Blog Archive

Saturday, September 14, 2013

பலநாளிலே !!!! உயர்வானதே 25 லிருந்து 47!!!( நகைச் சுவை)

இன்று


 காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த  பையடா//
பழைய  சித்தர்  பாடல்  தானே.

நானும்  சாதாரண  பதிவர்களில் ஒருவளாகச் செயல் பட்டுக் கொண்டிருந்த காலங்களில்
இந்த (மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் )எண்ணைப் பற்றித் தெரியவும் தெரியாது.
சுவாரஸ்யமும் கிடையாது. புத்திசாலிப் பதிவர்களின் நட்பு.
அவர்களுடன் சேர்ந்தால்  புத்தி கூர்மையாகும்னுதானே  எதிர்பார்ப்பீர்கள்?

ஹா!நம்ம வழி தனி வழி இல்லையா.
தோன்றும்போது  எண்ணங்களைப் பதிய வேண்டியது.
அதில் கால்வாசி  புலம்பல் இருக்கும்.ஓகே ஓகே  பாதி புலம்பலாக இருக்கும்.

ஒரு வரலாறு இருக்காது. ஒரு சமூகப் ப்ரக்ஞையோடு
ஒரு பதிவும் இருக்காது.

படங்கள்  நிறையக் கிடைக்கும் போது நோகாமல் நோன்பு நூற்பது போலப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர் என்று தமிழ்மண நட்சத்திர அழைப்பு!

இதேதடா வம்பு.என்று ரொம்ப நிறையவே கஷ்டப்பட்டு ஒரு வாரம் தேற்றிவிட்டேன்.

அப்போதுதான் இந்த ட்ராஃபிக் ரான்க் பற்றித் தெரியவந்தது.
அதைப் பதிவில்  இட்டுக் கொள்ள   புத்திமதியும் வந்தது. நம்பமுடியாது.
69ஆவது ரேன்க்.
நான் எங்கையோ 129இல் இருந்ததாக நினைவு,.

அதற்கப்புறம்  ஒரே  ஏற்றம் தான்.
நான் முன்பு என்ன தப்பாகச் செய்தேன். இப்பொழுது என்ன சரியாகாச் செய்கிறேன் என்றே புரியவில்லை:)))

2011 கடைசியிலிருந்து ரேன்க்  முன்னேறி முன்னேறி 23,22 வரை வந்து நின்றது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எனக்கு நம்பமுடியவில்லை.
சரி போ இருக்கிறவரை லட்டு சாப்பிட்டுக்கோன்னு விட்டு விட்டேன். நடுவில் வந்த   மகிழ்ச்சி குழந்தைகள் வருகை,    தொந்தரவுகள் ,உறவினர் உடல் நிலை, சிலபிரிவுகள் எல்லாம் என்னைப்  புத்தகங்கள்   தங்கள்  பக்கம் ஈர்த்தன.

தொலைக்காட்சிப் படங்கள் பாடல்கள். இது ஒரு  விடுமுறை சீசன்!

அது  பார்வையாளர்களுக்கும் படிப்பவர்களுக்கும் தெரிந்துவிட்டது:)


பலன் என்னன்னால்  ரேன்க்  ஏறிவிட்டது.
ஒன்றுதான் புரியவில்லை.

ஸ்டாட்ஸ் பார்த்தால் 100,200னு இருக்கு
இதுக்கும் அதுக்கும் சம்பந்தம்  இருக்கா  இல்லியா.

வாழ்க்கைல நிறைய விஷயங்களில்  புத்தி மட்டுதான். அதில இதையும் சேர்த்துக் கொள்ள    வேணும்:)))))))))))))))))))

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

30 comments:

Geetha Sambasivam said...

ஆஹா, வாழ்த்துகள், வாழ்த்துகள், நான் தமிழ் மணத்தை விட்டே வெளியே வந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகிறதுனு நினைக்கிறேன். அதனால் நீங்க நக்ஷத்திரம் ஆனதே தெரியலை. :(( எப்போ, எந்த மாசப் பதிவுகள்னு சொல்லுங்க. தேடிப் பிடிச்சுப் படிச்சுடறேன். :))))

நல்ல ராங்க் வாங்கி மேன்மேலும் முன்னேற வாழ்த்துகள்.

