About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, September 03, 2013

பொறுமையில் பூமிதேவி பாகம் மூன்று

தோதாத்ரி நாதரும் தாயாரும்
முக்கியமானவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

 அன்று  ஆரம்பித்த  காய்ச்சலும்  வயிற்றுப் போக்கும்
தொடரவே  டாக்டர் குருசாமி முதலியார்  வந்தார்.
சோதித்துப் பார்த்து விட்டு  ''ரொம்ப ஜாக்கிரதையாக   இருக்கவேண்டும்.
இது டைஃபாய்ட்'பத்தியம் முக்கியம்'' என்று மருந்தெழிதிக் கொடுத்துவிட்டுத் தினம் வந்துவிட்டுப் போவதாகச் சென்றார்.

அன்று ஆரம்பித்த ஜுரம் இறங்கவே இல்லை.
பாலில் இருந்து பிரிக்கப் பட்ட ''whey''
புழுங்கலரிசிக் கஞ்சி மாற்றி மாற்றிக் கொடுக்கப் பட்டது.

சரோஜாவின் கவலைக்கோ அளவே இல்லை. தாய் வீட்டில் சாப்பிட்டதாலா கணவனுக்கு உடல் நலம் கெட்டது?
சீமந்தம் நடக்கணும்மே இன்னும் ஒருவாரம்தான்  இருக்கு. இவருக்கு
உடம்பு சரியாகப் போய்விடுமா அதற்குள்.
பகவானே என்று சஹஸ்ரநாமம்சொல்லிக் கொண்டே இருந்தார்.
ஒரு தடவை இல்லை இரண்டுதடவை இல்லை. எட்டு தடவை ஒருநாள் முழுவதும். இப்படித் தொடர்ந்த  பிரார்த்தனையில்
தன்  திருமாங்கல்யத்தைத் திருப்பதி உண்டியலில்
சமர்ப்பிப்பதாகவும் வேண்டிக் கொண்டார்.

அப்பொழுது  முழுவதும் பகவனிடம் நம்பிக்கை இருந்தது. நம்பிக்கையும் பொய்க்கவில்லை.

சரோஜாவின் மாமனாருக்கு அதீதக் கவலை. ஆறடிக்கும் மேலெ ஆஜானுபாகுவான மகன் அவனுக்கென்ற சுத்தமாக்கப் பட்ட அறையில் இப்படிக் கண் திறக்காமல் படுத்திருப்பது அவரை வருத்தியது.
தனியாக   நர்ஸ் ஒருத்தர் அமைக்கப் பட்டார்.
நோயாளிக்கு வேண்டிய அத்தனை தேவைகளையும் அந்த அறையை விட்டு நகராமல் கவனித்துக் கொண்டார்.
பிள்ளைத்தாய்ச்சியாக இருந்ததால் சரோஜா அங்கே அனுமதிக்கப் படவில்லை.
நடுவில் மாப்பிள்ளையைப் பார்க்கவந்த சரோஜாவின் பெற்றொருக்கும்
முகம் கொடுத்துப் பேச ஆளில்லை.
மாமனார்  மட்டும்  சம்பந்தியிடம்  வந்திருக்கும் நோயின் தீவிரத்தை எடுத்துரைத்தார்.

அனந்தன் அசரவில்லை. நாம் யாருக்கும் தீங்கு நினைக்கவில்லை,.
இறைவன் கைவிடமாட்டான்.
சரோஜா நல்ல குழந்தை அவளுக்கும் கெடுதி ஒன்றும் நேராது.

இன்னும் ஒரு வேண்டுதல். வானமாமலை தோதாத்ரி நாதனுக்கு ஒரு கோட்டை நெல் நேர்ந்து விடுவதாக வும் வேண்டிக் கொண்டார்.
நாளுக்கு நாள் வயிற்றுப் போக்கு இருக்கும் போது மாமனார்தான் கழிவுப் பொருட்களை அகற்றிச் சுத்தமான  வேஷ்டியில் சுற்றி வாசலில் இதற்காகக் கட்டிய  தொட்டியில் கொண்டுபோய்ப் போடுவார்.

அதைப் பார்க்கும்போது சரோஜாவின் மனம் நெகிழும்.
இதுமட்டுமல்ல. அந்தக் காலத்தில் அந்தச் சாலை வழியே சென்று கொண்டிருந்த ஒரே ஒரு தட எண் 4.
அந்த வண்டியையும் நிறுத்தி தன்வீட்டைக் கடக்கும் போது  ஹார்ன் அடிக்கவேண்டாம் என்றும் வேண்டிக்கொண்டார்,.
உடல் அதிர்ந்தால் இன்னும் பலவீனமாவதை நேரில் கண்டதனால் இந்த வேண்டுகோள். அப்போது அந்தச் சாலையில் இருந்ததோ ஆறே ஆறு
வக்கீல் வீடுகள். அங்கே  ஒலி எழுப்ப  வேண்டிய அவசியமும் இருக்காது.

