Blog Archive

Wednesday, October 30, 2013

ஹாலோவீன் நினைவுகள்

பூஊஊஊஊஊஊஊஊ
குளிரில் கைகோர்த்த்படி சாக்கலேட்  கொடுக்கக் காத்திருக்கும் பாட்டி.:)
கமாண்டோ வீரர்
ராஜா வேஷம் போட்ட    டீச்சர் மைக்கேல்
வேடம் அணிந்த அம்மாக்கள் குழந்தைகள்
நாங்கள் இந்திய ராஜகுமாரிகள்
எல்விஸ் ப்ரஸ்லி!!!
ரெட் ரைடிங் ஹூட்!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, October 28, 2013

204,ஸ்டான்சர்ஹார்ன் குன்றுகள்

2007ilஇல் ஏறிய பாதை!!!!!!!!!!
photo taken  from  Funicular car
Add caption
Add caption






























Add caption
சாதாரணமாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில்,வீட்டை விட்டுக்கிளம்புவது பிரயத்தனம் தான். சின்னவனுக்கோ எங்களை அழைத்துக்கொண்டு வெளியே போக முடியவில்லை என்று யோசனை...... குட்டிப்பாப்பாவுக்கு பெரியவங்களைப் போல வண்டிலப் பிரயாணம் செய்யப்பிடிக்கும்.ஆனால் தன்னோட தள்ளுவண்டில உட்கார்ந்து வருவதுபிடிக்காது.எப்போழுதும்போல்
பார்த்த இடங்களையே பார்க்காமல்


புதிதாக இந்த ஸ்டான்சர் குன்றுகளுக்குப் போகலாம் என்று ஒரு ஞாயிறு காலை கிளம்பினோம்.
லூசர்ன் எனும் நகருக்கு முதலில் போய், பிறகு இந்த மலையேறும் வண்டியைப் பிடித்தோம். வெய்யில் செமை போடு போட்டுக் கொண்டிருந்தது.
மலைப்பாதைப்பயணக் கேபிள் காரில் ஏறி ஒரே அலாக்காகக் கொண்டு போய் விடப்பட்டோம்.

அங்கிருந்து ஒரு அரைமணிநேர ஹைகிங்க். குன்றின் மேல் ஏறி சிகரத்துக்குப் போனதும் ஏறிவந்த களைப்புப் போச்சு.
வரவழியில ஒரு இந்த ஊரு அம்மாவேறு எங்களோட சேர்ந்துவிட்டார்.
நிற்காமல் பேசியதில் காலும் காதும் கடுத்துப் போயின.
அவங்களுக்குப் பிள்ளைங்க அவ்வளவு சொஸ்தமில்லையாம்.
எங்க மகன் ரொம்ப ஆதரவா என்னைக் கைபிடிச்சு அழைத்துப் போவதைப் பார்த்து கன்னத்தில் கைவைத்து அதிசயப் பட்டார்.

அவங்க முட்டி மாற்றுச் சிகித்சை முடிந்து மலையேற வந்து இருக்கிறார்.
எங்க குடும்பம் ரொம்பப் பிடித்துவிட்டதாம்.அதனால் எல்லா சப்ஜெக்ட்டையும் விடாமல்,பொட்டு வைப்பதிலிருந்து ஆரம்பித்து,
டிவோர்ஸ் விகிதாசாரம் வரை அலசிவிட்டுத் தான் விட்டார்.

இந்தியாவுக்கு வந்தால் சென்னைக்குக் கண்டிப்பாக வருவதாகச் சொன்னார்.
இத்தனைக்கும் பேரு ஊரு தெரியாது எனக்கு.
மகன் கண் காட்டியதால் வீட்டு நம்பர்,விலாசம் எல்லாம் கொடுக்காமல் விட்டேன்.
இவங்க எல்லாம் பொதுவா கலர் மங்கி இருப்பவர்களிடம் பேசமாட்டார்களே
இந்த பெண்மணி மட்டும் ஏன் இவ்வளவு ஒட்டுகிறார் என்று மனம் ஓடியது.
அப்போது பிடித்த பேச்சு பழையபடி லூசர்ன் நகர எல்லையில் தான் விட்டது.
முன்ன பின்ன தெரியாத மனிதர்களிடம் பேச வைத்தது அவர்களின் தனிமை தான் என்று தோன்றியது.

இங்கேயே வயதானவர்களோடு, நடுவயததக் கடந்தவர்களுடன் குழந்தைகளைக் காண முடிகிறது. இந்த நிலைமமயயப் பார்த்து மகனிடம் விசாரித்தேன்.
அப்போதுதான் இவர்களின் வாழ்க்கைமுறை வேறுபாடுகள் விளங்கியது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழுபவர்கள் அதிகம் என்றும் ,வரிவிகிதாசாரம் அதிகமமகிவிடுவதாள் பாய்ஃப்ரண்ட்
கேர்ள்ஃப்ரண்டாகவே இருந்து விடுவதாகவும் சொன்னான்.