ஆனால் ஒண்ணு, ஹிட் லிஸ்டுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கானு தெரியலை. நம்ம டாஷ்போர்டிலே ஹிட் லிஸ்ட் பார்த்தால் எகிறுது. பின்னூட்டம் பார்த்தால் ஐந்து அல்லது ஆறு அதுவும் தொடர்ந்து வருகை தரும் அன்பர்கள் மட்டுமே! :))))) ஹிஹிஹி, இதெல்லாம் கண்டுக்கறதே இல்லை.

நம் கடன் எழுதிக் கிழிப்பதே! அப்படினு வைச்சுட்டேன். :)))))

வெங்கட் நாகராஜ் said...

தமிழ் மணம் ராங்க் பற்றியெல்லாம் ரொம்ப யோசிக்காதீங்கம்மா..... :)


புரியாத புதிர் தான் இது! :)

இது முன்னே இருப்பதற்கு நிறைய காரணங்கள்..... அதையெல்லாம் நினைக்காம, நமக்கு புடிச்ச விஷயத்தை, நாம் பகிர்ந்து கொள்ள நினைப்பதை பதிவிட்டு சந்தோஷம் கொள்வோம்.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா:)
ரேன்க் இறங்கணும். அப்பதான் முதல் ரான்க் கிடைக்கும். நான் எதற்கும் முயற்சி செய்யவில்லை. ஸ்கூல்ல பட்ட பாடு போதுமே:)

சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்று புரியவில்லை.அதுதான் ஜாலிபதிவு இது.
வெங்கட் சொல்றாப்போல தேவையில்லை இந்த மதிப்பீடு. அதெல்லாம் நன்றாக எழுதுபவர்களூக்குத்தானே!!!!!!!
இது எப்படி இருக்கு!!!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெங்கட்.அதனால் தான் அந்த எண்ணை எடுத்துவிட்டேன்.
எழுத வந்தவர்களுக்கு இதைப் பற்றி என்ன கவலை!!!
மிக மிக நன்றிமா.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளத்தில் உள்ள தமிழ்மணம் ஓட்டு போடும் படி மாற்றி தரட்டுமா அம்மா...? அதற்கு :
உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன்.

மிக மிக நன்றி ராஜா. எனக்கு இந்த வோட் விஷயம் சுவாரஸ்யப் படவில்லை.அதனால் தான் வேறு எந்த இணைப்புகளிலும் சேர்ந்து கொள்ளவில்லை.
மன உற்சாகம் இருக்கும்போதும் ,உடல் நிலை சம்மாக இருக்கும்போது மட்டுமே எழுதுகிறேன்.
இதில் த.மா வோட் எல்லாம் இந்தப் பதிவுக்கு வேண்டாம்.
உங்களைப் போன்ற நல்ல நட்புகள் போதும்.
பட்டியல் எப்படி வேலைசெய்கிறது என்று அறியவே முயற்சித்தேன். இப்போது அதுவும் வேண்டாம் என்று தோன்றிவிட்டது.மனம் நிறைந்த நன்றிமா.

sury siva said...


பால்யாவஸ்தே க்ரீடா சக்தஹா
தருணாவஸ்தே தருணி சக்தஹா.
விருத்தாவஸ்தே சிந்தா சக்தஹா.
பரே ப்ருமமணி கோ அபி ந சக்தஹா.
Bhaj govindham.

மனுஷ்யன் வயசாயிடுத்து அப்படின்னா எதுக்காவது ஒண்ணுக்கு கவலைப்பட்டு கொண்டே இருக்கணும். (see third line)

இன்னிக்கு காதுலே கொஞ்சம் வலிக்கறது. முதுகு வலிக்கிறது. தும்மல் இருமல் அப்படின்னு தினப்படி எதுன்னச்சும் ஒரு கவலை

ஒன்னுமே இல்லேன்னா, இன்னிக்கு கவலைப்பட ஒண்ணுமே இல்லயே அப்படின்னாலும் மனசு எங்கேயோ சுற்றறது

பெருமாளைப் பற்றி நினைப்போமா, தாயாரைப் பற்றி ரண்டு பாட்டு பாடுவோமா என்று தோன்றுகிறதோ..

இன்னிக்கு தமிழ் மணத்திலே ரேங்க் கீழே மேலே போகிறதே ??

பெருமாள் காப்பத்தணும்.
காப்பாத்துவார்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

pudugaithendral said...