எப்படியோ மாபெரும் கண்டத்தைத் தாண்டி வந்தனர்.
அதற்குள்  சரோஜாவுக்கு இடுப்புவலி கண்டதால்
சீமந்தம் விழா இல்லாமலயே அழகிய பெண்சிசு பிறந்தது.


மூன்றுமாதங்கள் கடந்துதான் ராஜனால்   இயல்பான நிலைக்கு வரமுடிந்தது.
அதன் பிறகு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டே
சீமந்த விழாவை லகுவாக நடத்தினார்கள்.

 வாழ்வும் வளம் பெற்றது.நான்கு   பென் குழந்தைகளும் ஒரு ஆண் மகவுமாக வளர்ச்சி அடைந்து   இனிதே இல்லறம் நடத்தினர்.

அந்தப் பொருத்தமான தம்பதியினருக்குப் பிறந்தநாள் காணும்  மாதம் இது

என்றேன்றும் எங்களை அவர்கள் காத்து நிற்பார்கள்என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு அம்மா...

நன்றி....

Geetha Sambasivam said...

அருமையான பதிவு. இதிலே சீமந்தம் நடக்கவில்லை. உங்க அம்மாவா? ஆனால் எனக்குப் பேருக்கு சீமந்தம் நடந்தது. அவரால் உட்காரவே முடியலை. அதோடு........... :))))//சீமந்தம் நடக்கணும்மே இன்னும் ஒருவாரம்தான் இருக்கு. இவருக்கு
உடம்பு சரியாகப் போய்விடுமா அதற்குள்.
பகவானே என்று சஹஸ்ரநாமம்சொல்லிக் கொண்டே இருந்தார். //

இப்படித்தான் அப்பா சுந்தரகாண்டம் படித்துக் கொண்டும், நானும், அம்மாவும் சஷ்டி கவசம் பாராயணம் பண்ணிக் கொண்டும் இருந்தோம். :)))) கந்தனும், ராமனும் கைவிடவில்லை. :)))

ஸ்ரீராம். said...

மூன்று பாகங்களையும் ஒன்றாகப் படித்து விட்டேன். மனம் நெகிழ்ந்தது. அந்த நேரம் எப்படி இருந்திருக்கும்?

கோமதி அரசு said...

பொருத்தமான தம்பதியினருக்குப் பிறந்தநாள் காணும் மாதம் இது//

பொருத்தமான தம்பதியினருக்கு வணக்கங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

இது மாமியார் மாமனார் கீதா.
உங்கவீட்லயும் இந்தக் கதை நடந்திருக்கிறதா. பாவம் மாமா
சுந்தரகாண்டமும் கந்தசஷ்டி கவசமும் செய்யாத மகிமைதான் என்ன.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.அந்த மூன்று மாதங்கள் கண் போலப் பார்த்துக் கொண்டார்கள். தாத்த எதிலயும் ஒட்டாத சந்யாசி போல இருப்பார். அவரே பிள்ளைக்காக உடல் வருத்தம் அடைந்தார். ஆன்மசக்தி,நியமம் எல்லாம் காப்பாற்றியது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி.
மிக ஒற்றுமையான தம்பதிகள்.
உள்ளெ நுழையும்போதே பெண்டாட்டியை அழைத்த வண்ணம் தான் வருவார்.

ராமலக்ஷ்மி said...

முந்தைய பாகங்களையும் வாசித்தேன். குழந்தையோடு வளைகாப்பு. பேருந்துகள் சந்தம் ஏற்படுத்தாமல் சென்றது. பெரியவர்களின் ஆசி, கவனிப்பு.

அழகான பகிர்வு.

ராமலக்ஷ்மி said...

முந்தைய பாகங்களையும் வாசித்தேன். குழந்தையோடு வளைகாப்பு. பேருந்துகள் சந்தம் ஏற்படுத்தாமல் சென்றது. பெரியவர்களின் ஆசி, கவனிப்பு.

அழகான பகிர்வு.

அப்பாதுரை said...

art imitates life என்பது இது தானா?
பயங்கரமான நெஞ்சைத் தொடும் அசல் நிகழ்ச்சி.. நம்பவே முடியவில்லை.
பிரமாதமான பதிவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
என் மாமியார்,தன் மாமியாரிடம் காட்டிய மரியாதையையும் பார்த்திருக்கிறேன்.
என்னவோ சிலுவை சுமக்கும் கிறிஸ்து நினைவுக்கு வரும்.பெரிய மனுஷி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை.
இன்னும் அழகாக எழுதி இருக்கலாம்நடந்ததைத்தானே எழுத முடியும்.
Real life gives birth to art''என்றுதான் தோன்றுகிறது