About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, September 27, 2013

வண்ணம் செய்யும் கோலம்.

கண்ணை மயக்கும் கறுப்பு
தாயங்கள்
கறுப்புவானும் வெள்ளைநிலாவும்
கறுப்புக் கண்ணாடியில்  வெள்ளைவானம்

 வெள்ளந்தி  என்ற வார்த்தைச் சினிமாவில் 
அடிக்கடி உபயோகமாகும்.
அதி அப்பாவியான,
சிலசமயம் அசடான   பெண்ணைப் பற்றித் தான்
இந்தப் பேச்சு இருக்கும்.(

அதுபோல இப்போது யாரும் கிடையாது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

கிராமங்களில் கூடச் சமர்த்துப் பெண்கள் தான் இருக்கிறார்கள்.
என் தோழியைப் பற்றி  முன்னொரு பதிவு போட்டிருந்தேன்.
அதையெல்லாம் தேடி எடுக்கும் பொறுமை (மற்ற வல்ல எழுத்தாளர்கள்  போல)
எனக்குக் கிடையாது.
15 வருடங்கள் முன்  என்னைத் தேடிவந்தாள் கணவருடன்.

அன்பு வெள்ளம் என்றால் தூய அன்பு.
பள்ளியில்  படிக்கும் போது வீட்டுக் குதிரை வண்டியில் தான் வருவாள்.
அச்சு அசல் அந்த நாளைய சரோஜாதேவி போல
இரட்டைக் குட்டை ஜடை போட்டு வாசமான பிச்சிப்பூவைத்து

கறுப்பு முகமும் வெள்ளைப் பற்களும் அழகு அள்ளிக் கொண்டு
போகும்.
எங்களை எப்போதும் சேர்த்துதான் பார்க்கமுடியும்.
பள்ளிவாழ்க்கை முடிந்து கல்லூரிக்காகப் பிரிந்தோம்.
அவள் கல்லூரிப் பட்டம் வாங்கித் திருமணம் முடித்து ஆரணிக்குப் போய்விட்டாள்.

எனக்கு எழுதும் கடிதங்களில் ஆசைப் பவுர்ணமியே
என்று கவிதையாக  எழுதி முடிக்கும்போது
எப்பவாவது உன்னைப் பார்க்கக் காத்திருக்கும் அமாவாசை
என்று முடிப்பாள்.
என் தந்தை  அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, ஏன் அந்தப் பெண்ணிற்கு
இவ்வளவு வருத்தம் என்றார்.

இல்லப்பா,அவளுக்குச் சுதந்திரம் போதாது.வீட்டில் கடைசிப் பெண்.
மூன்று அண்ணன்கள் .
நல்ல பணம் இருந்தும்  கறுப்பு என்ற ஒரே  காரணத்துகாக்த் திருமணம் தள்ளிச் சென்று 21  வயதில்  ஒரு துணிக்கடை முதலாளிக்குத் திருமணம்
செய்துவைத்தார்கள்.
வியாபாரம் நொடித்தும்,
பிறகு ஏதோ மண்டிவியாபாரம் என்று எடுத்துச் செய்து கொண்டிருக்கும் நாட்களில் இரு பெண்களும் ஒரு பையனும்   பிறந்தார்கள்

நல்ல படிப்புப் படிக்க  வைத்தாள்
இரண்டு பெண்களுக்கும்திருமணம் செய்து வைத்தது  தெரியும்.
இவ்வளவும் நுணுக்கி எழுதின கவர்   இன்னும் இருக்கிறது.
என் அருமை
சாந்தி  எங்க  இருந்தாலும் நன்றாக இரு.

இப்பொழுது  இந்த கொசுவத்திக்குக் காரணம்
காலையில் மீண்டும் தலையெடுத்த
கறுப்பு வெள்ளை.