 அந்த வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் பிறகு முதுமையை நெருங்கும்போது குழந்தைகளைக் காப்பு இல்லங்களிலிருந்து தத்து எடுத்துக் கொள்வதாகவும் சொன்னான். அந்த விதத்தில் அவர்கள் வித்தியாசம் பாராமல் பல வேறு நாட்டுக் குழந்தைகளையும் அடாப்ட் செய்து கொள்கிறார்கள் .நன்றாக வளர்க்கவும் செய்கிறார்கள்.

மகிழ்ச்சியோடு இருக்கும் அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.
நாங்க பார்த்த இந்த அம்மா தனியாகவே ஆல்ப்ஸ் மலைகள் எல்லாம் போவாங்களாம். ஜெர்மனியிலிருந்து இங்க வந்து திருமணம் செய்து கொண்டவங்க, இரண்டு மகன்கள். பக்கத்திலேயே வசித்தாலும் வந்து
பார்ப்பதில்லை. உன்மகன் இப்படிக் கையைப் பிடித்து அழைத்துப் போறானே. யூ ஆர் லக்கினு சொல்லிக்கொண்டே வந்தாள்.

வயது கேட்கவில்லை.அவள் சொன்ன வருடக் கணக்குப்படி அறுபதை, நான்குவருடங்கள் முன்னாடியே தாண்டிவிட்டாள் என்று தெரிந்தது.
இதுவும் ஒரு ஏறி இறங்கின அனுபவம்தான்.





Sunday, October 27, 2013

மாதா துளசி,சுந்தர நாராயணனும் மஹாலக்ஷ்மியும் கோவில் கொண்டது நாசிக்கில்

கோவிலின் பழைய படம்
ஸ்ரீதுளசி மாதா நாராயணனுடன் இருக்கும் ஒரே கோவில்
தேடிக்கண்டுபிடிக்க  வேண்டுமாம்.

 திரு வேளுக்குடி அவர்களின் ஸ்ரீராமனின் பாதையில் இன்று கேட்டுப் பார்த்துக் கொண்டிருந்த போது,
அதிசயமான   தகவல் கிடைத்தது.

இதுநாள்  வரை  பிருந்தா எனும் துளசி மாதா ,
இறைவன் கழுத்தில் மாலையாகத் தான் பார்த்திருக்கிறோம்.
வீட்டில் இருக்கும்  துளசி மாடத்தில் பூக்கள் அர்ச்சிக்கும் போது
அவளது தூய்மையை  உணர்வோம்.

நானும் தோழி துளசியும் பேசும்போது  ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளுக்கென்று எல்லாக் கோவில்களிலும் தனி சந்நிதி இருக்கும்.
அரங்கனோடு சேர  ஆசைப்பட்டவளுக்கு ஏன் தனி சந்நிதி.
அதுவும் மங்கலான  விளக்கில்,
அர்ச்சனை செய்ய  பட்டாச்சாரியரை அழைத்துவர வேண்டிய நிலை.

அவள் என்றொ அரங்கனைச் சேர்ந்துவிட்டாள். கோவில்களின் ஏற்படுகளைத் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை.

அவளும் துளசிவனத்தில் தோன்றியவள்தானே.
என்னவெல்லாமோ எண்ணங்கள்.

அதற்கு மாற்றாக  இன்று துளசியம்மாவை அவள் நாயகனுடன் பார்த்தது மிக மகிழ்ச்சி கொடுத்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் காட்சி கொடுப்பது போல
இந்தநாசிக்கில் துலஸி மாதாவுக்குக் கர்ப்பக் கிரஹத்திலியே

ஆராதனை நடப்பது மிகவும்  அற்புதம்.
கூகிளில்  தேடிக்  கிடைத்த படங்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதைப் பற்றிய விவரங்களை    பண்டிட் ஒருவர் இந்தியில் விளக்கினார்.  அதனால்  அப்போது புரிந்தாலும்  மறந்துவிட்டது;(

மீண்டும் தேடினால்  கிடைக்கும்!!



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, October 25, 2013

புதிரான புதிர் இன்னும் 6 நாளில் ஹாலோவீன்!

என்னை யாரென்று எண்ணி எண்ணி  நீ பார்க்கிறாய்.பொட்டு வச்சவிட்ச்:))))
யார் இது?

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Tuesday, October 22, 2013

கலியுக வரதன் கண்ணன் காட்சி கொடுப்பது காஞ்சியிலே



 இன்று காலை கேட்ட செய்தி உலக மகா  குருவின்
காருண்யமும்  தீர்க்க தரிசனமும் பற்றி மீண்டும்
அறிய  அதிர்ஷ்டம் வாய்த்தது.

