை.

தான்,தன் அழகு,உடல் ஃபிட்னஸ் இதைத்தான் பார்க்கிறார்கள்.
நாம் இந்த விஷயத்தில் உல்டா.
நம்மளாஇ விட்டுடுவோம் குழந்தைகளைப் பார்ப்போம்.

சிங்கை போய் வாருங்கள் ஒரு மாறுதல்தானே. நல்ல அனுபவமாக இருக்கட்டும்.

ambi said...

nice pictures and narration too.
hope your family won't get dhrishti as TRC sir mentioned. :)


@TRC sir, 2 tickets extra, he hee, naangalum singapore paathathillai. :p

Geetha Sambasivam said...

அட, வல்லி, கையில் வெண்ணெய் வச்சுட்டு, நெய்க்கு அலைந்த கதையா உங்களை விட்டுட்டு, எங்கேயோ போய் அலைந்து திரிந்தேனே? வைகானசத்துக்கும், பாஞ்சராத்திரத்துக்கும் வழிபாட்டு முறையில் என்ன வேறுபாடு? கொஞ்சம் சிதம்பர ரகசியம் பதிவிலே புதுசா இப்போ எழுதி இருப்பதைப் படிச்சுட்டே எனக்கு விளக்கம் கொடுங்க. அவசரம் இல்லை. இது தெரியாமல் அடுத்த பகுதி எழுத முடியாது போல் இருக்கு! :)))))))

Geetha Sambasivam said...

@ஆப்பு, இன்னும் ஓசிப் பிழைப்பை விடலியா? :P

துளசி கோபால் said...

தனிமை ரொம்பக் கொடுமை. அதிலும் ரொம்ப வயசான பிறகு இன்னும்
ரொம்பவே கொடுமைப்பா.

எல்லாருக்கும் தனிமனித சுதந்திரம் ச்சின்னவயசுலே பழகிப்போறதாலே
நாம் 'பாசம்'ன்னு நினைக்கும் விஷயத்துக்கு மோசம் வந்துருது(-:

படங்கள் அதி சூப்பர். புகைப்படவகுப்பில் சேர்ந்தபிறகு ரொம்பவும் தேறிட்டீங்க:-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. அமரதாரா ஷெல்ஃப்ல தான் இருக்கும். சாமி பகவானே புத்தகங்களைக் காப்பாத்து.

வல்லிசிம்ஹன் said...

http://www.ibiblio.org/sripedia/ebooks/vdesikan/saranagati_deepika/32.html

கீதா, சில வைணவ திருப்பதிகளில் பாஞ்சராத்திர முறையும்,சில இடங்களில் வைகானச முறையும் பின்பற்றப்படுவதுதான் எனக்குத் தெரியும். இது கோவில் கட்டப்பட்ட காலத்திலிருந்தே நடைமுறைக்கும் வந்துவிடுகிறது. உங்கள் அளவுக்கு எனக்கு இந்த விஷயத்தில் ஞானம் போதாது.

மேலெ கொடுத்துள்ள லின்க்

இந்த முறைகளை விளக்கமாகச் சொல்கிறது.
நன்றி கீதா.

ambi said...

//வைகானசத்துக்கும், பாஞ்சராத்திரத்துக்கும் வழிபாட்டு முறையில் என்ன வேறுபாடு? //

@கீதா பாட்டி, கைலாச யாத்ரையின் போதும் காப்பியை மறக்காத வரைக்கும் இரண்டுக்கும் வேறுபாடு தெரிந்து என்ன ஆக போகுது? :)))

"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சார்த்தியே
சுற்றி வந்து முணுமுணுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன்
(மனதில்)உள்ளிருகாயில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"

என்ன பாட்டி, ஐயம் நீங்கியதா? இல்ல இன்னும் வேணுமா? :p

இத நான் சொல்லலை,

சிவ வாக்கியர் என்ற சித்தர் சொன்னது.

@valli madam, இந்த பாட்டை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க வல்லிம்மா? ( நாரதர் வேலைய காட்டிட்டு தானே கிளம்புவோம்) :)

Geetha Sambasivam said...