எங்கள் வீட்டு உதவிக்கு  வரும்  ராணியின்  சித்தி பையன்
ஏழுமலை.
அவனுடைய  23 வயதில்  அவனுடைய பணக்கார சிங்கப்பூர் அக்கா,
வீட்டுக்கு அடங்கின பையனா இருப்பான்
என்று தன் இரண்டாவது பெண்ணுக்குத் திரும்ணம் முடித்துவைத்தாள். வீட்டைப் பார்த்துக் கொள்ள,வரிகட்ட, ரிப்பேர்களைச் சரி செய்ய
ஒரு ஹேண்டிமன்  ஆக அவனும் செயல்பட்டான். மதுப் பழக்கம் பிடித்துக் கொண்டது.
காரணம், மனைவியின்    வண்ண   அழகும் இவனுடைய பழுப்புக் கலருமாம்.
இதைத் திருமண காலத்திலியே சொல்லி இருக்கலாம் அந்தப் பெண்.

அப்போது மாமாவை அவளுக்குப் பிடித்ததாம். ரஜினி மாதிரி இருக்காரு என்று சொல்லி மகிழ்ந்தவள்
நம்ப முடிகிறதா..
இவர்கள் வழக்கைத் தீர்த்துவைக்க சிங்கப்பூர் மாமியார் வந்திருக்கிறாள்.
பேச்சு வார்த்தை தடித்திருக்கிறது.

பெண்ணைச் சிங்கப்பூருக்கே அழைத்துச் செல்வதாக்ச் சொன்னதும் மனமுடைந்த ஏழுமலையின் முடிவுக்குக் கெரசின் உதவி செய்தது.

கிராமத்திலியே இருந்து விவசாயம் செய்து அங்கயே ஒரு பெண்ணை க் கல்யாணம் முடித்திருப்பான். அவனை இழுத்தது பட்டணவாசம்.

வாழ்வை முடித்தது   அறியாமை எனும் கறுப்பு. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாமை கொடுமை...

துளசி கோபால் said...

என்னப்பா ஆச்சு அந்த ஏழுமலைக்கு?
மனசு திக் திக்ன்னு அடிச்சுக்குது:(

ராஜி said...

பாவம் ஏழுமலை

Manjubashini Sampathkumar said...

இன்னைக்கு என்ன புதுசா போட்டிருக்கீங்கன்னு தலைப்பை பார்த்துட்டு வந்தேன் வல்லிம்மா..

வண்ணம் செய்யும் கோலம்னு சொல்லிட்டு...

கவிதையாய் எழுதும் வெள்ளந்தித்தோழியின் அமாவாசை மனதிலும் தூய அன்பை அழகாய் ப்ரதிபலித்தது உங்க வரிகள் வல்லிம்மா..

எங்கிருந்தாலும் நன்றாயிருக்க என் அன்பு வாழ்த்துகளும்...

என்ன தான் நிற வேறுபாடு பிரச்சனை வந்தாலும்... வாழ்க்கை இல்லையா?

வாழ்க்கையில் கல்யாணம் கைக்கோர்த்தப்பின் மனமும் சேரும்னு தானே நினைத்தேன். நிறம் என்ன தரும்? காசு தருமா? கறுப்பும் ஒரு நிறம் தானே? அதுவும் அழகு தானே? இதை ஏன் யாரும் அறிய மறுக்கிறார்கள்?

வாழ்க்கையை வெகு ஈசியாக இந்தக்காலத்துப்பிள்ளைகள் தாங்களே வகுத்துக்கொள்கிறார்கள் வேண்டும் என்றால் இணையவும் வேண்டாம் என்றால் பிரிக்கவும்..

கஷ்டமாக இருக்கிறது...

அன்பு நன்றிகள் வல்லிம்மா அழகிய கறுப்பு வெள்ளை படங்களுக்கும் “ கூலிங்கிளாஸ் யாருது? :) “ பகிர்வுக்கும்..

வெங்கட் நாகராஜ் said...

பாவம் ஏழுமலை....

ஸ்ரீராம். said...


என்ன கொடுமை.

இராஜராஜேஸ்வரி said...

வண்ணம் த்ந்த கோலம்
வருந்த வைத்தது..!

அப்பாதுரை said...

கண்ணாடிப் படம் பிரமிப்பா இருக்குதேனு பிரமித்தால் கதை உலுக்கு எடுத்துடுச்சு.