ஆரம்பத்தில் நானும் இந்த தமிழ்மண மயக்கத்தில் இருந்தேன். இப்போ எங்கேயும் லிங்குவது இல்லை. கீதா சாம்பசிவம் அவங்க சொல்லியிருப்பது போல “எழுதி கொட்டுவது” (கிழிக்க பேப்பர்ல எழுதலையே அதான். :)
என் வேலை. மனசுல பட்டதை பதிய ஒரு இடம். படிச்சவங்க பிடிச்சிருக்குன்னு சொல்லுவது ஒரு ஷோட்டு கிடைச்சா மாதிரி அம்புட்டேதான்.

ராமலக்ஷ்மி said...

இந்த எண்கள் நம் எழுத்துக்கு தடையல்லவே. வரவு அதிகமாய் காணப்படும் வேளைகளில் ரேங்க் பின் செல்வது விநோதமாகவும் இருக்கும்:)! முடியும் போது பதிந்தால் போதுமென இருக்கிற இந்நாளில், தினம் வந்து செல்பவர் எண்ணிக்கை பதிய தூண்டுதலாகவும் அமைகிறது சிலநேரம். வெங்கட் சொல்லியிருப்பது சரி. நம் மகிழ்ச்சிக்காகவே பதிவு.

/தோன்றும்போது எண்ணங்களைப் பதிய வேண்டியது./ ஐந்து வருடங்களாக உங்கள் பதிவுகளைத் தொடருகிறேன். வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் அழகாகவும் இதமாகவும் சொல்லிச் செல்லும் விதத்தில் வாசக நண்பர்கள் மனதில் என்றும் உங்களுக்கு ரேங்க் 1 வல்லிம்மா!

ADHI VENKAT said...

தமிழ்மணம் பற்றியெல்லாம் யோசிக்காதீங்கம்மா...

நீங்க பாட்டுக்கு எழுதுங்க...:))

என்னுடையதும் முன்ன எங்கேயோ இருந்து அப்புறம் கிடுகிடுன்னு ஏறுச்சு. இப்போ பலநாள் அட்டெண்டன்ஸ் குடுக்காததால் பின்னே போயிடுச்சு. அதை எடுக்கவில்லை...வைத்திருக்கிறேன்...:))

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு சார்,
கவலைப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்கே.
இந்த எண்ணிக்கை எப்படியொ யோயோ விளையாடுகிறதே என்கிற எண்ணத்தைப் பதிவிட்டேன். அவ்வளவுதான்:)
பெருமாள் பாட்டு பாடியாச்சு. தாயார் ஸ்லோகம் சொல்லியாச்சு,:)

கோமதி அரசு said...

வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் அழகாகவும் இதமாகவும் சொல்லிச் செல்லும் விதத்தில் வாசக நண்பர்கள் மனதில் என்றும் உங்களுக்கு ரேங்க் 1 வல்லிம்மா!//
நானும் ராமலக்ஷ்மி சொல்வதை வழி மொழிகிறேன் அக்கா.
மனதில் பட்டதை எழுதுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல். வாழ்க்கை எப்படியெல்லாம் நமக்குப் பாடம் கற்றுத்தருகிறது பாருங்கள்:(
இப்ப நீங்க கொடுத்திருக்கிற ஷொட்டு இனிமை. இது போதும்.நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, நான் மிகவும் கொடுத்துவைத்தவள். இதுபோல எதிர்பார்ப்பில்லா அன்புக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்.
விட்டேன் எண்ணிக்கையை. பிடித்தேன் பதிவுகளை. மீண்டும் படிக்க:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி. கணவன் வழி மனைவியுமா.!!!

ரோஷ்ணியின் பரீட்சைகள் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கிறதா.

எண்ணி எண்ணிப் பார்ப்பதை விட்டுவிடுகிறேன். சரியாம்மா:)

Ranjani Narayanan said...

நானும் கூட ஒரு அலங்காரத்திற்காகத்தான் இதை போட்டு வைத்திருக்கிறேன். வேர்ட்ப்ரஸ் தளம் என்றால் வோட்டும் போட முடியாது.
நமக்கு நம் மனதில் இருப்பதை கொட்டித் தீர்க்க ஒரு எளிய வழி என்று நினைத்து எழுதிக் குவிப்போம்!
உங்கள் எழுத்திற்கு நாங்க நிறைய பேர் ரசிகர்கள் இருக்கோம்.
எழுதி ஜமாயுங்க!