@ஆப்பு, நியாயமாப் பார்த்தா உங்களைக் கேட்டிருக்கணும், இந்தக் கேள்வியை, இப்போத் தானே கல்யாணம் ஆகி இருக்கு, மாமனார், மாமியாரிடம் இன்னும் பயம் போயிருக்காதேன்னு நினைச்சேன். தப்புனு இப்போப் புரியுது! :P

Geetha Sambasivam said...

Thanks Valli, for the link.

வல்லிசிம்ஹன் said...

அம்பி இந்தப்பாட்டு சிவாஜி பராசக்தில வசனமாப் பேசுவார்னு நினைக்கிறேன்.
இல்லை எஸ் எஸ் ஆரோ.
ஆனால் நல்ல பாட்டு. நமக்குள்ளேயே நமசிவாயம் இருக்கையில் வெளீல ஏன் தேடறேனு சொல்ற மாதிரி கருத்துவருது இல்லையா. நமக்கு கல்லு முன்னாலே நின்னாத்தான் கொஞ்சமாவது புத்தி ஒருமைப் படும். இல்லாட்டா அது தறிகெட்டு எங்கியோ போய்விடும். சரியா அம்பி.தான்க்ஸ்பா.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க்கைமுறை வேறுபாடுகள் விளங்கியது...

படங்கள் மிகவும் அருமை அம்மா...

சசிகலா said...

எங்க மகன் ரொம்ப ஆதரவா என்னைக் கைபிடிச்சு அழைத்துப் போவதைப் பார்த்து கன்னத்தில் கைவைத்து அதிசயப் பட்டார்.

இப்படி அன்பான பிள்ளைகளை பெற்ற பெருமை நம் நாட்டிற்கு மட்டுமே சொந்தமான ஒன்று என்பது என்ன அழகாக இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. நன்றிங்கம்மா.

கோமதி அரசு said...

அவங்க முட்டி மாற்றுச் சிகித்சை முடிந்து மலையேற வந்து இருக்கிறார்.
எங்க குடும்பம் ரொம்பப் பிடித்துவிட்டதாம்.அதனால் எல்லா சப்ஜெக்ட்டையும் விடாமல்,பொட்டு வைப்பதிலிருந்து ஆரம்பித்து,
டிவோர்ஸ் விகிதாசாரம் வரை அலசிவிட்டுத் தான் விட்டார்.//

நல்ல பயண அனுபவம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன்.உண்மைதான்
அவர்கள் வாழ்க்கையை அணுகும் விதமே வேறுவிதம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சசிகலா.

எத்தனையோ கருத்து வேறுபாடுகள் வந்தாலும் நம்மால் குழந்தைகளின் பாசத்தை விட்டுக் கொடுக்க முடியாது.டிசிப்ளின் என்ற பெயரில் தனிப்படுத்திவிடுகிறார்கள் தங்கள் குழந்தைகளை.பிறகு ஒட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.:(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. படிப்பினை கொடுத்த பயணம். ஏதோ சோகமாக இருந்தது அவர்களைப் பிரிந்ததும்.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை.

மனோ சாமிநாதன் said...

அழகாக எழுதியிருக்கிறீர்கள்! புகைப்படங்களும் அழகு! இரண்டு வருடங்கள் முன்பு சென்ற ஸ்விட்ஸர்லாந்து பயண அனுபவங்கள் நினைவுக்கு வந்தன!

ஸ்ரீராம். said...

புகைப்பட வகுப்பில் சேர்ந்திருக்கிறீர்களா? துளசி மேடம் சொல்கிறார்களே....

படங்கள் அருமை. சொல்லியிருக்கும் சம்பவத்திலிருந்து வித்தியாச மனிதர்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு ராமலக்ஷ்மி.இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ அது ஒரு ஸ்வர்க்க பூமி.அதில் நிறைய நாட்கள் இருக்க வேண்டாம். 15 நாட்கள் போதும்.
மீண்டு வந்து விடலாம்.நன்றி மா. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,பிட் போட்டியில் பங்கெடுத்துக் கொள்வேன் .பாடம் படித்ததில்லை. அவ்வளவுதான்.:)

மாதேவி said...

படங்கள் நன்று. அனுபவம் எங்களுக்கும் படிக்க கிடைத்தது.