About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Friday, September 20, 2013

1980யில்வீடுகட்ட நினைப்பு....... வீடு கைக்கு வந்தது1985இல்


Add caption
வீடு  அதற்கான  சொந்தங்கள் வருவத்ற்கு முன்னால்:)

vallisimhan
***********
இந்திரா நகர் வீடு எல்லோருக்கும் பிடித்தது.
மாடிவீடு. வீட்டுச் சொந்தக்காரர்கள்  தெலுங்கு  பேசுபவர்கள். அவர்  இந்தியன் ஏர்லைன்சில் பைலட்டக இருந்தார். மனைவியும் குழந்தையும் அம்மா அப்பாவோடு  மிகவும் நெருங்கி விட்டார்கள்.
அம்மாவுக்குப் பிடித்த  பால்கனி. பக்கத்திலேயே ஒரு  தென்னைமரம்.
அதில் விளையாடும் அணில்கள். தூரத்தில் தெரியும் கோட்டுர்புரம்  பாலம்.
பக்கத்துவீட்டில் அப்பாவின் சித்தப்பா  பெண்ணும் கணவரும் அவர்களுடைய பசங்களும்.

இரு  தம்பிகளுக்கும் திருமணம் நடந்தது. ஒரு பெட்ரூம்  ,ஒரு கூடம்,சமையலறை என்று இருந்த வீட்டில்
இன்னோரு படுக்கை அறையும் கட்டிக் கொடுத்தார் அந்த வீட்டுக்காரர்.

குழந்தைகள் பிறந்ததும் வேலையும் கூடியது. களிப்பும் கூடியது.
மூன்று குடும்பத்தின் பீரோக்கள் ,கட்டில்கள்,புத்தக அலமாரிகள், பாத்திரங்கள்,
  இது  போல பல  சமாசாரங்கள் வீட்டை நெருக்க,
அம்மா அப்பாவிற்கு    வேறு வீடு பார்க்கலாம் என்ற யோசனை வந்தது. அது போலவே அவர்களுக்குத் திருவான்மியூரில்
கொஞ்சம் பெரிய வீடு ஹெச் ஐ ஜி  ஃப்ளாட்  கிடைத்தது.

இதன்  நடுவில்  பேரனுக்குப் பள்ளி அமைந்தது.
அத்தோடு எங்கவீட்டுப் பிள்ளையும் அங்கே போய்ச் சேர்ந்தான். அவன் படித்த பள்ளியும் அங்கே இருந்ததால் அப்பா அவன் அங்கே  வந்து படிக்கட்டும் என்று விட்டார்.
தினம் மயிலைக்கும்   இந்திராநகருக்கும் அலைய வேண்டாம் என்று
அங்கு வரவழைத்துக் கொண்டார்.

அப்போது தோன்றிய எண்ணம் தான் நாமே வீடு கட்டிவிடலாம் என்பது.
அது அவ்வளவு சுலபமில்லை  என்று இரண்டு  வருடங்களில் புரிந்தது

இவர்கள் நினைத்தது போல ,கோவில் குளம்,சுத்தமான சூழ்நிலை என்று பார்த்தபோது   இடங்கள் அமையவில்லை. மயிலை மந்தைவெளி அடையார்
என்று தன் பெண் வீட்டுக்குப் பக்கத்தில்   அப்பா தேடுகிறார் என்று தம்பிகள் சிரித்துக் கொண்டார்கள்:)

எப்போதும் தன் பாதுகாப்பு வளையத்தில் குழந்தைகள் இருக்க வேண்டும்
என்பது அப்பாவின்    தியானம்,யோகம் எல்லாம்.

கடைசியாகத் தேடி தேடி மைந்தது  ஒரு வீடு .இல்லை இல்லை இரு வீடுகள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கலசலிங்கம்  கல்லூரியின்

பொறுப்பாளரோ யாரோ  தெரியாது.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதும் அப்பா தீர்மானித்துவிட்டார்.
அவர் கட்டும் ஆனந்த்  கட்டிடங்கள்(அபார்ட்மெண்ட்கள்)  உறுதியாக இருப்பது தெரியவந்தது.

அப்பாவும் தம்பிகளும் உடனேயே போய் இரண்டு வீட்டுக்கான
அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள்.
இரண்டு வீட்டுக்கு  4  லட்சங்கள்தான்    எண்பதுகளில்.
ஒரு நல்ல  நாள் பார்த்துக் கிரகப் பிரவேசம் நடந்தது.

பேத்தி ஹோலி ஏஞ்சல்ஸ்
பேரன் பத்மா சேஷாத்ரி  சேர்த்தாச்சு.
என் பிள்ளையும் இங்கே வீட்டுக்கு வந்தாச்சு.
11த்  &12த்  இரண்டும்  மயிலையிலிருந்து  படித்து முடித்தான்.
என் பெண்ணுக்கும் தாத்தா வீட்டுக்குப் பக்கத்தில் அலுவலகம் வாய்த்தது:)

மதியம் நான் கொடுத்த லன்ச் பெட்டியைநண்பர்களுக்குக் கொடுத்துவிட்டுப் பாட்டி  கை குழம்புசாதம் சாப்பிடப் போய்விடுவாள்.
எங்க வீட்டுச் சின்னவன் சனி ஞாயிறு  வீடியோப் படங்கள் பார்க்கத் தாத்தா வீட்டுக்குப் போய்விடுவான். பெரியவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு
பக்கத்திலிருக்கும் தோழர்களைப் பர்த்துவிட்டுத் தாத்தாவையும்பாட்டியையும் பார்த்து விட்டு வருவான்.

ஆகக் கூடி   சுபமாக வீடு தேடல் முடிந்து நல்ல விசேஷங்களும்
நடந்தன.

எல்லாம்  சுபம்.மங்களம்.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்