About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, September 28, 2013

அழகன் என் தம்பி

இனிய 61 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள்.சொர்க்கத்தில் எல்லோரும்சுகமாப்பா?

 அன்பு ரங்கன்  என்  தம்பி

அன்பைத் தவிர வேறொன்றும் அறியாதவன்.

எப்பொழுதும் எல்லோருக்கும் விட்டுக் கொடுப்பவன்.
அறுவைக் கடியால் ஆட்களைக் கொல்லுவான்:)

அடிக்கப் போனால் பார்த்து வா. கல்தடுக்கி விழுவாய்
என்று கேலி பண்ணுவான்.

அண்ணாவுக்கு உடம்பு சரியில்லை,
உடனே ஸ்கூட்டர் ப்றக்கும். தானும் அடிபட்டுக் கொள்வான் .
வலியும் தாங்கி,அந்த மருத்துமனையிலேயெ கட்டும் போட்டுக் கொண்டு
எல்லாரிடமும் ஏவலன் காவலன்,ஆறுதல் சொல்பவனாக   மாறிக்
கொண்டே இருப்பான்.

அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தால் இரவு நேரம் கூட இருப்பது  அவன்தான்.

அவனுக்கு என்று  எமன் வந்தபோது நாங்கள் யாரும் அருகில் இல்லை.
அதையும் மன்னித்து இருப்பான்.
என்னடி செய்யறது. 

சொல்லிக் கொண்டா  சாகமுடியும் என்று ஜோக் சொல்லுவானாக இருக்கும்.

என் அருமை தம்பி, காத்திரு நாங்களும் வந்துவிடுவோம்.

உனக்காக  உனக்குப் பிடித்த முந்திரி மிக்சர்  யாருக்காவது வாங்கிக் கொடுக்கிறேன்.
அன்னதானமும் சொல்லியாச்சு.
திருப்தியா!!

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

சொல்லிக் கொண்டா சாகமுடியும் என்று ஜோக் சொல்லுவானாக இருக்கும்.

மனம் கனக்கிறது..!

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் உள்ள வலி புரிகிறது அம்மா...

Manjubashini Sampathkumar said...

படிக்கும்போதே ஏனோ அழுகை வருகிறது. அன்பு நிறைந்த மனிதர். இன்று சொர்க்கத்தில்.. இந்த பூமியில் இருந்தவரை எல்லோருக்கும் நல்லதே நினைத்த அற்புத மனசு. எல்லோரையும் சிரிக்கவைத்தார் உயிருடன் இருக்கும்வரை. உயிர்விட்டபோது அருகில் யாருமே இல்லை.... முந்திரிமிக்சர் பிடிக்குமா...

நானும் வேண்டிக்கறேன். அவர் இருக்கும் இடத்தில் எல்லோருமே சுபிக்‌ஷமாக இருக்க...

இந்நேரம் இறைவனின் கட்டளைப்படி நல்லக்குழந்தையாக வேறு யாருக்கோ மகனாக பிறந்திருக்கலாம். தன்னை சுற்றி இருப்போரை இதுபோலவே மகிழ்வோடு வைத்திருக்கலாம். அன்பை வளையமாக்கி அதற்குள் எல்லா மனங்களையும் வசப்படுத்தி இருக்கலாம்...

அவர் நினைவு நாளை இத்தனை அன்புடன் பகிர்ந்த வல்லிம்மா என் கோடி நமஸ்காரங்கள்.

எனக்கும் அவரை பார்க்கவேண்டும். நீங்கள் சொன்னது போலவே நானும் வருவேன் அன்பு மனம் கொண்ட ரங்கன் அண்ணாவை பார்க்க.என்னை இறைவன் அழைக்கும்போது.....

துளசி கோபால் said...

இந்த ரங்கன் அங்கே ஜாலியா நித்யசூரி வரிசைகளில் அந்த ரங்கனோடு இருப்பார். நமக்கு ஒரு இடம் ரிஸர்வ் செஞ்சு வைக்கும்படிக் கேட்டுக்கலாம்.

மனபாரத்தை இப்படி எதாவது சொல்லி சமாளிக்கணும் இல்லையாப்பா:(

ஸ்ரீராம். said...

பகிர்தலில் மனபாரம் குறைகிறது. மேலேயிருந்து உங்கள் அன்பைப் பார்த்துக் கொண்டிருப்பார் உங்கள் தம்பி.

ராமலக்ஷ்மி said...

தங்கள் நினைவுகளில் இன்னும் வாழ்ந்து வருகிறார்! நெகிழ்வு.

Ranjani Narayanan said...

என்ன ஒரு இழப்பு! நம்மைவிட சின்னவர்கள் நம்மை முந்தும்போது என்ன செய்வது? கண்கள் கசிந்துவிட்டன, வல்லி!

மீண்டும் பிறப்பில்லாமல், பரமபதநாதனுக்கு முக்தாத்மாவாக சேவை செய்துகொண்டு இருக்கட்டும்.

மாதேவி said...

உங்கள் அன்புத் தம்பியின் நினைவலைகளில் நாங்களும்.

Geetha Sambasivam said...

:( எவ்வளவு அருமையாக இருந்தால் தொடர்ந்து பல்லாண்டுகளாக நினைவு கூர்வீர்கள்! அவருக்குக் கொடுத்து வைக்கலையா, உங்களுக்கானு புரியலை. மொத்தத்தில் இரண்டு பேருக்கும் தவிப்பு! :(( மனசெல்லாம் கலங்கிப் போகிறது. :(((