ஆசைப் பவுர்ணமியே - எத்தனை அற்புதமான சொல்லாடல்! ப்ரிஸ்டீன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன்.அந்தப் பையன் இங்கேயே நிறைய வேலை எல்லாம் கற்றுக் கொண்டான்.ரொம்ப சாமர்த்தியம். இருந்திருந்தால் 36 வயதுதான் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஏழுமலை இல்லாதவனாகப் போய்விட்டான் துளசி.
தினம் யாராவது ஏசிக் கொண்டே இருந்தால் ,அவனுக்குப் பொறுக்க முடியவில்லை. ஐந்த் நாட்கள் பொது மருத்துவமனையில் பூரண நினைவோடு இருந்து, கூடவே இருந்த தங்கையிடம் சொல்லி அழுதிருக்கிறான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராஜி.

நலமாப்பா. அம்மா நலமா.சீக்கிரம் குணமடைய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மஞ்சுமா,

வண்ணம் என் தோழிக்கு ஒரு கவலை இல்லை. நல்ல மன உறுதி கொண்டவள்

அன்பு வெள்ளம்.அதில் நான் திக்கு முக்காடுவேன்.என்னுடன் உட்கார்ந்து மதிய சாப்பாடு சாப்பிடும்போது, அசைவம் ஏதாவது அவளுடைய சாப்பாட்டுக் கூடையில் இருந்தால் ஒதுக்கி வைத்துவிடுவாள்.

பொருந்தாத மனங்களைச் சேர்த்தது பெரியவர்களின் தப்பு. ஏழுமலை மாட்டிக் கொண்டான்.
தற்கொலை என்பது சர்வ சாதாரணமாகப் போய்விட்டது. அவன் அம்மாவை நினைத்தால் கஷ்டம்.
அவள் பெயர் ஓயாமல்லி. நல்ல விவசாயக் குடும்பம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட். மன உழற்சிக்கு ஆளாகிப் பலியானான்.

வல்லிசிம்ஹன் said...

முன்பெல்லாம் இப்படிக்
கிடையாது ஸ்ரீராம்.
இப்பொழுது நவநாகரீகம்,தொலைக்காட்சி,சினிமாப் பைத்தியம் எல்லாம்தான் காரணம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் இராஜராஜேஸ்வரி. கறுமை நிறக் கண்ணானு பாடுவார்கள். வாழ்க்கைக்கு அது பொருந்தாது போல.
அந்தப் பையனுக்குச் சிங்கப்பூர் போவது பிடிக்கவில்லை. பாஸ்போர்ட்,விசா,பயணச்சீட்டு என்று வரவும் தளர்ந்துவிட்டான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை.
அவ்வளவு நல்ல தமிழறிவு அவளுக்கு.
தமிழில் எப்போதும் எனக்கும் அவளுக்கும் மதிப்பெண் விஷயத்தில் போட்டிதான்.
அலங்காரத் தமிழில் அவள் கைவரிசையைக் காட்டுவாள்:)புத்திசாலி.
நீங்கள் ப்ரிஸ்டீன் என்று சொன்னதும் பொருத்தமே. எப்பொழுதும் வெண்மை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

ராமலக்ஷ்மி said...

வருந்த வைத்த சம்பவம்:(.

தோழி குறித்த பகிர்வு வாசித்த நினைவிருக்கிறது.

Kanchana Radhakrishnan said...

அழகிய கறுப்பு வெள்ளை படங்களுக்கும்.பகிர்வுக்கும் நன்றிகள்.

புலவர் இராமாநுசம் said...

பதிவுக்கு ஏத்த தலைப்பு!
நிகழ்வு மிகவும் கொடுமை!

மாதேவி said...

நிகழ்வு மனதை வருத்துகின்றது.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் இப்போது வழக்கமாகிவிடது
ராமலக்ஷ்மி. படித்தவர்களும் தற்கொலை...படிக்காத ஏழுமையும் தற்கொலை. அந்தந்த நிமிடத்து வாழ்க்கை முடிவு:(

வல்லிசிம்ஹன் said...

வரணும் காஞ்சனா . மனதிடம் இல்லாத ஒரு பரம்பரை வளர்ந்து வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் புலவர் ஐயா.
இறைவன் படைத்த வண்ணங்களால்
இத்தனை குழப்பங்கள் மனிதனால் கலக்கப்படுகின்றன.

Geetha Sambasivam said...

இது என்ன கொடுமை! மனசெல்லாம் வருத்தமாகி விட்டது. :(