தினம் தினம் கேட்கும் நற்செய்திதான்.
சில மகிமைகள்  மனதை விட்டு அகலுவதில்லை. நம்பிக்கையும் விசுவாசமும் பலப்படுகின்றன.

ஒரே ஒரு செய்தியை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

திரு கணேஷ் சர்மா   மனம் நிறைந்த பக்தியுடன் சொல்லும்போது
மனம் நெகிழ்கிறது.
கன்னட  மாநிலத்தில் மஹா ஸ்வாமிகளின்  சஞ்சாரத்தின்போது
நிகழ்ந்த  ஒரு நிகழ்ச்சி.
மஹா ஸ்வாமி நதி ஒன்றில் தீர்த்தமாடி எழுந்திருக்கும் போது தன்னுடன் நீராடிய இருவரை அவர்களின் மேல்  அங்கவஸ்திரத்தை படித்துறையில் கழட்டிப் போடும்படி சொன்னார்.
குருவின் வார்த்தைக்கு மறுப்பேது.
உடனே அவ்வாறே செய்தார்கள்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த  ஒரு சிறுவனைக் கன்னடத்தில்  பேசி அழைத்து,
எங்களுக்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில் ஒரு அம்மா இருக்கிறார். அவரிடம் இந்தத் துணிகளை க்  கொடுத்துவிடு என்று சொல்லி அந்த இடத்தை விட்டு விரைந்து  சென்றுவிட்டார்.
அந்த விளையாட்டுப் பிள்ளையும் ஸ்வாமிகள் சொன்ன அம்மாவைத் தேடிச் சென்று நதியின் தண்ணீரில் கழுத்தளவு   மூழ்கி இருக்கும்  அவஸ்தையில் கண்டு அவரிடம் கொடுத்துவிட்டு வந்து விட்டான்.
உண்மை என்றால் அந்த அம்மணி நதியின் வேகத்தில் தான் சுற்றியிருந்த ப்புடவையை இழந்து கரைக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
அவருக்குக்  கொஞ்சம்  தொலைவில் மஹா பெரியவருடைய குழுவினர்
வேறு நதியில் குளித்துக் கொண்டிருந்ததால் ,அந்த  அம்மாவால் வெளியே
வெளியே வரமுடியவில்லை.

இதை  நம் ஸ்வாமி உணர்ந்ததுதான் அதிசயம்
அன்றொரு நாள் துரௌபதியின்   மானம் காத்த கண்ணனாக

தன்னிடம் அடைக்கலம் கேட்காமுடியாமல் அவஸ்தைப் பட்டுக்
கொண்டிருந்த ஒரு ஜீவனின்    மானத்தை ரட்சித்தார் .

என்ன ஒரு கருணை. என்ன ஒரு சர்வஞானம். ஜய ஜய சங்கரா.
ஹரஹர சங்கரா.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, October 21, 2013

நிகழ்வுகள் 2013

நாங்கள் ரெடி   குழந்தைகள்   எங்கே?
தாம்பூலப் பைகள்   தயார்
கண்ணன் பிறந்தான்
நவராத்திரி நம்ம வீட்டுது
பேத்தியின்   கொலு
தாம்பூலத்திற்கான ஏற்பாடுகள்
சுதந்திர தினக் கொண்டாட்டம்
கடவுள்   வந்தார்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Friday, October 18, 2013

ஐப்பசி நிலா+ முழுநிலா 18 அக்டோபர்

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
பொங்கிவரும் பெருநிலவு


 வெளியே உறவினர் வீட்டுக்குப் போய் வரும்   போது மாலை ஆகிவிட்டது.
திடிரென்று மேலே பார்க்கிறேன்!மேகமில்லாத நீலவானில் சதுர்த்தி நிலா வந்து நிற்கிறாள்.
அப்பாடி இது போலப் பார்த்து எத்தனை நாளாச்சுமா.

ஓஹோ தேடி தேடி அலைபவளுக்கு ஒரு தடவையாவது ஒழுங்காகக் காட்சி அளிக்கலாம்னு கருணை வந்துவிட்டதோ அம்மாவுக்கு!!!
இருப்பதோ  ஓடும்   வண்டியில்.
அந்த மஞ்சளழகியைப் பார்ப்பது  எவ்வளவு  இதம்!

கொஞ்சமாக வெள்ளைத்   துகிலை எடுத்துப் போர்த்திக் கொள்ளத்  தொடங்கினாள்.
முடிந்தவரை  கையை ஆடாமல் பார்த்துக் கொண்டு
படம் பிடித்தேன்.
இன்று பூரண நிலா.பார்க்கலாம் என்ன வேடிக்கை நடக்கிறது என்று.:)


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்