Blog Archive

Monday, September 02, 2013

பொறுமையில் பூமா தேவி ..ஒரு பழைய கதை பாகம் 2

பழையவீட்டின் நிலைக்கதவு.
செப்டம்பர் 5 ஆம் தேதி காலை.
எழுந்திருக்கும்போதே ராஜனுக்கு வயிறும் உடலும் சோர்வாக இருப்பது போல இருந்தது.
வீட்டுத் தோட்டத்தில் மாடுகள் அம்மாவென்று அழைப்பது கூட தலை வேதனையாக இருந்தது.
அவை கத்துவது தன்னை எதிர்பார்த்துதான் என்பது தெரிந்தும் அசதி உடலைத் தள்ளுவது போல உணர்ந்தார்.
ஏழு மணியாகி விட்டது. அதிகாலையில் எழுந்திருக்கும் கணவனை இன்னும் காணோமே என்று மெதுவாக மரப்படிகளில் ஏறி மாடிக்குத் தங்கள் அறைக்குச் சென்றாள் சரோஜா.
அங்கே இன்னும் கட்டிலில் படுத்திருக்கும் கணவனைப் பார்த்ததும் கவலை கூடியது.
என்னாச்சு மாமா ,உடம்புக்கு என்ன என்று கேட்டவளிடம் கண் திறந்து பதில் கூட சொல்ல முடியவில்லை. தலைவலியும் ஜுரமும் ஏறிக் கொண்டிருந்தது.
திடீரென்று வயிற்றைப் பிரட்ட வாயில் கசப்பு தூக்க வாந்தி வந்து விட்டது.
நடுங்கிவிட்டாள் சரோஜா. பதினெட்டு வயதில் அவள் பார்த்த காய்ச்சலோ,நோயோ குறைவுதான்.
நல்ல ஆரோக்கியமாக வளர்ந்த பெண். அவளுடைய சகோதரர்கள் மூவரும் ,ஒரு சகோதரியும் அவ்வாறே.
அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கிய கண்களோடு கீழே வந்து மாமியாரிடம் விஷயத்தைச் சொன்னாள்.
ராஜா ,கொஞ்சம் கீழ வரயா ஒரு சுக்குக் கஷாயம் வச்சுத் தரேன். சரியாகிவிடும் ஏதாவது அஜீரணமா இருக்கும் என்று மருமகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே விரைந்தார் .
அத்தை தன்னைப் பார்த்த பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் தனக்கு ஒரு படி மூத்த ஓர்ப்படியை பரிதாபமாகப் பார்த்தாள்.
பத்மாசனி என்ற அழகான பெயர் வைத்துக் கொண்டவள் அவள். கொஞ்சமே கொஞ்சம் சரோஜாவின் மேல் கோபம். தனக்கு முந்தி பிள்ளை பெற்றுக்கொள்ளப் போகிறாளே என்று.
இறைவன் என்ன வரிசைப்படியா குழந்தைகளை அனுப்புகிறான்.:)
நேத்திக்கு உங்க வீட்டில என்ன சாப்பிட்டான் ராஜன். இப்படி வாமிட் செய்யறத்துக்கு? அதான் அத்தை உன்னை அப்படிப் பார்த்தார் என்று சொல்லிவிட்டு விட்ட ராமாயணத்தைப் படிக்க பூஜை அறைக்குப் போய்விட்டாள் அவள்.!!!
அவள் சொன்ன வார்த்தைகள் சரோஜாவிற்கு சுரீர் என்று உரைத்தது.
நானும் தானே சாப்பிட்டேன். எனக்கு ஒண்ணும் ஆகவில்லையே
என்று யோசித்தாள்.... மீண்டும் தொடரும்:)





பாரிஜாதம்






















எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

10 comments:

துளசி கோபால் said...

பவளமல்லி அப்படியேத் தூக்குதுப்பா.

அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா...... என்ன வாசனை!!!!!

வல்லிசிம்ஹன் said...

பவழமல்லி மட்டும் தானா:)
சரி. சரி சரி.

ராமலக்ஷ்மி said...

தொடருங்கள் கதையை.

என்ன ஆச்சரியம்? ட்ராஃப்டில் இருக்கும் என் கவிதை ஒன்றுக்குப் பின் குறிப்பாக சின்ன வயதில் எங்கள் தோட்டத்தில் இருந்த பெரிய பவளமல்லி மரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு பதிவை சேவ் செய்து வைத்தேன் நேற்று இரவு. அது மட்டுமில்லாம ‘எவ்வளவு வருடம் ஆயிற்று பவளமல்லி மலர்களைப் பார்த்து’ என்றும் நினைத்தேன். நீங்கள் காட்டி விட்டீர்கள், நன்றி:)!

எனக்கு இரண்டாவது படமும் பிடித்திருக்கு:)!

வல்லிசிம்ஹன் said...

நலமா ராமலக்ஷ்மி.இந்தப் பவழமல்லிதான் எத்தனை மென்மை இல்லையா.
அதே சமயம்
கண்ணைக் கவரும் இனிமையான அழகு.
உங்கள் கவிதைக்கு இந்தப் படம் பொருத்தமாயிருக்குமா:)

ராமலக்ஷ்மி said...

அந்தக் கவிதைக்கு இல்லாவிட்டாலும் இப்போதே இதற்கொரு காப்பிரைட் வாங்கி வைத்துக் கொள்கிறேன்:)! உங்கள் தோட்டத்து மலர்கள்தாமே இவை?

Kavinaya said...

//பவளமல்லி அப்படியேத் தூக்குதுப்பா.//

ஆமாம் அம்மா! (மற்ற படங்களும்தான் :)

கதையை தொடருங்கள் சீக்கிரம் :)

Geetha Sambasivam said...

கதை நல்லாவே போகிறது. கொஞ்சம் என் கதை போலவும் இருக்கு. என் பெண்ணைக் கருவுற்றிருக்கையில் என் கணவருக்கு மஞ்சள் காமாலை வர, வீட்டிலே இதிலே நீங்க எழுதி இருக்கிறாப்போல் தான் பேச்சு, நடந்தது. :))) அதெல்லாம் ஃப்ளாஷ் பாக் ஆக நினைவில் மோதுகிறது. :))))

கோமதி அரசு said...

கதையும், படங்களும் அழகு.உங்கள் அத்தை, மாமா தானே! படத்தில் இருப்பவர்கள்?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, இப்ப எல்லாம் அந்த மாதிரி பேசத்தான் முடியுமா. அப்போது நம் பொறுமை நம்மைக் கட்டியது. மாமியாரும் எத்தனை பொறுமையாக இருப்பார் என்று சொல்லி முடியாது.அற்புதமான மனுஷி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. அத்தையும் மாமாவும் தான்.நிறைவான மனிதர்கள்.