அப்பாதுரை said...

Onnum puriyale.

துளசி கோபால் said...

எண்கள் பற்றி நினைப்பதே இல்லை. கவனம் எல்லாம் எழுத்தைப் பற்றித்தான். ஆனாலும் உருப்படியா எதாவது எழுதுனோமான்னு பார்த்தால்.... ப்ச். போயிட்டுப்போகுதுன்னு விடத்தான் வேணும்.

முந்தி ப்ளொக்ஸ்பாட் டாட் காம் என்றிருந்த துளசிதளம், நியூஸியில் டாட் கோ, டாட் என்ஸெட் என்று வருவதால் கிடைச்சுக்கிட்டுருந்த நாலு ஓட்டும் வர்றதில்லை.

தமிழ்மணம் டாட் காமில் இருந்தால்தான் கணக்குலே வச்சுக்குமாம்.

தமிழ்மணத்தில் சேர்ப்பதற்கே கொஞ்சம் மெனெக்கெட வேண்டி இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

தூரை , இது தமிழ்மணம் திரட்டினு ஒன்று இருக்கு இல்லையா.
அதில் நம் பதிவுக்கு வரும் விசிட்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தோ இல்லை வரும் பின்னூட்டங்களைப் பார்த்தோ ஒரு தரவரிசை நிர்ணயிக்கப் படுகிறது. எப்படி என்று தெரியாமல் இந்தப் பதிவை இட்டேன்.
நீங்கள் தமிழ்மணத்தில் சேர்ந்திருக்கிறீர்களா தெரியாது:)

வல்லிசிம்ஹன் said...

ஸாரிமா. தூரைனு எழுதிட்டேன்.:(

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி.
உங்க ரேன்க் எனக்கு தெரியும்:)
நம்மதான் தேர்தல்ல நிக்கலியே . வோட் வேண்டாம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி, இந்த சிஸ்டம் எப்படி வேலை செய்கிறதுனு தெரிஞ்சுக்கப் பதிந்தேன்.
மற்றபடி தொந்தரவு ஒண்ணும் இல்லை.
அதுவும் நாளொரு மேனி பொழுதொரு உடல் சங்கடம். இதில மற்றவர்களோடப் போட்டியிட வேண்டிய வயதும் இல்லை:)
பெங்களூரிலிருந்து வந்த அன்பு மழை இருந்த சந்தேகத்தையும் விரட்டிவிட்டது. நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,

வாழ்கவளமுடன்.கட்டாயம் எழுத வேண்டும். வகை வகையாக எழுத வீட்டைவிட்டு வெளியே வந்து பார்க்கப் போகிறேன்.
நன்றி மா.

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.உங்க மேலே எல்லோருக்கும்அத்தனை மதிப்பு,பிரியம்.தொடர்ந்து இயல்பாய் அசத்துங்கள்.

Geetha Sambasivam said...


Sorry, the page you were looking for in this blog does not exist.
Home//

உங்க புது போஸ்ட் வரலை. இந்தச் செய்தி தான் வருது. :)

Geetha Sambasivam said...

ரேன்க் இறங்கணும். அப்பதான் முதல் ரான்க் கிடைக்கும். நான் எதற்கும் முயற்சி செய்யவில்லை. ஸ்கூல்ல பட்ட பாடு போதுமே:)//

ஹிஹிஹி, அப்படியா விஷயம், நீங்க எப்போவுமே பதிவுலகிலே முதல் ராங்க் தான். ஆகவே இதைப் பத்தி யோசிக்காதீங்க.:))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆசியா. நலமா.
இந்த அன்புக்கு ஆண்டவனுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. எண் ஏறினால் எது
குறையும் இடமோனு யோசித்தேன்.

ஒண்ணும் குறைவில்லை:)

வல்லிசிம்ஹன் said...

ப்ளாக் தெரியவில்லையா. இது ஏதடா புது குழப்பம். பார்க்கிறேன் மா.

ஸ்ரீராம். said...

எங்களுக்கும் இந்தத் தமிழ்மணக் குழப்பம்ஸ் உண்டு! எங்களுக்கு ஓட்டுப்பட்டை வருவதில்லை. நாங்களும் குழம்பியிருக்கிறோம்!