About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, September 12, 2013

மழை பொழிகிறது மழை பொழிகிறது கேட்கவில்லையா!!!


வேகவைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு.
சாலையில் மழை
எங்கள் மதிய   டிஃபன்
மலரும் நனைந்தது
என் காலை உணவு வாட்டின சோளமும்சிறிது வெண்ணெயும்

 எங்கள் குழந்தைகள்   மழைப் பாட்டு பாடுவார்கள்.
''மழை பொழிகிறது
மழை பொழிகிறது
கேட்கவில்லையா கேட்கவில்லியா???????

படபட பட் பட் பட் பட்பட பட பட் ப பட்
நான் நனைந்தேன்.
நனைந்தே போனேன்:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

19 comments:

Ramani S said...

எங்களையும் தங்கள் பதிவு
நனைத்துப்போகிறது
படங்களுடன் பதிவு அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

கோவை2தில்லி said...

ஆஹா! வல்லிம்மா....படங்கள் எல்லாம் சூப்பராக போட்டு அசத்தறீங்க...

கோவையில் இருந்த வரை அப்பப்போ கடலை வேகவைத்து கொடுத்து விடுவார் அம்மா. தோலை உரித்து சாப்பிடக் கூட பொறுமையிருக்காது. அம்மா உரித்து தாம்மா... என படுத்தியெடுப்பேன். மரவள்ளிக்கிழங்கு வேகவைத்து கட் பண்ணி உப்பு காரம் சேர்த்து கறி மாதிரி செய்து சாப்பிடுவோம். பொரி வாங்கி காரம் போட்டு சாப்பிடுவோம்... மழைக்கால இனிமையான நினைவுகள்.

ராஜி said...

அந்த அவிச்ச வேர்கடலையையும், மக்காச்சோளமும் மட்டும் இப்படி தள்ளவும்!!

ஸ்ரீராம். said...

இப்போது என்னவோ இங்கு வெயில் காய்கிறது...! ரமணன் என்னடான்னா இடியுடன் மழை பொழியும். இடியில் மாட்டாமலிருக்க வாக்கிங் போவாதீங்கன்னு சொல்லியிருக்கறதா தொலைக்காட்சியில் சொல்றாங்க...

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு ரமணி. இன்று காலை சில்லென்று மழையும் இடியும்.

பிள்ளையாருக்கு வாங்கின சோளக்கதிர் சாப்பிடு என்று வற்புறுத்தியது:)

வல்லிசிம்ஹன் said...

கோவை சீதோஷ்ணத்துக்குக் கேட்பானேன் ஆதி.சாப்பிடாதவர்களையும் சாப்பிடவைக்கும்
எனக்குக் கூடப் பொரி மிக்சர் மிகவும் பிடிக்கும்.
எங்க மாமியாரும் வேகவைத்த கடலையை பேரன் பேத்திகளுக்கு உரித்துக் கொடுத்த வண்ணம் இருப்பார். கூடவே வெல்லமும், ஆரஞ்சுத் துண்டுகளும்:)

வல்லிசிம்ஹன் said...

ஓ அதுக்கென்ன, சென்னை வரவும்.உப்பு மிளகு தூவி,எலுமிச்சை பிழிந்து வெண்ணெயும் போட்டுத் தருகிறேன் ராஜி.
அவிச்ச கடலைக்கும் அதே ரூல்:)

வல்லிசிம்ஹன் said...

இப்போது வெயில் ஸ்ரீராம். காலையில் மின்னல் நிறைய இருந்ததே. என் தம்பியையே கோபித்துக் கொண்டேன். கிளம்பும்போது வானம் வெளுத்திருந்தது. பிறகுதான் இடி என்கிறான். இப்போது ஒன்றும் காணோம்!!!

Manjubashini Sampathkumar said...

மழையில் நனைந்துக்கொண்டே ஆஹா ஆஹா சர்க்கரைவள்ளிக்கிழங்கு வேகவெச்சு சுடச்சுட... அப்டியே வேகவைத்த வேர்க்கடலையும் சுட்ட சோளமும் ருசிக்கிறது வல்லிம்மா உங்கள் அன்பான பதிவில்... அற்புதம்... ஒரு மழை நாளில் வல்லிம்மா வீட்டுக்கு போனால் கண்டிப்பா எதிர்ப்பார்க்காத உணவு அன்பு தோய்த்து தருவாங்க. அது மட்டும் சத்தியம்....

ராமலக்ஷ்மி said...

கேட்கவில்லையா எனப் பார்க்க ருசிக்கத் தந்திருக்கிறீர்கள்:)! கடலையும் கிழங்கும் பிடித்தமானது.

இங்கும் நல்ல மழை.

மாதேவி said...

சோளமும் வேர்கடலையும் ஆகா! மழைக்கால மேகங்கள் இங்கும் பொழிகின்றன.

கோமதி அரசு said...

அருமையான மழை அனுபவம்.
பாட்டு, கேட்டு,கிழங்கை வேர்கடலையை, சோளகதிர் சுட்டது ருசித்து, மழையில் நனைந்த பூக்களை கண்டு மகிழ்ந்தேன் அக்கா.

வெங்கட் நாகராஜ் said...

இன்னிக்கு மதியம் இங்கே ஆந்தியுடன் கூடிய மழை. அலுவலகத்தில் அவித்த வேர்க்கடலைக்கும், சுட்ட மக்காச் சோளத்திற்கும் எங்கே போக! :(

துளசி கோபால் said...

அடடா.... வாய் ஊறுதே!!!!

அவிச்ச கடலைதான் பெஸ்ட்.

சக்கரைவள்ளி நான் 'அவன்'லே வச்சுருவேன்.

படங்கள் அருமையா வந்துருக்கு.

இனிய பாராட்டுகள்.

geethasmbsvm6 said...

படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு. இப்போத்தான் சில நாட்கள் முன்னே சர்க்கரை வள்ளிக்கிழங்கை நெருப்பிலே வாட்டிச் சாப்பிடறதைப் பத்திச் சொல்லிட்டிருந்தேன். :))) வேக வைத்த வேர்க்கடலை இப்போவும் உண்டு. :)

geethasmbsvm6 said...

தொடர

Jaleela Kamal said...

ஆஹா எனக்கு ரொம்ப் பிடிச்ச சீனி வள்ளி கிழங்கும் அவித்த வேர்கடலையும் போட்டு பசிய கிளப்பி விட்டுட்டீங்களே ..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜலீலா,வருகைக்கு மிக நன்றிமா. இவை பிடிக்காத மனிதர்கள் கூட இருக்க முடியுமா:)

புலவர் இராமாநுசம் said...படங்கள் அனைத்தும் அருமை எடுத்து உண்ண கைகள் துடித்தன என்றால் மிகையல்ல!